நாடகம் பார்க்கலாம் வாங்க..!

          நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்படும்போது வழக்கமாக பேசப்படும்  விஷயம்,அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தும் நாடகங்களில் ஒன்று , தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் விஷயம்தான் !

            பகிரங்கமாக தன்னை மதவாத கட்சிதான் என்று பி.ஜெ .பி தனது சொல்லாலும்,செயலாலும் பிரகடனப்படுத்தி வருகிறது! அதன் காரணமாக,  அக்கட்சிக்கு இந்து மதவாத சிந்தனை உள்ள,   ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, போன்ற பலஅமைப்புகள் தேர்தலில் பி.ஜே.பி கட்சியை ஆதரிக்கவும் வாக்களிக்கவும் தயாராக உள்ளன! சிவசேனா போன்ற கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தும்,சார்ந்தும் தேர்தலுக்கு முன்பும்,தேர்தல் நடந்து முடிந்த பின்பும் இருந்து வருகின்றன!

          மற்றொருபுறம்  காங்கிரஸ் கட்சி ஒரு அணியாக  நின்று நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருவது கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்து வருகிறது!  காங்கிரஸ் கட்சிக்கு  மதசார்பின்மை முகமூடி கைகொடுப்பதால் அக்கட்சி  முஸ்லிம் கட்சிகள், சிறுபான்மையினர் கட்சிகள்,அமைப்புகளை  தனது அணியில் இணைத்து தேர்தலை சந்தித்து வருகிறது!

           பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய இரு அணிகளை தவிர்த்து அமைக்க விரும்பும்  மூன்றாவது அணி முயற்சியில்  எப்போதும்  மார்க்சிஸ்ட் கட்சியும்  மற்றொரு பிரிவான இந்தியகம்யுனிஸ்ட் கட்சியும் ஆர்வமாக இருந்துவருகின்றன!

        இந்த இரு கம்யுனிஸ்ட் கட்சிகளைப்போலவே  காங்கிரசால்  பாதிக்கப் பட்ட, அல்லது காங்கிரசை அப்புறப்படுத்த விரும்பும்  சில கட்சியின் தலைவர்கள்  தேர்தல்தோறும், மூன்றாவது அணி முயற்சியை
கையில் எடுக்கத் தவறுவதில்லை! முலாயம் சிங் யாதவ் இப்போது கையில் எடுத்துள்ளார்!
 
          இத்தகைய கட்சிகள்  பகிரங்கமாக  காங்கிரசை எப்போதும் எதிர்த்து, காங்கிரசின் தவறுகளை, ஊழல்,முறைகேடுகளை நாட்டு மக்களுக்கு சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கட்சிகள் இல்லை! காங்கிரஸ் கட்சி மீது  அதிருப்தி ஏற்படும்போதும்,  நம்பிக்கை இல்லா தீர்மானம்  பாராளுமன்ற அவைகளில் வரும்போதும்   நட்டு நலனை உத்தேசித்து  வாக்களித்த கட்சிகளும் இல்லை!

          அதுபோலவே,  பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி, வகுப்பு வாதம், இனவெறி, சாத்திய ஒடுக்குமுறைகள் போன்ற  முட்டாள்தனமான செயல்களைக்   கண்டித்தும், போராடியும்,  நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்திய கட்சிகளும்,அதுபோன்ற தலைவர்களும் இல்லை!

      சுருக்கமாக சொன்னால்,  மூன்றாவது அணி அமைக்க விரும்பும் தலைவர்களும்  அவர்களது கட்சிகளும், கடந்த காலத்தில் காங்கிரஸ் ,பி.ஜே.பி  ஆகிய  இரண்டு கட்சிகள் செய்ததையும்,  இந்த இரண்டு கட்சிகளை ஆதரித்தும் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள்தான்! இந்த இரண்டு கட்சிகள் மூலம் ஆதாயம் பெற்றவைதான்!  அவ்வாறான  நிலையில் ,இந்த கட்சிகள் மூன்றாவது  அணி அமைப்பது குறித்து  தேர்தல் தோறும் பேசுவதும், மூன்றாவது அணி அமைக்க முயல்வதற்கும்  காரணம் என்ன?

          உண்மையில் தேசத்தை காப்பாற்றவும், நாட்டு மக்களின்  நலனை கருதியும்  இல்லை என்று உறுதியாக சொல்லலாம்!

          பிறகு எதற்கு இந்த முயற்சி என்றால்,  தேர்தல் சமயத்தில் தங்களது கட்சிக்கு  அதிக சீட்டுகளும், தேர்தல் செலவுக்கு  கணிசமான பணத்தை இரண்டு அணிகளிடம் பெருவதர்க்கும்தான்!  அதுமட்டும் இன்றி, தங்களது பதவி ஆசையை, பதவி பித்தை  காட்டி,ஆட்சி அமைக்கும்  அணியிடம் தொடர்ந்து ஆதாயம் அடைவதற்கும் இந்த மூன்றாவது ஆணை பேச்சும்,நாடகமும் சில கட்சிகளுக்கும்,தலைவர்களுக்கும்  தேவைபடுகிறது!

      'அத்தைக்கு மீசை முளைத்தாலும்', 'கறந்த பால் மடி புகுந்தாலும்', 'கருவாடு மீண்டும்  துள்ளி குதித்தாலும்'   கூட..   இந்திய அரசியலில் மூன்றாவது அணி ஏற்படுவதும், அது  மக்களின் மதிப்பைப் பெறுவதும், ஆட்சியில் அமர்வதும் என்பது  நடக்கவே நடக்காத  காரியம்  என்று சொல்லலாம்!

 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?