ஒரு முடிவுக்குப் பின்னால் உள்ளவை!

     தி.மு.க. மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்வதாக அறிவித்து உள்ளது.! அக்கட்சியைத் தொடர்ந்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

       இவ்விரு கட்சிகள் எடுத்துள்ள  இம்முடிவு, இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த இந்திய அரசின் பார்வையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கலாம் ! ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நிர்பந்தத்தை இந்தியாவுக்கு  இக்கட்சிகளின் விலகல் முடிவு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை!

       இந்த முடிவை தி.மு.க.கட்சியின் தலைவர் கருணாநிதி  காலம் கடந்து எடுத்திருக்கிறார்!  இலங்கையில்  உச்ச கட்டப்போர் நடைபெறும் பொது,  40 நாடாளுமன்ற உறுபினர்கள் இருந்த நிலையில்  எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர்  படுகொலையாவது தடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு  ஏற்பட்டிருக்கும்! இலங்கை விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்து இருக்கும்!  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் நிலை தி.மு.க-வுக்கு ஏற்பட்டு இருக்காது!

       போகட்டும்  தி.மு.க  கூட்டணியில் இருந்து விலகியதும் இந்தியாவின் இலங்கை பாசம் குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது! இத்தாலியர்கள் இரண்டு மீனவர்களைக்  கொன்றதை கடுமையான  குற்ற நிகழ்வாகப்  பார்க்கும் அரசு  தமிழக மீனவர்கள் 578-பேர்கள் கொல்லப்பட்டும் இலங்கையின் மீது  நட்புப்  பார்வையுடன் இருப்பதை கவனிக்க வேண்டும்!

          எனவே, தி.மு.க-வை சமாதானம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்! கனிமொழி,தயாநிதி,அழகிரி,ராசா,தப்பிதங்கள்  மறைக்கப்படும், என்று ஆசை வார்த்தைகளை சொல்லி,மீண்டும் ஆதரவு  தருவதாக கருணாநிதியைச் சொல்லவைக்க  முயற்சிகள் மேற்கொள்ளவார்கள்!

      கருணாநிதி  ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால்,தொடர்ந்து ஈழபிரசனைக்கு  முக்கியத்துவம்  தரும்  முடிவில் இருந்தால், மதிய அரசு  வேறுவழி இன்றி, அதிகம் பயன்தராத அமெரிகாவின்  தீர்மானத்தை ஆதரித்து  வாக்களிக்க செய்யும்!  மறுபுறம்  கனிமொழி,ராசா ,அழகிரி, தயாநிதி, ஆகியோர்களின்  முறைகேடுகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கும்  வேலைகளை  செய்யும்!

       ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், ஆதரவு  அளித்துவரும்,  லாலு பிரசாத் யாதவ்,முலாயம் சிங் யாதவ்,மாயாவதி, போன்றவர்களை தேர்தல்வரை  கூடுதல் கவனத்துடன் நடந்துகொண்டு, அவைகள் வாயால் இட்ட கோரிக்கைகளை  தலையால் செய்யும்! 

           தி.மு.க.மத்திய  அரசுக்கு அளித்த  ஆதரவை வாபஸ் வாங்கியது உண்மை தானா? இல்லை இதுவும் ஒரு அரசியல் பேரத்தின் வகையா? என்பது  சில நாட்களில் தெரிந்துவிடும்!   மதிய அரசுக்கு கருணாநிதி மீண்டும் ஆதரவு அளிப்பாரே ஆனால், அதற்க்கு காரணம்  அவரது குடும்பத்தவர்களின்   விருப்பமும் அவர்களின் எதிர்கால  நலனும் என்று  உறுதியாக சொல்லலாம் !

         அவ்வாறு மீண்டும் நடந்தால்,தமிழர்களை விட,தமிழர்களின் நலத்தை விட, இனப்படுகொலைக்கு  நியாயம் கேட்பதை விட,ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வினைவிட, முக்கியமானது தனது வாரிசுகளின் நலம் என்பதை  கருணாநிதி சொல்லாமல் புரிய வைக்கிறார் என்றுதான் பொருளாகும்! அப்படி நடந்தால், வரலாறு ஒரு போதும்  கருணாநிதியை  மன்னிக்காது!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?