Posts

Showing posts from May, 2013

தேசபக்தி, தீவிரவாதமான கதை..!

இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள், உயிர் நீத்தவர்கள்,, சிறையில்அடைக்கப்பட்டவர்கள்  சித்திரவதைப் பட்டவர்கள்,ஆங்கிலேயரால் மரண தண்டனை அடைந்தவர்கள்  ஆயிரக்கனக்கானோர்கள் .அவர்களில் வெகு சிலரே காங்கிரஸ்காரர்கள்!  
     இந்திய மக்களை சமாதானப் படுத்தவும், சில  சலுகைகளைக்  வழங்கவும் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் கூட.. இன்று  தேச  பக்தியை   தங்களது  ஏகபோக உரிமையாக என்னும்   இந்துத்துவவாதிகள் . அன்று.... ஆங்கிலேயருக்கு எதிராக  போராடினால் ஆபத்து என  நினைத்து, தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வரவில்லை. !

   இந்துத்துவ  வாதிகளும், அதன்  தலைவர்களும்  இந்திய தேசத்தின் விடுதலையை விட, ஆங்கில அரசின் அடிவருடிகளாய் இருந்து,   அவர்களிடம்  ஊழியம் பார்த்து, ஊதியம் பெற்று, உண்டி வளர்ப்பதைதான் அன்று பெரிதாக நினைத்தார்கள்!

    வங்காளத்திலே பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் மடிந்தபோது... இவர்கள் ஆங்கில அரசாங்கத்துக்கு, ஆங்கிலேய ராணுவத்துக்கு உணவுப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் போட்டு, தங்கள் வருமானத்துக்கு வழி செய்து கொண்டவர்கள்!
     ஆங்கில அரசுக்கு எதிராக,      தீவிரமாக ப…

கையும் தாமரையும் கலந்து செய்யும் சதிகள்!

Image
காங்கிரஸ் அரசுக்கு அவ்வபோது நெருக்கடி  கொடுப்பதும், பாராளுமன்றத்தை முடக்குவதும், ஊழலுக்கு எதிராக முழங்குவதும்  பி.ஜே.பி -வின் பரபரப்பான நடவடிக்கைகளாக  இருப்பதை அறிவோம்.!

      காங்கிரசுக்கு எதிராக  கலகக் குரல்  எழுப்பும் பி.ஜே.பி-யும்  காங்கிரசும் அடிப்படையில் வெகுஜன மக்களின் விரோதிகளாக இருந்து வருகின்றன!


      பி.ஜே.பி எதிர்க்கும்  கொள்கைகளை   உண்மையில் காங்கிரஸ் அரசு சட்டமாக  நிறைவேற்றுவதில்லை! 

   ஜனநாயக அமைப்பில்  பிரதான எதிர்கட்சிக்கு மதிப்பளிப்பதில் தவறில்லைதான். ஆனால், எதிர்க்கட்சி கண்மூடித்தனமாக (தங்களது மதவாத அடிப்படையில் 0 அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கும்போதும், மக்களுக்கு ஆதரவான சட்டங்களை  நிறைவேற்ற தடையாகும் போதும்  ( பி.ஜே.பி எதிர்க்கிறதே என்பதற்காக )  பின்வாங்குவதும், நல்ல திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றாமல் இருப்பதும் தவறுதான்!

        பெண்களை அடிமைபடுத்தி ஆள  நினைக்கும் குணம் உள்ள இந்து மதவாதிகளின் கட்சியான பி.ஜே.பி-எதிர்க்கிறது என்பதற்காக பெண்களுக்கு  33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு உள்ளது!

        இந்தியாவை இந்து நாடாக மட்டுமே…

அரசே,தீவிரவாதத்துக்கு காரணம்!

Image
சகிப்புத் தன்மை உள்ளவர்கள் கூட,பொறுமை மீறி தீவிரமாகி விடுவது உண்டு.  நியாயங்கள் மறுக்கப்படும்போது,அநியாயங்கள் அதிகரிக்கும்போது  கடவுள் அவதரித்து, தட்டிகேட்பார்  என்று எல்லோராலும் இருக்க முடிவதில்லை!

       எந்த ஒரு செயலுக்கும், அதற்கு சமமான எதிர் செயல் இருக்கும் என்பது நீயூட்டனின் விதி.  இதனை ஆட்சியாளர்கள்முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

        ஜனநாயகத்தின்  போர்வையில்  பன்னாட்டு  கம்பனிகளையும்,பெரும் முதலாளிகளையும் ஆதரித்து, இயற்கை வளங்களை கொள்ளையிட அனுமதித்து,  சட்டீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின்   வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கியது மத்திய, மாநில அரசுகள்தான்.

      பழங்குடியின மக்களின்  நிலையை மேம்படுத்த முன்வராமல், சல்வாஜுடும் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மேலும் கொடுமைகளுக்கு ஆளாக்கியதும்,  அதனை அமைதியாக அனுமதித்து வருவதும் அரசுகள்தான். அரசின் இந்த பயங்கரவாதமே, ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு சட்டிஸ்கர்  பழங்குடியின மக்களை தள்ளி உள்ளது!

      அடிப்படை உரிமைகளை பறித்து, எதேச்சாதிகாரமாக நடக்கும் அரசுகளின் செயலால்தான், மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கும், தீவிரவாதத்தில் ஈட…

குண்டு வெடிப்புகளால் ஏற்படும் பயன்கள்!

Image
காரண காரியங்கள் இன்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. உலகில் நடக்கும் தீமைகளில் சில நன்மைகளும், நன்மைகளில் சில தீமைகளும் இருப்பதும் உண்மையாகும்!
        இந்த நியதிப்படி, நமது நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகள்  மூலம்  பொதுமக்கள் பலியாவதும், சொத்துகள் சேதம் அடைவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதும்,  மக்கள் அச்சபடுவதும்   தீமைகள்  ஆகும்.

     அதே நேரத்தில்  இத்தகைய குண்டுவெடிப்புகளால் நன்மைகளும் ஏற்படுகின்றன! எனக்கு நன்மையாக தெரியும் சிலவற்றை  கீழே தந்துள்ளேன்!

1)  குண்டுவெடிப்பு நடந்ததென்றால்.. பத்திரிக்கைகள்,ஒலி-ஒளி ஊடகங்கள்   பரபரப்பாக செயல்படுகின்றன. மக்களுக்கு பல்வேறு வகையான செய்திகளை தருகின்றன! அவைகள் இதுவரை நாம் அறிந்தே இருக்காத பல அமைப்புகள்   பற்றியும்,  அமைப்பின் தலைவர்களைப் பற்றியும் செய்தி தருகின்றன. அவைகள் நல்ல பொழுதுபோக்காகவும், நகைசுவை மிக்கதாகவும் இருக்கின்றன.

(       குண்டுவெடிப்புக்கு முன்பு அமைப்புகளைப் பற்றி செய்தி வெளியிடுவது இல்லை.) புலனாய்வு செய்யும் போலீசார் ,யார் குண்டு வைத்தது என்று அறிவிப்பதற்கு முன்பே பத்திரிக்கைகள் போட்டிபோட்டுக் கொண்டு,…

முடிந்ததும் தொடர்வதும்..

Image
பாலச்சந்தர் திரைபடத்தில் ஒரு கோட்டை அழிக்காமல்,சிறியதாக்க  முடியுமா? என்று ஒரு புதிருக்கு   வரைந்த  கோட்டை விட,  நீளமான  கோட்டை அருகில் வரைந்தால்   முதல் கோடு சிறியதாகி விடும்   என  காட்சி இருக்கும்.!

       இருகோடுகள் தத்துவம் இந்திய ஆட்சியாளர்களால் இப்போது பயன் படுத்தப்பட்டு  வருகிறது!  ஒரு ஊழல் குற்றசாட்டில் இருந்து, ஒரு முறைகேட்டில் இருந்து, மக்களது கவனத்தை திசைதிருப்பவும்  அந்த குற்றச்சாட்டின் வீரியத்தைக் குறைக்கவும்  இத்தகைய யுக்தியை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!

         2ஜி-முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல், நிலகரி சுரங்க பேர ஊழல், போன்ற அத்தனை ஊழல்களும் சமீபத்தில்  வெளிவந்த   கிரிக்கெட்  ஊழலால் மறக்கப்பட்டு விட்டது.மறைக்கப்பட்டு விட்டது.!

        சுசில் குமார் ஷிண்டே  பேர்பாக்ஸ் ஊழல் குறித்து ' இந்த ஊழலை மக்கள் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் ' என்று  குறிப்பிட்டு இருந்தார்.  மக்களின் மறதியையும்,  மன நிலையையும்  ஆட்சியாளர்கள்  புரிந்து வைத்துள்ளனர்.! அதனால்தான், மக்களைப்பற்றி கவலைபடுவதில்லை! ந…

இந்து வெறியர்கள் வைத்த குண்டு..

Image
மகராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ஆம் ஆண்டு  மசுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு நடந்தது. 37 பேர்கள் பலியானார்கள். வழக்கமாக மசூதிக்கு குண்டுவைத்தாலும்   வைத்தது  முஸ்லிம்கள்தான் என்ற இந்துத்துவ சிந்தனை கொண்ட போலீசார்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் அவர்களே குற்றவாளிகள் என்று முடிவுகட்டி  ஒன்பது அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத  தடுப்பு சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைத்தது.

       மாலேகான் குண்டுவெடிப்பை அபினவ் பாரத் என்ற ஹிந்து அமைப்பினரே நடத்தியதாக சுவாமி அசிமானாந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகே  தேசிய புலனாய்வு ஏஜென்சி (N I A) குண்டு வைத்த இந்து மதவெறியர்களை தேடத் துவங்கியது. அப்பாவி முஸ்லிம்கள் ஒன்பதுபேரும் 5-வருடங்கள் சிறைக்கு பிறகு விடுதலை  செய்யப்பட்டு உள்ளனர் !

        2006-யில் நடந்த  மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில்  ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், " லோகேஷ் சர்மா, தனசிங்,ராஜேந்திர சவுத்ரி,மனோகர் ஆகிய நான்கு பேர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது!   இவர்கள் நால்வரும் வெறும் அம்புகள்தான் என்று தெரிகிறது.
         இந்த வழக்கில் தொ…

ராஜீவ் கொலையாளிகளின் உயிர்..!

Image
இன்று ராஜீவ் காந்தி படுகொலையான நாள்! அவர் படுகொலை நடந்து           22- ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் அவரது படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை!

    ராஜிவைக்  கொன்றது விடுதலைப்புலிகள் என்று  குற்றம் சொல்பவர்கள், அவரை கொன்றதற்கு சொல்லும் காரணம்  பலவீனமானது.!
         சிங்களர்களுக்கு ராஜீவ்  மீது  கோபம் இருந்தது. இலங்கை அணிவகுப்பில் சிங்கள வீரன்  துப்பாக்கி கட்டையால் ராஜீவை தாக்க முற்பட்டதில் இருந்து அது தெரிந்தது .

        இரான் -இராக் போரின்போது,  பன்னாட்டு படைகளின் விமானங்களுக்கு (குறிப்பாக அமெரிக்க விமானங்களுக்கு)  இந்தியாவில் பெட்ரோல் போடுவதற்கு அனுமதிக்காமல்,ராஜீவ் கண்டித்த செயலால் அமெரிக்காவுக்கும் , அதன் அடியாளாக செயல்படும் இஸ்ரேலுக்கும் கூட.. ராஜீவ் மீது  வெறுப்பு இருந்தது!

         அடுத்த பிரதமராக  ராஜீவ் வருவதை தடுக்க நினைத்து, அந்த நாடுகள்  கூட ராஜீவைக் கொன்று, விடுதலைபுலிகள் மீது பழிசுமத்தி   இருக்க வாய்ப்பு உள்ளது !

           அமெரிகாவின் கையாளாக  செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியிடம்   ராஜீவ் கொலை தொடர்பாக  முறையாக  விசாரணை நடத்தப்ப…

எம்.பி.கள் செய்யும் மோசடி!

Image
நமது நாடாளுமன்ற  மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தங்குவதற்கு சொகுசான வீடுகள், லட்சத்திற்கு மேல்  மாதச் சம்பளம், இலவச தொலைபேசி,இலவச மின்சாரம்,இலவச குடிதண்ணீர்.என்று நிறைய சலுகைகளை வழங்கி உள்ளதை அறிவீர்கள்.எம்.பி.களுக்கு அரசு வாரிவழங்கி வழங்கியிருக்கும் சலுகைகள் போதாது என்று

           விமானத்திலே இலவமாக எக்ஸ்சிகுடிவ் வகுப்பில் ஆண்டுதோறும் பயணம் செய்ய வழங்கப்பட்டு உள்ள,இலவச பாஸிலும்  ஊழல் செய்து,தனியார் விமானங்களில் எகானமிக் வகுப்பில் பயணம் செய்து எக்ஸ்சிகுடிவ் வகுப்பில்பயணம் செய்ததாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி பணம் பெற்று வருகிறார்கள்.

          இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல,    கட்சி வித்தியாசம் இன்றி,தொகுதியில் பணியாற்ற  உதவியாளர்களை நியமித்துக் கொள்ளவும்,அவர்களுக்கு சம்பளமாக தர மாதந்தோறும்  ஒரு எம்.பி.-க்கு  ரூபாய் 30,000/வீதம் பணமும் இந்திய அரசு தருகிறது. இந்த பணத்தையும்  தாங்களே அனுபவிக்கவேண்டும் என்று  நினைத்து  செயல்பட்டு வருகிறார்கள்!

         தங்களது உதவியாளர்களாக  பி.ஏ -க்களாக  பெரும்பாலான எம்.பி=க்கள்  தங்களது மனைவிகளை,மகன்களை,கணவர்களை, மருமகன்களை, காட்டி…

வாங்க, சேர்ந்து மகிழலாம்..!

Image
"ஏதடா கவிஞன் நெஞ்சில் 
                          என்னதான் துயரம் என்று 
                   வாதிட வேண்டாம். நானே,
                            வாங்கிய வரத்தின் வேகம்!
                   மோதுவதாலே இன்று 
                            முழுவதும் அழுகைப்  பாட்டு
                    தூதுபோய் தீருமென்றால் 
                            துயரத்தை சொல்ல மாட்டேனா? " - கண்ணதாசன்

..............................................................................................................................

"அன்புக்கு இருவர் வேண்டும், 
          அழுகைக்கு ஒருவர் போதும்!
இன்பத்துக் இருவர் வேண்டும்,
        ஏக்கத்துக்கு ஒருவர் போதும்! 
துன்பத்தை தனிமையாக 
        சுவைப்பது போல வாழ்வில் 
இன்பத்தைச் சுவைப்பது இல்லை!
         இயற்கையின் சட்டம் ஈது!"- கண்ணதாசன்.

மக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .

Image
ஜனநாயகத்தின் உன்னதமே தேர்தலில் போட்டியிட்டு,மக்களைச் சந்தித்து  வாக்குறுதிகள் கொடுத்து  வாக்காளர்களின்  அபரிமிதமான வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்திலோ,நாடாளுமன்றத்திலோ இடம்பெறுவதும் கடமையாற்றுவதும் தான்!

          அவ்வாறு மகளைச் சந்தித்து வாக்கு கேட்டோ,அமோக வெற்றி அடைந்தோ, நாடாளுமன்றத்திற்கு செல்லாமல்,குறுக்கு வழியில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வருபவர்கள் சிலர் இந்திய அரசியலில் இருக்கிறார்கள்!

       அவர்களில் முதன்மையானவர் நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்! இதுவரை நமது பிரதமர் மன்மோஹன்சிங் மக்களவை எனப்படும் லோக் சபா தேர்தலில் நின்றவர் இல்லை. ஒவ்வொருமுறையும் ராஜ்ய சபை  எம்.பி.ஆக  பாராளுமன்றத்திற்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளார்!

       பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மன்மோகன் சிங்  1991-யில் முதல்முறையாக ராஜ்ய சபை  எம்.பி-ஆக அஸ்ஸாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1996-யில் அஸ்ஸாமிலிருந்து 2-வது முறை தேர்வு செய்யப்பட்டு, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆனார், இவ்வாறு நான்குமுறை 20 ஆண்டுகளுக்கு மேலாக  ராஜ்யசபை எம்.பி-யாக இருந்தவர்,தனது பதவிக் காலம் ஜூன் 15-…

மோடியின் மறுபக்கம்..

Image
இந்தியாவை வாழ்விக்க வந்த அவதார புருஷராக நரேந்திர  மோடியை சிலர் சித்தரித்து வருகின்றனர்.

     மோடி இந்துக்களின்  குடும்ப உறவை  கொச்சைபடுத்திய, பெண்ணின துரோகி.!  இவர்  யசோதா பாய் என்ற பெண்ணை இளைய வயதில்   திருமணம் செய்து, கைவிட்டவர் என்பது சமீபத்தில் தெரிய வந்திருகிறது! சிறிய அறையில் இன்றும் வசித்துவரும் அந்த பெண் மோடிக்கு பயந்து,மோடி  தன்னை   திருமணம் செய்ததை வெளிபடுத்தாமல் வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்! மோடி இதுவரை அதனை மறுக்கவில்லை, பத்திரிக்கைகளும் அவரிடம் கேட்காமல் இருந்துவருகின்றனர்!


        மனசாட்சியில்லாத,ஒரு பெண்ணை நிராதரவாக விட்ட அரக்க மனம் கொண்ட மோடி  2002-யில்   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்.இவரது தலைமையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி என்பவர்  குஜராத் கலவரத்தில் நரோடா  பாட்டியா என்ற இடத்தில நடந்த கலவரத்தில் 98 பேர்கள் கொல்லப்பட்டதற்கு  காரணமான    குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு  28-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு செய்…

நான் சுடாத (எழுதிய ) கவிதை !

Image
இன்பமென்னும் முழு நிலவே ,
        எழில் செய்ய வாராயோ?
துன்ப இருள் நீயின்றி,
      துடைப்பது யார் கூரையோ?

குழல் அவிழ்ந்து மண்படர,
      குல மகளே நீ நடந்தால்;
நிழல் போல உனைத் தொடர்ந்து
     நெஞ்சம் வரக் காணாயோ?  ( இன்பமென்னும்..)

வானவில்லில்  தொட்டிலிட்டு,
        வண்ண மலர் மேற்பரப்பில்
 நான் அவளைத்  தாலாட்ட
        நாளெல்லாம் நினைத் திருந்தேன்!

  கருநீல விழி கூறும்..,
        கவிதைகளை படிக்க வந்தேன்!
  கண்ணீரில் தோன்றும் இந்த
        கவிதைகளை தூது விட்டேன்! ( இன்பமென்னும்..)

கற்பனையின் எல்லை தனை,
      கடந்து விட்ட பேரெழிலே!
அற்புதமான அழகுதனை
    அளிக்க வந்த புவிநிலவே.!

துன்பத்தைக் கருவாக்கி
     தோன்றுகின்ற கவிதைகள்தான்
இன்பத்துள் இன்பத்தை,
    ஏற்படுத்தும் கவிதைகளாம்..! ( இன்பமென்னும்..)

எப்போதோ சுட்ட (படித்த ) கவிதை!

Image
அது எனது கல்லூரிக் காலம். எல்லா இளசுகளுக்கும் பிடிக்கும் கவிதைகள் எனக்கும் பிடித்து இருந்தது.!  இளமையில்  படித்த கவிதைகள் பல.. அதில் ஒன்று இது..


     சாடையில் கண்களை தூது விட்டாய்,
             சாமந்தி மஞ்சத்தில் தூவி வைத்தாய்;
    ஆடையை இரவினில் பறக்கவிட்டாய்,
           ஆயிரம் முறை என்னைத்  தழுவவிட்டாய்!
    மலர் வாடையில் தலைவைத்து தூங்கிவிட்டு,
           வரவையும் செலவையும் மறந்து விட்டு;
    பாடையில் ஒருநாள் போகையிலே.
           பக்கத்தில் துணை யார் பைங்கிளியே?

   மதுவினை கொஞ்சம் பருகத் தந்தாய்,
           மலரிதழ் தேனையும் அருந்தத் தந்தை;
   புதுவித சுகம் தரும் கலைஞன் என்றாய்,
          பூங்கவி இசைதரும் கவிஞன் என்றாய்;
   வதுவையின் சுகம்தர உருகி நின்றாய்,
          வஞ்சிக் கொடியென குனிந்து நின்றாய்!
    எதுவரை உறவுகள் சொல் கிளியே.?
         இறந்தபின் துணை யார் சொல் மொழியே!

    ஆறடிக் கூந்தல் உன் சொந்தமடி,
            ஆயிரம் கனவுகள் நம் பந்தமடி!
    தேரென மென் நடை  நடந்திடுவாய்,
            தெள்ளென மின் இடை மிளிர்ந்திடுவாய்!
     ஆரிந்த மானென மனம் வியக்கும்,
             இடை கொ…

இந்திய ஜனநாயக லட்சணம்..

Image
ஒருவழியாக  பாராளுமன்ற முடக்கத்திற்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகும் காங்கிரசின் அஸ்வினி குமாரும், பவன் குமார் பன்சாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருகிறார்கள். காங்கிரஸ் செய்ய வைத்து இருக்கிறது.!

       இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டதன் மூலம் ஊழல்,முறைகேடுகளை செய்தவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்,காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருகிறார்கள்!


        இந்திராகாந்தி படுகொலையை ஒட்டி, சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  குற்றஞ் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்! 

      2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது..,  ஆ.ராஜா ராஜினாமா செய்தார். ஏர்டெல் நிறுவன உரிமை மாற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று தயாநிதி மாறன் ராஜினாமா நடந்தது.


       ஆனால், 2ஜி வழக்கு சி.பி.ஐ  நடவடிக்கையால்  இன்று  தீவிரத்தை இழந்துவிட்டது!   உச்ச நீதிமன்ற கண்காணிப்பு,கண்டிப்பு இல்லாமல் போனால்,  நிலகரி சுரங்க ஒதுக்கீடு விவகாரமும், ரயில்வே நியமன விவகாரமும்  (2ஜி-ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் போலவே)  தீவிரம் இழந்துவிடும் என்பதை எதிர்ப…

கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள்..!

Image
மழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல,  தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால்  ஆட்சிபொறுப்பு  ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது.! காரணம், காங்கிரசின் கலாசாரமான  கோஷ்டிகள்,குழுக்கள்  கர்நாடக காங்கிரசிலும் இருப்பதுதான்.       காங்கிரஸ் கட்சியின் முதல்வர் போட்டிலில்  சித்தராமையா, பரமேஸ்வர்,மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.வி.தேஷ் பாண்டே, வீரப்பமொய்லி எஸ்.சிவஷங்கரப்பா, டி.கே சிவகுமார்,  டி.பி.ஜெயச்சந்திரா, ஆகியோர்கள் இருகிறார்கள்!  இவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவருக்கு வருத்தம் ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங்கிரசுக்கு இருப்பது தெரிகிறது!        கர்நாடக முதல்வராக விரும்பும் இவர்களில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே,  இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது.
 இவர்களில், யார் முதல்வராக வந்தாலும் கர்நாடக  பொதுமக்கள் வரவேற்கவே செய்வார்கள்.!

            முதல்வர் போட்டியில் தொடக்கி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும்  செயலில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு …

கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்..

" தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல்" என்பதுபோல  பாரதிய ஜனதா கட்சியைவிட  காங்கிரஸ் கட்சி  பரவாயில்லை என்று  கர்நாடகா  மக்கள் மனநிலைஇருந்ததை  தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன !  

     தேர்தல் முடிவுகளில் இருந்து பொதுவாக ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு ஏற்படும்  அதிருப்பதி காரணமாக  மாற்று கட்சிக்கு வாக்களிக்கும்  மனநிலையும், முந்தைய கட்சியே பரவாயில்லை என்று நினைக்கும் மக்களின்  மனபோக்கை பிரதிபலிக்கிறது!

       கர்நாடகா தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு அக்கட்சியினரின்  பதவி வெறியும், முறைகேடுகளும்,ஊழல்களும், எடியூரப்பாவின் குறுக்கீடுகளும்  முக்கிய காரணங்களாகும்!

       இவைகளைத்தவிர, தேர்தலில் புழங்கும்  பணமும்,முதலீடும்  வழக்கமாக  தேர்தலை  நிர்ணயிக்கும் சக்தியாக  விளங்குவதை கட்டுகிறது!

       தேர்தலில் 4,36,14.881 வாக்காளர்களுக்கு 52,034 வாக்கு மையங்களில் 79,364 மின்னணு வாக்கு எந்திரங்களைக் கொண்டு  நடத்தப்பட்ட தேர்தலில்170 பெண் வேட்பாளர்களுடன்,மொத்தம்  2,948 வேட்பாளர்கள் 224 தொகுதிகளுக்கு போட்டியிட்டனர்!

    போட்டி இட்ட வேட்பாளர்களில் 681 வேட்பாளர்கள் கோட…

என்.டி.ஆருக்கு பாராளுமன்றத்தில் சிலை

காங்கிரஸ் அரசு நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு அளவே இல்லை!
இந்தியாவில் தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன! அத்தனையையும் கவனிக்காமல்  மக்களைஏமாற்றவும், மக்கள் கவனத்தை திசைதிருப்பும் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறது!

      பாராளுமன்றம்  நிலகரி விவகாரம், சட்ட அமைச்சர்  சி.பி.ஐ.-அறிக்கையை திருத்திய விவகாரம், பி.சி சாக்கோவின்  2ஜி-குறித்த அறிக்கை,பவன்  குமார் பன்சாலின் உறவினர்கள் ரயில்வேயில் ஆதாயம் தரும் பதவிகளில் நியமனம் செய்ய பெற்ற லஞ்ச விவகாரம்  என்று விழிபிதுங்கி,நடைபெறவே முடியாதபடி முடங்கிக் கிடக்கிறது!

     உருப்படியான மசோதாக்கள் நிறைவேற வழியில்லை!, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகி விட்டது! இவைகளைப் பற்றியெல்லாம்  எந்த கவலையும் இன்றி,   காங்கிரஸ் அரசு நாளை( 7.05.2013) பாராளுமன்ற வளாகத்திலே எம்.டி .ராமராவின் சிலையை வைக்க இருக்கிறது!

         பாராளுமன்றத்தில் என்.டி .ஆரின் சிலைய,அந்த மனிதரின் பெருமையை உணர்ந்து,அவர் ஆற்றிய ஜனநாயக கடமையை, தியாகத்தை,தேச சேவையை மதித்து,   காங்கிரஸ் அரசு வைப்பதாக தெரியவில்லை!

         எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்…

ராமதாஸும் காந்திய சிந்தனைகளும்!

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழிக்கு உதாரணமாக யாரையாவது சொல்ல முடியும் என்றால், டாக்டர் ராமதாஸை சொல்லலாம்!

       சமூக நீதி,சமத்துவம், சம உரிமைகளுக்காக, போராடிய அண்ணல் அம்பேத்கர்,பெரியார்  ஆகியோர்களின்  கருத்துக்களை  உள்வாங்கிக்கொண்டு அரசியல்,சமூக பணிகளை ஆற்ற வந்தவர்,  மருத்துவர்  ராமதாஸ் அவர்கள்!   தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட ,சிறுபான்மை சமூக மக்களின் வாழ்க்கை  நிலைகள்,அரசியல் பொருளாதார  நிலைகள் குறித்து அந்த சமூகத்தினரைக் காட்டிலும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பவர்!

          கடந்த காலங்களில்,மருத்துவர் ராமதாசும்,அவரது பாட்டாளி மக்கள் கட்சியும் மேலே சொன்ன  விஷயங்களை தங்களது கொள்கைகளாக கொண்டு செயல்பட்டது!

        தேர்தல் அரசியலில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளால், ஒடுக்கப்பட்டு வரும் தலித்,பிற்பட்டோர்,சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து, அவர்களின் அரசியல் அதிகாரத்துக்காக,பொருளாதார முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை மேம்பாட்டுக்காக போராடும் உயரிய லட்சியத்தில்  இருந்து ராமதாஸ் விலகிசென்றுவிட்டார்!

       இன்று சாதியம்  என்ற கொடிய ஆயுதத்தை  கையில் எடுத்துக் கொண்டு  எந்த ச…

அன்புமணி ராமதாஸின் கண்டுபிடுப்புகள்!

அப்பசைத்த குரங்கின் கதையை நினவு படுத்துகிறது  அன்புமணி ராமதாஸின் செயல்கள்! மக்களை சந்தித்து ஆதரவு பெறாமல், தேர்தலில் நின்று வெற்றி பெறாமல், அரசியலின் குறுக்கு பாதையாக கருதப்படும்  ராஜ்யசபா-வுக்கு  அப்பனின் தயவால்  சென்ற  அன்புமணி,  மருத்துவ துறைக்கு அமைச்சரானது பலரும் அறிந்த கதைதான்!

 இவர் அமைச்சராக இருந்தபோது,  சண்டிகர் பகுதியில் மருத்துவ கல்லுரி கட்ட முறைகேடாக அனுமதித்து, ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது! மருத்துவ  கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் சர்மா என்பவரது வீட்டில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் பல ஆயிரம் கொடிகளும் பல நூறு கிலோ தங்கமும் கைபற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது!

         மருத்துவ துறையின்  மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியின்  பங்குபற்றியும்,தொடர்புகள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று  சர்ச்சைகள் எழுந்தன! பயந்துபோன  அன்புமணி, காங்கிரசுடன் இணக்கமாக நடந்து கொள்ள ராமதாஸை  வற்புறுத்தி, காங்கிரசுடன்   பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி வைக்க செய்தார்!     இலங்கை தமிழருக்காக நீலி கண்ணீர் வடித்த இவர்களது துரோகத்தை தமிழக வாக்காளர்கள்  புரிந்துகொண்டதால்,   கட…

பத்மாசூரன் கதையும், பா.ம.க கட்சியும்

சிவபெருமானை நோக்கி  கடின தவம் இருந்த பத்மாசூரன் தான் யாருடைய தலைமீது கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றானாம்.தனக்கு வரம் கொடுத்த சிவனின் தலையில் கைவைத்து சோதிக்க முயன்று, இறுதியில் தனது தலையில் கைவைத்து அழிந்து போனதாக..   புராணக்  கதையில் படித்திருக்கிறோம்!

      பாட்டாளி மக்கள் கட்சியும் பத்மாசூரனைப்  போன்று  இருப்பதாக தெரிகிறது!  வன்னிய சங்கத்தை தடை செய்யும் நிலை இருப்பதாக அன்று மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தெரிவித்து எச்சரிக்கை செய்தனர். வன்னியர் சங்கம்," பாட்டாளி மக்கள் கட்சியாக" ஆனது!

         சிறந்த பேச்சாளரும் சிறுபான்மை சமூகங்களின்  பாதுகாவலருமாக இருந்த டாக்டர். பழனிபாபா  முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கு    தி.மு.க.கட்சி உதவும் , என்று நம்பிக்கொண்டு தி.மு.க  மேடைகளில் முழங்கி, பட்டி தொட்டி எல்லாம் அக்கட்சிக்கு  ஆதரவு சேர்த்துவந்தார். கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததால் விலகிவந்து  எம்.ஜி.ஆருக்கு  நண்பராகி,  ஆ.தி.மு.க கட்சிக்கு  ஆதரவாக செயல்பட்டார்! எம்.ஜி.ஆரும்  கைவிடவே, புதிய அரசியல் கட்ச…