பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்!

    சத்திரபதி சிவாஜியை இந்துத்துவ வாதிகள் ஆதர்ச நாயகனாக ஏற்று போற்றிவருவதையும் (தெரியாதவர்கள் எனது 2.2.2012 தேதியிட்ட பதிவை பார்க்கவும்) முகலாய அரசர் அவுரங்கஜேபை இஸ்லாமிய  மதவெறியராக இன்றும் தொடர்ந்து காட்டி வருவதையும் நடுநிலையாளர்களும் அறிந்துள்ள செய்திதான்!

     முகலாய அரசர்  அவுரங்க ஜேப்,இந்துத்துவ வாதிகள்  சொல்வதுபோல இஸ்லாமிய மதவெறியரா? என்றால் அது உண்மையில்லை. தனது தனித்த வருமானத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு,அரசின் பொது வருமானத்தை நிர்வாக செலவுக்கும்,பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் செலவு செய்து நல்லாட்சி செய்து வந்தவர். அதுமட்டும் இன்றி,தனது பேரரசுக்குள் இருந்துவந்த பல்வேறு இந்து சமயத்தைச் சேர்ந்த  சிற்றரசர்களுடனும்  நட்புடன் பழகி வந்தவர். சமய வேறுபாடுகளை காட்டாதவர். இந்து சமய மக்களின் சமய நம்பிக்கையில் தலையிடாமல்,அவர்களது வழிபாட்டினை மதித்து, ஏற்றுக் கொண்டவர்!.

    இப்படி  உண்மையை   சொன்னால், எங்கே ஆதாரம் என்று கேட்டு எகத்தாளம் செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு நான் எத்தனைதான் ஆதாரம் காட்டினாலும் அதனை  ஆதாரமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள்.   எனது ஒவ்வொரு பதிவுக்கும் ஆதாரம் என்று காட்டிக் கொண்டே இருப்பது வீண் வேலை என்பதால், பெரும்பாலும் ஆதாரங்களை  தவிர்த்து வருகிறேன்!(இந்த பதிவில் வரும் அவுரங்கஜெப்  குறித்த செய்திக்கு ஆதாரத்தை  குறிப்பிட்டு உள்ளேன்)


      அவுரங்கஜெப் தமது குறுநில மன்னர்களுடன் வங்காளம் நோக்கி செல்லும்போது,வாரணாசி வழியாக சென்றார்.அப்போது,அவருடன் வந்த குறுநில மன்னர்கள் ஒருநாள் வாரணாசியில் தங்கினால் தமது ராணிகள் கங்கையில் குளித்து  விசுவநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு புறப்பட ஏதுவாக இருக்கும் என்று கேட்டனர்.

உடனே அவுரங்கஜெப் மன்னர் அவர்கள்,இந்து குறுநில மன்னர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து, தனது படைவீரர்கள் அனைவரையும்(பல்லக்கு தூக்குபவர்கள் தவிர) ராணிகள் குளிக்கும் இடத்துக்கு அயிந்து மைகளுக்கு அப்பால் கூடாரம் அமைத்து தங்குமாறு ஆணையிட்டார்.படைவீரர்களும் கூடாரம் அமைத்து தங்கினர்.

   சிற்றரசர்களின் ராணிகள் மட்டும் கங்கைக்கு சென்று,குளித்து ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜைகள்  முடித்துவிட்டு திரும்பும்போது "கச் "பிரதேச ராணி மட்டும் காணாமல் போயிருந்தார்.உடனே அவரை தேட ஆணையிட்டும் தேடியும்,அவரைக் காணவில்லை. இதுபற்றி ஆலம்கீர் அவுரங்கஜெபிடம் முறையிடப்பட்டது. அவர் ஒற்றர் படையை அனுப்பி,வாரணாசி விஸ்வநாதர் ஆலயத்தை அலசும்படி ஆணையிட்டார் முதன்மை  அதிகாரி உடன்,  ஒற்றர்படையினர் கோவிலை சோதனை இட்டனர்.சோதனையில் அந்த கோயிலில் அமைந்து இருந்த கணேசர் சிலை அசையக்கூடிய அமைப்பில் இருப்பதைக் கண்டு,அந்தசிலையை திருகிப் பார்த்தனர்

     கணேசர் சிலை அசைந்து திருகியதும்,அதன் அடியில் படிகட்டுகள் தெரிந்தன.படிக்கட்டுகள் சுரங்கப் பாதையுடன் கீழ் அறைக்கு சென்று முடிவடைந்தது.வீரர்கள் அதன்வழியே சென்று பார்த்தபோது,சுரங்க அறையில்,  புனித  கங்கையில் நீராடிய,பாவத்தைப் போக்கும் விஸ்வநாதர்  ஆலயத்தில் தரிசிக்க வந்த,  "கச்"பிரதேச ராணி கற்பழிக்கப் பட்டு கிடந்தார்.கசங்கியிருந்த ஆடையுடன், கத்திய குரலுடன்,கண்ணீர் சிந்திய நிலையில் இருந்த அவளை கோயில் சுரங்க அறையில்  இருந்து மீட்டுவந்தனர்.சுரங்க அறை ,ச்ற்ற்ர் விஸ்வநாதர் ஆலய மூலவரின் சிலைக்கு நேர் கீழே இருந்தது.

அரசியின் கோலத்தைக் கண்டு சிற்றரசர்கள் கதறினார்கள், குமுறினார்கள், நடந்தது குறித்து அவுரங்க ஜெபிடம் முறையிட்டு,தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வழங்குமாறு கேட்டு கொதித்தனர். பெண்களைக் கற்பழித்து இழிவுபடுத்திய கோயில் மூலவர் சிலை  வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டது. கோயில் தரை மட்டமாக்கப் பட்டது.கோயில் நிர்வாகிகள்,பூசாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

(ஆதாரம் ஓடிஸா மாநில கவர்னராக இருந்த பிஷம்பர்நாத் பாண்டே அவர்கள் எழுதி,ஓடிஸா மாநில அரசு வெளியிட்ட அரசு வெளியிட்ட இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும் நூல் பக்கம் 70,71)

பட்னா மீயுசியம் ,முன்னாள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த டாக்டர்.குப்தா என்பவரிடம் இருந்து பெற்ற ஆவணங்களுடன் பட்டாடி சீதாராமையர் தன எழுதிய நூலிலும் ஆதாரமாக இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

"இது எனது ஆளுகைக்கு உட்பட்ட இடம்.இங்கு படுகொலைகளை அனுமதிக்க முடியாது"

"நீங்கள் எங்கள் மதவிவகாரங்களில் தலையிடுகிறீர்கள்"

அவுரங்கஜெப் தனது வாளைஉருவி,"இங்கு யாராவது இந்த பெண்ணை பலாத்காரம் செய்தால் அவர்களின் தலை கீழே உருளும்" கோபத்துடன் சொல்லுகிறார்.

அந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். அந்தப் பெண் அவுரங்கஜெபை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு  அங்கிருந்து செல்கிறாள்!

இப்படிப்பட்ட அவுரங்கஜெபைதான் மதம்மாற மக்களை பலாத்காரம் செய்தான்,மாறாதவர்கள் மீது ஜசியா வரி விதித்தான் என்றெல்லாம் நமது பாடப் புத்தகங்களில் எழுதிவருகிறார்கள்.(நாமும் படித்து வருகிறோம்)  ஜெர்மன் நாஜி இட்லர் இப்படித்தான் வரலாற்றில் யூதர்கள் ஜெர்மானியரைக் கொடுமைப் படுத்தினார்கள் என்று மாற்றி எழுதிவைத்தான்.

நாசி இட்லர் வழியில், நமது பார்பன வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜெபை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள்!

கடவுளின் பெயரால் காமக்களியாட்டம்.அதுவும் கடவுள் உள்ளதாக சொல்லப்படும் கோயில்களிலேயே! அரசிகளைக்கூட அஞ்சாது கற்பழிக்கும் அநியாயம்!!

தவறான செயல்களைக் கண்டித்துதண்டித்த அவுரங்கஜெப் மதவெறியராம்! கடவுள் இருக்கிறார் என்று நம்பிவந்த கோயிலிலேயே  கற்பழித்து, இரக்கமின்றி நடந்துகொண்ட,மனிதத் தன்மையற்ற செயல்களைச்  செய்தவர்கள்  பிராமணர்கள்,இந்துத்துவவாதிகள்  சாத்வீக,அஹிம்சா வாதிகளாம்.!!

   "இந்துத்துவ பாசிசம்" எனபது எப்போதும் தனது தவறுகளை,குற்றங்களை மறைத்து,.இருட்டடிப்பு செய்தும் வருவதுடன், தங்களது தவறுகளை  கண்டிப்பவர்கள் மீது,அவர்கள் எத்தனை உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும்  அவதூறு செய்து,பொய்யுரைத்து களங்கப்படுத்தவும் தவறுவதில்லை!

      இந்துத்துவ பாசிச வாதிகள் ,அவுரங்கஜெபை  இன்றும் தொடர்ந்து மதவெறியராக காட்டி வருவது ஏன்? ஏனென்றால்,அவுரங்கஜெபைப் படிக்கும் அனைவருக்கும் அவர்மீது வெறுப்பு வரவேண்டும்.என்பதுதான். அவுரங்கஜெப் மீது,அவரது ஆட்சிமீது  வெறுப்பு வந்தால்தான்,அவர் பலவந்தமாக மாற்றியதாக கூறும் முஸ்லிம்களின் வம்சாவளியினர் மீது,அதாவது இன்றைய  முஸ்லிம் மக்கள் மீதும் வரவேண்டும்  என்பதற்காகத்தான்  அவுரங்கஜெப் குறித்து தவறான வரலாறு  எழுதி, அதனை உண்மை என மக்களை நம்பசெய்து  வருகிறார்கள்!


Comments

 1. ஒளரங்கசீப்ப்பைப் பற்றி மற்ற நூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

  மேவாரின் ராணா ராஜ்சிங்கிற்கு இவர் அனுப்பிய 'நிஷான்'கள் எனப்படும் உத்தரவுக் கடிதங்கள் ஒன்றில்,

  தீர்க்கமான தொனியில், தம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த மதக்கோட்பாட்டையே தாமும் பின்பற்றப் போவதாக வாக்குறுதியளித்து,

  'எந்த ஒரு மன்னன் மற்றவர் பின்பற்றுகின்ற மதத்தைச் சகிக்கவில்லையோ, அவன் இறைவனுக்கே எதிரியான கலகக்காரனாவான் ' என்றும் ஆணித்தரமாய்க் கூறி இருக்கிறார்.

  ஒளரங்கசீப் பல கோயில்களுக்கு ஜாகீர்கள் வழங்கியுள்ளார்.

  இந்தியாவை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து இவர் ஆண்டுள்ள இந்த நீண்ட காலத்தில், தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவதற்காக, தமது கொள்கைகளில் அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை இவர் செய்து கொண்டிருந்தார்.

  அவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில், முன்னெப்போதும் இருந்ததைவிட அதிகமான அளவில் இந்துக்கள் பணி புரிந்தனர்.

  ஜெய்சிங் என்பவர் தக்காணாத்தின் அரசப் பிரதி நிதியாக 1665ல் நியமிக்கப்பட்டார். முகலாயப் பேரரசில் இருந்த மிக உயர்ந்த பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

  ஜஸ்வந்த் சிங் என்பவர் இரண்டு முறை குஜராத்தின் ஆளுனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

  ஷாஜஹான் ஆட்சியில் 24 விழுக்காடாக இருந்த இந்துக்கள், ஒளரங்கசீப்பின் ஆட்சியில் 33 விழுக்காடாக உயர்ந்திருந்தனர்.

  கோயில்களைச் சீரமைப்பதிலும் பழுது பார்ப்பதிலும் இவர் காலத்தில் பெரிய அளவில் முயற்சிகள் நடந்தன.

  வட இந்தியாவின் பல கோயில்களையும் குருத்துவார்களையும் ஒளரங்கசீப் ஆதரித்ததற்கான அரசாணைகள் இடம் பெற்றிருந்ததை, உஜ்ஜயினில் உள்ள மகா காவேஷ்வர் கோயில், சித்ரகூடத்தின் பாலாஜி கோயில், கெளஹாத்தியில் உள்ள உமா நந்த் கோயில் போன்ற கோயில்களிலிருந்து கிடைத்த நீதிமன்ற ஆணைகளின் தொகுப்பிலிருந்து அறியமுடிகிறது என்று அந்த ஆணைகளைத் தொகுத்த பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் பி.என்.பாண்டே கூறுகிறார்.

  மேற்கூரிய விபரங்கள் எல்லாம் 'வரலாறுகளும் முன்முடிவுகளும் ' என்ற தலைப்பில் ராம் புனியானி என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்தும் (தமிழாக்கம், எம்.எஸ். மறுபதிப்பு, சிந்தனைச் சரம், செப்டம்பர் 2002),

  'வீர் வினோத் ', 'அதெபெ ஆலம்கீரி ' போன்ற ஒளரங்கசீப் பற்றிய ஆதாரப்பூர்வமான நூல்களில் இருந்தும், எம். அத்தர் அலியின் 'அவுரங்கசீபின் ஆட்சியில் முகலாய பிரபு குலம் ' என்ற நூலிலும் காணக்கிடைக்கின்றன.

  ====================================  ஜஸ்யா வரி கொடுத்துக் கொடுத்து ஹிந்து குலமே போண்டியாகிவிட்டதுபோல் நீலிக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வதும் வீண்.


  சொடுக்கி ----- 1.
  ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம். .அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. அவ்ரங்கசீப் மதமாற்றம் செய்தாரா?
  ------ படிக்கவும்

  .

  சொடுக்கி ----- 2. ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி! ------ படிக்கவும்

  ReplyDelete
 2. அன்பு சகோ

  வரலாற்று ஒளியில் தெளிவான ஓர் இடுகை

  அருமையான பதிவிற்கு வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
 3. அன்புள்ள நண்பருக்கு
  நான் வெள்ளிநிலா என்ற ஒரு மாத இதழ் நடத்தி வருகிறேன்
  இதுபோன்ற வரலாற்று செய்திகள் எமக்கு அனுப்பி வைத்தால் வரும் மாதங்களில் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்..
  அன்புடன்
  நிசார் அஹ்மத்
  ஆசிரியர் -வெள்ளிநிலா
  email : vellinila@gmail.com

  ReplyDelete
 4. உண்மையில் மொகலாய மன்னர்களிலே மிகச் சிறந்தவர் அவுரங்கஜேப் தான்... ஆனால் அதை அப்படியே மாற்றி உல்டா அடித்து உள்ளார்கல். இந்திய வரலாற்று ஆசிரியர்களிடம், குறிப்பாக பிராமண வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்து என்ன தான் எதிர்பார்க்க முடியும்????

  ReplyDelete
 5. மற்றுமொரு அருமையான இடுகை. பள்ளியில் போதிக்கப்படும் நமது நாட்டு பாட நூல்கள் அனைத்தும் பிராமணர்களால் திருத்தி எழுதப்பட்டது. உண்மை வரலாற்றை என்றுதான் போதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அருமையான பதிவிற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 7. மிகவும் அருமையான பதிவு. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மறைக்கப்பட்டு இதுவரை அறிந்திராத அரிய தகவல்கள். உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது ஓசூர் ராஜன். பார்ப்பன பாசிச நரிகளின் குணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜெர்மெனிய நாஜிகளின் இரத்த நாளங்களில் ஓடிய அதே கொலை வெறி பிடித்த நாற்ற இரத்தம்தான் அன்றும் இன்றும் பார்ப்பன பரதேசிகளின் உடம்பில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
  தொடர்ந்து இது போன்ற வரலாற்று ஆதாரங்களை தேடித் துருவி எமக்களிக்கவும். ஏமாற்றுக்காரர்களின் குட்டு உடைந்து பாமர மக்கள் தெளிவு பெறுவர்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. வழக்கம் போல பல இஸ்லாமிய அறிஞர்கள் இதை படித்துவிட்டு ஓசூர் மன்னருக்கு புகழ் மாலை சூட்டுவதை நாம் எதிர் பார்க்கலாம். அவுரங்கசீப் ஆரம்பத்தில் இவர் சொல்லியதை போன்று மிக அடக்கமானவராகத்தான் இருந்திருக்கிறார்.எல்லா மதங்களையும் அரவணைத்து சென்றவர்தான் ஆனால் அவர் வாழ்வின் கடைசி வருடங்களில் அவுரங்கசீபுக்கு மதவெறி தலைக்கேறி இந்துக்களையும் சீக்கியர்களையும் கண்ணா பின்னா என்று கொன்று அதகளம் செய்திருக்கிறார். எனவே நாம் வரலாற்றில் படித்தது உண்மையே. அக்பரை ஒரு நல்ல முஸ்லிம் என்று இன்றைய முஸ்லிம்கள் சொல்லமாட்டார்கள். அவரை கடுமையாக விமர்சிப்பார்கள்.அதே சமயம் அவுரங்கசீபை இவன்தான்யா நம்ம ஆளு என்று நமக்கே மண்டை காயும் படி புகழ்வார்கள். ஏனென்றால் அவுரங்கசீப் குரான் படி ஆட்சி செய்தான் என்று பின்குறிப்பு வேறு காட்டுவார்கள்.இதுவல்லவோ இஸ்லாமிய பாசம் என்பது.

  ReplyDelete
 10. ஒளரங்கசீப் மதுவை வெறுத்தவர். தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவைத் தடை செய்தார். அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார். உல்லாச நிகழச்சிகள் நடத்தக் கூடாதென்று உத்தரவிட்டார். போதைப் பொருள்களையும் ஒழித்தார்.

  இறந்த கணவனின் சடலத்தை வைத்து எரிக்கும்போதே, அதே நெருப்பில் மனைவியும் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் ஹிந்துக்களிடையே அதிகமாக இருந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்றழைக்கப்பட்டது.

  ஒருமுறை போர்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்பில் குதிக்கச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

  அப்போது ஒளரங்கசீப் அங்கு வந்தார். அந்த செயலைத் தடுத்தார். அங்கிருந்தவர்கள், தங்கள் மத விஷயத்தில் தலையிடக் கூடாதென்று வாதம் செய்தனர்.

  ஆனால் ஒளரங்கசீப் விடவில்லை. 'இது அநயாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக் கூடாது. இந்தச் சம்பிரதாயத்தைத் தடை செய்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காகப் பல்வேறு பிரிவினர்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடிந்தது.

  ஒளரங்கசீப், இருபத்து நான்கு மணிநேரத்தில் மூன்று மணி நேரமே உறங்கினார். வேலை தவிர மீதமிருந்த ஓய்வு நேரங்களில் எல்லாம் இஸ்லாமிய மார்க்க நூல்களைப் படிப்பதில் செலவிட்டார். தரையில் தான் படுப்பார். ஒளரங்கசீப் மாமிசம் உண்ணாதவர். கொரின்தா என்ற புளிப்புச் சுவை நிறைந்த பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

  அரசாங்க கஜானா பணமானது மக்களுக்கே உரியது, அரசு குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில் ஒளரங்கசீப் மிகவும் உறுதியாக இருந்தார். தன் சொந்தச் செலவுகளுக்கா ஒரு போதும் அவர் கஜானாவை உபயோகிக்க மாட்டார்.

  பொதுவாக மன்னர்கள் தன் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்குக் காட்சி கொடுப்பதைப் பாரம்பர்யமாக வைத்திருந்தார்கள். ஆனால் எளிமை விரும்பியான ஒளரங்கசீப், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும் சாதாரண தினமாகவே எடுத்துக் கொண்டார்.

  ஒளரங்கசீப்புக்குக் குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்ஆனை தன் கைப்பட எழுதுவதில் அதீத விருப்பம் இருந்தது. அந்த இரண்டையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் தனிப்பட்ட செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

  முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தார் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707).

  வயது தொண்ணூறு. இத்தனை வருடங்கள் போர் போர் என்று ஓடிவிட்டது. இந்தியா முழுவதும் கட்டியாள வேண்டும் என்ற பெருங்கனவில் பெரும் பகுதி நிறைவேறிவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. சில வருடங்களில் அவற்றையும் பிடித்துவிடலாம்.

  என்ன செய்ய? முதுமை ஆட்கொண்டுவிட்டது. உடல் ஒத்துழைக்கவில்லை. மரணத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

  தனக்குப்பின் தன் வாரிசுகள், இந்தப் பேரரசைகட்டிக்காப்பார்களா?

  பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள், ஆக்கிரமிப்புகள். கிட்டத்தட்ட நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று எவ்வளவே பரந்து விரிந்திருக்கிறது. நிலைக்குமா? கவலை, அவரது சுருங்கிய கன்னங்களில் சுடத் தெரிந்தது.

  தான் மாட்டிக் கொண்டது போல, தனக்குச் சகோதரர்களுடன் நேர்ந்தது போல வாரிசுரிமைப் போர், தன் மகன்களுக்கு இடையேயும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்.

  ஆட்சிப் பகுதிகளைப் பரித்துக் கொடுத்து உயில் எழுதி வைத்தார்.

  ஒளரங்கசீப் உயில்

  'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச்சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது.

  நான் குல்லாக்கள் தைத்து விற்றுச் சேர்த்த பணத்தில் கொஞ்சம் அஜ்யா பேக்கிடம் இருக்கிறது. அந்தப் பணத்தை கொண்டு என் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்.

  அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது.

  இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

  உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.


  THANKS TO SOURCE: http://aurangazeeb.blogspot.com

  ReplyDelete
 11. இந்துக்களின் சதி என்னும் மனைவியை கணவனின் சடலத்தோடு தீயிட்டு கொளுத்துவது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம். ஆனால் அந்த காட்டுமிராண்டித்தனம் இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு பின்னரே இந்தியாவில் அதிகமானது என்றும் முஸ்லிம் மன்னர்கள் தங்கள் சிறை பிடிக்கும் பெண்களை என்னவென்ன செய்வார்கள் என்று அறிந்திருந்த மகாராணிகள் இஸ்லாமியர்களின் கொடுமைக்கு தீயே மேல் என்று சதியை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்று கூட ஒரு வரலாற்று சான்று உள்ளது. எப்படியாயினும் சதி என்னும் பழக்கம் இஸ்லாமியரின் வருகைக்கு பின்தான் பிரபலமடைந்தது என்பதே உண்மை. ஒரு விதத்தில் சதி இஸ்லாமிய சதி என்று கூட சொல்லலாம்.

  ReplyDelete
 12. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 13. //காரிகன் said ...... 21 July 2012 05:37

  இந்துக்களின் சதி என்னும் மனைவியை கணவனின் சடலத்தோடு தீயிட்டு கொளுத்துவது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம். ...........

  சதி என்னும் பழக்கம் இஸ்லாமியரின் வருகைக்கு பின்தான் பிரபலமடைந்தது என்பதே உண்மை. ஒரு விதத்தில் சதி இஸ்லாமிய சதி என்று கூட சொல்லலாம்.//

  இறந்தகணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு. வேதம்.

  ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

  ``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

  அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

  `பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

  ``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...

  உன் கணவனோட நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா?

  அதனால்...? ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா?

  அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்

  வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக ‘சதி’ என அழைக்கப்பட்டது.


  “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, ---அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். எழுதிய CLICK HERE “இந்துமதம் எங்கே போகிறது” TO READ என்ற நூலில்

  SOURCE: CLICK HERE “இந்துமதம் எங்கே போகிறது” TO READ


  Rig Veda sanctions sati

  This most ancient text sanctions or prescribes sati.

  This is based on verse 10.18.7, part of the verses to be used at funerals.

  इमा नारीरविधवाः सुपत्नीराञ्जनेन सर्पिषा संविशन्तु |
  अनश्रवो.अनमीवाः सुरत्ना आ रोहन्तु जनयोयोनिमग्रे || (RV 10.18.7)

  Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as collyrium (to their eyes).

  Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned.[62]


  .

  ReplyDelete
 14. பல வரலாற்றுத் தகவல்களை தந்துள்ளீர்கள் .. சில வாய்வழிச் செய்திகளையும் வரலாறு போலக் கொடுத்துள்ளீர்கள் ... அவுரங்கசீப் மட்டுமல்ல பல முகாலய மன்னர்கள் நல்லவை செய்திருந்தாலும், அவர்கள் சமத்துவவாதிகளாக ஒன்றும் இருந்திருக்கவில்லை ... !!! அக்காலத்தில் அவர்களுக்கு நியாயம் எனப் பட்டதைத் தான் செய்துள்ளார்கள் ... குறிப்பாக சோழர்களை நாம் போற்றி புகழ்கின்றோம், அதே வேளையில் போர் நடவடிக்கையின் போது அவர்களும் இனவழிப்பு, கற்பழிப்பு, கொள்ளைகள் ஈடுபட்டவர்கள் தான் .. !!!

  அவுரங்கசீப் செய்ததைப் போல ஹிட்லரும் ஆரம்ப காலங்களில் பல நல்லதை செய்துள்ளார், அதனால் அவர் செய்த மனிதப் படுகொலைகள் நியாயம் என்றாகிவிடாது !!! இந்துத்வாதிகள் மராத்தியர் - முகாலயர் யுத்தங்களை இந்து - முஸ்லிம் போராக நினைப்பதும் தவறான ஒன்று தான் !!!

  மராத்திய - முகாலயப் போர் என்பது உள்நாட்டு மன்னர்கள் - அந்நிய ஆட்சியினருக்கு எதிரான போராகவே பார்க்க வேண்டும் !!! என்பது எனதுக் கருத்து ... !!!

  ஔரங்கசீப்புக்கு ஆதரவாக பேசுவோர் பலர் அக்பரை ஆதரிப்பது இல்லை, ஒரே ஒருக் காரணம் அவர் மதங்களிடையே சமத்துவம் காண முயன்றார். ஷரியா சட்டங்களை கொஞ்சம் மாற்றியமைத்தார் என்பதால் கடுப்பாகிவிட்டார்கள் ... அவ்வளவே !!!

  இந்தியாவை ஆண்ட மன்னரிகளிலேயே நல்லாட்சி புரிந்தோர் என்று எல்லாம் எவரும் இல்லை. அவரவர் நலன் சார்ந்தே எதாவது செய்துள்ளார்கள் .. அசோகர் மாத்திரமே கல்விக்காக பாடுப்பட்டார், போர்களை மூட்டைக் கட்டி வைத்தார் .. அதனாலேயே அசோகரின் ஆட்சிக் காலத்தில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவமும் இலக்கியங்களும் தோன்ற ஆரம்பித்தன .. அக்காலத்திலேயே இந்து மதம் தனது பழைய அடையாளங்களில் இருந்து விலகி பௌத்த சமணத்தை காப்பியடிக்கவும் தொடங்கியது .. அதை தவிர வேறு எந்த மன்னரும் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை .. அவரவர் கொஞ்சம் கொஞ்சமாக எதாவது செய்துவிட்டு போனார்கள் ..

  அவுரங்கசீப் மீது மண்வாரி அடிப்பதும் அல்லது அவருக்கு கொடிப் பிடிப்பதும் இன்று தேவையற்ற ஒன்றாக நான் கருதுகின்றேன் !!!

  ReplyDelete
 15. இந்துக்களின் சதி என்னும் உடன் கட்டை ஏறுதலை தடை செய்தவர்கள் வெள்ளையர்களே ! உடன் கட்டை ஏறுதல் எல்லா இந்துக்களாலும் பின்பற்று வந்தது என நினைப்பது முட்டாள் தனம். அனேக சாதிகள் அவற்றை பின்பற்றவில்லை ... பெரும்பாலும் பிராமணர் உட்பட ஒருசில உயர்வர்க்கத்தினர் மாத்திரம் அவற்றை பின்பற்றி வந்தார்கள் .. பெரும்பாலும் முகாலயர் ஆட்சியில் சதி என்னும் உடன் கட்டை பரவலாக இருந்தமைக்கான ஆதரங்கள் உண்டு தான். ஆனால் அதற்கான பின்னணி காரணங்கள் சரிவரத் தெரியவில்லை .. !!! தென்னாட்டில் உடன் கட்டை ஏறுதல் குறைவாகவே இருந்ததும் குறிப்பிடத் தக்கது ..

  ReplyDelete
 16. அரிய தகவல் ...நன்றி

  ReplyDelete
 17. மதம் சடங்குகளின் பெயரில் அனாதை விதவைமார்களை உடன் கட்டை ஏற்ற வைத்த ஆரிய நரிகளின் ஈனச் செயலுக்கு மொகலாயர்களும் ஒரு வகையில் காரணம் என சப்பைக்கட்டு சமாதானம் தேட முயற்சிக்கும் காரிகன் புரட்டல்கள் வறுத்தமளிக்கின்றன.

  ReplyDelete
 18. Advancing joshi. Priyabga sing modi not terrorist

  ReplyDelete
 19. நானூறு வருட வரலாறில் இவ்வளவு கைவைத்தல் இருக்கும் போது , அதனை விட பழையதில் எந்த அளவிற்கு உண்மைகள் ( மட்டும் ) இருக்கும்?

  ஹிட்லர் ஏறக்குறைய சமகாலத்தர் என்ற வகையில் அவரது பல விஷயங்கள் மறுதலிக்க பட்டுவிட்டன. ஒரு வேளை ஹிட்லரின் காலம் ஐநூறு வருடங்களுக்கு முன் என்று இருந்தால்,

  கேள்விகளை மட்டுமே கேட்க தெரிகிறது

  ReplyDelete
 20. //காரிகன் 21 July 2012 05:37//

  உடன் கட்டை ஏறுவதை நியாயப் படுத்தும் மதவாதிக்ள்:ஆவணப்படம்
  20 வருடங்களுக்கு முன்பு 17 வயது ரூப் கன்வர் என்னும் பெண் ,தன் இறந்த கணவனோடு கணவனோடு உடன் கட்டை ஏறியதாக் கூறப்பட்ட செய்தி மிகவும்.... மேலும் படிக்க http://saarvaakan.blogspot.com/2011/05/blog-post_02.html  "3 குழந்தைகளுடன் போலீசில் பெண் தஞ்சம்

  ராமநாதபுரம், மார்ச்.13-

  ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேரும், வேனில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் லகன்சிங், பீபல்சிங் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.

  ஆனால் வழியில் பீபல்சிங் இறந்தார்.

  இவர் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தான மாவட்டம் நகோடு தாலுகா சித்துபுராவை சேர்ந்த நிக்குசிங் என்பவரின் மகன் ஆவார். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருடைய மனைவி வீராபதி (வயது27), மகன் அனில்(3), 5 மாத குழந்தை பாதல், மகள் பூனம்(7) ஆகியோர் காயமடைந்தனர். பீபல்சிங்கின் உடலை பெற அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் பீபல்சிங்கின் உடலை பெற்றுக்கொண்டு வீராபதி மற்றும் குழந்தைகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

  ஆனால் வீராபதி தனது குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டு வரமுடியாது என கூறினார். அவர்கள் வீராபதியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவே கதறி அழுதார். பின்னர் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அழுதுகொண்டே ராமநாதபுரம் டவுன் போலீஸ்நிலையத்துக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்தார்.

  அங்கு, "போலீசாரிடம் காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள்'' என்று இந்தியில் அலறினார்.

  போலீசார் அவரை ஆறுதல் படுத்தி விசாரித்தனர்.

  "ஏன் கணவர் வீட்டாருடன் செல்ல மறுக்கிறாய்?'' என்று அவரிடம் போலீசார் கேட்டபோது வீராபதி கூறிய பதில் போலீசையே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

  "எங்கள் குல வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும்.

  இறந்த கணவருடன் சேர்த்து வீட்டின் பின்புறம் என்னையும் உயிரோடு புதைத்து விடுவார்கள்.

  குழந்தைகள் இருந்தால் கணவரின் பெற்றோர் தான் அவர்களை வளர்ப்பார்கள். என்னையும் என் கணவரோடு புதைக்கவே வருமாறு வற்புறுத்தி அழைக்கிறார்கள்.

  எனது கணவர் இறந்தாலும் எனது பிள்ளைகளை நான்தான் வளர்ப்பேன். அவர்களுக்காக நான் உயிர்வாழ வேண்டும். எனவே என்னை அவர்கள்பிடியில் இருந்து காப்பாற்றுகள்.

  நான் எனது தந்தை ராம்ஜிலாலுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார்.''

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதனை அடுத்து வீராபதியை அவருடைய மாமனார் குடும்பத்தினருடன் அனுப்ப போலீசார் மறுத்துவிட்டனர்.மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டனர்."


  இப்ப எந்த ஒளரங்கசீப் ஆட்சி செய்கிறார்கள்

  ReplyDelete
 21. nalla thakaval!
  sakotharaa!

  ReplyDelete
 22. //*** அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை நாம் மதத்தின் காரணத்திற்காக பெருமைப்படுத்துவது தவறு. எந்த கிறித்துவனும் மதத்தைக் காரணமாகக் கொண்டு நம்மை அடக்கி ஆண்ட கிறித்துவ ஆங்கிலேயனைப் பெருமைப் படுத்தியது கிடையாது. அதுபோலவே நம்மை அடக்கி ஆண்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்களை இஸ்லாமியர்கள் பெருமைப்படுத்துவது பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.//

  இதை எத்தனை முறை சொன்னாலும், ‘என் மதத்துக்காரன்; ஆகவே அவனைத் தூக்கிப் பிடிப்பேன்’ என்ற அடிப்படைவாதிகளை ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்தும் என் பழைய பதிவுகள் இரண்டை மீண்டும் இங்கே தருகிறேன் - இஸ்லாமியரல்லாதோர் வாசிக்க. இஸ்லாமியர் வாசித்தாலும் பயனேதும் இருக்காதென்பது தெரியாதா!!

  http://dharumi.blogspot.in/2011/02/479-co.html

  http://dharumi.blogspot.in/2011/02/472.html

  //*** இஸ்லாமியத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியான வரி என்பது பற்றி நான் சொன்னது: ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம். //

  ReplyDelete
 23. இஸ்லாம் , முஸ்லீம் என்று கண்டாலோ கேட்டாலோ குதவலியால் துடிப்பவர் போல் துடிதுடித்து விடும் தருமி என்றதொரு கல் விக்கிரகம் இஸ்லாம், முஸ்லீம்களுக்கு எதிராக எதையும் எப்படியும் அவதூறாக காழ்ப்புணர்வுகளுடன் உண்மைகளை திரித்து எழுதி மாய்மால எழுத்துஜால நரேந்திர மோடியாக பதிவுலகத்தில் வலம் வருவதை யாவரும் அறிவர்.

  ReplyDelete
  Replies
  1. மதங்கள் அனைத்தும் இறைவனை அடய வழிகள் மட்டுமே. இறைவன் உள்ளான் என நம்புவர்களுக்கு அவனை அடைய புத்தகங்களும் பிற மனிதனின் உபதேசங்களும் தேவையில்லை. தொலைந்த கன்றும் தாய் பசுவும்போலவே நாமும் இறைவனும். மனிதன் இறைவனுக்கு சொல்லிய திருவாசகத்தை படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.

   Delete
 24. மற்றுமொரு அருமையான வரலாற்று பதிவு..

  உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ...:)

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?