இவர், இந்திய அடையாளம்! இப்போது காணவில்லை!!

     இந்துதுவசக்திகள் பிரதானமாக முன்வைக்கும் முழக்கமாக இருப்பது, "இந்துக்களே ஒன்று படுங்கள்" எனபதுதான்! இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும்  இவர்களின் உள்நோக்கம், "பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்"  எனபதுதான்.! தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று(? )  என காட்டி,முஸ்லிம்களை  அந்நியர்கள்,இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அடையாளபடுத்தி,அப்புறம் அவர்களை ஒடுக்குவதுதான்! 

     இந்துத்துவ பாசிச சக்திகள், தீய நோக்கத்துடன் முன்வைக்கப்படும்      இந்துக்களின் ஒற்றுமை என்ற  கோஷத்தை பிறகு பார்க்கலாம்.!

       அதற்கு முன், "இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட்டவரும் அந்த ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தவர்" என்று நேருவால் ( Jawaharlal Nehru slected works,Page 61 XIII) குறிப்பிடப்பட்ட, அபுல் கலாம் ஆஸாத்  பற்றி பார்க்கலாம்! 

     இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த,பொதுவாழ்வில் தூய்மையும்,அரசியல் வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த, மாமனிதர் அவர்! 

     பிரிவினையின் பெயரால் பிளவுபட்ட தனது தாய் நாட்டின் நிலையை எண்ணி மனவேதனையால் துவண்டுபோன ஆசாத்தின் வாழ்க்கையானது, "நாட்டின் ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும் நிலை நாட்ட அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, அவருடைய வாழ்க்கை!" என்று உறுதியாக கூறலாம்!  

    "நாம் பிரிவினையை ஆதரித்தால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.  என்று நான் ஜவகர்லால் நேருவிடம் தொடர்ந்து எச்சரித்து வந்தேன் " என்று அவரது (INDIA WINS FREEDOM Page:202}நூலிலும் குறிப்பிட்டு உள்ளார்!

     மேலும் அவர், இந்தியா பிளவுபட்டு, அகஸ்ட் 15,1947-யில் சுதந்திரம் அடைந்ததை பற்றி,"என்னால் இயன்ற அளவு நான் முயன்றேன். துரதிஷ்டவசமாக  எனது நண்பர்களும்,சக ஊழியர்களும் எனக்கு போதிய ஒத்துழைப்போ ,ஆதரவோ, அளிக்கவில்லை.பதவி கிடைக்காத வெறுப்பில் பலரும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து  கொண்டனர்.ஒருவேளை அகஸ்ட்,15 என்ற தேதிகூட,மவுண்ட் பேட்டன் பிரபுவின் வசீகரத்திலும் ,மதிநுட்பத்திலும் மயங்கியதன் விளைவால் குறிக்கப்பட்ட தேதியாகும்"  (INDIA WINS FREEDOM Page:226}என்று வருந்தியவர்!

      "நாட்டின் சுதந்திரத்தை விடவும், இந்து-முஸ்லிம்  ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த  அக்கறை கொண்டிருந்த ஆசாத், "சுதந்திரம் கிடைப்பதற்கு தாமதம் ஆனாலும் பரவாயில்லை,இந்தியத் தாய்க்கு ஒருநிமிடம் கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை" (Al Balagh,n-7,Page 118-1119) எழுதியவர்! 

    "நான் ஒரு முஸ்லிம்! அதற்காக பெருமைபடுகிறேன்.அதே அளவு,நான் ஓர் இந்தியன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்" என்று  சொன்னவர்.!

     " ஒரு இந்து சகோதரர்,நான் ஓர் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதைப் போலவே,ஒவ்வொரு இஸ்லாமியனும்  சொல்கிறான்,நானும் ஓர் இந்தியன்தான் ; இஸ்லாமை ஏற்றுக்கொண்டு,அதன் உயரிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும்    இந்தியன் "(AICC Papers,National Archives,NewDelhi) என்று சொல்லி,இந்தியனாக வாழ்ந்த ஆசாத் அவர்கள்தான்  இந்தியாவின்  அடையாளம்! 

   அபுல்கலாம் ஆஸாத் ,  இந்திய ஒற்றுமையின் அடையாளம்,மத சார்பற்ற தன்மைக்கும், இந்திய சமய நல்லிணக்கத்துக்கும் அடையாளம்!இந்தியாவின் முன்னேற்றம்,நல்வாழ்வு,அமைதிக்குஅவரே  அடையாளம்! 

      இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான், சாகித்ய அகாடமி,லலிதகலா அகாடமி,நாடக அகாடமி,சங்கீத அகாடமி,யு.ஜி.சி  ஆகியவைகள் ஏற்படுத்தினார். நூற்றுகணக்கான நூலகங்கள்,ஆவணக் காப்பகங்கள்  ஏற்படுத்தியதும் அவர்தான்! ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் கல்லூரிகள்  என்று ஏற்படுத்தி,  இந்தியாவின்  அறியாமையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப்  பாடுபட்ட  அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும்  மறந்து விட்டார்கள்! இந்திய தேசம் மறந்து விட்டது! இந்துத்துவ சக்திகள் மறக்கடித்து விட்டார்கள்!! 

    ஆசாத் அவர்களைப் பற்றி, அவரது வாழ்க்கை,தியாகம், இந்தியன் என்ற நாட்டுப் பற்று , அவ்வளவு ஏன்? கல்வி வளர்ச்சிக்கு அவர்செயதவைகள்  குறித்து  என...  எந்த தலைப்பிலும் ( பாடங்கள்}போதனைகள் ,  இந்திய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில்  இடம்பெறுவதே இல்லை! 

        இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? என்று கூட, அரசுநடத்தும்  பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை!அபுல் கலாம்  ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்!

      ஆனால், இந்துத்துவ சக்திகள்,அபுல்கலாம் ஆசாத் ஏற்படுத்திய கல்விநிறுவனங்களில், இந்து- முஸ்லிம்  ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை விதைத்து வருகிறார்கள்!

    "இந்து ஒற்றுமை" என்று கூறி வேற்றுமையை வளர்த்து வருகிறார்கள்! இத்தகைய பாசிச சக்திகள் இந்தியாவில் இன்று, அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த,  அண்ணல். அம்பேத்கர் பற்றி பள்ளி, கல்லூரிகளில் கேலிசெய்து, பாடப்புத்தகங்களில்  " கார்டூன்"  வைக்கும் அளவுக்கு  (ஆக்கிரமிப்பு) ஆதிக்கம் பெற்று இருகிறார்கள்!

     இவர்களால் சுதந்திர இந்தியாவில்,  மதசார்பற்ற இந்தியாவில்,                      " பகவத் கீதை"  பாடமாக வைக்க முடிகிறது!

    இந்துத்துவ சக்திகளின்" இந்து ஒற்றுமை  முழக்கம்" குறித்து  அடுத்து பார்ப்போம்! Comments

 1. //இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை!அபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்!///

  சரியாகச் சொன்னீர்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 2. அபுல் கலாம் ஆசாத் பற்றி எழுதியமைக்கு நன்றிகள் ! அன்றிருந்த தலைவர்களின் அறிவும் ஞானமும் இன்று இருக்கும் தலைவர் முதல் மக்கள் வரை பலருக்கு இல்லாமல் போய்விட்டது என்பது உண்மை தான்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேரு தான் காரணம் என்று எனக்கு இருந்த சந்தேகம் இப்பொழுது தெளிவாகியது நன்றி திரு ஓசூர் நாகராஜன் உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன் மிகவும் அருமை உங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

  கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

  எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,

  காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

  இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

  இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

  இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,

  பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

  உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;

  அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.

  சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.


  SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/


  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?