குரங்குகள் நடத்தும் ஆட்சி!

        ஆங்கிலேயரிடம் மனுகொடுப்பதை மட்டுமே செய்துவந்த காங்கிரசை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக ஆக்கிய பெருமை காந்திக்கு உண்டு! சத்தியாகிரகம்,என்பதையும் உண்ணா விரதத்தையும்  ஆங்கிலேயருக்கு எதிரான போர் கருவியாக பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர் காந்தி!

         அவர்  கண்ட கனவுகளில் மற்றொன்று, ராம ராஜ்ஜியம்!. ராமராமரஜ்ஜியத்தில்  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும் மக்களின் குறைகளைக் களைந்து ,மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்ததாகவும்  கதை சொல்வார்கள்! உண்மையில் அப்படி நடந்ததா என்பது வேறுவிஷயம்! நடந்திருந்தால் ராம ராஜ்ஜியம்  என்பது இன்றைய இந்திய ஜனநாயக ஆட்சியை விட உயர்ந்தது என்று உறுதியாக சொல்லலாம்!

          இன்றைய ஜனநாயக ஆட்சிக்கு  இந்தியாவின் சுதந்திரமும்,அதனை  அடைய போராடிய  சுதந்திர போராட்ட வீரர்களும் அவர்களை வழிநடத்திய, காந்தியும் முக்கிய,அடிப்படையான காரணங்கள் என்று சொல்லலாம்!  

         காந்தியால் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அவரது உண்ணாவிரதபோராட்ட முறையும், அகிம்சையும் இன்று மதிப்பிழந்து விட்டன. அகிம்சை வழியில் போராடும் ஜனநாயகவாதிகளை  ஆட்சியாளர்கள் படுத்தும் பாடு  சொல்லிமாளது.!

        அதுவும் காந்தி  சார்ந்து இருந்த  காங்கிரஸ் கட்சியும்,அக்கட்சியின் ஆட்சியும்  ஜனநாயக வழியில் உரிமைக்காக போராடுபவர்களை   கையாளும் விதமானது,  சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பாக இருப்பது வெட்கப்படவேண்டிய  வேதனையாகும்!

       போகட்டும்  விசயத்துக்கு வருவோம்! 

         தமிழகமே திரண்டு  இலங்கைக்கு எதிராக  அறப்போராட்டங்கள் நடத்திக்கொண்டு  இருந்தபோது,ஆட்சியில் இருக்கும் காங்கிரசின் செயல்பாடுகள்  கண்டிக்கத்தக்கவையாக இருந்தன. ஐ.நா. சபையில் அமெரிகாவின் தீர்மானத்தை  நீர்த்துப் போக செய்யும் விதமாக நடந்து கொண்டது! இலங்கை அரசை இந்தியா பாராட்டியது!

      பிறகு தி.மு.க கட்சி ஆதரவை  வாபஸ் பெறுவோம்  என்றபோதும்  அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல்,அலட்சியபடுத்தி  வந்தது! ஆட்சி விலகல்  என அறிவிப்பை தி.மு.க வெளியிட்ட பிறகு,அமெரிகாவின் தீர்மானம்  இறுதி செய்த பிறகு,இந்தியா தீர்மானத்தை ஆதரிப்பதாக சொன்னதும், வாக்களித்து இருப்பதும் தமிழர்களை தொடர்ந்து  ஏமாற்றி வருவதை காட்டுகிறது!

    காலம் கடந்து கொண்டுவரும் திருத்தத்தை    எப்படியும் ஏற்க மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொண்டு,தமிழர்களை ஏமாற்றவும், இலங்கையை  தொடர்ந்து காப்பாற்றவும் இந்தியா மேற்கொண்டதந்திரத்தை    தமிழர்கள் புரிந்துகொண்ட உள்ளனர்.

           ஐ.நாவில் நிறைவேறியுள்ள தீர்மானத்தை வைத்து, ராஜபட்சேவை, இலங்கை அரசை அமெரிக்கா  மிரட்டவும், ஆதாயம் பெறவும் இந்த தீர்மானம்  பயன்படுமே தவிர, பாதிக்கப்பட்டுள்ள தமிழினத்துக்கு எள்ளளவும் தீர்மானத்தை நிறைவேற்றியது பயன்படப்போவதில்லை என்பது உண்மை நிலையாகும் !

       இந்த உண்மையானது ,இந்தியாவுக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும்  தெரிந்து உள்ளதுபோல,   இலங்கைக்கும்  தெரிந்திருகிறது!  இலங்கைக்கு தெரிந்து இருப்பதால்தான்  தினம் தினம்  தமிழ் மீனவர்கள்  இலங்கை படையினரால்  தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன!

        என்ன செய்வது ?   ராம ராஜ்யத்தில் அன்று சீதை சுகப்படவில்லை! துயரப்பட்டாள்!!  ஜனக மன்னனின் மகளாக்கப் பிறந்தும்,மன்னனான அயோத்தி   ராமனை மணந்தும்  சீதை துன்பப்பட்டாள், கண்ணீர் விட்டாள்,ராவணனால் கடத்தப்பட்டாள் , அசோக வனத்தில் அவஸ்தைப் பட்டாள்!  ராமனால் மீட்கப்பட்ட பிறகும்  அக்கினிக்கு  ஆட்பட்டாள் ,ராமனின்  சந்தேகத்தால் காட்டுக்கு சென்று மீண்டும் கலங்கி அழுதாள் !
 
         ராம ராஜ்ஜியத்தில் சீதைக்கு நேர்ந்ததைப்போல இன்று ராவணன் ஆண்ட இலங்கையில்,தமிழ் சீதைகள் நிலை உள்ளது! தமிழர்களின் நிலை உள்ளது!

         ராவணனைவிட கொடிய அரக்கனான ராஜபட்சேவால்  தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்! குற்றுயிர் ஆக்கப் படுகின்றனர்! காப்பாற்றவேண்டிய, வாழ்வளிக்க வேண்டிய  ராமனைப் போன்ற இந்திய ஆட்சியாளர்களாலும் , தமிழர்கள்  தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றன!

         இவற்றை எல்லாம் பார்க்கும் பொது,இன்று இந்தியாவில் நடக்கும் ஆட்சியானது  ராமராஜ்ஜியம் போலதான் இருக்கிறது! ஆனால், இன்று  ராமனின் சார்பாக இன்று குரங்குகள்  ஆட்சிநடத்துகின்றன!

          அதனால்தான் ,  தமிழர்கள் துயரம்  மட்டும் சீதையின் துயரங்களைப் போல மேலும்மேலும் தொடருகிறது!   

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?