லால் பகதூர் சாஸ்திரியும்,மன்மோகன் சிங்கும்


        இந்திய பாராளுமன்றம் இன்று கலவர காடாக காட்சி தருகிறது! சுரங்க ஒதுக்கீடு,2ஜி அலைகற்றை  ஒதுக்கீடு,ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் முறைகேடு , டெல்லி சிறுமிகள் கற்பழிப்பு,சாக்கோவின் பாரபட்சமான அறிக்கை என்று எதையாவது ஒன்றை எடுத்துகொண்டு  தினமும் எதிர்கட்சிகள் ரகளை செய்கின்றனர்! என்ன நடந்தாலும்  சரி, தங்களை தற்காத்துக் கொள்வதிலும், தங்களது நிலையில்,நோக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை என்ற நிலைபாட்டில்  மத்திய அரசும் ,மன்மோகன் சிங்கும்  இருப்பது தெரிகிறது!

        ஆக்கபூர்வமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறுவது இப்போது அருகிப் போய்விட்டது! கூச்சலும்,குழப்பமும்,பாராளுமன்ற ஒத்தி வைப்பும்  தொடர்கதைகளாக மாறிவிட்டன. மக்களின் பணம் இந்த விதமாகவும் விரையம் செய்யப்படுகிறது!  

       ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டிய மக்கள் விரோத சட்ட திருத்தங்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களுக்கு ஆதரவான சட்ட  திருத்தங்களை கிடப்பில் போட மட்டும் தவறுவதில்லை! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா,லோக்பால்  சட்ட மசோதா ஆகியவைகள் இன்றுவரை  நிறைவேற்றாமல் உள்ளதையே உதாரணமாக சொல்லலாம்!

        நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஆஜர் ஆகப்போவதில்லை என்று பிரதமர் எப்போது அறிவித்தாரோ, அப்போதே  ஜனநாயகம்  இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டது!  சீசரின் மனைவி சந்தேகத்துக்கு  அப்போற்பட்டவராக இருக்க வேண்டும் என்பார்கள்! நமது பிரதமர் அப்படி இல்லை என்பது  துரதிஷ்டம்!  மக்கள் அவர்மீது வைத்திருந்த   நம்பிக்கைக்கு  துரோகம் இழைத்து விட்டார்!

லால்பகதூர் சாத்திரி  குறித்து ஒரு சம்பவம் :

          லால் பகதூர் சாஸ்திரி  காங்கிரஸ் கட்சியின் முழு நேர  ஊழியராக  செயல்பட்டு வந்தார்! அவரது குடும்ப செலவுக்கு காங்கிரஸ் கட்சி மாதந்தோறும்  நாற்பது ரூபாய்கள் கொடுத்து வந்தது! அதில் அவர் குடும்பம் நடந்துவந்தது!

      ஒருமுறை அவரிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்,"அய்யா அவசரமாக நூறு ரூபாய்  பணம் தேவைபடுகிறது நீங்கள் உதவுங்கள் "என்று  கேட்டார். சாஸ்திரி,"  என்னிடம் அவ்வளவு பணம் ஏது ? கட்சி கொடுக்கும் நாற்பது ரூபாயில்  குடும்பத்தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்" என்று பதிலுரைத்தார்!

      இருவரும் பெசிகொண்டிருந்ததை கவனித்த சாஸ்திரியின் மனைவி, அவரைதனியே அழைத்து," எதோ அவசர தேவைக்கு கேட்கிறார். என்னிடம் நூறு  ரூபாய் இருக்கிறது அதனை அவரிடம் கொடுத்து அனுப்புங்கள்" என்று கூறி பணதைகொடுக்கவே , சாஸ்திரியும் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு  மனைவியிடம் ,"ஏது பணம்?" என்று விசாரித்தார்! அவரது மனைவி  "குடும்ப செலவுக்கு தரும் நாற்பது ரூபாயில்  ஐந்து ஐந்து ரூபாய்களை மிச்சம் பிடித்து சேர்த்ததாக "  தெரிவித்தார்!

      சாஸ்திரி மனைவியை பாராட்டிவிட்டு,காங்கிரஸ்  தலைமைக்கு  "அய்யா எனது குடும்ப செலவுக்காக கட்சி நாற்பது ரூபாய் கொடுத்துவருகிறது! இனிமேல் அதனை  முப்பத்தைந்து  ரூபாயாக குறைத்து கொடுங்கள் அதிலேயே எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்"  என்று   கடிதம் எழுதினார்!

      முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையும்  இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும்  நினைத்து பார்க்கவேண்டிஉள்ளது!   

                                    

Comments

  1. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?