பத்மாசூரன் கதையும், பா.ம.க கட்சியும்      சிவபெருமானை நோக்கி  கடின தவம் இருந்த பத்மாசூரன் தான் யாருடைய தலைமீது கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றானாம்.தனக்கு வரம் கொடுத்த சிவனின் தலையில் கைவைத்து சோதிக்க முயன்று, இறுதியில் தனது தலையில் கைவைத்து அழிந்து போனதாக..   புராணக்  கதையில் படித்திருக்கிறோம்!

      பாட்டாளி மக்கள் கட்சியும் பத்மாசூரனைப்  போன்று  இருப்பதாக தெரிகிறது!  வன்னிய சங்கத்தை தடை செய்யும் நிலை இருப்பதாக அன்று மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தெரிவித்து எச்சரிக்கை செய்தனர். வன்னியர் சங்கம்," பாட்டாளி மக்கள் கட்சியாக" ஆனது!

         சிறந்த பேச்சாளரும் சிறுபான்மை சமூகங்களின்  பாதுகாவலருமாக இருந்த டாக்டர். பழனிபாபா  முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு    தி.மு.க.கட்சி உதவும் , என்று நம்பிக்கொண்டு தி.மு.க  மேடைகளில் முழங்கி, பட்டி தொட்டி எல்லாம் அக்கட்சிக்கு  ஆதரவு சேர்த்துவந்தார். கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததால் விலகிவந்து  எம்.ஜி.ஆருக்கு  நண்பராகி,  ஆ.தி.மு.க கட்சிக்கு  ஆதரவாக செயல்பட்டார்! எம்.ஜி.ஆரும்  கைவிடவே, புதிய அரசியல் கட்சியாக  பாட்டாளி மக்கள் கட்சியை  தேர்ந்தெடுத்தார்!

          முஸ்லிம்களுடன், இந்திய குடியரசு கட்சியையும்  டாக்டர்  சேப்பன்  உதவியுடன்  ஒருங்கிணைத்து,    பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் தமிழக  அரசியல் களத்தில்  வலம்வந்தது!

        டாக்டர் பழனிபாபா,டாக்டர் செப்பன், டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் அன்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் ஆகிய உழைக்கும் பாட்டாளி மக்களின்   முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக, அரசியல்  களம் கண்டார்கள்!

         இந்த மூவரும்  (எனக்கு தெரிந்து )தமிழகம் எங்கும் சுமார் 300-க்கு மேற்பட்ட கூட்டங்களில்  இணைந்து பேசினார்கள்! இத்தகைய  சூழலில்தான் தாழ்த்தப்பட்ட ஒருவரை தமிழகத்தின்  முதல்வராக ஆக்கியே தீருவேன் என்றும் எனக்கு பதவி ஆசை இல்லை என்றும்  எனது வாரிசுகள்  அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும்  டாக்டர் ராமதாஸ்  மேடைகளில் பேசிவந்தார்!

        தமிழக அரசியலில் குறிபிடத்தக்க வளர்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சி அடைந்தது!  தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கியது!   பழனிபாபா படுகொலைக்கு பிறகு,  முஸ்லிம்கள் குறித்த பார்வை  பாட்டாளி மக்கள் கட்சிக்கு  மாறிப்போனது!  இன்றுவரை முஸ்லிம்களில் ஒருவருக்கு கூட சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு கொடுத்து  அவர்களை  எம்.எல்.ஏவாகவோ, எம்.பி.யாகவோ  ராமதாஸ் ஆக்கியதில்லை! முஸ்லிகள் ராமதாஸை புறக்கணித்து வருகின்றனர்!

        தாழ்த்தபட்டவர்களின் நிலையும் அதுதான்! தாழ்த்தப்பட்டவர்களுக்கு  சீட்டே கொடுக்காத ராமதாஸ், " தமிழக முதல்வராக"ஆக்குவார் என்பதை நம்ப தாழ்த்தப்பட்டவர்களும் தயாராக  இல்லை! எனவே ,அவர்களும் ராமதாசை கைவிட்டு விட்டனர்!

         வேறு வழி  இன்றி,  வன்னியர்களை வைத்து  பிழைப்பு நடத்தும் நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது! எந்த சாதியை முதல்வர் ஆக்குவேன் என்றாரோ, அந்த சாதியை அழிக்கவும்,  அவர்களது பொருளாதாரத்தை ,வாழ்வாதாரத்தை முடக்கவும் இன்று  முனைப்பு காட்டிவருகிறார்! 

         பொது சொத்துகளை சூறை ஆடுவது, சேதப்படுத்துவது,  மரங்களை வெட்டி வீசுவது, பஸ்களை  எரிப்பது  என்று  தமிழக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும்  சீர்குலைத்து வருகிறார்!பொதுமக்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறது  ராமதாசின் கட்சி.!    தனக்கு கிடைத்த வாய்ப்புகளை  பத்மாசூரனை போல பயன்படுத்தி,  (ராமதாஸ்)  அழிவுக்கு ஆளாகி வருகிறார்!

        ஆகவே,   பாட்டாளி மக்கள் கட்சியை  எல்லாதரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும்,  இவர்களுடன்  தேர்தலில்  சுய ஆதாயத்திற்காக, சந்தர்ப்பவாத கூட்டு வைக்கும் அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகளையும்  புறக்கணிக்க பொதுமக்கள் முன்வர  வேண்டும்!

         இத்தனை அராஜகங்களையும் செய்துவிட்டு,  எப்படி தேர்தலில் பிற சமூக மக்களின் வாக்குகளை,ஆதரவை கோரமுடியும்?  என்பதை பாட்டாளி மக்கள் கட்சியினரும்  சிந்திக்க வேண்டும்!  சிந்திப்பார்களா?

      
 

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அடாவடிதான் இவர்களுக்கு மூலதனம். சிந்திக்கவெல்லாம் இப்போது நம் மக்களுக்கு சூடு சொரனை கிடையாது. நம் மக்களுக்கும் ஒரு சாராருக்கு இது ரொம்ப பிடித்திருப்பதால்தான் காடுவெட்டி குரு போன்ற கிரிமினல் எல்லாம் சட்டமன்றத்தை அலங்கரிக்கிறார்கள். நம் மக்களுக்கு வேறு ஆட்களா கிடைக்க வில்லை தேர்ந்தெடுக்க. குவாட்டருக்கும், பிரியானிக்கும், பிச்சை காசுக்கும் அலைந்தால் அனுபவிக்கத் தான் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் சிந்திக்க வேண்டும்! நன்றி..!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?