இந்திய ஜனநாயக லட்சணம்..


      ஒருவழியாக  பாராளுமன்ற முடக்கத்திற்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகும் காங்கிரசின் அஸ்வினி குமாரும், பவன் குமார் பன்சாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருகிறார்கள். காங்கிரஸ் செய்ய வைத்து இருக்கிறது.!

       இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டதன் மூலம் ஊழல்,முறைகேடுகளை செய்தவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்,காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருகிறார்கள்!


        இந்திராகாந்தி படுகொலையை ஒட்டி, சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  குற்றஞ் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்! 

      2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது..,  ஆ.ராஜா ராஜினாமா செய்தார். ஏர்டெல் நிறுவன உரிமை மாற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று தயாநிதி மாறன் ராஜினாமா நடந்தது.


       ஆனால், 2ஜி வழக்கு சி.பி.ஐ  நடவடிக்கையால்  இன்று  தீவிரத்தை இழந்துவிட்டது!   உச்ச நீதிமன்ற கண்காணிப்பு,கண்டிப்பு இல்லாமல் போனால்,  நிலகரி சுரங்க ஒதுக்கீடு விவகாரமும், ரயில்வே நியமன விவகாரமும்  (2ஜி-ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் போலவே)  தீவிரம் இழந்துவிடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

        மும்பையில் நடந்த   ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் முறைகேட்டை  மக்களே  மறந்துவிட்டதைபோல...,

         காமன்வெல்த் விளையாட்டு முறைகேடுகளை  கண்டு கொள்ளாததைப் போல, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் ஏற்பட்ட  முறைகேட்டை மறந்து விட்டது போல...,  

   இப்போது பரபரப்பாக்கப் பட்டு உள்ள   ஊழல், முறைகேடுகளும்  மறக்கப்பட்டுவிடும். அல்லது  ஆதாரங்கள், சாட்சியங்கள் எரிக்கபட்டோ,காணமல்  போய்விட்டது என்றோ கூறி குற்றஞ் சாட்டப் பட்டவர்கள்  விடுவிக்கப்பட்டு, நிரபராதிகளாகஆக்கப்படுவார்கள்.

      அவர்களுக்கு பாராட்டு வழங்கி, மீண்டும்  ஆட்சியில் அமர வைத்து ,  ஊழல் முறைகேடுகளைச் செய்ய   காங்கிரஸ் கட்சிமீண்டும்  வாய்ப்பளிக்கும்.   மக்களும் மறந்துவிட்டு, வாக்களித்து மீண்டும் அவர்களை ஆட்சியில் அமரச்  செய்வார்கள்.!  இப்படித்தான் நடக்கிறது  நமது இந்திய ஜனநாயகமும், நமது ஆட்சியின் லட்சணமும்.!

     இன்றுவரை ஊழல்கள்,முறைகேடுகள் ஒழிந்த பாடில்லை! ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களுக்கும்  அளவே இல்லை! அதற்காக அவர்கள்  தண்டனை பெறுவதும் இல்லை.! என்கிறபோது,  எதற்கு இந்த வழக்கு,விசாரணை,  ராஜினாமா  நாடகங்கள் ? தெரியவில்லை!

   எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? 
   எத்தனை காலந்தான் ஏமாறுவார்கள் நம்ம மக்களுமே!

     

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?