பாசிச இந்துத்துவ படைகளும் செயல்களும் !


    உலகமெங்கும் உரிமைகோரிப் போராடும் மக்களுக்கும் இந்தியாவில் போராடும் மக்களுக்கும் இடையில்  ஒரு வித்தியாசம் இருப்பதை பார்க்க முடிகிறது!

   ஒடுக்கப்படும் மக்கள் , தங்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் பாசிச சக்தியை  எதிர்க்கவும், தங்களது உரிமைகளை பெறவும்,தங்களை ஒடுக்கி வரும் பாசிச சக்திகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்  கொள்ளவும் ஒரு அமைப்பாக,ஒரு  அணியாக  ஒன்றிணைந்து போராடுவது உலகமெங்கும் இருந்து வரும் நடைமுறையாகும்!

   உலகில் நிலவிவரும் இத்தகைய  நடைமுறைக்கு,  வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில்  பாசிச சக்திகள் ஒன்று சேர்ந்தும்,   அமைப்புகளாக  திரண்டும் ஒடுக்கப்படும் மக்களை  மேலும் ஒடுக்க முற்பட்டுவரும்  விபரீதத்தை  இந்தியாவில்தான் பார்க்க முடியும்!

 உழைக்கும் மக்களுக்கு எதிரான  இத்தகைய அமைப்புகள்  ஒடுக்கும் மக்களை  அழித்துவிட...  அணிதிரண்டு வருகிற பயங்கரமும் கொடூரமும் இந்தியாவில் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்!

          ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக  அணி திரண்டு,அமைப்பாக செயல்பட்டுவரும்  இந்துத்துவ பாசிச சக்திகள், இந்தியாவில் பல்வேறு அமைப்புகளின் பெயரில்  தொடர்ந்து இயங்கியும் வருகின்றன!  இத்தகைய பாசிச சக்திக்கு  இணையாக  வேறு எந்த நாட்டின் பாசிச சக்திகளையும்  இணையாக சொல்ல முடியாது!  எனவே,   இந்தியாவில் உள்ள இந்துத்துவ பாசிசத்தை,ஏனைய நாடுகளின்   பாசிச சக்திகளுக்கு  முன்னோடி என்றே சொல்லலாம்! பாசிசத்தின் ஆணிவேர் என்றும் இந்துத்துவ பாசிசதைச் சொல்லலாம்!

     பாசிச இந்துத்துவ சக்தியானது,  ஏனைய பாசிசத்துக்கு முன்னோடியாக உள்ளதுடன், அது, இந்தியாவில் தொடர்ந்து  உழைக்கும் மக்களை  சுரண்டி,ஒடுக்கி வருவதுடன், நின்றுவிடவில்லை!   அவைகள்  உழைக்கும் மக்களையே  தங்களது நோக்கத்தை  செயல் படுத்துவதற்கு   பயன்படுத்திக்கொள்ளும் உத்தியையும்,அதாவது தங்களது பாசிச அமைப்புகளுக்குஉறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு  இந்து மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியும் வருகிறது!  மதத்தின் பெயரால் செய்து வரும்  பாசிசம் ,சமீப காலமாக  தனது நோக்கத்தில்  வெற்றியும்  அடைந்தும் வருகிறது!

         இந்துத்துவ பாசிசத்தின் இத்தகைய  வெற்றிக்கு காரணம்  அது,ஆர் எஸ்.எஸ்  மூலம் ஊடகம்,உளவுத் துறை  என்ற இரண்டு அசைக்க முடியாத{ஆயுதத்தை } சக்தியைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் குறுகிய காலத்தில் தன்னுடைய பாசிச சிந்தனையை பரப்பியதால்தான்.!

            இன்று நாடுமுழுவதும் 44000 கிளைகளை (ஷாகாஸ்)யும் 30000 நகரங்களிலும்,ஊர்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயங்கிவருவதாக ஒரு  புள்ளி விவரம் கூறுகிறது!

      22,டிசம்பர் 2008-யில் வெளிவந்த,"அவுட் லுக் " இதழில்  "அருந்ததி ராய் ",         "9 IS NOT 11 AND NAVEMBER ISN'T SEPTEMBER " என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு  45000 கிளைகள் உண்டு,அதனுடைய அறக்கட்டளைகள்,மற்றும்ஏழு மில்லியன்  தன்னார்வ ஊழியர்கள்  மூலம் இந்தியா முழுவதும்( சிறுபான்மையினர் மீது )தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்! 

   பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள,அதாவது உழைக்கும் மக்களை  தொடர்ந்து சுரண்டிவரவும்,அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும்   பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது ! இந்துத்துவ பாசிசத்தின்  இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற  பாசிச சக்திகள்   அரசியல் பிரிவு,வன்முறைப் பிரிவு,மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு,எழுத்துத் துறை,மதப் பிரிவு,சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு  என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.

பச்சிச சக்திகளின் இத்தகைய  பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை  இந்து ( பாசிச )நாடாக்க வேண்டும் என்ற  பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!

      இந்தியாவை   இந்து நாடாக்க வேண்டும் என்றால்,  அனைவரையும் இந்துக்களாக  மாட்டவேண்டும்!  அது இந்த்யாவின் இறையாண்மைக்கு,சமய நல்லிணக்கத்துக்கு  எதியானது மட்டுமல்ல,எப்போதும் நடைபெற இயலாத ஒன்று  என்பதால்தான்,இந்தியாவில்   இந்துவாக இல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது! சிறுபான்மை மக்களை  தொடர்ந்து  ஒடுக்க முற்ப்பட்டு வருகிறது!

பாசிச இந்துத்துவத்தின்  இந்த  ஒடுக்குமுறைக்கு  ஆதரவாகவே இந்தியாவில்  மதகலவரங்கள் நடத்தப்படுகின்றன!மதக் கலவரங்களை  பெரிய அளவில் நடத்தவும், சிறுபான்மையினரை  ஒடுக்கி,அழிக்கவும் வேண்டியது   பாசிச  இந்துவத்தின் தேவை,மற்றும்  செயல் திட்டமாக  உள்ளபடியால்,  பாசிச  அணிகள் நாடொறும்  சிறுபான்மை இன மக்கள்  தேச துரோகிகள் என்றும், அவர்கள்  தீவிரவாதிகள்  என்றும்  சாமானிய மக்களிடம்  துவேசத்தை பரப்பியும்,வளர்த்தும்  வருகிறது!

சிறுபான்மை இனத்தவர்களை  நாட்டின்  பொது  பொது எதிரியாக காட்டி வருவதால் தங்களது   சுரண்டலை தொடர முடியும் என்று பாசிச இந்துத்துவம்  நம்பிவருவதுடன்  மூலம்  உழைக்கும் மக்களை  கொண்டே  சிறுபான்மை இனத்தவர்களை  அகற்றிவிடவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது!  இத்தகைய நோக்கத்துக்கு பயன்படுவதே," நாமெல்லாம் இந்து"என்பதும்,"இந்துக்களே ஒன்று சேருங்கள்" என்பதுபோன்ற கோஷங்கள்  பாசிச சக்திகளால்  முன்வைக்கப் பட்டு வருகின்றன!

ஆகவே ,இந்து என்றபாசிச  உணர்வு   எப்போதும்  உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும்,சுக போகத்துக்கும்  உருவாக்கப்பட்டது! இந்துத்துவம் என்ற பாசிச வெறி உள்ளவரை,அதன் ஆதிக்கம் இந்தியாவில் நீடிக்கும் வரை இந்தியா கல்வி,வேலை, பொருளாதாரம்,நாகரீகம், பண்பாடு உள்ளிட்ட எதிலும் தன்னிறைவு அடைய முடியாது! உண்மையான  சமத்துவமும், ஜனநாயகமும் ஏற்படாது .  ஏழ்மையும், அடிமைத்தனமும் நீடிக்கும் நாடாகவே அது இருந்துவரும்! எப்போதும் சமஆரிமையும்,சகோதரத்துவமும் அமைதியும்  இல்லாத  நாடாகவே இந்தியா இருந்து வரும்!


குறிப்பு :இணைய நண்பர்களுக்கு வணக்கம்! 

 (எனது பதிவுகளை பார்வையிட்டு, கருத்துக்களை,விமர்சனங்களை வழங்கிய அனைவருக்கும்  நன்றி!

         இப்பதிவுகளை "பாசிசத்தின் ஆணிவேர்- பிராமணீயம்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட உள்ளேன்! நூலாக வரும்போது,பதிவுகளில் விடுபட்டுள்ள   ஆதாரங்கள், தேவையான சேர்க்கைகள் ஆகியவைகளுடன் எனது  தீர்வாகவும் சிலவற்றை கூறுவேன்!

            இந்துத்துவம் குறித்த தொடர்பதிவுகளால் நடப்பு  அரசியல், பல்வேறு நிகழ்வுகள் குறித்து  எழுத முடியவில்லை! இனி தொடர்ந்து நடப்பு அரசியல் குறித்து எழுதுவேன்!

- அன்புடன், ஹோசூர் ராஜன்!


Comments

 1. ஏக இறையின் கருணையும் அமைதியும் தங்கள் மீது நிலவுவதாக..
  அன்பின் சகோ ஓசூர் ராஜன்,
  மிக சரியான கணிப்பு. ஏனெனில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை இன்னொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை வைத்தே தாக்கி குளிர் காயும் ஆபத்தான பாசிஸ்ட்டுகள் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் குழுக்கள். இவர்கள் நாட்டின் அனைத்து துறையிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் என்றாலும் உளவுத்துறை முதல் நாட்டின் அதிகாரம் மிக்க துறைகளில் பாஜகவின் ஆதரவு சங்பரிவார்கள் தான் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் தான் பல கொள்கை முடிவுகளை எடுக்கின்றனர்.

  ReplyDelete
 2. எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் போன்ற அறிவுஜீவிகள் இந்த விஷயம் குறித்து அதிகமதிகம் கவலைகள் கொண்டு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும் அது பிராந்திய பத்திரிக்கைகளில் , தொலைக்காட்சிகளில் வருவதில்லை. இந்த ஊடகங்களில் சங்பரிவார்கள் உள்ளே நுழைந்து அதை தமக்கு சாதகமான ஒன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் பிராமண தினமலர் , தினமணி தான் இவ்வாறென்றால் இப்போது நாடார் தினத்தந்தியும் மாலைமுரசும் போட்டி போட்டுக் கொண்டு இந்துத்துவ கருத்தியலை பரப்புகின்றன. நடுத்தர வர்க்கத்தை முழுவதுமாக இந்து நாடு என்பதை நோக்கி தந்திரமாக நகர்த்தி கொண்டு செல்கின்றன இத்தகைய மாய்மால ஊடகங்கள்.

  ReplyDelete
 3. "எனக்கு அதிக கவலையை ஏற்படுத்துவது என்னவெனில், நடுத்தர வர்க்கத்தினரிடையே, இந்த நாடு ஒரு இந்து நாடாகத்தான் இருக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்துத்துவக் கொள்கை ஊடுறுவி இருப்பதுதான். பல சமூகக் குழுக்களை கொண்டதாகவே இருந்து வருகிற ஒரு சமூகத்தை நவீனப்படுத்துதல் என்ற பெரும் சிக்கலுக்கு, ஒரு எளிய பதிலை வழங்குவதாக உரிமை கோரும் ஒரு கொள்கையை யோசிக்காமல் ஏற்றுக் கொள்வதாகவே இது இருக்கிறது. அதோடு, இந்த சிந்தனைப் போக்கு என்பது அந்த சிக்கல் குறித்து குறைந்தபட்ச தர்க்கமோ, அறிவுப்பூர்வ சிந்தனையோ இன்றி கேள்விக்குரிய தவறான அடிப்படைகள் மீது அமைந்ததாகவே இருக்கிறது." - ரொமிலா தாப்பர்

  ReplyDelete
 4. சிறுபான்மையினருக்கு எதிரான இந்த போக்கு நிச்சயம் கண்டிக்கப் படவேண்டும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பாசிசத்துக்கு ஹிந்துத்வாவை மட்டும் உதாரணம் காட்டுவது உங்கள் நடுவுநிலைமை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இங்கு குறிப்பிட்ட எந்த மதமுமே அழிய வேண்டியதில்லை. மாறாக "எந்த" மதவெறியும் அளிக்கப் படவேண்டும். உங்கள் கொள்கைப் படி ஒருமதம் போய் மற்றொன்று பிரதிய்டுவதால் நன்மையோன்றுமில்லை.
  நாளை இஸ்லாம் மட்டுமே என்ற நிலை வந்தால் காபீர்கள் நசுங்க வேண்டியதுதான். அப்போதும் பாசிசம் வாழும் .
  பகிர்வுக்கு நன்றி...
  http://varikudhirai.blogspot.in/2012/08/they-planted-tea-on-hills.html

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?