பகதுர்ஷா'வும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் !

      முஸ்லிங்கள் என்ற மாற்று மத  வெறுப்பின் அடிப்படையில் இந்துத்துவ பாசிசவாதிகள்,முஸ்லிம்களின் தியாகத்தையும்,நாற்றுப்பற்றையும்  ஏற்றுகொள்ள மறுத்து வருகிறார்கள். மேலும் அவர்களின் நாட்டுப்பற்றை,தியாகத்தை பிறர் அறியாமல் செய்யும்  முயற்சிகளில்,          ஈடுபட்டும் வருகிறார்கள்.!

   அதனாலேயே, முஸ்லிம்களின் வரலாற்றையும் தவறாக எழுதி வருகிறார்கள்.! முஸ்லிம்களின் நாற்றுப்பற்றும், தியாகமும் மறைக்கப்பட்டு,வரலாற்றில்இந்துத்துவ பாசிச சக்தியால்  திரிக்கப்பட்டு வருகிறது!

      காந்தியின் படுகொலையில் குற்றவாளியாக கருதப்பட்ட "வீரசாவர்க்கர்" ஆங்கிலேயர்களிடம் உயிர்பிச்சை கேட்டு, கெஞ்சி கடிதங்கள் எழுதி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக," தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை" என்ற உத்திரவாதத்தின் பேரில் அந்தமான் சிறையில் இருந்து  விடுதலையானார்! 


   ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு உயிரைக் காப்பற்றிகொண்ட வீரசாவர்க்கர் , இன்று இந்துத்துவ சக்திகளினால் மிகசிறந்த தியாகியாக, சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டு வருகிறார்!  அவரது சிலை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ளது!  


       வெள்ளையரை எதிர்த்து, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால்  பாராட்டப்பட்ட, ஆங்கிலேயர்களால் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்,டு அங்கேயே மரணம் அடைந்த முஸ்லிம் மன்னர் பகதுர்ஷா குறித்து இந்துவசக்திகள் இப்போது மட்டுமல்ல, எப்போதும் பேசியதே இல்லை! அவரைப் பாராட்டியது இல்லை!அவரது தியாகத்தைப் பற்றி,நாட்டுப் பற்றைப்பற்றி,இன்றைய தலைமுறையினருக்கு சொன்னதே இல்லை! சொல்லவேண்டும் என்று எண்ணியதும் இல்லை!


     காரணம், அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான்!  பகதூர் ஷா தேசபக்தி உள்ளவர், நாட்டின் விடுதலைக்காக,ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப் பட்டர் என்று இந்துத்துவ வாதிகள் சொல்லிவிட்டால்,உண்மையை ஏற்று கொண்டால், முஸ்லிம்கள் மீது இந்துத்துவ சக்திகள் விதைத்து வரும் வெறுப்புணர்வை அவர்களால் தொடர முடியாது என்பதுதானே? 


  1847-ஆண்டு,ஈத் பெருநாளில் இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்ட ஆங்கிலேய அதிகாரி, "கெய்த் " என்பவன் சதி செய்தான்!  இந்துக்கள் புனிதமாக நினைக்கிற மாடுகளை முஸ்லிம்கள்ஈத் பெருநாளில்" பலி" கொடுகிறார்கள்{ஆங்கிலேயர்கள் மாடு சாப்பிடுபவர்கள் தான்!} என்று விஷமப் பிரசாரம் செய்து, இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் ஆங்கிலேயர்கள்  குளிர்காய நினைத்தனர்!! கெயித்'யின்  சூழ்ச்சியை அறிந்த மன்னர் பகதூர் ஷா, ஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி, ஆடுகளை பலியிட்டு ஈத் பெருநாள் கடமையை செய்வித்தார்! ஆங்கிலேயர்களின் கலவர சூழ்ச்சி முறியடிக்கப் பட்டது!


      ஆங்கிலேய அதிகாரி, "மேஜர் ஹட்சன்" என்பவன் கைது செய்து சிறையில் இருந்த மன்னர் பகதுர்ஷா-வுக்கு காலை உணவாக கொடுத்தது என்ன தெரியுமா? அவரது மகன்களான மிர்சாமொஹல், கிலுருகல்தான் ஆகிய இரண்டு மகன்களின் தலைகளை வெட்டி,ஒருதட்டில் வைத்து,அதனை துணி ஒன்றால் மூடி எடுத்துவந்து கொடுத்தான்! 


      நினைத்துப்பாருங்கள்!  எத்துனை கொடூரமான செயல் என்று! மன்னர் பகதுர்ஷா'வின் மனத்துடிப்பு எப்படி இருந்திருக்கும்? என்பதையும் ஆங்கிலேயர்களுக்கு அவர்மீது இருந்த கோபத்தையும்,வன்மத்தையும் எண்ணிப்பாருங்கள்!


        இத்தகைய கொடுமைகளை செய்த,ஆங்கிலேயரிடம் {வீர்சாவர்கர் போல) அவர் மண்டி இடவில்லை,! தனது மகன்களின் தலை வெட்டப்பட்டதற்கு பின்பும் அவர் இந்தியாவுக்கு விசுவாசியாக இருந்தார். !  தனது மகன்களதலை ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட போதும், அவர் அதனை இந்திய தேசத்துக்காக தனது மகன்கள் செய்த தியாகமாக நினைத்து தாங்கிகொண்டார்! 


         இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் இருந்த அவரை வேறுவழியின்றி,ஆங்கிலேயர்கள்பர்மாவின்  ரங்கூனுக்கு நாடு கடத்தினர்! அங்கே 17.11.1862-யில் மரணம் அடைந்த மன்னர் பகதுர்ஷவின்  சமாதியை பிறகு நேதாஜி சுபாஷ்  புதுப்பித்துக் கட்டினார்.அவரது சமாதியில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து,தான் வைத்திருக்கும் கைத்தடியின் பிடிக்குள் வைத்துகொண்டார்! 


      ரங்கூனில் நடந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் ,"நமது வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும்,பகதுர்ஷாவிடம் இருந்ததுபோன்ற நாட்டுப்பற்றில் அணுவளவாவது இருக்கும்வரை ,நமது( இந்துஸ்தான் }நாட்டின் போர்வாள் கூர்மையுடன் இருக்கும்,ஒருநாள் லண்டன் வாசல்கதவை அது தகர்க்கும்"என்று அப்போது சூளுரைத்தார் !


  தேசபக்திக்கும், தியாகத்துக்கும் இலக்கணமாக திகழ்ந்த, மன்னர் பகதுர்ஷா இன்று இந்துத்துவ சக்திகளால் துரோகிகளாக,தேசவிரோதிகளாக ஆக்கப்படுகிறார்!  காரணம் துரோகிகள் இன்று தேசபக்தர்களாக,தியாக சீலர்களாக ஆகிவிட்டதால்! 


       இந்துத்துவ பாசிசவாதிகள்  இதுபோல இந்திய நாட்டுக்கு செய்த,இந்திய மக்களுக்கு செய்த பல  துரோகங்களும் கூட... நியாயப்படுதப்பட்டு, இந்தியாவின் இறையாண்மைக்கு,மதசார்பின்மைக்கு எதிரான, துரோகிகள் பலரும்   இன்று தியாகிகளாக,தேசப் பற்றாளர்களாக காட்டப்படுகின்றனர்! அவர்களைப் பெருமையுடன் நினைவு கூறும்படியாக,   புனைந்து உரைத்து வரும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது!    இதுதான் இந்துத்துவத்தின் பாசிச குணமாகும்!


        இந்திய வரலாற்றில்  மறைக்கப்பட்ட,அல்லது மறக்கடிக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள் பலர் உள்ளனர்!  இந்திய தேசப் பற்றாளர்களும், சுதந்திரப் போராளிகளும்,தியாக சீலர்களும் ஆன  முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடாமல்,அவர்களது தியாகத்தைப் போற்றாமல் இருந்துவரும் இந்துத்துவவாதிகள், முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சித்தரிப்பது எதற்காக?  என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்!

இப்படி நான் கேட்பதில் உள்ள நியாத்தை உணராமல், பதிவுலகில் சிலர் ,நான் முஸ்லிம்களின் ஆதரவாளன், இந்துக்களின் எதிரி என்று தாங்களே கற்பிதம் செய்துகொண்டு,என்னை  விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்!

      இந்துத்துவத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வரும் எனது  முடிவுகளை ஒட்டி, இந்த பதிவுகளை வெளியிடுகிறேன் என்பதை அவர்கள்  தெரிந்துகொண்டால் நல்லது!தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்!

    "சிராஜ்- உத்-தவுலா" வின் ஆங்கிலேய எதிர்ப்பு போரை அடுத்து பார்க்கலாம்!


Comments

 1. தன்னை புதைக்க ஆறடி நிலம் கூட தன நாட்டில் கிடைக்கவில்லையே என ஏங்கியவர் பகதூர் ஷா

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.
  தொடர்ந்து எழுதி வரவும்.

  ReplyDelete
 3. இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் தியாகம்

  மறைத்து விட்டார்கள் ! நன்றியை மறந்து விட்டார்கள் !

  நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்
  1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

  அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலிம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

  பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
  இராஜகிரி அப்துல்லா
  ...இளையான்குடி கரீம் கனி
  திருப்பத்தூர் அபூபக்கர்
  திருப்பத்தூர் தாஜிதீன்
  அத்தியூத்து அபூபக்கர்
  பக்கரி பாளையம் அனுமன் கான்
  சென்னை அமீர் ஹம்சா
  சென்னை ஹமீது
  செங்குன்றம் கனி
  வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
  புதுவலசை இபுராஹிம்
  பார்த்திபனூர் இபுராஹிம்
  வனரங்குடி இபுராஹிம்
  இளையான்குடி அப்துல் கபூர்
  மேலூர் அப்துல் ஹமீது
  சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்
  தத்தனனூர் அப்துல் காதர்
  பட்டுக்கோட்டை அப்துல் காதர்
  திருப்பூர் அப்துர் ரஜாக்
  காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்
  குருவம் பள்ளி அப்துல் மஜீத்
  கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
  லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
  ராம்நாடு அப்துல் வஹாப்
  மானாமதுரை அப்துல் பாசித்
  திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
  அத்தியூத்து இபுராஹிம்
  சென்னை ஜாபர் ஹக்கிமி
  சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
  திருப்பத்தூர் காதர் பாட்ஷா
  புதுவலசை முஹம்மது லால் கான்
  பார்த்திபனூர் கச்சி மைதீன்
  தஞ்சை முஹம்மது தாவூது
  அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
  திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
  வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
  தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
  சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
  சென்னை முஹம்மது உமர்
  மதுரை மொய்தீன் பிச்சை
  அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
  திருப்பத்தூர் பீர் முஹம்மது
  கும்பகோணம் ரஹ்மத்துல்லா
  குடியத்தம் நஜீமுல்லாஹ்
  கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
  இராமநாதபுரம் சையது கனி
  பரகப்பேட்டை தாஜிதீன்
  மன்னர்குடி சிக்கந்தர்
  கம்பம் சிக்கந்தர்
  முதுகுளத்தூர் சுல்தான்
  கும்பகோணம் சுல்தான்
  இராமநாதபுரம் தாஜிதீன்.....  யாரடா சொன்னது நாம் அன்னியன் என்று????  இங்கே சொடுக்கி >>>>> இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் தியாகம் <<<<<<< காணவும்.

  .

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. The Muslims and Hindus lived like brothers.The Muslims had (and still have) religious tolerance unlike the christian s.Its all been a making of some cunning forces that led to the present enmity I honestly wish that the brotherhood should flourish again
  karthik+amma

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?