Posts

Showing posts from September, 2012

நாடும் நடப்பும் இப்படி இருக்கு!

ஒருவழியா  திரிணமுல் காங்கிரஸ் மதிய அரசுக்கு தந்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து  முடிவுக்கு வந்துவிட்டது தெரிகிறது!

          அசுர பலத்துடன் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தாவுக்கு  உள்ள தைரியம் பாராட்டத் தக்கதுதான்! ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது  எதிர்ப்பு தெரிவித்து,ஆதரவை வாபஸ் பெற நினைத்தவர் மம்தா பானர்ஜி! இதனால்..  இனி, மம்தாவை நம்பினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை காங்கிரசும் உணர்ந்து உள்ளது!

     எனவே, அது.. பிற கூட்டணிக்கட்சிகளுடன் நெருக்கம் காட்டி,ஆட்சியை தக்க வைத்துகொள்ளும்  சூழ்ச்சியைக் கடைபிடித்து வருகிறது!  மம்தா அளித்துவரும்  ஆதரவை  விளக்கிக் கொண்டாலும் கூட  மதிய அரசு  கவில்துவிடாது என்பதும், காங்கிரஸ் ஆட்சிக்கு உடனடியாக ஆபத்து நேரிடாது என்றும் உறுதியாக நம்பலாம்!

    காங்கிரஸ் கட்சி  இதனை நன்கு அறிந்திருப்பதாலேயே, உயர்த்திய டீசல் விலையைக் குறைக்க மறுத்துவருகிறது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்து வருகிறது! சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியை திரும்ப பெற மறுத்து பிடிவாதமாக உள்ளது! காங்கிரசின் இத்…

தீக்குளிப்பு என்பது போராட்டமா?அல்லது சமூக அவலமா?

சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ் என்பவர்,இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்து உள்ளதாக நாளிதழ் செய்தி வேதனைத்தீ  மூட்டுகிறது!

          முன்பு செங்கொடி,முத்துகுமார் ஆகியோர்கள் இதுபோலவே  அரசியல் காரணத்துக்காக,அரசியல் போராட்டத்தின் அங்கமாக கருதி,தங்கள்  அங்கங்களில்  தீமூட்டி கொண்டு,இன்னுயிர் நீத்தார்கள்! இப்போது சேலம் விஜயராஜ் என்பவர் தீயிட்டுக் கொண்டுள்ளார்!

            தீக்குளிப்பு செயல்கள், அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக ஆக்கப் பட்டு விட்டதாக தோன்றுகிறது! இன்ன காரணத்துக்காக,  இவர் தீக்குளித்தார்  என்று நாளிதழ்களில்,ஊடகங்களில் இப்போதெல்லாம் செய்திகள் அதிகம் வருகிறது!

       தீக்குளிப்பு எனபது ஒரு போராட்டவகையா? போராட்ட வகை என்றாலும் அது நியாயமான போராட்டமா?  என்று நம்மில் பலரும்  எண்ணிப் பார்க்கவேண்டும்! சமூக ஆர்வலர்கள், அரசியல் அறிஞர்கள்,மனித நேய பண்பாளர்களும் தங்கள் கவனத்தை இந்த விசயத்தில் செலுத்த வேண்டும்!

     முன்பு ,வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்பவர்கள்  பூச்சி மருந்து,விஷம்,போன்றவற்றை பயன்படுத்திய…

முதலாளியே வருக,எங்களைக் காத்தருள்க!

கிராமங்களில் அடுத்தவரின் இன்ப,துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத,இரக்கம் அற்றவர்களை,சுயநல பேர்வழிகளைப் பற்றி சொல்வதற்கு என்றே,ஒரு பழமொழி இருக்கிறது! உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என நினைக்கிறன். "பொண்ணு செத்தா என்ன மாப்பிள்ளை செத்தா என்ன? மலைக்கு பணத்தைத் கொடுக்கணும்!"என்பார்கள்!  இத்தகைய மன நிலையில் நமது மதிய அரசு இருந்துவருவதாக தெரிகிறது!

     அதாவது மக்களின் துயரங்களை,அவர்களது வேதனைகளை, வாழ்க்கையைப் பற்றிய அக்கறையின்றி, தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகிறது என்பதையே  மதிய அரசின் சமீப அறிவிப்பான  டீசல் விலையேற்றமும் ,ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் சமையல் எரிவாயுவுக்கு  மட்டுமே அரசு மானியம் என்று அறிவித்து உள்ளது !

        மக்களுக்கு மட்டும்தான் மானிய விலையில்)ஆறு சிலிண்டர் ! நமது  மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்,பி,களுக்கு )ஆண்டுக்கு 300  சிலிண்டர்கள் வழங்கிறது,அதில் மாதரம் இல்லை,கட்டுப்பாடும் இல்லை!

         நேரடியாக மக்களை துன்புறுத்தும் டீசல்,பெட்ரோ, சமையல் எரிவாயு போன்றவை குறித்தும்,அதனால் சரக்கு கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு என்று அல்லாடும் மக்களைப் பற்றி கவலை க…

இன்றைய அரசியலின் மோசமான நிலை!

இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால்  அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று  செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!

   பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை  செயல்படுத்தும் பொது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம்  ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்று பார்த்தே செய்யப்படுகிறது! அதனால்தான்  பிறகு வரும் ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட திட்டங்களை கைகழுவி விட்டு விடடு புதிதாக  திட்டங்களை தொடங்கும் நிலை ஏற்படுகிறது!

கர்மவீரர் காமராஜர்  முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்லவேண்டும்!இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை   ஆற்றின்  குறுக்கே, புதிய ஆணை கட்ட  திட்டமிட்டு,பணிகள்  தொடங்கப் பட்டது! நிருபர் ஒருவர், "காமராஜரிடம்,அய்யா தாங்கள் பிறந்த மாவட்டமான விருதுநகர் மக்களுக்கு பயன்படுமாறு அணைகட்ட தோன்றவில்லையா?" என்று கேட்டார்!

    காமராஜ…

பலிகளும், பட்டாசு தொழிலும்!

சிவகாசி பட்டாசு விபத்து சமீபத்தில் நடந்த மிகப்பெரும் சோகம்!

      இந்த ஆண்டில் பத்துக்கு மேற்பட்ட விபத்துகள்  நடந்துள்ளன! ஒன்பது முறை பட்டாசு தொழிற்கூடங்களில் விபத்து நடந்தபோதும்  கண்டுகொள்ளாத, தடுப்பு முறைகளை கடை பிடிக்காத  பட்டாசு ஆலை முதலாளிகள்,பத்தாவது முறையாக...  பல அப்பாவி தொழிலாளர்களின்  உயிரைப் பறித்த பிறகு, இறந்த உயிர்களுக்கும்,நடந்த விபத்துக்கும்  துக்கம் அனுசரிக்க போவதாக அறிவிகிறார்கள்!

          பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்து  பல உயிர்கள் பலியானபிறகு, தவறு நடந்துவிட்ட பிறகு  எதிர் காலத்தில்  இதுபோன்ற தவறு நிகழக்கூடாது  என்று காட்டிகொள்வதற்கும்,அரசும் நிர்வாகமும் சரியாக இயங்குவதாக கட்டுவதற்கும்  பட்டாசு தொழிற்சாலைகளின்  பாதகாப்பு குறித்தும், விபத்துகளைத் தடுப்பது குறித்தும்  குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய போவதாக அரசும் அரசு அதிகாரிகளும்  அறிவிக்கிறார்கள்!

        தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதே  அரசின் வேலையாக இருக்கிறது! விபத்து போன்ற விபரீதங்கள் நடந்த பிறகு,  அரசு அறிவிக்கும் இதுபோன்ற நடைமுறைகளால்  புதிதாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை ! சிறிது  காலத்துக்குப் பிறகு  …

சுரங்க ஊழலும், அதுசொல்லும் பாடமும்!

நிலக்கரி சுரங்க ஒதுகீட்டில் முறைகேடு நடந்துள்ளது,முறையற்ற ஒதுக்கீட்டினால்  அரசுக்கு 1,86,000,00,00,000 கொடிகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கைக் குழு கொழுத்திப் போட்ட அறிக்கையினால் காங்கிரஸ் கட்சி விழி பிதுங்கி வருகிறது! பி.ஜே.பி, விட்டேனா பார் என்று ஒதுக்கீடு உரிமங்களை ரத்து செய்,பிரதமர் பதவி விலகவேண்டும் என்று கூறி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முழக்கம் இட்டு வருவதும் தான் இன்றைய சூடான விவாதப் பொருளாக இருந்து வருகிறது!

    இதற்குமுன்  2 ஜி.அலைகற்றை ஊழல் முறைகேடுகள் குறித்து எழுந்த புகாரின் பேரிலும் ஏறக்குறைய  இதுபோன்ற நிலைமையே நீடித்தது!

   இந்திய அரசியல்வாதிகளுக்கு  ஊழலும் முறைகேடுகளும் புதியதில்லை.! சொல்லபோனால் ஊழலுக்கு எதிராக போராடுவதாக இன்று  சொல்லும்  பி.ஜே.பி-க்கும்  ஊழலும் முறைகேடுகளும் புதிதல்ல.! அந்த கட்சியின் ஆட்சி காலத்தில் சவப்பெட்டி வாங்கியது முதல் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியது வரை  ஊழல் குற்றச்சாட்டுகள்  எழுந்ததை மறந்துவிட முடியாது!  பின் எதற்கு  ஆளும் காங்கிரசும்,எதிக்கட்சியான பி.ஜே.பி-யும்  இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன?

      எதிர்வரும் பாராளுமன்…

பாசிச இந்துத்துவ படைகளும் செயல்களும் !

உலகமெங்கும் உரிமைகோரிப் போராடும் மக்களுக்கும் இந்தியாவில் போராடும் மக்களுக்கும் இடையில்  ஒரு வித்தியாசம் இருப்பதை பார்க்க முடிகிறது!

   ஒடுக்கப்படும் மக்கள் , தங்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் பாசிச சக்தியை  எதிர்க்கவும், தங்களது உரிமைகளை பெறவும்,தங்களை ஒடுக்கி வரும் பாசிச சக்திகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்  கொள்ளவும் ஒரு அமைப்பாக,ஒரு  அணியாக  ஒன்றிணைந்து போராடுவது உலகமெங்கும் இருந்து வரும் நடைமுறையாகும்!

   உலகில் நிலவிவரும் இத்தகைய  நடைமுறைக்கு,  வழக்கத்துக்கு மாறாக, இந்தியாவில்  பாசிச சக்திகள் ஒன்று சேர்ந்தும்,   அமைப்புகளாக  திரண்டும் ஒடுக்கப்படும் மக்களை  மேலும் ஒடுக்க முற்பட்டுவரும்  விபரீதத்தை  இந்தியாவில்தான் பார்க்க முடியும்!

 உழைக்கும் மக்களுக்கு எதிரான  இத்தகைய அமைப்புகள்  ஒடுக்கும் மக்களை  அழித்துவிட...  அணிதிரண்டு வருகிற பயங்கரமும் கொடூரமும் இந்தியாவில் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்!

          ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக  அணி திரண்டு,அமைப்பாக செயல்பட்டுவரும்  இந்துத்துவ பாசிச சக்திகள், இந்தியாவில் பல்வேறு அமைப்புகளின் பெயரில்  தொடர்ந்து இயங்கிய…