Posts

Showing posts from March, 2013

நாடகம் பார்க்கலாம் வாங்க..!

நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்படும்போது வழக்கமாக பேசப்படும்  விஷயம்,அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தும் நாடகங்களில் ஒன்று , தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் விஷயம்தான் !

            பகிரங்கமாக தன்னை மதவாத கட்சிதான் என்று பி.ஜெ .பி தனது சொல்லாலும்,செயலாலும் பிரகடனப்படுத்தி வருகிறது! அதன் காரணமாக,  அக்கட்சிக்கு இந்து மதவாத சிந்தனை உள்ள,   ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, போன்ற பலஅமைப்புகள் தேர்தலில் பி.ஜே.பி கட்சியை ஆதரிக்கவும் வாக்களிக்கவும் தயாராக உள்ளன! சிவசேனா போன்ற கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தும்,சார்ந்தும் தேர்தலுக்கு முன்பும்,தேர்தல் நடந்து முடிந்த பின்பும் இருந்து வருகின்றன!

          மற்றொருபுறம்  காங்கிரஸ் கட்சி ஒரு அணியாக  நின்று நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருவது கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்து வருகிறது!  காங்கிரஸ் கட்சிக்கு  மதசார்பின்மை முகமூடி கைகொடுப்பதால் அக்கட்சி  முஸ்லிம் கட்சிகள், சிறுபான்மையினர் கட்சிகள்,அமைப்புகளை  தனது அணியில் இணைத்து தேர்தலை சந்தித்து வருகிறது!

           பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய இரு அணிகளை தவிர்த…

குரங்குகள் நடத்தும் ஆட்சி!

ஆங்கிலேயரிடம் மனுகொடுப்பதை மட்டுமே செய்துவந்த காங்கிரசை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக ஆக்கிய பெருமை காந்திக்கு உண்டு! சத்தியாகிரகம்,என்பதையும் உண்ணா விரதத்தையும்  ஆங்கிலேயருக்கு எதிரான போர் கருவியாக பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர் காந்தி!

         அவர்  கண்ட கனவுகளில் மற்றொன்று, ராம ராஜ்ஜியம்!. ராமராமரஜ்ஜியத்தில்  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும் மக்களின் குறைகளைக் களைந்து ,மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்ததாகவும்  கதை சொல்வார்கள்! உண்மையில் அப்படி நடந்ததா என்பது வேறுவிஷயம்! நடந்திருந்தால் ராம ராஜ்ஜியம்  என்பது இன்றைய இந்திய ஜனநாயக ஆட்சியை விட உயர்ந்தது என்று உறுதியாக சொல்லலாம்!

          இன்றைய ஜனநாயக ஆட்சிக்கு  இந்தியாவின் சுதந்திரமும்,அதனை  அடைய போராடிய  சுதந்திர போராட்ட வீரர்களும் அவர்களை வழிநடத்திய, காந்தியும் முக்கிய,அடிப்படையான காரணங்கள் என்று சொல்லலாம்!  

         காந்தியால் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அவரது உண்ணாவிரதபோராட்ட முறையும், அகிம்சையும் இன்று மதிப்பிழந்து விட்டன. அகிம்சை வழியில் போராடும் ஜனநாயகவாதிகளை  ஆட்சியாளர்கள் படுத்தும் பாடு  சொல்லி…

ஒரு முடிவுக்குப் பின்னால் உள்ளவை!

தி.மு.க. மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்வதாக அறிவித்து உள்ளது.! அக்கட்சியைத் தொடர்ந்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

       இவ்விரு கட்சிகள் எடுத்துள்ள  இம்முடிவு, இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த இந்திய அரசின் பார்வையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கலாம் ! ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நிர்பந்தத்தை இந்தியாவுக்கு  இக்கட்சிகளின் விலகல் முடிவு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை!

       இந்த முடிவை தி.மு.க.கட்சியின் தலைவர் கருணாநிதி  காலம் கடந்து எடுத்திருக்கிறார்!  இலங்கையில்  உச்ச கட்டப்போர் நடைபெறும் பொது,  40 நாடாளுமன்ற உறுபினர்கள் இருந்த நிலையில்  எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர்  படுகொலையாவது தடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு  ஏற்பட்டிருக்கும்! இலங்கை விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்து இருக்கும்!  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் நிலை தி.மு.க-வுக்கு ஏற்பட்டு இருக்காது!

       போகட்டும்  தி.மு.க  கூட…

நீங்க என்ன நினைகிறீர்கள்?

மகாத்மா காந்தி அவர்கள், உடுத்த வேறு ஆடை இன்றி,தான் கட்டியிருந்த சேலையின் ஒருபகுதியை உடலில் சுற்றிக்கொண்டு,மறுபகுதியை துவைத்துக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து கலங்கி,அன்றிலிருந்து அரை ஆடையுடன் காட்சியளித்தார்!

      தனது தாயின் வேண்டுகோளை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் தண்ணீர் குழாயைப் போட மறுத்து நிராகரித்தார் காமராஜர்!

         சாதாரணவகுப்பில்  ரயில் பயணத்தை செய்தும் காசை சிக்கனப்படுத்தி, அறிவுகண்ணைத் திறக்க மலிவு விலையில் புத்தகங்களை அச்சடித்து விநியோகித்தார் தந்தை பெரியார்!

       கட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் இருந்தும்,அதனை பயன்படுத்தாமல்,அந்த பணத்தில் தேநீர் வங்கிக் குடிக்கவும் விரும்பாமல் பட்டினி கிடந்தார் தோழர் ஜீவா!

        பொது வாழ்கையில்,சமூக நலத்தில் அக்கறைகொண்டவர்கள்  அன்று நடந்துகாட்டிய செய்கைகள் இவைகள்! இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டது! இன்றும் நமது நாடு  அடிப்படை தேவைகளில் கூட தன்னிறைவு அடைய இயலவில்லை! சுதந்திர இந்தியாவில் இன்றும் நாற்பது சதவிகிதத்தினர்  வறுமையில் வாடுகிறார்கள்! அடிப்படை உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கும் அவலம் தொடர…

கைக்கு வரும் சோதனைகள்!

காங்கிரசைப் பொறுத்த வரையில்  அக்கட்சி  நம்பி இருந்த  ராகுல் காந்தி  நான் பிரதமர் ஆக விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்! எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிந்து  சொன்னாரோ,என்னவோ?  ராகுல் காந்தி  பிரதமர் ஆவது இருக்கட்டும்,அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி வரும்  தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா? என்பதே சந்தேகம்!

        காரணம்,  காங்கிரஸ் கட்சி  எல்லா மாநிலங்களிலும் அதிருப்தியை பெற்று இருக்கிறது! ஏழைகள்,நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள், வணிகர்கள், போன்ற அனைத்து தரப்பினரிடமும் காங்கிரசுக்கு அதிருப்தி  இருக்கிறது! இது தவிர, அக்கட்சியின் மீது சுமத்தப்படும்,2ஜி முறைகேடு,சுரங்க ஒதுக்கீட்டு பிரசனை, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேடு,விவசாயிகளுக்கு ஒதுக்கிய நிதி குறித்த தணிக்கைத் துறையின் சமீப அறிக்கை, மக்களை வாடிவரும் விளைவாசிபிரசனையில் அக்கறை இன்றி இருப்பது, அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல்,டீசல் உயர்வு, அதனால் ஏற்படும் சரக்குக் கட்டண உயர்வு,ஆகியவைகள் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியை பொதுமக்களிடம் ஏற்படுத்தி இருப்பதை காணமுடிகிறத…

பார்க்கத் தவறிய நாடகங்கள்!

இந்திய அரசுக்கு மிக சிக்கலை இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் ஏற்படுத்தி இருக்கிறது! ஈழத்தமிழர்களை ராஜபட்சே  அரசு கொன்றுவிட்டதாக, இனபடுகொலை செய்து விட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் முழு உண்மை இல்லை! இந்தியாவின் விருப்பத்தின் படியே,இந்தியாவின் உதவியுடன் நடத்தப்பட்ட "தமிழினப் படுகொலை" அது!

      அப்படி இருக்கும்போது,குற்றவாளியிடமே நியாயம் கேட்பது போல ,இந்தியாவிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது வீண் வேலையாகும்! இலங்கை கூட்டாளியைக் கட்டிகொடுத்தால், கூட்டாளி தன்னையும் கட்டிகொடுத்து விடுவான் என்பது தெரிந்தே இந்தியா மௌன நாடகம் நடத்துகிறது!

      இந்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க-விற்கு  இது தெரியும்! எனவேதான், "கண் கேட்டபின்பு சூரிய நமஸ்காரம் "செய்வதுபோல, ஈழதமிழர்கள் நலத்தில் அக்கறை உள்ளதாக கட்டிக்கொண்டு,டெசோ நாடகத்தை நடத்துகிறது!

      படுகொலை நடந்தபோது பார்த்துகொண்டு இருந்துவிட்ட குற்றத்தை மறைக்கவும், தன்மீது வேறு யாரும் குற்றம் சுமத்தக் கூடாது என்ற எண்ணத்திலும் டெசோவைத் தூக்கிப் பிடித்து இருக்கும் தி.மு.வுக்கு.....  தமிழர்களின் நலனுக்கான தீர்மானத்தை ஆதரிக்க இந்…