இந்து வெறியர்கள் வைத்த குண்டு..

          மகராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ஆம் ஆண்டு  மசுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு நடந்தது. 37 பேர்கள் பலியானார்கள். வழக்கமாக மசூதிக்கு குண்டுவைத்தாலும்   வைத்தது  முஸ்லிம்கள்தான் என்ற இந்துத்துவ சிந்தனை கொண்ட போலீசார்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் அவர்களே குற்றவாளிகள் என்று முடிவுகட்டி  ஒன்பது அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத  தடுப்பு சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைத்தது.

       மாலேகான் குண்டுவெடிப்பை அபினவ் பாரத் என்ற ஹிந்து அமைப்பினரே நடத்தியதாக சுவாமி அசிமானாந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகே  தேசிய புலனாய்வு ஏஜென்சி (N I A) குண்டு வைத்த இந்து மதவெறியர்களை தேடத் துவங்கியது. அப்பாவி முஸ்லிம்கள் ஒன்பதுபேரும் 5-வருடங்கள் சிறைக்கு பிறகு விடுதலை  செய்யப்பட்டு உள்ளனர் !

        2006-யில் நடந்த  மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில்  ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், " லோகேஷ் சர்மா, தனசிங்,ராஜேந்திர சவுத்ரி,மனோகர் ஆகிய நான்கு பேர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது!   இவர்கள் நால்வரும் வெறும் அம்புகள்தான் என்று தெரிகிறது.
         இந்த வழக்கில் தொடர்புடைய டாங்கே என்பவர்  தலைமறைவாக இருக்கிறார். கல்ஷங்கரா என்பவர் தேடப்படும் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டு இன்னும் தேசிய புலனாய்வு ஏஜென்சி  தேடிகொண்டே இருக்கிறது.

      இவர்கள் உயிருடன் இருகிறார்களா? என்பதே  சந்தேகம்தான். ஏனெனில்  குண்டுவெடிப்பில் தொடர்புடைய, இந்துத்துவ தலைவர்களைப் பற்றிய   உண்மையை சொல்லிவிடுவார்கள் என்று  கொலை செய்யப்பட்டு விட்டனரா? என்று தெரியவில்லை.!
        நான்கு பேர்களின் மீது மட்டும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளதை பார்க்கும்போது, இவர்களைக் கண்டுபிடிக்கவும்,இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டறியவும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர கவனம் செலுத்த வில்லை  என்ற சந்தேகம் வருகிறது!

       மும்பையில் கொல்லப்பட்ட   தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி  ஹெமேந்த கர்கரே,மாலேகான் குண்டுவெடிப்பை புலனாய்வு செய்து, கர்னல் புரோஹித், அபினவ் பாரத் அமைப்பின் பெண்சாமியார் பிரக்யா சிங் போன்றவர்களை கைது செய்தார். அவர்களை  நீக்கிவிட்டு,குற்றபத்திக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

         டாங்கே, கல்ஷங்கரா ஆகியோர்கள் மூலமாக கர்னலும் பெண்சாமியார் பிரக்யா சிங்கும், குற்றவாளிகள் ஆவார்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்ற,  தலைமறைவு  குற்றவாளிகளை விடுத்து  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா ?

      உண்மையில்   மாலேகான் குண்டு வெடிப்பை  முஸ்லிம்கள் செய்திருந்தால், இந்நேரம் எல்லா முஸ்லிம்களையும் சிறையில் போட்டு சித்திரவதை செய்து,  குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகி இருக்கும். ( கோவையில்  அப்படிதான் நடந்தது.  இறந்த முஸ்லிம்கள் குறித்து  கேள்வி கேட்க யாரும் முன் வரவில்லை).!

      மலேகான் குண்டுவடிப்பில் பலியான 37 பேர்களின் உயிருக்கும், ஹெமேந்த் கர்கரே மரணத்திற்கும் வழங்கப்படும் நீதி எப்படியிருகிறது என்று பார்க்கலாம்! 


 

Comments

 1. Good article Mr. Rajan with very good questions and details. Unfortunately such cases are not only in Malegan, but identified in different bomb blasts in our country. But most of the medias are silent about these issues, and for them Muslims are the only targets for any bomb blasts which will geoperdize secular state of this country. Good only should save our country. Thank you.

  ReplyDelete
 2. நண்பரே! சிமியின் உறுப்பினர்கள்தான் அந்த பாதிக்கப்பட்ட அப்பாவிகளா? இன்னும் அந்த வழக்கு மாலேகான் முடியவில்லையே? சிமி எதிலெல்லாம் தொடர்புடையது என்பதை அறிந்துமா இப்படி எழுதுகிறீர்கள்.

  விக்கியின் http://en.wikipedia.org/wiki/2006_blasts_at_Malegaon இந்தப் பதிவில் இருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உங்கள் கட்டுரையில் கவனமாக மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறேன்.

  இந்தியாவை விடுங்கள். 2006ல் உலகத் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த ஒரு அறிக்கையைப் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/List_of_terrorist_incidents,_2006. அப்பாவிகள் பலியாகின்றனரா அல்லது வேறு யார் பலியாகின்றனர் என்று தெரியும்.

  மதவாதத்தைவிட, போலி மதச்சார்பின்மை பயங்கரமானது. நாட்டுக்கு ஆபத்தானதும் கூட. அதிலும் நமது நாட்டுக்குப் பேராபத்து அதுவே.

  ReplyDelete
  Replies
  1. "மதவாதத்தைவிட, போலி மதச்சார்பின்மை பயங்கரமானது. நாட்டுக்கு ஆபத்தானதும் கூட. அதிலும் நமது நாட்டுக்குப் பேராபத்து அதுவே."


   வழி மொழிகிறேன்.

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?