அரசே,தீவிரவாதத்துக்கு காரணம்!

       சகிப்புத் தன்மை உள்ளவர்கள் கூட,பொறுமை மீறி தீவிரமாகி விடுவது உண்டு.  நியாயங்கள் மறுக்கப்படும்போது,அநியாயங்கள் அதிகரிக்கும்போது  கடவுள் அவதரித்து, தட்டிகேட்பார்  என்று எல்லோராலும் இருக்க முடிவதில்லை!

       எந்த ஒரு செயலுக்கும், அதற்கு சமமான எதிர் செயல் இருக்கும் என்பது நீயூட்டனின் விதி.  இதனை ஆட்சியாளர்கள்முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

        ஜனநாயகத்தின்  போர்வையில்  பன்னாட்டு  கம்பனிகளையும்,பெரும் முதலாளிகளையும் ஆதரித்து, இயற்கை வளங்களை கொள்ளையிட அனுமதித்து,  சட்டீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின்   வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கியது மத்திய, மாநில அரசுகள்தான்.

      பழங்குடியின மக்களின்  நிலையை மேம்படுத்த முன்வராமல், சல்வாஜுடும் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மேலும் கொடுமைகளுக்கு ஆளாக்கியதும்,  அதனை அமைதியாக அனுமதித்து வருவதும் அரசுகள்தான். அரசின் இந்த பயங்கரவாதமே, ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு சட்டிஸ்கர்  பழங்குடியின மக்களை தள்ளி உள்ளது!

      அடிப்படை உரிமைகளை பறித்து, எதேச்சாதிகாரமாக நடக்கும் அரசுகளின் செயலால்தான், மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கும், தீவிரவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கும்  தள்ளப்படுகின்றனர்!

      அரசுகள் தங்களது அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் தீவிர வாதமும், ஆயுதம் ஏந்தி போராடும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும்!   இதனையே சட்டிஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சொல்லுகிறது ! 

      பசியுடன் இருக்கும் மக்கள்,வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்படும்போது, ஜனநாயகமோ,  தர்மங்களோ,நியாயங்களோ  அம்மக்களிடம்  எதிர்பார்க்க முடியாது!   ஏனென்றால்,

"பசியால்பொய் விலையும்,
      படுகொலைகள் மெத்தவரும்
அசையாத மாளிகையும்
      ஆடிப் பொடிப்படுமாம்! "

எனவே,

"மேட்டுக் குடி வாழ்க்கை மேன்மேலும் உயர்ந்துவர,
நாட்டுக் குடிவாழ்க்கை நடுத்தெருவில் நிற்பதை
மாற்றி அமைக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்."
                                                                                                                                                                       வருவார்கள் என்று நம்புவோமாக!


                   

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?