நான் சுடாத (எழுதிய ) கவிதை !

 இன்பமென்னும் முழு நிலவே ,
        எழில் செய்ய வாராயோ?
துன்ப இருள் நீயின்றி,
      துடைப்பது யார் கூரையோ?

குழல் அவிழ்ந்து மண்படர,
      குல மகளே நீ நடந்தால்;
நிழல் போல உனைத் தொடர்ந்து
     நெஞ்சம் வரக் காணாயோ?  ( இன்பமென்னும்..)

வானவில்லில்  தொட்டிலிட்டு,
        வண்ண மலர் மேற்பரப்பில்
 நான் அவளைத்  தாலாட்ட
        நாளெல்லாம் நினைத் திருந்தேன்!

  கருநீல விழி கூறும்..,
        கவிதைகளை படிக்க வந்தேன்!
  கண்ணீரில் தோன்றும் இந்த
        கவிதைகளை தூது விட்டேன்! ( இன்பமென்னும்..)

கற்பனையின் எல்லை தனை,
      கடந்து விட்ட பேரெழிலே!
அற்புதமான அழகுதனை
    அளிக்க வந்த புவிநிலவே.!

துன்பத்தைக் கருவாக்கி
     தோன்றுகின்ற கவிதைகள்தான்
இன்பத்துள் இன்பத்தை,
    ஏற்படுத்தும் கவிதைகளாம்..! ( இன்பமென்னும்..)
     

Comments

 1. துன்பத்தைக் கருவாக்கி
  தோன்றுகின்ற கவிதைகள்தான்
  இன்பத்துள் இன்பத்தை,
  ஏற்படுத்தும் கவிதைகளாம்..!

  உண்மை தான்.
  கவிதை அருமையாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?