ஏழைகள் பற்றிய அக்கறை!

          நமது  அரசியல்வாதிகளுக்கும்,ஆளுவோர்களுக்கும்  ஏழைகள் மீது கவனமும்,கரிசனமும்  வரும்  என்றால்... தேர்தல்  நெருக்கத்தில் தான் ஏழைகள் மீது  அக்கறை வருகிறது!

          தேர்தல் முடிந்தவுடன் ஏழைகளைப் பற்றியோ,அவர்களது கஷ்டங்களைப் பற்றியோ,  ஏறெடுத்தும் பார்ப்பதில்லை!

           இந்த பொதுவான விதிக்கு ராகுல் காந்தியும் விதிவிலக்கு இல்லை! உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, திடீரென்று சமூகத்தில் அடித்தட்டு மக்களாக இருக்கும் சாமானிய,ஏழைகள்  வசிக்கும் பகுதிக்கு விஜயம் செய்து, அவகளின் வீட்டில் இருக்கும் உணவை சாப்பிட்டும், அவைகள் பயன் படுத்திய கட்டிலில் படுத்தும்,குசலம் விசாரித்தும்  தன்னை ஒரு ஏழைப் பங்காளனாக,அவர்களின் வாழ்கையை,ஏழ்மையை புரிந்துகொண்டவரா ராகுல்காந்தி காட்டிக் கொண்டார்!

        இந்த ஊடகங்கள் அப்போது ராகுலை போட்டிபோட்டு  பாராட்டியும், விளம்பரம் செய்தும் ஏழைகள் மீது ராகுலுக்கு இருக்கும் அக்கறையை வெளிச்சமிட்டன!  தேர்தல் முடிந்து, காங்கிரஸ் உத்தரபிரதேசத்தில் தோல்வியடைந்தது!  அகிலேஷ் யாதவ்  முதல்வராக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைதததும்  ராகுலுக்கு  ஏழைகள் மீது இருந்த அக்கறையை  காணவில்லை!  உ.பி.-க்கு அப்புறம் ராகுல் சென்று எந்த ஏழையின் வீட்டிலும் தங்கவில்லை,நலம் விசாரிக்கவில்லை!  உணவும் உண்டதாக  செய்தும் இல்லை!

         இப்படிப்பட்ட ராகுல்காந்தி,   இப்போது  திடீரென்று  ஏழைகளைப் பற்றியும், நூறு கொடிமக்களைப் பற்றியும, அவர்களது ஒத்துழைப்பை கொண்டுதான்  தேவைகளை நிறைவேற்ற முடியும் அதற்க்கு அரசினால் மட்டுமே  முடியாது  தொழில் அதிபர்களான நீங்களும் உதவ வேண்டும் என்று  தொழில் அதிபர்கள்  நிகழ்ச்சியிலே  பேசியுள்ளார்!  
   
      இதுமட்டுமின்றி,சிறுபான்மை மக்களின் நலம்,முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட  மக்களின்  நலம் அவர்களது மேம்பாட்டை பற்றியெல்லாம்  கவலைப்பட்டு பேசியிருக்கிறார்!

      ஏதோ,சராசரி அரசியல்வாதி போல ராகுல் பேசியதற்கு  பி.ஜே.பி-கட்சி கண்டனம் தெரிவித்து இருக்கிறது!  உண்மையிலேயே ராகுல்  சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் நலத்துக்காக பரிந்து பேசவில்லை என்பது  தெரிந்தும், தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரசுக்கு இவர்களின் வாக்குகளை  பெற வேண்டிய தேவை இருப்பதாலும்  ஒப்புக்கு பேசிய  ராகுலின் பேச்சை, பி.ஜே.பி-கட்சி  சீரியசாக எடுத்துக் கொண்டு கண்டனம் செய்துள்ளது!

       இப்போதும் மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்பது ராகுலுக்கோ,  பி.ஜே.பி-கோ தெரியாததல்ல!  ஏழைகளுக்கு மேலும் கஷ்டத்தைக் கொடுக்கும் என்று தெரிந்திருந்தும்,  நினைத்த போது  எல்லாம் பெட்ரோல்,டீசல் விலையை  காங்கிரஸ் அரசு  உயர்த்தியதும், சரக்கு கட்டணம்,பால்,பஸ் கட்டணம்,  காய்கறிகள், உணவுப்பொருட்கள் அனைத்தும் உயர்ந்து தங்க முடியாத  சுமையில்  எல்லோரும் அழுந்திக் கிடப்பதும் தெரியாதது அல்ல!

           குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவிப்பதும், விவசாயிகள் கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொள்வதும், நெசவாளர்கள், தொழிலாளர்கள்  மின்சாரம் இல்லாமல்  முடங்கிக் கிடப்பதும்,வறுமையில் வாடுவதும் ராகுலுக்கும்  பி.ஜே.பி-க்கும்  தெரியாதது  அல்ல!

        ஏழைகளைப் பற்றி, அவர்களது   நல்வாழ்வுக்கு,மேம்பாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யாத இவர்கள், ஏழைகளைப் பற்றி நீலிகண்ணீர் வடிப்பது    எதிர் வரும் தேர்தலை  மனதில் நினைத்துதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான உண்மையாகும்!

         சிறுபான்மையினருக்கு  இட ஒதுக்கீடு  தருவதாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி தந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது! அதைப்பற்றி கவலைப் படவில்லை.!

       வரும் தேர்தலிலும் இதுபோலவே  சிறுபான்மையினருக்கும், தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கும்  வீடு,சாப்பாடு, உடை  எல்லாம் தருவதாக காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும்  தேர்தல் வாக்குறுதிகளை தரும் என்று ஏழைகள் எதிர்பார்க்கலாம் ! 

          "யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து வீட்டுக்குள்ளே வை"  என்கிற கதைதான்  ஏழைகள் பற்றிய இவர்களின் பேச்சும், செயலும்!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?