கையும் தாமரையும் கலந்து செய்யும் சதிகள்!

        காங்கிரஸ் அரசுக்கு அவ்வபோது நெருக்கடி  கொடுப்பதும், பாராளுமன்றத்தை முடக்குவதும், ஊழலுக்கு எதிராக முழங்குவதும்  பி.ஜே.பி -வின் பரபரப்பான நடவடிக்கைகளாக  இருப்பதை அறிவோம்.!

      காங்கிரசுக்கு எதிராக  கலகக் குரல்  எழுப்பும் பி.ஜே.பி-யும்  காங்கிரசும் அடிப்படையில் வெகுஜன மக்களின் விரோதிகளாக இருந்து வருகின்றன!


      பி.ஜே.பி எதிர்க்கும்  கொள்கைகளை   உண்மையில் காங்கிரஸ் அரசு சட்டமாக  நிறைவேற்றுவதில்லை! 

   ஜனநாயக அமைப்பில்  பிரதான எதிர்கட்சிக்கு மதிப்பளிப்பதில் தவறில்லைதான். ஆனால், எதிர்க்கட்சி கண்மூடித்தனமாக (தங்களது மதவாத அடிப்படையில் 0 அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கும்போதும், மக்களுக்கு ஆதரவான சட்டங்களை  நிறைவேற்ற தடையாகும் போதும்  ( பி.ஜே.பி எதிர்க்கிறதே என்பதற்காக )  பின்வாங்குவதும், நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றாமல் இருப்பதும் தவறுதான்!

        பெண்களை அடிமைபடுத்தி ஆள  நினைக்கும் குணம் உள்ள இந்து மதவாதிகளின் கட்சியான பி.ஜே.பி-எதிர்க்கிறது என்பதற்காக பெண்களுக்கு  33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு உள்ளது!

        இந்தியாவை இந்து நாடாக மட்டுமே பார்க்கும் பி.ஜே.பி எதிர்க்கிறது என்பதற்காக  சச்சார் கமிட்டி அறிக்கையை வெளியிட தயங்கிய காங்கிரஸ் அரசு,   சச்சார் பரிந்துரைகளை நிறைவேற்ற இன்றுவரை முன்வரவில்லை.! 

          நரசிம்மராவ் காலத்தில் இருந்து  முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியது. அந்த மசோதாவும் பி.ஜே.பி-யின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டு விட்டது!

       அப்துல் கலாம்  இந்திய குடியரசு தலைவர் ஆவதற்கு முன்பிருந்து  பரிசீலிக்கப்பட்டு,  நிறைவேற்ற கொண்டுவந்த லோக்பால் சட்ட மசோதா  இன்னும் நிறைவேறாமல்  கிடக்கிறது!

       ஆனால் , உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு துடிக்கிறது!  அதனை பி.ஜே.பி-யும்  கண்டுகொள்ளாது என்பதால்!

       அணு ஆயுத பரவல் தடை சட்டம், 123- ஐ  அமெரிக்கா நிர்பந்தித்ததால்  அவசரமாக எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல்  நிறைவேற்றிய காங்கிரஸ் அரசு,  மக்களின் நலனுக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வில்லை!

இத்தகைய விசயங்களில் பி.ஜே.பி-யின் எண்ணப்படியே, காங்கிரஸ் அரசு நடந்து கொண்டு வருகிறது! வெளியில் அடித்துக் கொள்வதைப்போல காட்டிக் கொண்டு திரைமறைவில்  இரண்டு கட்சிகளும்  மக்களுக்கு எதிரான செயல்களையே செய்து வருகின்றன!

    இப்படி  கையும்,தாமரையும் கலந்து செய்யும் மக்களுக்கு எதிரான சதிகளில் ஒன்று   தீவிரவாதத்தையும்   பேதப்படுத்திப்  பார்ப்பதாகும்! 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?