பார்க்கத் தவறிய நாடகங்கள்!


       இந்திய அரசுக்கு மிக சிக்கலை இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் ஏற்படுத்தி இருக்கிறது! ஈழத்தமிழர்களை ராஜபட்சே  அரசு கொன்றுவிட்டதாக, இனபடுகொலை செய்து விட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் முழு உண்மை இல்லை! இந்தியாவின் விருப்பத்தின் படியே,இந்தியாவின் உதவியுடன் நடத்தப்பட்ட "தமிழினப் படுகொலை" அது!

      அப்படி இருக்கும்போது,குற்றவாளியிடமே நியாயம் கேட்பது போல ,இந்தியாவிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது வீண் வேலையாகும்! இலங்கை கூட்டாளியைக் கட்டிகொடுத்தால், கூட்டாளி தன்னையும் கட்டிகொடுத்து விடுவான் என்பது தெரிந்தே இந்தியா மௌன நாடகம் நடத்துகிறது!

      இந்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க-விற்கு  இது தெரியும்! எனவேதான், "கண் கேட்டபின்பு சூரிய நமஸ்காரம் "செய்வதுபோல, ஈழதமிழர்கள் நலத்தில் அக்கறை உள்ளதாக கட்டிக்கொண்டு,டெசோ நாடகத்தை நடத்துகிறது!

      படுகொலை நடந்தபோது பார்த்துகொண்டு இருந்துவிட்ட குற்றத்தை மறைக்கவும், தன்மீது வேறு யாரும் குற்றம் சுமத்தக் கூடாது என்ற எண்ணத்திலும் டெசோவைத் தூக்கிப் பிடித்து இருக்கும் தி.மு.வுக்கு.....  தமிழர்களின் நலனுக்கான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வற்புறுத்துவது  இரண்டாம் பட்சம்தான்!

    தனது மகள் கனிமொழி, ஆ.ராசா, ஆகியோர்கள் மீது படிந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில்  இருந்து வெளிவர, இந்திய அரசை நிர்பந்திக்கும் மறைமுக தந்திரமாகவும்,அழகிரி தொடர்புடைய சிக்கல்களை தீர்த்துக்கொள்ள  உதவும் ஆயுதமாகவும் டெசோ கவசம் தி.மு.க-வுக்கு பயன்படுகிறது!

       மேலும் எதிர்வரும் பாரளுமன்டத்  தேர்தலில் சீட்டு பேரத்துக்கும், தமிழர்களுக்கு தன்மீதுள்ள வெறுப்பை  போக்கும் நோக்கத்திலும் இப்போது காங்கிரசுக்கு எதிராக கச்சை கட்டுவது  போல நடந்துகொள்கிறது!

     தனது ஆட்சி காலத்தில் தமிழர்களின் நலனைப்பற்றி கருணாநிதி கவலைப்படுவதை விட,  தனது மக்களின் நலனைப்பற்றி கவலைபடுவதே அதிகம் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்!இப்போது  அவர்படும் கவலையும்  அதுவாகவே இருக்கிறது! தமிழர்களின் கவலையோ,கண்ணீரோ இந்த தமிழ் தலைவருக்கு அப்புறம்தான் நினைவுக்கு வரும்!

        இந்தியாவில் ஈழத்தமிழர்களின் படுகொலை குறித்த விமர்சனங்கள் நடந்துவரும்  சூழலில் சர்வ வல்லமைபொருந்திய  சுபிரமணி சாமி  இலங்கைக்குச் சென்று  ராஜப்ட்சேவை சந்தித்து திரும்பி இருகிறார்! அவர் ராஜபட்சேவுக்கு  ஆறுதல் சொல்லப் போனாரா? இந்திய அனுசரணையாக இருப்பதைக் கூறப்போனாரா? அல்லது  ரஷியா,சீனா போன்ற நாடுகளின் வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிகாவின் தீர்மானத்தை  ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் என்று ஆலோசனை சொல்லப் போனாரா? இல்லை இந்த தீர்மானத்தை  அமெரிக்க கொண்டுவர   காரணமே  உலக நாடுகளின்  கண்டனத்துக்கு ஆளாகாமல் இலங்கையை காப்பாற்றத்தான் என்று  சொல்ல போனாரா? தெரியவில்லை! அந்த உண்மைகள் எல்லாம் அந்த  சுப்ரமணிய சுவாமிக்கே வெளிச்சம்!

    ஆனாலும் பாருங்கள் நம்ம சுப்ரமணிய சாமி  எதுக்கு இப்போ இலங்கைக்கு போயி ராஜபட்சேவைச் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு,"தமிழர்களுக்கு தனி மாநிலம் கேட்டு சந்தித்தேன்" என்று கூறியிருப்பது நல்ல நகைசுவை!   தனிநாடு கேட்டு  போராடிய தமிழர்களைக் கொன்றுவிட்டு, அக்கொலையை, இன அழிப்பை  பற்றிய தீர்மானம் வரும்போது,தமிழர்களுக்கு  தனிமாநிலம் கொடுக்க  சந்தித்தாராம்! அதற்கும் ராஜபட்சேவின் உதவி இருந்தால்தான் சாத்தியப்படும்  என்று கூறி, ராஜபட்சேவை நியாயவானாக காட்டி  இருக்கிறார், சு. சுவாமி !

     இந்த சு.சுவாமிதான் ராஜீவ் கொலைகாரர்களுக்கு  தூக்கு தண்டனையை உடனே  நிறைவேற்றவேண்டும் என்றும் சொல்லி இருகிறார்! தன்னை யாரும்  தூக்கில் போடமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு கூறிவருகிறார்! ராஜீவ்  கொலைகாரர்களை தூக்கில் போடவேண்டும் என்றால், இவரையும் சேர்த்துதான்  செய்யவேண்டும் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்!

   "குரங்குகள் எல்லாம் கொலோசினால்,
   சாமிக்குக் கிட்டுமா சந்தனமாலை?
   குற்றவாளிகளே தீர்ப்புரை எழுதினால்,
    நிரபராதிகளுக்கு கிட்டுமா உண்மைநீதி?"

-- எல்லாம் தமிழர்களின் தலையெழுத்து! 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?