மக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .

         
           ஜனநாயகத்தின் உன்னதமே தேர்தலில் போட்டியிட்டு,மக்களைச் சந்தித்து  வாக்குறுதிகள் கொடுத்து  வாக்காளர்களின்  அபரிமிதமான வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்திலோ,நாடாளுமன்றத்திலோ இடம்பெறுவதும் கடமையாற்றுவதும் தான்!

          அவ்வாறு மகளைச் சந்தித்து வாக்கு கேட்டோ,அமோக வெற்றி அடைந்தோ, நாடாளுமன்றத்திற்கு செல்லாமல்,குறுக்கு வழியில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வருபவர்கள் சிலர் இந்திய அரசியலில் இருக்கிறார்கள்!

       அவர்களில் முதன்மையானவர் நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்! இதுவரை நமது பிரதமர் மன்மோஹன்சிங் மக்களவை எனப்படும் லோக் சபா தேர்தலில் நின்றவர் இல்லை. ஒவ்வொருமுறையும் ராஜ்ய சபை  எம்.பி.ஆக  பாராளுமன்றத்திற்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளார்!

       பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மன்மோகன் சிங்  1991-யில் முதல்முறையாக ராஜ்ய சபை  எம்.பி-ஆக அஸ்ஸாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1996-யில் அஸ்ஸாமிலிருந்து 2-வது முறை தேர்வு செய்யப்பட்டு, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆனார், இவ்வாறு நான்குமுறை 20 ஆண்டுகளுக்கு மேலாக  ராஜ்யசபை எம்.பி-யாக இருந்தவர்,தனது பதவிக் காலம் ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால்,மீண்டும்  5-வது முறையாக  ராஜ்யசபைக்கு தேர்வு செய்ய  அஸ்ஸாமில்  (15.05 2013) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.! 

          மக்களை சந்திக்காமல்  பதவிக்கு வரும் ஜனநாயகம் என்ன ஜனநாயகம்?  இவரைபோன்றவர்கள்   மக்களின் நலனுக்காக செயல்படுவார்கள்  என்பதை எப்படி நம்ப முடியும்? மன்மோகன் சிங் போன்றவர்கள்  மக்களாட்சித் தத்துவத்தை கேலிக் ஆளாக்குகிறார்கள் !

           80-வயது ஆகும்  நமது பிரதமர்   அனேக தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்தவர் என்பது இவர்மீது கூறப்படும் மற்றொரு விமர்சனமாகும்!
Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?