ராமதாஸ்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா?

      வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராடிய மருத்துவர் ராமதாஸ் இன்று,வன்னியர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளவும்,தனது அரசியல் எதிர்காலத்தை நினைத்தும்  சாதிய பாகுபாடுகளை வன்னியர்களிடம் பரப்பி  வருகிறார்!

       பெரியார்,அம்பேத்கார்  ஆகியோர்களைப் பற்றி,சமுக சீர்திருத்தம் பற்றி, வாய்கிழிய முன்பு பேசிய ராமதாசின்  கோர முகம்  சமீப கால நடத்தைகளால்  வெளிப்பட்டு வருகிறது!

       எந்த பெரியார்,அம்பேத்கரை பாராட்டி,அவர்களது சீர்திருத்தங்களை தொடர இருப்பதாக முன்பு கூறினாரோ,மேடைகளில் சவடால் விட்டாரோ, அதற்கு முரணாக, இன்று சாதியத்தை தூக்கி பிடிக்கும் நிலையில் அவர் செயல்பட்டு வருவது கவலை தருகிறது!

   " கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்" என்பது பழமொழி! . அதனை புரிந்துகொள்ளாத ராமதாஸ்  இன்று "சாதிய வன்முறை" என்ற ஆயுதத்தின் மூலம் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிவு செய்து,அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக ஆக்கிவருவது தெரிகிறது!   தருமபுரி கலவரமும்,மரக்காணம் கலவரமும் அதனை உறுதிபடுத்துகின்றன!!

        இறையாண்மைக்கு எதிராக, இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணாக இன பேதத்தை,சாதிய வேற்றுமையை காட்டி,சமூகத்தில் அமைதிக்கு, பொதுமக்களின் வாழ்க்கைக்கு  குந்தகம் விளைவித்து வரும் ராமதாஸ் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்! அல்லது நாடுகடத்த வேண்டும்! அவரது  செயல்களுக்கு துண்டுதலாகவும், பின்னணியாகவும்   இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை  தடைசெய்ய தேர்தல் கமிசன் முன்வர  வேண்டும்! செய்வார்களா?

  

Comments

 1. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
  இப்படிக்கு
  தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 2. Excellent blog not only Ramadoss,Anpumany,Kaduvettu Guru att hree should br arrested under the POTA act and dhould be held in jail indefinitely.

  ReplyDelete
 3. மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.


  வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! ஆனால் தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம் என்கிறது அரசியல் மற்றும் பத்திரிகை சாதிவெறிக் கூட்டம். மனுவின் மறுபதிப்பாகிறது தலித் ஆதரவு சாதிவெறி!
  திட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?

  ReplyDelete
  Replies
  1. தலித்துக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. தராசு ரொம்ப கரக்டா இருக்கு.

   Delete
 4. இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்! இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

  ReplyDelete
 5. //இவர் நடத்துவது// திருமா நடத்துவது

  ReplyDelete
 6. நீதி விசாரணை கோருவதில் என்ன தவறு கண்டீர். பிரசினையை அரசியலாக்குவது யார்? யாரோ தேவை கருதி ஊதி பெரிதாக்குகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இரு பக்கமும் உள்ள நிலையில் ஒரு சார்பு நிலை எடுத்தது தவறில்லையா. கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் இந்நாட்டு குடிமகனில்லையா. அவர்களுக்கு என்ன நீதி

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?