மோடியின் மறுபக்கம்..

           இந்தியாவை வாழ்விக்க வந்த அவதார புருஷராக நரேந்திர  மோடியை சிலர் சித்தரித்து வருகின்றனர்.

     மோடி இந்துக்களின்  குடும்ப உறவை  கொச்சைபடுத்திய, பெண்ணின துரோகி.!  இவர்  யசோதா பாய் என்ற பெண்ணை இளைய வயதில்   திருமணம் செய்து, கைவிட்டவர் என்பது சமீபத்தில் தெரிய வந்திருகிறது! சிறிய அறையில் இன்றும் வசித்துவரும் அந்த பெண் மோடிக்கு பயந்து,மோடி  தன்னை   திருமணம் செய்ததை வெளிபடுத்தாமல் வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்! மோடி இதுவரை அதனை மறுக்கவில்லை, பத்திரிக்கைகளும் அவரிடம் கேட்காமல் இருந்துவருகின்றனர்!


        மனசாட்சியில்லாத,ஒரு பெண்ணை நிராதரவாக விட்ட அரக்க மனம் கொண்ட மோடி  2002-யில்   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்.இவரது தலைமையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி என்பவர்  குஜராத் கலவரத்தில் நரோடா  பாட்டியா என்ற இடத்தில நடந்த கலவரத்தில் 98 பேர்கள் கொல்லப்பட்டதற்கு  காரணமான    குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு  28-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு செய்யப்போவதாக அறிவித்து,தனக்கும் கலவரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்போது காட்டிக்கொண்ட  நரேந்திர மோடி அந்த முடிவை மறுபரிசிலனை செய்வதாக இப்போது அறிவித்து உள்ளார்.

        இதன்மூலம் குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தி,அப்பாவி முஸ்லிம்களை கொன்று,இளம்பெண்களைக் கற்பழித்து,கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, எரியும் நெருப்பில் உயிருடன் போட்டு எரித்து, முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய அனைத்து குற்றங்களையும் செய்த குற்றவாளிகளை காப்பாற்றவும் அவர்களுக்கு ஆதரவாகவும் மோடி இருந்துவருகிறார் என்பது உண்மையாகிறது!

      
         அமெரிக்கா தனது மண்ணில் காலடிஎடுத்து வைப்பதை விரும்பாமல் மோடிக்கு அனுமதி மறுத்து வந்தது.  மோடியின் முகத்தில் அமெரிக்க வாழ் இந்தியபெண் சமீபத்தில்  காறிதுப்பி உள்ளார்!,

         மோடியின் மனிதவேட்டை, முஸ்லிம்களின் படுகொலைகள், 2002-யில்  நடந்தேறிய கொடூரம் ஆகியவைகளை மறைத்துவிட்டு, குஜராத்தைப் பாருங்கள், அப்படியே இந்தியாவும் ஆக வேண்டும் என்று காவிக் கும்பலும், இந்துத்துவ மதவாதிகளும் நரேந்திர மோடியைத்   தாங்கி வருகின்றனர்!

     நரேந்திரமோடி முதலில் மனிதனாக மாற வேண்டும்.,செய்த தவறுகளுக்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்  செய்த குற்றங்களை தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டு,தண்டனையை ஏற்கவேண்டும்!   கைவிடப்பட்ட தனது மனைவி யசோதா பாய் காலில் விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்! . அப்புறம் நாட்டை காப்பாற்றுவது குறித்து அவர்  யோசிப்பதுதான்  முறையாகும்.!
Comments

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?