தீக்குளிப்பு என்பது போராட்டமா?அல்லது சமூக அவலமா?


        சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ் என்பவர்,இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்து உள்ளதாக நாளிதழ் செய்தி வேதனைத்தீ  மூட்டுகிறது!

          முன்பு செங்கொடி,முத்துகுமார் ஆகியோர்கள் இதுபோலவே  அரசியல் காரணத்துக்காக,அரசியல் போராட்டத்தின் அங்கமாக கருதி,தங்கள்  அங்கங்களில்  தீமூட்டி கொண்டு,இன்னுயிர் நீத்தார்கள்! இப்போது சேலம் விஜயராஜ் என்பவர் தீயிட்டுக் கொண்டுள்ளார்!

            தீக்குளிப்பு செயல்கள், அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக ஆக்கப் பட்டு விட்டதாக தோன்றுகிறது! இன்ன காரணத்துக்காக,  இவர் தீக்குளித்தார்  என்று நாளிதழ்களில்,ஊடகங்களில் இப்போதெல்லாம் செய்திகள் அதிகம் வருகிறது!

       தீக்குளிப்பு எனபது ஒரு போராட்டவகையா? போராட்ட வகை என்றாலும் அது நியாயமான போராட்டமா?  என்று நம்மில் பலரும்  எண்ணிப் பார்க்கவேண்டும்! சமூக ஆர்வலர்கள், அரசியல் அறிஞர்கள்,மனித நேய பண்பாளர்களும் தங்கள் கவனத்தை இந்த விசயத்தில் செலுத்த வேண்டும்!

     முன்பு ,வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்பவர்கள்  பூச்சி மருந்து,விஷம்,போன்றவற்றை பயன்படுத்தியும்,தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்கள். இப்போது உடலில்  பெட்ரோலோ, மண்ணெண்ணையோ  ஊற்றி,தீயிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது!

        சிறுசிறு காரணங்களுக்கும்,கோரிக்கைகளுக்கும் கூட.. இப்போதெல்லாம் சகிப்புத்தன்மை  இன்றி,   தீயிட்டுகொள்வது மக்களிடம்   சமீபத்தில் அதிகரித்துள்ளது..மக்களின்  இத்தகைய போக்கு சமூக சீரழிவைக் கட்டுவதுடன் கவலை  அளிப்பதாகவும் உள்ளது!

       தீக்குளிப்பு நிகழ்சிகள் தடுக்கப்பட வேண்டிய சமூக அவலம் எனபது எனது கருத்தாகும்!  தீக்குளிப்பு  போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவது நமது அவசிய கடமை என்று நினைக்கிறேன்! குறித்து யாருக்கும்  இதைப் பற்றி நாம் இன்னும் போதிய விழிப்புணர்ச்சி பெறவில்லை  என தோன்றுகிறது!நமக்கு தீக்குளிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக,அதனை தடுக்கும் கடமையுள்ள,மக்களின் நலத்தை பேணவேண்டிய, அரசியலார்களும்,  ஆட்சியாளர்களும்  தீக்குளிப்பாளர்களை( இறந்தவர்களை) தியாகிகள் ஆக்கி,அவர்களின் குடுப்பதுக்கு நிவாரணம் வழங்குவதும்,நினைவுநாள் நிகழ்சிகள் நடத்துவதும்தீக்குளிப்பு போன்ற சமூக அவலங்களை  மறைமுகமாக   ஊக்குவித்து வருவதாக எண்ண  வைக்கிறது!

       இதுபோன்ற அரசின் செயல்கள் ஒருவகையில்  தீக்குளிப்பு சம்பவங்களை மேலும்  அதிகரிக்க வைக்கிறது எனபது உண்மையாகும்!

           மனித வாழ்வு எனபது  மகத்தான ஒன்று! நம்மை சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு, சமூகத்துக்கு  நல்லமுறையில் பயன்படுத்துவது  மிக சிறந்த வாழ்க்கை முறையாகும். அதனை விடுத்தது, உணர்ச்சிவசப்பட்டு, அற்ப காரணங்களுக்காக  உயிரைப் போக்கிக் கொள்வது  வீரமும் இல்லை,விவேகமும் இல்லை! கோழைத்தனம் ஆகும்!

        வாழ்வதற்காக பிறந்த யாரும்  இயற்கையாக ஏற்படும் மரணம் வரை வாழ்வதே,  வாழ்க்கையின் உண்மையான தத்துவமாகும்! அதை நினைக்காமல்  தற்கொலை செய்துகொள்வதும், அதுவும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு,உயிர் விடுவது தவறான செய்கையாகும்!

      தற்கொலை,தீக்குளிப்பு  போன்ற செயல்களை எந்த மதமும் ஆதரிப்பது இல்லை! ஏற்பதும் இல்லை.!!  மனித நேயம்,அன்பு,கருணை,சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் அனைத்து  மதங்களும்  மனிதர்களும் ஏற்கமுடியாத செயலை,    எக்காரணத்தைக் கொண்டும் செய்யாமல் இருக்க முன்வரவேண்டும்! தற்கொலை,தீக்குளிப்பு செயல்களை தடுக்க முற்பட வேண்டும்  அது குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த அரசும்,மற்றவர்களும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்!

உயிர், மனிதநேயம்,வேண்டுகோள்Comments

 1. // தீக்குளிப்பு நிகழ்சிகள் தடுக்கப்பட வேண்டிய சமூக அவலம் எனபது எனது கருத்தாகும்! தீக்குளிப்பு போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவது நமது அவசிய கடமை என்று நினைக்கிறேன்! குறித்து யாருக்கும் இதைப் பற்றி நாம் இன்னும் போதிய விழிப்புணர்ச்சி பெறவில்லை என தோன்றுகிறது!நமக்கு தீக்குளிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக,அதனை தடுக்கும் கடமையுள்ள,மக்களின் நலத்தை பேணவேண்டிய, அரசியலார்களும், ஆட்சியாளர்களும் தீக்குளிப்பாளர்களை( இறந்தவர்களை) தியாகிகள் ஆக்கி,அவர்களின் குடுப்பதுக்கு நிவாரணம் வழங்குவதும்,நினைவுநாள் நிகழ்சிகள் நடத்துவதும்தீக்குளிப்பு போன்ற சமூக அவலங்களை மறைமுகமாக ஊக்குவித்து வருவதாக எண்ண வைக்கிறது!//

  மிகச்சரியாக சொன்னீர்கள்..
  தீக்குளிப்பு எனபது திராவிடக்கட்சிகளின் அரசியல் நாடகங்களுக்கான வன்முறை....இதுவரைக்கும் எந்த தலைவனாவது தீக்குளித்து இருக்கிறானா?
  சொந்த காரணங்களுக்காக தீக்குளிப்பவனை எல்லாம் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் - விடுதலைப்புலிகளுக்காக தீக்குளித்தான் என்றும் அவனை தியாகியாக்கும் முட்டாள்தனமும் இங்கேதான்.
  தீக்குளிப்பவர்களை ஊக்குவிப்பதற்கென்றே விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் தேச துரோகிகளுமான வைகோ, சீமான் நெடுமாறன் போன்றோர் அவர்களுக்கு பண உதவி பண்ணி - இன்னும் தீக்குளிக்க வைக்கும் முயற்ச்சியில் இருக்கின்றனர்.
  தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் சட்டம், இந்த தேச துரோகிகளை எப்போது தண்டிக்கும்?

  ReplyDelete
 2. idhu oru samooga avalame ean indha koomuttai thamizhargalukku vilangaamal irukkindradhu thamizhargal vetkapada vedhanaipada niraiya irukkindradhu ean thamizhai sariyaga uchcharikka theriyumaa endru kelungal arivatra,muttaal thamizhargale sindhiyungal
  surendran

  ReplyDelete
 3. //ஒசூர் ராஜன் கூறியது.

  தீக்குளிப்பு நிகழ்சிகள் தடுக்கப்பட வேண்டிய சமூக அவலம் எனபது எனது கருத்தாகும்! தீக்குளிப்பு போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவது நமது அவசிய கடமை என்று நினைக்கிறேன்! குறித்து யாருக்கும் இதைப் பற்றி நாம் இன்னும் போதிய விழிப்புணர்ச்சி பெறவில்லை என தோன்றுகிறது!நமக்கு தீக்குளிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக,அதனை தடுக்கும் கடமையுள்ள,மக்களின் நலத்தை பேணவேண்டிய, அரசியலார்களும், ஆட்சியாளர்களும் தீக்குளிப்பாளர்களை( இறந்தவர்களை) தியாகிகள் ஆக்கி,அவர்களின் குடுப்பதுக்கு நிவாரணம் வழங்குவதும்,நினைவுநாள் நிகழ்சிகள் நடத்துவதும்தீக்குளிப்பு போன்ற சமூக அவலங்களை மறைமுகமாக ஊக்குவித்து வருவதாக எண்ண வைக்கிறது! //

  ஒசூர் ராஜனின் கருத்தை மனப்பூர்வமாக முழுமையாக ஆதரிக்கின்றேன்.


  ReplyDelete
 4. இது போன்ற தீக்களிப்பு அரசியலில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் அரசியல் நடத்துபவர்களின் அரசியல் வாழ்வு செழிப்படைகிறது.சமூக அரசியல் சரிகிறது

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?