கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள்..!

        மழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல,  தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால்  ஆட்சிபொறுப்பு  ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது.! காரணம், காங்கிரசின் கலாசாரமான  கோஷ்டிகள்,குழுக்கள்  கர்நாடக காங்கிரசிலும் இருப்பதுதான்.       காங்கிரஸ் கட்சியின் முதல்வர் போட்டிலில்  சித்தராமையா, பரமேஸ்வர்,மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.வி.தேஷ் பாண்டே, வீரப்பமொய்லி எஸ்.சிவஷங்கரப்பா, டி.கே சிவகுமார்,  டி.பி.ஜெயச்சந்திரா, ஆகியோர்கள் இருகிறார்கள்!  இவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவருக்கு வருத்தம் ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங்கிரசுக்கு இருப்பது தெரிகிறது!        கர்நாடக முதல்வராக விரும்பும் இவர்களில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே,  இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது.
 இவர்களில், யார் முதல்வராக வந்தாலும் கர்நாடக  பொதுமக்கள் வரவேற்கவே செய்வார்கள்.!

            முதல்வர் போட்டியில் தொடக்கி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும்  செயலில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், நல்ல ஆட்சியை,தந்தால்  போதும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.!

          கடந்த முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சியும் செய்யகூடாது  என்பதை  காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும்  புரிந்து கொள்ளவேண்டும்!

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?