அன்புமணி ராமதாஸின் கண்டுபிடுப்புகள்!

       அப்பசைத்த குரங்கின் கதையை நினவு படுத்துகிறது  அன்புமணி ராமதாஸின் செயல்கள்! மக்களை சந்தித்து ஆதரவு பெறாமல், தேர்தலில் நின்று வெற்றி பெறாமல், அரசியலின் குறுக்கு பாதையாக கருதப்படும்  ராஜ்யசபா-வுக்கு  அப்பனின் தயவால்  சென்ற  அன்புமணி,  மருத்துவ துறைக்கு அமைச்சரானது பலரும் அறிந்த கதைதான்!

 இவர் அமைச்சராக இருந்தபோது,  சண்டிகர் பகுதியில் மருத்துவ கல்லுரி கட்ட முறைகேடாக அனுமதித்து, ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது! மருத்துவ  கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் சர்மா என்பவரது வீட்டில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் பல ஆயிரம் கொடிகளும் பல நூறு கிலோ தங்கமும் கைபற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது!

         மருத்துவ துறையின்  மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியின்  பங்குபற்றியும்,தொடர்புகள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று  சர்ச்சைகள் எழுந்தன! பயந்துபோன  அன்புமணி, காங்கிரசுடன் இணக்கமாக நடந்து கொள்ள ராமதாஸை  வற்புறுத்தி, காங்கிரசுடன்   பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி வைக்க செய்தார்!     இலங்கை தமிழருக்காக நீலி கண்ணீர் வடித்த இவர்களது துரோகத்தை தமிழக வாக்காளர்கள்  புரிந்துகொண்டதால்,   கடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மூன்று சீட்டுகள்  கிடைத்து,  மூன்று சீட்டு கட்சியாக ஆனது! 

      இதனை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று எண்ணி,வரும் 2016-யில் அன்புமணி ராமதாஸ்  தான் தமிழக முதல்வர் என்று கூறி அக்கட்சியினர் அன்புமணியை  ஒருபுறம் கொண்டாடி மகிழ்வூட்ட,அன்புமணிக்கு தனது நிலை  மறந்துபோய்விட்டது போல தெரிகிறது!  "நான் நினைத்தால், ஒபாமாவுடன் பேசமுடியும், ஹிலாரியுடன் பேசமுடியும், பில்கேட்டுடன் பேசமுடியும் " என்று  பெருமைபட்டு வருகிறார்!

      இந்தியாவில் இவரைத்தவிர யாருடனும் ஒபாமாவும்,ஹிலாரியும் பில்கேட்டும் பேச முடியாதது போல ஓவராக பீலாவிடும் அன்புமணியைப் பார்த்தால்  சிரிக்கத்தோன்றுகிறது!

        இன்றைய தொழில் நுட்பத்தில்,தகவல் தொடர்பு வசதியால்  யார் வேண்டுமேன்றாலும்  பேசமுடியும்,சாட் செய்யவும்,மெயில் பண்ணவும் முடியும் என்ற சாதாரண உண்மையை தெரியாமல்  பேசுகிறார்! அவரது கட்சியினர் சொல்வதுபோல, தமிழக முதல்வராக அன்புமணி வந்துவிட்டால் அவ்வளவுதான்!

     மரக்காணம் கலவரத்துக்கு காரணம் விடுதலை சிறுத்தைகளும் திருமாவளவனும்தான்   என்று சொல்லும் அன்புமணி, புதிதாக ஒரு கண்டுபிடிப்பையும்  சொல்லி இருக்கிறார்!  "தலித்துகள்  அரசிடம் நிவாரணம் பெறுவதற்காக,  அவர்களது குடிசைகளை,வாழ்விடத்தை  அவர்களே தீயிட்டு எரித்து கொண்டார்கள் " என்று ஆர்கிமிடீஸ் கணக்காக  அரிய உண்மையை கண்டுபிடித்து உள்ளார்!

     அன்புமணி  சொல்வதைபார்த்தால், தருமபுரியில் மூன்று கிராமங்களிலும் தலித்துகளே தங்களது வீடுகளை அடித்து சேதபடுத்தி, தீவைத்து எரித்து, தாங்களே.. தங்கள் உடமைகளை கொள்ளை அடித்து விட்டு,  தங்களது கல்வி சான்று,குடும்ப அட்டை,நிலவுடமை,காப்பீடு  பத்திரங்கள்,வங்கி கணக்குகள், பணம், நகை ஆகியவைகளை இழந்துவிட்டார்கள் என்று சொல்லுவார் போல தோன்றுகிறது!

      ராமதாஸ் கைதுக்கு பிறகு  193 பஸ்கள் சேதமடைந்ததாகவும் போக்குவரத்து கழகத்துக்கு  70 லட்சம் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதன் இயக்குனர்  தெரிவித்து உள்ள நிலையில்,  பேருந்தில்  பயணம் செய்த பயணிகள்தான் பேருந்தை  எரித்தார்கள், சேதப்படுத்தினார்கள்,   பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் உடந்தையாக செயல்பட்டார்கள்!   பஸ்களை சேதப்படுத்துவதை  டிரைவரும் கண்டக்டரும்  தடுக்க வில்லை!   என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்து  அன்புமணி சொன்னாலும்  ஆச்சரியம் இல்லை!   அல்லது  எங்கள் கட்சியினர் யாரும்  பஸ்களை சேதப் படுத்தவில்லை,  நடந்தவைகளுக்கு  எல்லாம்   ஒபாமாவும்,ஹிலாரியும் தான் காரணம் என்று புதிய கண்டுபிடிப்பை அன்புமணி வெளியிட்டாலும்   ஆச்சரியம் இல்லை !


    
    

Comments

 1. என்ன ஒரு கால்வேக்காட்டு பதிவு ஹிலாரி கிளிண்டனும் ஒபாமாவும் உன் பக்கதுவீட்டுக்காரனா எங்க அவங்க போன் நம்பரையும் மெயில் ஐடியையும் கொடுங்கள் பாக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நீங்க கேட்ட ஈமெயில் , போன் நம்பர்கள் இதில் இருக்கு. போன் போட்டு வண்டலூர்ல இருக்குற உங்க ஆண்ட பரம்பரைய ரிலீஸ் பண்ண சொல்லுங்க.

   http://www.whitehouse.gov/contact/write-or-call

   Delete
 2. jAYAM THAMBI,
  poyee ramadass kalai nakku !

  illainna avan pondatti selai pavadai clean panni kodu.

  ReplyDelete
 3. ஜெயம்,
  புத்திசாலிகள் தவறை ஒப்புக் கொள்வார்கள். மூடன்கள்தான் வாக்குவாதம் புரிவார்கள். வீணா போன ஒரு தலைவன் ஜெயிலுக்கு போனா வெளியில் வன்முறை கட்டவிழ்ப்பது என்பது பழைய தெலுங்கு படக் கதை. இப்போது செல்லாது. மக்கள் இன்றைக்கு அதை வரவேற்க மாட்டார்கள் என்பது கூட தெரியாத தத்தி உன் தலைவன். ஏன் இவ்வளவு வன்முறைக்கு உன் தலைவனின் மக்களுக்கு ஆதரவு உண்டென்றால் ஏன் 3 சீட்டு மட்டுமே சட்டசபையில் உங்களுக்கு கிடைத்தது? ஆட்சியையே அல்லவா கைப்பற்றிருக்கனும்? நல்ல கட்சி நல்ல தலைவன், நல்ல தொண்டர்கள். வேடிக்கையான தமிழ் நாடு.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?