Posts

Showing posts from February, 2013

பார்க்க மறந்த பக்கங்கள்!

அன்புள்ள மனிதர்களின் குண இயல்பு  எப்போதும் அதிகார வர்க்கங்களுக்கு இருந்ததே இல்லை! இருப்பதாக நாம் எண்ணிக்கொண்டு உள்ளது நமது பேதைமையாகும்!

    இன்று சேனல் 4-யில்  பிரபாகரனின் 12-வயது மகனின் "பச்சைப் பாலகப் படுகொலைக் காட்சி " வெளிவந்து உலக மக்களின் நெஞ்சை ரணமாக்கி உள்ளது!

       நாடு,இனம்,மொழி,நிறம் என எந்த பேதமும் பாராட்டாமல்  ராஜபட்சேவின்  கொடூர செயல்களை கண்டித்து வருகின்றனர்  கண்ணீர் விட்டு கதறுகின்றனர்!   இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்,போர் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்,சர்வதேச நீதிமன்றம்,ஐ.நா அமைப்பு ஈழத்தமிழர்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன.

     ஆனால், இந்தியாவின் குரல் மட்டும் இந்த கொடுமைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கவில்லை! இந்தியா இன்றுவரை கள்ள மவுனம் காத்து வருகிறது! இதனை தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!

          சமீபத்தில்  இந்தியாவந்த ராஜபக்செவை  எதிர்த்து தமிழ்  அமைப்புகள், கட்சிகள் கண்டனம் செய்தன. ஆர்ப்பாட்டம் செய்தன!  ம.தி.மு.க கட்சி,  திருப்பதிக்கு  பொய்,கருப்பு …

இதோ வந்துட்டேன்...!

அன்புள்ள இணைய பதிவர்களுக்கு, வணக்கம்!


   நீண்ட நாட்களாக இந்த பிளாக்கில் பதிவு செய்ய இயலவில்லை ! காரணம் எனக்கு நிகழ்ந்த சிறு விபத்தால்  சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்க நேரிட்டதால்! தினசரி கட்டாயமாக செய்யவேண்டிய பணிகளும் இங்கு வருவதை தடை செய்து வந்தது!

     இடையில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை பற்றிய எனது கருத்துகளை,விமர்சனங்களை,வேதனைகளை பகிர்ந்துகொள்ள இயலாமல் போனது வருதமளிகிறது! மோடி மீண்டும் முதல்வரர் ஆனார்!காங்கிரசின்  ராகுல்காந்தி துணை தலைவரானார்! அஜ்மல் கசாப் அதிரடியாக தூக்கில் போடப்பட்டார் அவரைத் தொடர்ந்து,அப்சல் குரு தூக்கில் போடப்பட்டார்;அவரது உடலைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்கத் தயங்கும் பலவீனமான மத்திய அரசு, மக்களைப் பற்றி கவலைபடுவதை மறந்து தன்னிச்சையாக பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி மேலும் தொல்லைக்கு ஆளாகுவதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறது!

   காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க மறுத்து வரும் கர்நாடகத்தை கேட்ட மதிய அரசுக்கு சக்தியில்லை. உச்ச நீதிமன்றம்  கூறியும் தண்ணீர் விட மறுக்கும் அரசை கலைக்கவோ,தண்டிக்கவோ அதிகாரம் இல்லாத மைய அரசாக  உள்ளது! அரசிதழில் நதி நீர் நடுவத் தீர்…