நண்பர்கள்!

       மாவீரன் நெப்போலியனை பற்றி,ஒரு செய்தியை சொல்வார்கள். கவனம் சிதறாதவர்  என்றும் மிக கண்டிப்பானவர் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறேன்!

       ஒரு சமயம் நெப்போலியனை பயமுறுத்த,அவரது நண்பர்கள் ஒரு வெடி குண்டை வெடிக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டு அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்களாம் ,வெடிகுண்டு வெடித்தபோது, அதனை ஏற்பாடு செய்த நண்பர்களே,அதிர்ச்சி அடிந்து தங்கள் கையில் இருந்த மது கோப்பையை தவறவிட்ட போதும்,நெப்போலியன் ஆடாமல் அசையாமல் அதிர்ச்சி அடையாமல்  இருந்தாராம்!

      உண்மையோ,பொய்யோ, இதுவல்ல விஷயம்!  எனது நண்பர்களில் பலரும் கூட  "நெப்போலியனை "போல   எதற்குமே  உணர்ச்சிவசப்படாத, எதைபற்றியும் கவலைபடாத, எதனாலும் பாதிக்கபடாத  உள்ளத்தினராய் இருகிறார்கள்!

    விலைவாசி உயர்வா? அது அப்படிதான் இருக்கும்! தெருவெல்லாம் குழி தோண்டி இருகிறார்களா, அதெல்லாம் சகஜம்,கண்டுக்கக் கூடாது! ரோடிலே அடிபட்டு கிடக்கிறானா?  எவனோ அடிபட்டு கிடந்தால், நமக்கு என்ன? நாம் பத்திரமாக  இருக்கிறோம்!  என்பதுபோல, அனைத்து  பிரச்சனைகளிலும்   தங்களுக்கு  எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல  நடந்து கொள்ளுவதில் சமர்த்தர்கள்!

     இவர்கள் அன்றாடப் பிரச்சனையில் மட்டும் இப்படி இருப்பவர்கள் இல்லை! வோட்டு போடுவது, தேசிய,மாநில அளவில் பதிப்புகளை ஏற்படுத்தும் அரசியல் ,தேர்தல்,மக்களின் உரிமைப் போராட்டம், பந்த், போன்ற எதையும்  கண்டுகொள்ளாத , சீரியசாக  நினைக்காத  மனநிலையில் இருந்துவருவதைக் கண்டு எனக்கு  வியப்பு ஏற்படும்!

        இவர்களை  உலகத்தில் இருந்து விலகி தனித்த ஒரு உலகத்தில்  வாழும் அதிசய பிறவிகள்  என்று நினைப்பேன்!

         ஆனால், அவர்கள்  ரேசன்கடையில்,சினிமா தியேட்டரில்,பஜார் கடைகளில் ,பேருந்து நிறுத்தத்தில், பொது இடங்களில்   தங்களை முன்னிலைபடுத்தி, நியாங்களை,தர்மங்களை பற்றி பேசுவதை கேட்கும்போது மட்டும் வெறுப்புப் ஏற்படும!

   ஆடுகளை, மாடுகளைப் போல  வாழ்ந்து, பிறகு இறக்கும்  இவர்களை பார்க்கும்போது,  பரிதாபம் ஏற்படும்!       அவர்கள், மனிதர்கள் இல்லை மந்தைகள்  என்று  நினைக்கத் தோன்றுகிறது!

  எனது நண்பர்களிடம் இன்னுமொரு குணமும் இருக்கிறது,  நமது மனம் நோகுமே என்று  நினைத்து...  நம் முன்பு நம்மைப்பற்றி பேசாமல், நாம் போனபிறகு நம்மைப்பற்றி  பிறரிடம் பேசுவார்கள்! அவ்வளவு நல்ல குணம் கொண்ட நண்பர்கள்!
 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?