Posts

Showing posts from August, 2012

இந்துத்துவ சக்திகளின் இந்து ஒற்றுமை முழக்கம் எதற்காக?

இந்துத்துவ சக்திகள்,இந்துக்களே ஒன்று சேருங்கள்,நாம் இந்துக்கள் என்று அவ்வபொழுது கோஷமிட்டு வருகின்றன! உண்மையிலேயே இந்துக்கள் ஒன்றாக  வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவைகள் இப்படி கூறுவதாக,வலியுறுத்துவதாக நினைப்பது பேதைமையாகும்!

     இந்தியாவில், இந்துகளாக அடையாளப்படுத்தும் மக்கள் 4000-க்கு மேற்பட்ட சாதியினர்  உள்ளனர்!

   தமிழகத்தில் அரசு இதழ்களில் பட்டியலிட்டுள்ள சாதிகளில், பிற்படுத்தப்பட்டோர்கள் பிரிவில் 132 சாதிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 41சாதிகளும் ,இவர்களுடன் சீர் மரபினர்  என்ற வகையில் 68 சாதிகளும் உள்ளனர்! தாழ்த்தப்பட்டோர்கள் சாதியினர் மட்டும் 76 உள்ளனர். பழங்குடியினர் பட்டியலிட்டுள்ள சாதிகள் 36 இருக்கிறது! இவர்களை விடுத்து,முற்படுத்தப்பட்ட சாதிகள்  என்னும்  பட்டியலில் ஏராளமான சாதிகள் இருந்து வருகிறது!

       இப்படி.. மனுதர்மத்தின் நால்வகை  சாதிகள்,  இன்று  பல்கிப்பெருகி இருப்பதை எல்லோரும் அறிவர்!

     இன்று  பெருகி உள்ள சாதிகள் குறித்து ...       "இந்து மதமானது, மிகவும்  உயர்ந்த மதம்,புண்ணிய புருசர்கள், எத்தனையோ   மகான்கள், ஞானிகள், அவதார புருஷர்கள் தோன்றி அ…