எம்.பி.கள் செய்யும் மோசடி!


           நமது நாடாளுமன்ற  மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தங்குவதற்கு சொகுசான வீடுகள், லட்சத்திற்கு மேல்  மாதச் சம்பளம், இலவச தொலைபேசி,இலவச மின்சாரம்,இலவச குடிதண்ணீர்.என்று நிறைய சலுகைகளை வழங்கி உள்ளதை அறிவீர்கள்.எம்.பி.களுக்கு அரசு வாரிவழங்கி வழங்கியிருக்கும் சலுகைகள் போதாது என்று

           விமானத்திலே இலவமாக எக்ஸ்சிகுடிவ் வகுப்பில் ஆண்டுதோறும் பயணம் செய்ய வழங்கப்பட்டு உள்ள,இலவச பாஸிலும்  ஊழல் செய்து,தனியார் விமானங்களில் எகானமிக் வகுப்பில் பயணம் செய்து எக்ஸ்சிகுடிவ் வகுப்பில்பயணம் செய்ததாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி பணம் பெற்று வருகிறார்கள்.

          இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல,    கட்சி வித்தியாசம் இன்றி,தொகுதியில் பணியாற்ற  உதவியாளர்களை நியமித்துக் கொள்ளவும்,அவர்களுக்கு சம்பளமாக தர மாதந்தோறும்  ஒரு எம்.பி.-க்கு  ரூபாய் 30,000/வீதம் பணமும் இந்திய அரசு தருகிறது. இந்த பணத்தையும்  தாங்களே அனுபவிக்கவேண்டும் என்று  நினைத்து  செயல்பட்டு வருகிறார்கள்!

         தங்களது உதவியாளர்களாக  பி.ஏ -க்களாக  பெரும்பாலான எம்.பி=க்கள்  தங்களது மனைவிகளை,மகன்களை,கணவர்களை, மருமகன்களை, காட்டி உதவியாளர்களுக்கு அரசு வழங்கும் 30,000/ பணத்தையும் தாங்களே  எடுத்துகொள்கிறார்கள்!

         நாட்டு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ,அப்படி ஏமாற்றி வருவதுடன், நமது வரிப்பணத்தில்  உல்லாசவாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்கள்தான் நமது ஜனநாயக காவலர்கள்,  நமது மக்களின் சேவகர்கள்!

         "ஜனங்க என்ன ஆனால் என்ன, அண்ணாச்சி, நம்ம பணநாயகம் வாழ்ந்தால் போதும்" என்று எண்ணுகிறார்கள், நம்ம எம்.பி.க்கள்!
Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?