வாங்க சிரிக்கலாம்!

       முலாயம் சிங் யாதவ் மத்திய புலனாய்வுத் துறை C B I- அய்யை  கடுமையாக சாடி இருக்கிறார்! சி.பி.ஐ  அமைப்பை காங்கிரஸ் கட்சி அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது, காங்கிரஸ் அல்லாத கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மிரட்டவும்,காரியம் சாதிக்கவும் பயன்படுத்துகிறது. காங்கிரசின் ஆயிரங்கைகளில்  சி.பி.ஐ  போன்ற அமைப்புகளும் ஒன்று என்று கடுமையாக கூறி இருக்கிறார்!

         முலாயம் சிங் இவ்வாறு கூறியிருப்பது உண்மையன்பதை  சி.பி.ஐ-இன் பல செயல்கள் உறுதி செய்கின்றன ! சி.பி.ஐ  காங்கிரசுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் அல்லாத அரசுகள்  மத்தியில் ஆட்சி செய்தபோதும் கூட  அது ஆளும் கட்சிகளின் ஏவல்களுக்கு,விருப்பத்துக்கு ஏற்றார்போல  செயல்பட்டு வந்துள்ளது!
 

         சி. பி. ஐ-ஒன்றும்  தன்னிசையான செயல்பாட்டை கொண்டுள்ள அமைப்பு அல்ல!  இதற்கு  கடந்த கால  இந்திய அரசியலில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன!

        காங்கிரசின் விருப்பத்துக்கு ஏற்ப சுனில்த எம் .பி-யின் மகன் பிரபலமான நடிகர் என்பதற்காக,  மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சஞ்சய் தத்துக்கு சி.பி.ஐ சலுகை காட்டிஉள்ளது!

       அரசியல் காரணங்களுக்காக அத்வானி போன்றவர்களின்  வழக்குகளை உடனடியாக அப்பீல் செய்யாமல் காலம் தாழ்த்தி, இப்போது தேர்தல்  நேரத்தில்  பி.ஜே.பி-கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவும்,தேர்தல்  பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளவும்  அப்பீல் செய்துவருகிறது!

       தி.மு.க- கட்சியின் பொருளாளரும்,தலைவருமான  ஸ்டாலின்  வீட்டுக்கு  காங்கிரசுக்கு கொடுத்துவந்த  ஆதரவை விளக்கிக் கொண்ட அடுத்த நாளே  சோதனை இட்டது  போன்றவைகள்  சி.பி.ஐ-இன் பாரபட்சமான, காங்கிரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வருவதைக் காட்டும் சமீபத்திய உதாரணங்கள் ஆகும்.

      2ஜி-  ஸ்பெக்ட்ரம் வழக்கில்  இப்போது வேகம் காடும் சி.பி.ஐ, மும்பை அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்களில் சுணக்கம்  காட்டி வருவதை  கவனத்தில் கொள்ளவேண்டி இருகிறது! அந்த ஊழல்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்புடைய ஊழல்கள்  என்பதால்தான் சி.பி.ஐ -மெத்தனமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளில்  உண்மை இருக்கிறது!

       கடந்த காலத்தில்  ஆயுதபேர  ஊழலை  சி.பி.ஐ கையாண்டது. அப்போது, பேருக்கு சில அதிகாரிகளை  விசாரித்த சி.பி.ஐ , ராஜீவ் காந்தியை விசாரிக்கவே இல்லை! ராணுவ தளபதி சுந்தர்ஜி சில ரகசியங்களை வெளியிட்டதும், வேறு உளவுவழக்கை விசாரிக்கப் போய்  சி.பி.ஐ  அவரை மிரட்டியது!

      செக் நாட்டில் கைத்துப்பாக்கிகள்  வாங்கியதில் ஊழல் செய்ததாக,      அருண் நேரு மீது புகார் கூறி,  சி.பி.ஐ  விசாரித்து ,  ஆதாரம் இல்லை என்று பிறகு பின்வாங்கியது!

        தொல்லை கொடுக்கும் விதமாக நூஸ்லி வாடியாவின் குடியுரிமை விவகாரத்தை கிளறி கைது  செய்தது! அதில் வெற்றி பெறமுடியாமல் சி.பி.ஐ தோல்வி  அடைந்தது!

     வி.பி.சிங்கின் உறவினரும்  அமேதி தொகுதி ராஜாவுமான  சஞ்சய் சிங்கை பூப்பந்தாட்ட வீரர்,  சையது மோடியின் கொலைவழக்கில் சி.பி.ஐ விசாரித்து, சையது மோடியின் மனைவி அமீதாவுக்கும் அவருக்கும் இடையிலான கள்ள உறவை அம்பலப்படுத்தி பிரசாரம் செய்தது! ஜனதா ஆட்சியில் அவ்வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இழுத்தடித்தது! சந்திர சேகரோடு, சஞ்சைசிங் கட்சி மாறி ஆட்சி அமைத்தபோது,  வழக்கை  கிடப்பில்  போட்டது!

      ராஜீவ் கொலை விசாரணை என பலகோடி ரூபாக்களை செலவிட்ட சி.பி.ஐ  1984-யில் இந்திர கொலையைத்தொடர்ந்து 5000-க்கும் மேற்ப்பட்ட சீக்கியர்கள் டெல்லியில்  கொல்லப்பட்ட வழக்கை  முடக்கி வைத்திருந்தது!  காரணம் சீக்கியர்களைக் கொன்றவர்கள் காங்கிரசு மந்திரிகள்,எம்.பிக்கள்,ராஜீவின் எடுபிடிகளாக  இருந்தவர்கள் என்பதால்தான்!

      பாம்பே டையிங் அதிபர்,  நூஸ்லி வாடியாவை அம்பானியின் ஆட்கள் கொள்வதற்கு முயன்ற சதிவழக்கை கைப்பற்றிய சி.பி.ஐ , கொலைகாரகளை தப்பிக்க செய்யும் வகையில், வழக்கை  முடக்கியது!

     அம்பானியின் ரிலையன்ஸ் கம்பனியின் அந்நிய செலவாணி பங்குச் சந்தை மோசடி வழக்குகளை புலனாய்வு செய்ய எடுத்துக்கொண்டு, உண்மையில் அவற்றை முடக்கவும், மூடி மறைக்கவும் சி.பி.ஐ வேலை செய்தது

         ராஜீவ்வின் கூட்டாளி சத்தீஷ் சர்மா செய்த சர்க்கரை இறக்குமதி ஊழல் மற்றொரு கூட்டாளியான சம்பிட்ரோடா செய்த தொலைபேசி ஒப்பந்த (சி -டாட்)மோசடியை இதேபோல மூடிமறைக்க வேலை செய்தது!

      வி.பி.சிங் மகனுக்கு வெளிநாட்டில் கள்ளப்பணம் இருப்பதாக சந்திரசாமி கும்பல் மூலம் போர்ஜரி ,போலி ஆவணங்கள் தயாரித்து, ராஜீவ் அரசு  அவதூறு செய்தது! அப்போதைய வெளியுறவு மந்திரியாக இருந்த நரசிம்மராவ் ,இதற்கு உடந்தையாக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது ! அதனால், சந்திர சேகர்,  நரசிம்மராவ்  ஆட்சிகள் ஏற்பட்டபிறகு இந்த வழக்கையும் சி.பி.ஐ கிடப்பில் போட்டு விட்டது!  

     இப்படி எத்தனையோ  ஆதாரங்களை, முன் உதாரணங்களை  மத்திய புலனாய்வு துறையான,   சி.பி.ஐ.யின்  செயல்களுக்கு,  பாரபட்சங்களுக்கு,அரசியல் ஆதாயத்துக்கு அந்த அமைப்பு பயன்பட்டு வருவதையும்,பயன்படுத்தப்பட்டு வருவதற்கும்  காட்டலாம்!

     முலாயம் சிங் யாதவ்  இப்போது கூறியிருப்பது அவருக்கு காங்கிரஸ் அரசு கொடுக்கும் நிர்பந்தத்தால்  என்பதுதானே தவிர உண்மையாகும்!

      "தொழில் திறன்","பாரபட்சம் இல்லாத நடுவு நிலைமை" 
"நேர்மைக்கு விசுவாசம் "   இவைகள் எல்லாம் என்ன தெரியுமா? சி.பி.ஐ-யின் இலட்சினையாக  பொறிக்கப்பட்டுள்ள முத்திரை வாசகங்கள் தான்!
 
       சிரிப்பு வருதா? சிரிக்காதீங்க!  அப்புறம் உங்கள் மேலும் சி.பி.ஐ-க்கு கொபம் வந்தாலும்  வரும்!

  

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?