விவசாயமே நமது ஜீவநாடி

        இந்தியா  ஒரு விவசாய நாடு. இந்தியாவில் 70 சதவிகிதம் மக்களின் வேலைவாய்ப்பு விவசாயத்தை சார்ந்தே இருக்கிறது! நூற்றி இருபது கோடி மக்களின் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், அவர்களின் பொருளாதார காரணியாகவும் உள்ளது விவசாயமே!

         துரதிஷ்ட்ட வசமாக இந்திய தலைவர்கள்,ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து  திட்டங்களை நிறைவேற்றாமல் தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை கொடுத்து கடந்த காலங்களில் செயல்பட்டு வந்ததால் இந்திய விவசாயம் நலிந்து விட்டது!

           விவசாயத்திற்கான அரசின் கவனிப்பு இல்லாததாலும்,நீர் தேவைகள் போன்ற பாசன வசதி கிட்டாததாலும், உரம், மருந்துகள், விதைகள், போன்றவற்றை வாங்கி, விவசாயம் செய்து, லாபம் கிடைக்காததாலும் விவசாயிகள் கடந்த காலங்களில்  லட்சக்கணக்கில் தற்கொலை செய்துள்ளனர்!

         இது ஒருபுறம் இருக்க,  'குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறிக்கும்' செயலாக  மதிய மாநில அரசுகள்  விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களை  எடுத்து, தொழிற்சாலைகள் கட்டவும் சாலைகள் அமைக்கவும் இன்ன பிற தேவைகளுக்கு  வழங்கவும் செய்துவருகிறது!

     விளைநிலங்களை அரசு  எடுக்கும்போது, அதற்கு நிவாரணமாக,இழப்பீடாக கொடுக்கும் பணம் மிகவும் குறைவாக  இருப்பதுடன் சமயங்களில்  இழப்பீடு வாங்குவதற்கு நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள் படும் கஷ்டம் சொல்லத் தரமற்றதாக இருக்கிறது!  

         இவ்வாறு பொதுமக்களிடம்,விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்களை தனியார்களின் தொழிற்சாலைகள் அமைக்க, பன்னாட்டு கம்பெனிகளின்  பெரும் தொழிலதிபர்களுக்கு  வழங்கும் அரசு,மேலும்  அவர்களுக்கு கோடிக்கணக்கில்  தொழிற்கடன் கொடுத்து,எற்றுமதி, இறக்குமதி சலுகைகள் கொடுத்து,சலுகை விலையில் தடங்கலில்லாத மின்சாரம் ,பிற தேவைகளை  நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது!

         இத்தனை சலுகைகளைப் பெற்று தொழில் தொடங்கும் பெரும்  முதலாளிகள்  'அரசுக்கு அல்வா  கொடுத்து' கொள்ளை லாபம் அடிகின்றனர்! தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்குவதில்லை!  போதிய வசதிகளை செய்வதில்லை!  

          நிரந்தர தொழிலாளர்களாக  சிலரை வைத்துகொண்டு  ஆயிரக்கணக்கில் தினக்கூலி  பணியாளர்களாக வைத்து அவர்களது உழைப்பையும்  சுரண்டி வருகின்றன! இவைகளை அறிந்து  இருந்தும், மதிய மாநில அரசுகள்  அத்தகைய தொழிற்சாலைகள்  மீது நடவடிக்கை எடுப்பதில்லை!  

        இது ஒருபுறம் இருக்க, விவசாய நிலங்களை அரசுகள் மூலம் பெற்ற தொழில் அதிபர்கள், தாங்கள்  பெற்ற நிலத்தில் பெரும்பகுதியை எந்தவித பயனும் இன்றி  தரிசாக வைத்தும், ஒன்றுக்கும் உதவாத செயல்களுக்கு பயன்படுத்தியும் வருவதையும்  காணமுடிகிறது!  

       இவைகளைத் தெரிந்தும் கூட.. இந்திய அரசு தொடர்ந்து தொழில் நிறுவனங்களுக்கு   நிலங்களை வழங்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறது!   விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களை  பறிப்பதற்கு முனைப்பு காட்டுகிறது! ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்  பறித்து, அவர்களை நடுத்தெருவில்நிறுத்தும்  மதிய அரசின்  எண்ணத்தையே, தற்போது கொண்டுவரவிருக்கும் " நில எடுப்பு சட்ட மசோதா" வெளிப்படுத்துகிறது!

        நில எடுப்பு சட்ட மசோதாவிற்கு  மாநில அரசுகள் காட்டும் எதிர்ப்பு என்பது தங்களது அதிகார குறைப்பு  பற்றியதாக உள்ளதே தவிர, விவசாயிகளின் எதிர்காலம்  குறித்த கவலையாக இல்லை என்பதை பார்க்க முடிகிறது!

             சுற்று சூழலை மாசுபடுத்தி, இந்திய விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் தொழில் நிறுவனங்கள் எத்தனை வந்தாலும்  இந்தியா தொழில் சார்ந்த நாடாக  முடியாது ! விவசாயமும் அது சார்ந்த தொழில்களுமே  இந்தியாவை வளர்ச்சியடைய செய்யும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், வேலை  இல்லா  பிரச்சனையையும்  தீர்க்கும்  என்பதை  எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?