முடிந்ததும் தொடர்வதும்..

          பாலச்சந்தர் திரைபடத்தில் ஒரு கோட்டை அழிக்காமல்,சிறியதாக்க  முடியுமா? என்று ஒரு புதிருக்கு   வரைந்த  கோட்டை விட,  நீளமான  கோட்டை அருகில் வரைந்தால்   முதல் கோடு சிறியதாகி விடும்   என  காட்சி இருக்கும்.!

       இருகோடுகள் தத்துவம் இந்திய ஆட்சியாளர்களால் இப்போது பயன் படுத்தப்பட்டு  வருகிறது!  ஒரு ஊழல் குற்றசாட்டில் இருந்து, ஒரு முறைகேட்டில் இருந்து, மக்களது கவனத்தை திசைதிருப்பவும்  அந்த குற்றச்சாட்டின் வீரியத்தைக் குறைக்கவும்  இத்தகைய யுக்தியை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!

         2ஜி-முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல், நிலகரி சுரங்க பேர ஊழல், போன்ற அத்தனை ஊழல்களும் சமீபத்தில்  வெளிவந்த   கிரிக்கெட்  ஊழலால் மறக்கப்பட்டு விட்டது.மறைக்கப்பட்டு விட்டது.!

        சுசில் குமார் ஷிண்டே  பேர்பாக்ஸ் ஊழல் குறித்து ' இந்த ஊழலை மக்கள் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் ' என்று  குறிப்பிட்டு இருந்தார்.  மக்களின் மறதியையும்,  மன நிலையையும்  ஆட்சியாளர்கள்  புரிந்து வைத்துள்ளனர்.! அதனால்தான், மக்களைப்பற்றி கவலைபடுவதில்லை! நாட்டை சுரண்டுவதை பற்றி  இவர்கள் கவலைபடுவதில்லை!    ஊழல், முறைகேடுகளை    தொடர்ந்து  வருகின்றனர். நாம்தான் ஆட்சியாளர்களை புரிந்துகொள்ளாமல் ஏமாந்து வருகிறோம்!

          சுஷில் குமார் சிண்டே இப்போது,C B I-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்த  ஐந்து  பேர் குழுவில்  ஒருவர்.  C B I-க்கு தன்னாட்சி வழங்கும் லட்சணத்தை பிறகு பார்க்கலாம்!

       சுஷில் குமார் ஷிண்டே குறிப்பிட்டதைப்போல,  இப்போது பரபரப்பாக பேசப்படும்   கிரிக்கெட்  மேட்ச்  பிக்சிங் ஊழலும்  மற்றொரு ஊழல் குற்றசாட்டு எழும்போது, மக்களால் மறக்கப்பட்டு விடும்.!  இதுதான் ஊழல்கள் குறித்த இந்திய அரசியலின்  அணுகுமுறையாகவும், மக்களின் பார்வையாகவும் இருந்து வருகிறது!

     I P L-கிரிக்கெட்  போட்டிகள் முடிந்துவிட்டது.ஆட்சியாளர்களின் ஊழல்கள் முடியவில்லை அது தொடர்கிறது!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?