டாக்டர்.அம்பேத்கர் தலித்துகள் தலைவரா?

        டாக்டர் அம்பேத்கரின் 122-வது பிறந்த தினமும் சித்திரை முதல் நாளும் இந்த ஆண்டு ஒன்றாக வந்தது சிறப்பு! தமிழர்கள் அனைவரும் இந்த இரண்டு நிகழ்சிகளையும் சேர்ந்தே கொண்டாடி மகிழ்ந்தனர்!

     மத்திய அரசு, அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பி,சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விளம்பரங்களை நாளிதழில் கொடுத்து இருந்தது!

        தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பிலும் அம்பேத்கர் பிறந்த நாள் விளம்பரங்களை நாளிதழில் கொடுத்து இருந்தார்கள்!!    தமிழக அரசு கொடுத்த நாளிதழ் விளம்பரத்தில்  அம்பேத்கரின் பெருமையை,அருமையை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கரை "தலித் சமுதாயத்தின்  தலைவராக "  காட்டி விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது  முரண்பாடும்,நெருடலும் ஆகும்!

          சமீபத்தில்   இந்தியா வந்த அமெரிக்க அதிபர்," பராக் ஒபாமா,"இந்திய நாடாளுமன்றத்தில்  பேசும்போதுமூன்று இந்திய தலைவர்களைக் குறிப்பிட்டு  பாராட்டி பேசி இருந்தார்!

        இந்திய சுதந்திர போராட்டத்தை  அஹிம்சை வழியில்  நடத்தி, வெற்றி கண்ட தேச தந்தை காந்தி அடிகளைபற்றியும், இந்து சமயத்தின் புரட்சிகர கருத்துகளை,ஒபாமா- வின் ஊரான சிகாகோ நகரத்தில் வெளிபடுத்திய சுவாமி விவேகானந்தரையும் புகழ்ந்து குறிப்பிட்ட பராக் ஒபமா அவர்கள், அண்ணல் அம்பேத்கரை பற்றி மூன்றாவதாக  தான் மதிக்கும்  இந்திய தலைவர்களில் ஒருவராக குறிப்பிட்டு  இந்திய நாடாளும் அவையில் பேசினார்!

      " எந்த சமூகத்தினால் தான் பிறந்த,சார்ந்த, தலித் சமூகம்  பாதிக்கப்பட்டதோ,   அந்தசமூகத்தின்  ஆதரவுடன், அந்த சமூகத்தின் சமூக நலத்துக்காகவும், இந்திய அரசியல் சட்டத்தை   எழுதிய, சட்ட மேதை  டாக்டர்.அம்பேத்கர் என்று ஒபாமா பாராட்டி, தான் மதிக்கும் இந்திய தலைவர்களில் அம்பேத்கரும்  ஒருவர் என்று குறிபிட்டார்!

        இப்படி உலகம் போற்றும் தலைவராகவும்,ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்கு  குரல் கொடுத்தவராகவும் விளங்கிய  அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின்  அனைத்து சமூகத்திற்கும்  தலைவர் என்பதை மறைக்கவும், மறக்கவும் செய்யும் கயமைத்தனமாக  அவரை சாதியதலைவராக சிலர் காட்டிவருகின்றனர்!

        சாதியத்தை வீழ்த்த அவர் போராடியதை,  பொறுத்துக் கொள்ள  இயலாத உயர்சாதி ஆதிக்கதினரின் ஆதங்கமும், கசப்பு உணர்வும்  அம்பேத்கர் குறித்த தமிழக அரசின் நாளிதழ் விளம்பரம் மூலம்  தெரிகிறது!

       ஒரு உண்மையைச் சொல்லவேண்டும்! காந்தி இறக்கும்போது அவரிடம்  பணம் இல்லை!  அண்ணல் இன்று காந்தி இல்லாவிட்டால் அது பணமே இல்லை!  அதைப்போல, அம்பேத்கரை நினைக்காமல், இந்திய அரசியலை இனிமேல்  எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் செய்யவே முடியாது என்பதும் உண்மையாகும்!
Comments

  1. //இப்படி உலகம் போற்றும் தலைவராகவும், ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்கு  குரல் கொடுத்தவராகவும் விளங்கிய  அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின்  அனைத்து சமூகத்திற்கும்  தலைவர் என்பதை மறைக்கவும், மறக்கவும் செய்யும் கயமைத்தனமாக  அவரை சாதியதலைவராக சிலர் காட்டிவருகின்றனர்! //
    சரியான கோணத்தில் அலசப்பட்டுள்ள உங்கள் கருத்துக்கள் முக்கியத்வம் வாய்ந்தவை.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?