நாடு எங்கே போகிறது?

         லால் பகதூர் சாஸ்திரி  ரயில்வே துறை அமைச்சராக  இருந்தபோது, தமிழகத்தில் அரியலூரில்  ரயில் விபத்து  நடந்தது!  பதறிப்போன லால் பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்! நடந்த விபத்துக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார்!

      பதவியில் உள்ளவர்கள்  தங்கள் பதவி காலத்தில்  தங்களது துறையில் ஏதேனும் தவறுகள் நடந்தால்,  தாங்களே தவறு  செய்ததாக அன்று கருதினர்! தங்களது பணிகளை அர்ப்பணிப்புடனும், மிகுந்த கவனத்துடனும் செய்தனர்! அன்றைய ஆட்சியாளர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு தங்களது பதவியும் பணியும் பொது மக்களின் நலனுக்கு  சேவை செய்ய  கிடைத்த வாய்ப்பாக கருதி செயல்பட்டனர்!

        பொது வாழ்க்கையிலும், அரசு பணிகளிலும் எந்தஒரு தவறும் ஏற்படக்கூடாது என்பதில் அவர்களுக்கு அக்கறை இருந்தது. தவறு நேரிட்ட போது,நேரிட்ட தவறுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றாலும் தாங்களே தவறு இழைத்து விட்டதாக எண்ணி வருந்தினர்!

      ஆனால்  இன்று?  எத்தகைய தவறு,முறைகேடு ஏற்பட்டாலும் கூட, தாங்களே அறிந்து செய்திருந்தாலும் கூட அதனை ஏற்க மறுத்து வருகின்றனர்!   தங்களது தவறுகளை, குற்றங்களை  பிறரின் மீது சுமத்தி, தங்களை நிரபராதிகளாகவும் ,நீதிமான்களாகவும்  காட்ட முற்படுகின்றனர்!

         இந்திய அரசியலில் இத்தகைய மோசமான நடத்தை  ஆட்சியாளர்கள் இடம்  இருந்து  அரசு பணியாளர்கள் வரை ஊடுருவி உள்ளது, கவலை அளிக்கிறது! அதிர்ச்சி அளிக்கிறது!  தங்களது பொறுப்புக்களை தட்டிகழிக்கும் மனநிலை  உள்ள இது போன்றவர்களால் அனைத்து  துறைகளும் சீரழிக்கப்பட்டு  வருகிறது!
 
         பொறுப்புகளை தட்டிகழிக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களால்,அரசு பணியாளர்களால் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம்,பாதிக்கப்பட்டு வருகிறது! ஊழலும் முறைகேடுகளும் அதிகரிகின்றன!  மக்களின் நலம் பின்னுக்கு தள்ளப்படுகிறது!  ஆகவே  இத்தகைய செயல்களை  ஆட்சியாளர்களும்  அனைத்து துறை பணியாளர்களும்  தவிக்க முற்பட வேண்டும்! சமூக ஆர்வலர்களும்,கல்வியாளர்களும் தடுக்க நடவடிக்கை  வேண்டியது அவசர  தேவையாகும்!

       டெல்லி போலீஸ் கமிசனர்," தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால், பிரச்னை தீர்ந்து விடுமா?" என்று கேட்டு உள்ளார்.   தனது கடமையை அவர் சரியாக செய்யவில்லை  என்பதை இதன்மூலம் தெரிவித்து இருக்கிறார்! அவரது பதவி வெறியையும் அது தரும் வசதி வாய்ப்புகளையும் அவர் அதிகமாக விருப்புவதைக்  காட்டி இருக்கிறார்!

       இவர்களுக்கு எல்லாம்,  ஜனங்கள் என்ன ஆனாலும்,  எப்படி சீரழிந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும்  கவலை இல்லை!  தங்களுக்கு அதுபற்றிய  அக்கறையோ,கவலையோ இல்லை என்ற மனநிலைதான் இருக்கிறது!

ஆட்சியாளர்களும் அப்படித்தான் இருகிறார்கள்! ஆட்சியாளர்கள் எப்படியோ,அது போலதானே அதிகாரிகளும் இருப்பார்கள்?
Comments

 1. லால் பகதூர் சாஸ்திரியை இன்னுமா நெனச்சிட்டிருக்கீங்க, பரிதாபப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நல்லவற்றை இன்று நினைவு கூற வேண்டிய நிலை இருகிறதே!

   Delete
 2. அது அந்தக் காலமுங்கோ, இக்கால இந்தியாவில் இதை எல்லாம் எதிர்ப்பார்கலாமா? :(

  ReplyDelete
  Replies
  1. எந்த காலமானாலும் இனியவைகள் நடக்கவேண்டும்,அதுவே நம்முடைய எதிர்பார்ப்பு !

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?