கைக்கு வரும் சோதனைகள்!

         காங்கிரசைப் பொறுத்த வரையில்  அக்கட்சி  நம்பி இருந்த  ராகுல் காந்தி  நான் பிரதமர் ஆக விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்! எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிந்து  சொன்னாரோ,என்னவோ?  ராகுல் காந்தி  பிரதமர் ஆவது இருக்கட்டும்,அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி வரும்  தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா? என்பதே சந்தேகம்!

        காரணம்,  காங்கிரஸ் கட்சி  எல்லா மாநிலங்களிலும் அதிருப்தியை பெற்று இருக்கிறது! ஏழைகள்,நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள், வணிகர்கள், போன்ற அனைத்து தரப்பினரிடமும் காங்கிரசுக்கு அதிருப்தி  இருக்கிறது! இது தவிர, அக்கட்சியின் மீது சுமத்தப்படும்,2ஜி முறைகேடு,சுரங்க ஒதுக்கீட்டு பிரசனை, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேடு,விவசாயிகளுக்கு ஒதுக்கிய நிதி குறித்த தணிக்கைத் துறையின் சமீப அறிக்கை, மக்களை வாடிவரும் விளைவாசிபிரசனையில் அக்கறை இன்றி இருப்பது, அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல்,டீசல் உயர்வு, அதனால் ஏற்படும் சரக்குக் கட்டண உயர்வு,ஆகியவைகள் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியை பொதுமக்களிடம் ஏற்படுத்தி இருப்பதை காணமுடிகிறது!

      காங்கிரஸ் கட்சியை வடமாநில மக்களும்,வாக்காளர்களும் வெறுக்கத் தொடங்கிய போதும் கை கொடுத்து  காப்பாற்றி வந்தது  தென் இந்திய மாநிலங்கள்தான்!    இப்போது தென் இந்திய மாநிலங்களின் பிரசனைகளை சரியாக கையாளாதது, மாநிலங்களுக்குள் ஏற்படும் தாவாக்களை  தீர்க்க முன்வராமல்,அரசியல் நோக்கத்துடன் நடந்துகொண்டது போன்ற காரணங்களால் காங்கிரசை கைகழுவ  தென்னிந்திய மாநிலங்களும் தயாராக உள்ளன!

           காங்கிரஸ்  ஆட்சி செய்யும் ஆந்திராவில் தெலுங்கான பிரசனை தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கிறது,! ஜகன் ரெட்டி,சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் ஆகியோர்களை வரும் தேர்தலில் காங்கிரசு எப்படி சமாளிக்கும் என தெரியவில்லை!

     கர்நாடகாவிலும் இதே நிலைதான்.!  கர்நாடகாவில் எடியுரப்பா, பா.ஜ.க-வின் செயல்பாடுகளால் ஏற்பட்டு இருந்த பொது மக்களின் அதிருப்தி காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது!  அந்த  நிலையை, காவிரி விவகாரத்தைக் "கை"யாண்ட முறையால் வீணடித்து விட்டது!
   
       கேரளாவில் கம்யுனிஸ்டுகளின் குடைசல், பி.ஜே. குரியனின்  சூரிய நெல்லியின் கற்பழிப்பு விவகாரம்,மக்கள்  ஜனநாயகக் கட்சியின் தலைவர் நாசர் மதனியை  சிறையில் வைத்திருப்பது போன்ற விவகாரங்களால் காங்கிரஸ் கை வலுவின்றி உள்ளது!

    தமிழகத்தில் சொல்லவே வேண்டாம்! அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசோடு கூட்டு வைக்க வைப்பு இல்லை! கூட்டணியில் இருக்கும் தி.மு.கா-வும்  இலங்கைப் பிரச்சனையை வைத்து குடைச்சல் கொடுத்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் ஆதரவு கொடுக்கும் நிலை எடுக்காது எனத் தெரிகிறது! இலங்கை தமிழர்கள் விசயத்தில் காங்கிரஸ் அரசு நடந்துகொண்ட முறையால் ஒட்டுமொத்த தமிழர்களும்,தமிழின அமைப்புகளும் இருந்துவருவதால், தமிழகத்தைப் பொருத்தவரையில் காங்கிரசுடன் கூட்டு வைக்கும் எந்த கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகவே இருக்கும்!

     காங்கிரஸ் கட்சிக்கு  இருக்கும் வாக்கு வங்கி  சிறுபான்மையினரின் கணிசமான வாக்குகள்தான்! இதற்கு காரணம் அக்கட்சி அணிந்து இருக்கும்,தேர்தல் களங்களில் சிறுபான்மையினரைக் கவர சொல்லிவரும்
" மதச் சார்பற்ற  கட்சி" என்ற காங்கிரசின் முகமூடி!   சிறுபான்மையின வாக்காளர்கள் ஆன,முஸ்லிம்கள்,கிருத்தவர்களின் ஆதரவு முந்தைய தேர்தலில் கிடைத்த  அளவுக்கு எதிர்வரும் தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்கவும்  வாய்ப்பு இல்லை!  முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் சொல்லும் உறுதிமொழியை அக்கட்சி தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்ளாது என்பதை முஸ்லிம்கள் உணரத் தொடங்கி விட்டனர்!
   மிகபெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில்  முலயாம் சிங்  யாதவ்,சென்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு  கணிசமான சட்டமன்ற உறுபினர்களை வெற்றிபெற செய்து  முஸ்லிம் வாக்கு வங்கியை கணிசமாக கைப்பற்றி உள்ளார்! முலயாம்  கட்சியை சமாளிக்கவேண்டிய சங்கடத்துடன்,காங்கிரசுக்கு பிரதமர் கனவில்  இருக்கும் மாயாவதியின் கட்சியையும் சமாளிக்க வேண்டிய நிலை  இருக்கிறது!

மேற்கு வங்கத்தில்  மம்தா பானர்ஜியை சமாளிக்க வேண்டி உள்ளது! குஜராத்தில் நரேந்திர மோடியை கவனிக்க வேண்டியுள்ளது!

      இப்படி காங்கிரசின் நிலை பல மாநிலங்களில் படுமோசமாக  இருக்கிறது! இதனை உணர்ந்திருக்கிற தலைவர்கள் பலரும்  சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள இப்போது இருந்தே காய் நகர்த்த தொடக்கி உள்ளனர்!  

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதுபோல ஆகிவிட்டது  இந்திய பிரதமர் பதவி! எப்போது வரும் என்று சொல்லமுடியாத நிலையில் தேர்தல் உள்ள நிலையில் அடுத்தப் பிரதமர் யார் என்பதாக ஆளாளுக்கு அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கிறது!

        பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் அதுவானியின் அந்தரங்கக் கனவு நிறைவேறாது என்று தெரிகிறது! மோடியை இன்றுவரை பிரதம வேட்பாளராக அத்வானி போன்றவர்கள் ஏற்காத நிலையில்,  பா.ஜ.க-வின் பிரதம வேட்பாளராக நரேந்திர  மோடியும் போட்டியில் இருக்கிறார்! சொந்த கட்சியில் சூனியம் வைகாமல் இருந்தால் மோடி பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது!

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?