என்.டி.ஆருக்கு பாராளுமன்றத்தில் சிலை

        காங்கிரஸ் அரசு நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு அளவே இல்லை!
இந்தியாவில் தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன! அத்தனையையும் கவனிக்காமல்  மக்களைஏமாற்றவும், மக்கள் கவனத்தை திசைதிருப்பும் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறது!

      பாராளுமன்றம்  நிலகரி விவகாரம், சட்ட அமைச்சர்  சி.பி.ஐ.-அறிக்கையை திருத்திய விவகாரம், பி.சி சாக்கோவின்  2ஜி-குறித்த அறிக்கை,பவன்  குமார் பன்சாலின் உறவினர்கள் ரயில்வேயில் ஆதாயம் தரும் பதவிகளில் நியமனம் செய்ய பெற்ற லஞ்ச விவகாரம்  என்று விழிபிதுங்கி,நடைபெறவே முடியாதபடி முடங்கிக் கிடக்கிறது!

     உருப்படியான மசோதாக்கள் நிறைவேற வழியில்லை!, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகி விட்டது! இவைகளைப் பற்றியெல்லாம்  எந்த கவலையும் இன்றி,   காங்கிரஸ் அரசு நாளை( 7.05.2013) பாராளுமன்ற வளாகத்திலே எம்.டி .ராமராவின் சிலையை வைக்க இருக்கிறது!

         பாராளுமன்றத்தில் என்.டி .ஆரின் சிலைய,அந்த மனிதரின் பெருமையை உணர்ந்து,அவர் ஆற்றிய ஜனநாயக கடமையை, தியாகத்தை,தேச சேவையை மதித்து,   காங்கிரஸ் அரசு வைப்பதாக தெரியவில்லை!

         எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து,  ஆந்திராவில்  காங்கிரஸ்  கட்சிக்கு இருந்துவரும் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியே, என்.டி.ஆரின் சிலையை பாராளுமன்றத்தில் வைப்பது  விளங்குகிறது!

       ஆந்திர மக்களால்  கடவுளாக பார்க்கப்பட்ட என்.டி.ஆரின் சிலையை வைப்பதன் மூலம், ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியை  சமாதானப்படுத்தி , கூட்டணியில்  கொண்டுவரலாம்,

         ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும், ஜெகன் மோகன் ரெட்டியை  சமாளிக்கலாம்,

       தெலுங்கான பிரச்சனையில்  கோபமாக இருக்கும் மக்களை ஏமாற்றலாம்,

        தீவிரமாக தனி தெலுங்கானா  போராட்டத்தில் இருக்கும் சந்திரசேகரராவ் இமேஜையும்  காலிபண்ணி  விடலாம்.

இவைகள் மூலம் காங்கிரசுக்கு கணிசமான சீட்டுக்களை,நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுவிடலாம்  என்ற அரசியல் காரணங்களுக்காகவே என்.டி.ஆரின் சிலை  பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்படுகிறது!

      அற்புதமான  நடிகரை வைத்து  காங்கிரஸ் நடத்தும் நாடகம் இது!  
Comments

  1. இந்தக் காங்கிரஸ் காரங்க அலம்பல் தாங்க முடியவில்லையே.. கொடுமைடா !

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?