எதை நாம் விரும்புகிறோமோ, அது கிடைக்கும்!

        
           கடந்த 15.04.2013-யில்  அமெரிகாவின் பாஸ்டன் நகரத்தில்  குண்டு வெடிப்பு நடந்தது! அமெரிக்கவே பதறியது!   மன்மோஹன்சிங் அவர்கள் கடும் கண்டனம்  தெரிவித்தார்!  இப்போது  டெக்சாஸ் அருகில் இருக்கும் நகர் ஒன்றில்  உரத் தொழிற்சாலையிலே வெடிவிபத்து என்று செய்தி வருகிறது!
 
           கடந்த ஒருவருடமாக  பாகிஸ்தானில்  இருபதுக்கு  மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து,ஆயிரகணக்கான அப்பாவி மக்கள் பலியாகினர்!

             ஈராக்கில் அமெரிக்க படை ஆக்கிரமிப்புக்கு பிறகு அந்நாட்டில்  ஏராளமான குண்டுவெடிப்புகள் நடந்து,உயிர் இழப்புகள்  நடந்துள்ளன!

           இப்போது வடகொரியாவின் மீது குண்டுமழை பொழிய,  அமெரிக்க காரணம் தேடிக்கொண்டு இருக்கிறது!

        பாலஸ்தீனத்தில்,  காஸா  பகுதியில்  இஸ்ரேல் ராணுவத்தால் வீசப்படும் குண்டுகள்  எண்ணற்றவையாகும்!

        இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு அளவே இல்லை! உயர்நீதிமன்றத்தில்,பாராளுமன்றத்தில், பொதுமக்கள் கூடும் மார்க்கெட் பகுதியில்,கோவில்களில்,கடைவீதிகளில்,மசூதிகளில், என்று ஏராளமான குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகிறது!

        இப்போது இந்திய தொழில் நகரமான  பெங்களூரில்  குண்டு வெடிப்பு நடந்துள்ளது!

        குண்டு வெடிப்புகளுக்கு பல காரணங்களும்,பல நோக்கங்களும் இடத்துக்கு இடம்,நாட்டுக்கு  நாடு  வேறுபடுகிறது!

          குண்டுவெடிப்புகள் அரசியல்  காரணங்களுக்காக,அரசியல்  ஆதாயங்களுக்காக,  எதிரிகளை பழி வாங்குவதற்காக,  செய்யபடுகின்றன!

         ஆனால், இவற்றின் பின்னணியில்  மனிதர்களின் கொடூர மனமும், அம்மனங்களில்  இருந்துவரும் மிருக வெறியும்  கண்டிக்கத்தக்கவை! தண்டிக்கத்தக்கவைகள்!!

 உலகத்தில் அமைதியான,அன்பான,மனித நேயம் உள்ள இடம் என்று எதுவும் இல்லையோ ?  என்று எண்ணத்தோன்றுகிறது!

        "நெஞ்சு பொறுப்பதில்லை இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்" என்று பாரதியைப் போலவே குண்டுவெடிப்பினை  செய்யும் மனிதர்களை,  நாட்டினை, இயக்கங்களைப் பார்த்து  வேதனைப்பட  வேண்டியுள்ளது!

         இன்று உலகத்தில் அமைதி அழிந்து,   எங்கெங்கு பார்த்தாலும் அவலம்,கலகம்  என்று காட்சி அளிக்கிறது!! மனிதர்களிடத்தில்   ஆண்டவா.. காப்பாற்று  எனும்  அபயக்குரல்கள் எழும்புகிறது! 
  
      ஒன்று மட்டும் உண்மையாக  தெரிகிறது! " கத்தியை  எடுத்தவன் கத்தியால் சாவான்" என்பதுபோல வெடிகுண்டு, தீவிரவாதம் போன்றவற்றில் ஈடுபடும் எந்த மனிதனும், சமூகமும்,நாடும், அவர்கள் விதைக்கும்   தீவிரவாதத்துக்கு  பலியாக  நேரிடும் என்ற உண்மை  தெரிகிறது!

       தீவிரவாதத்தை  விரும்பினால்,  அதுவே விரும்பும் மனிதனுக்கும், சமூகத்திற்கும்,  நாட்டிற்கும்    கிடைக்கும்   என்பதுதான்  நடைபெறும்  இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு சொல்லும் படிப்பினையாக இருக்கிறது!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?