ராஜீவ் கொலையாளிகளின் உயிர்..!

       இன்று ராஜீவ் காந்தி படுகொலையான நாள்! அவர் படுகொலை நடந்து           22- ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் அவரது படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை!

    ராஜிவைக்  கொன்றது விடுதலைப்புலிகள் என்று  குற்றம் சொல்பவர்கள், அவரை கொன்றதற்கு சொல்லும் காரணம்  பலவீனமானது.!
         சிங்களர்களுக்கு ராஜீவ்  மீது  கோபம் இருந்தது. இலங்கை அணிவகுப்பில் சிங்கள வீரன்  துப்பாக்கி கட்டையால் ராஜீவை தாக்க முற்பட்டதில் இருந்து அது தெரிந்தது .

        இரான் -இராக் போரின்போது,  பன்னாட்டு படைகளின் விமானங்களுக்கு (குறிப்பாக அமெரிக்க விமானங்களுக்கு)  இந்தியாவில் பெட்ரோல் போடுவதற்கு அனுமதிக்காமல்,ராஜீவ் கண்டித்த செயலால் அமெரிக்காவுக்கும் , அதன் அடியாளாக செயல்படும் இஸ்ரேலுக்கும் கூட.. ராஜீவ் மீது  வெறுப்பு இருந்தது!

         அடுத்த பிரதமராக  ராஜீவ் வருவதை தடுக்க நினைத்து, அந்த நாடுகள்  கூட ராஜீவைக் கொன்று, விடுதலைபுலிகள் மீது பழிசுமத்தி   இருக்க வாய்ப்பு உள்ளது !

           அமெரிகாவின் கையாளாக  செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியிடம்   ராஜீவ் கொலை தொடர்பாக  முறையாக  விசாரணை நடத்தப்படவில்லை.!

          அரசியல் சாமியார் சந்திராசாமி மீது கூட சந்தேகம் இருக்கும் நிலையில், வரதராஜ பெருமாள் இலங்கையில் இருந்துவந்து  இந்தியாவில் அடைகலம் இருந்த நிலையில், ராஜீவைக் கொல்ல பயன்படுத்திய பெல்ட் பாம் குறித்தும் சரியான தகவல்,விசாரணை  இல்லாத நிலையில்,  பேட்டரி வங்கிக் கொடுத்ததாக  பேரறிவாளன் முதலானோர்  ராஜீவ் கொலை குற்றதைத்  தாங்கி, சிறையில் இருந்து வருகின்றனர். !

          ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் அழிக்கப்பட்ட பிறகும் சாந்தன்,முருகன்,பேரறிவாளனை  தூக்கில் ஏற்றத்  துடிக்கும் கொடூர பாசிச மனம் கொண்டவர்கள், இந்திய ஆட்சியாளர்களாக இருகிறார்கள்.!

      அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு உள்ள இவர்களை அரசியல் ஆதாயத்துக்காக  நாடாளுமன்ற தேர்தல்வரை காங்கிரஸ் அரசு   தூக்கில் ஏற்றாது  என்பது மட்டுமே இப்போது உள்ள ஆறுதலாகும்!


Comments

  1. ராஜிவ் கொலை வழக்கில் பல முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. சுப்பிரமணிய சாமி, சந்த்ர சாமி, முன்னால் பிரதமர் சந்த்ரசேகர், இன்னும் சோனியா காந்தியைக் கூட வெகு மும்மூரமாக விசாரிக்க வேண்டும். அந்த மூன்று பேரை தூக்கில் போட்டாலும், இவர்கள் மேலுள்ள சந்தேகம் தீராது. ஒரு வெளிப் படையான சுதந்திரமான விசாரனை முடியும் வரை, யாரையும் குற்றவாளி என நிச்சயிக்க முடியாது. ஆனால் இதெல்லாம் இந்தியாவில், அதான் மூடர்களான இந்தியர்கள் வசிக்கும் நாட்டில் நடக்குமா என்பது சந்தேகமே. அதே போல கஸாப் தூக்கில் இட்ட பின் இந்திய மக்கள் எல்லாம் வெகு ஈஸியாக மறந்து போனது யார் அவனுக்கு கடல் வழியாக மும்பை கரையை அடைய உதவியது என்பது. அரசு அவர்களை கண்டுக் கொண்டதா இல்லை தெரிந்தும் தனக்கு வேண்டியவர்கள் என்பதால் தப்பிக்கவிட்டுவிட்டதா? கஸாபை உயிருடன் பிடித்து பின்னர் எந்த வித முடிவும் தெரியாமல் தூக்கிலிடுவதற்க்கும் சம்பவம் நடை பெற்ற அன்றே கொல்லுவதற்க்கும் என்ன வித்தியாசம்?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்,முரண்பாடுகளே இங்கு நீதியாகவும் நியதியாகவும் இருக்கிறது! தங்கள் பகிர்வுக்கு நன்றி!

      Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?