எப்போதோ சுட்ட (படித்த ) கவிதை!

  அது எனது கல்லூரிக் காலம். எல்லா இளசுகளுக்கும் பிடிக்கும் கவிதைகள் எனக்கும் பிடித்து இருந்தது.!  இளமையில்  படித்த கவிதைகள் பல.. அதில் ஒன்று இது..


     சாடையில் கண்களை தூது விட்டாய்,
             சாமந்தி மஞ்சத்தில் தூவி வைத்தாய்;
    ஆடையை இரவினில் பறக்கவிட்டாய்,
           ஆயிரம் முறை என்னைத்  தழுவவிட்டாய்!
    மலர் வாடையில் தலைவைத்து தூங்கிவிட்டு,
           வரவையும் செலவையும் மறந்து விட்டு;
    பாடையில் ஒருநாள் போகையிலே.
           பக்கத்தில் துணை யார் பைங்கிளியே?

   மதுவினை கொஞ்சம் பருகத் தந்தாய்,
           மலரிதழ் தேனையும் அருந்தத் தந்தை;
   புதுவித சுகம் தரும் கலைஞன் என்றாய்,
          பூங்கவி இசைதரும் கவிஞன் என்றாய்;
   வதுவையின் சுகம்தர உருகி நின்றாய்,
          வஞ்சிக் கொடியென குனிந்து நின்றாய்!
    எதுவரை உறவுகள் சொல் கிளியே.?
         இறந்தபின் துணை யார் சொல் மொழியே!

    ஆறடிக் கூந்தல் உன் சொந்தமடி,
            ஆயிரம் கனவுகள் நம் பந்தமடி!
    தேரென மென் நடை  நடந்திடுவாய்,
            தெள்ளென மின் இடை மிளிர்ந்திடுவாய்!
     ஆரிந்த மானென மனம் வியக்கும்,
             இடை கொடி தழுவிட கரம் துடிக்கும்,
     ஆரடி இறந்தபின் துணை வருவார்?
             ஆறடி நிலம்தான் அணைத்திடுமே!

இந்த கவிதையை எழுதியது நானில்லை..! எழுதியவரைப் கண்டுபிடித்து  சொல்பவர்களுக்கு,   ஒரு அன்பு..   மு...... ....த் ........

  

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?