பாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்!

        ஏன் பாசிச சாதிகள் முஸ்லிம்களை அழிக்கவும்,  வெகுஜன மக்களிடம் அவர்களை  எதிரியாக காட்டவும்,தொடர்ந்து முயன்று வருகிறார்கள்? 

     " இந்துத்துவம்" என்ற பாசிசம் இஸ்லாம் மதத்துக்கு எதிராக வெகுஜன மக்களை திசை திருப்பி வருவதற்கு காரணம் என்ன?முஸ்லிம்களின் மீது துவேஷத்தை கொண்டு செயல்பட்டு வருவது எதற்காக?   

எதற்காக என்றால்,பாசிச சக்திகளுக்கு  உலகம் எங்கும் ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது என்பதும் அந்த பொது எதிரியாக," இஸ்லாம் " சித்தரிக்கப்பட்டு வருவதும்தெரியவரும்.!


         உலகம் எங்கும் உள்ள பாசிச சக்திகளுக்கு,   தங்களது சுரண்டல் கொள்கையினை மக்கள் உணர்ந்து கொண்டால்,தங்களுக்கு எதிராக வெகுஜன மக்கள், விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தங்களின் கதி என்னவாகும் என்ற அச்ச உணவு இருந்துவருகிறது.

       பாசிச சக்திகளின் அத்தகைய அச்ச உணர்வாலும்,வெகுஜன மக்களின் ஒருங்கிணைப்பை தடுக்கவும் வேண்டிய அவசியமும் அதற்கு உள்ளது! இந்த தேவையின் காரணமாகவே பாசிச சக்திகள் பல்வேறு உத்திகளை, செயல்களை செய்து வருகின்றது !

           மதத்தின் பெயரால் சர்ச்சைகளை உருவாக்கி, மத ரீதியாக பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை ஒன்றுசேராமல்  தடுப்பது, அவர்களுக்குள் பிரிவையும்,வேற்றுமை உணவர்வையும் வளர்ப்பது,தொடர்ந்து அதே நிலையில்அவர்களை இருக்கும்படி பார்த்துக் கொள்வது,வேற்றுமை உணர்வை,  மதவெறியாக்கி ,உழைக்கும் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள செய்வது!


         இந்த மோதல்கள், சர்ச்சைகள் மூலம் பெரும் கலவரத்தை உருவாக்கி, அவர்களது வாழ்வுரிமையைப் பறிப்பது ,தொடர்ந்து பாசிசத்தை எதிர்க்கும் உழைக்கும் மக்களை, வறுமை நிலையிலேயே வைத்திருப்பது! அவர்களை ஒன்றிணைக்கும் மனிதர்களை, சாதி-மத பார்வையில் சித்தரித்து,தீவிர வாதிகளாக.... தேச விரோதிகளாக... காட்டுவது ! சமயங்களில் அவர்களை கொன்றுவிடுவது!  போன்ற அனேக செயல் திட்டங்களையும், உக்திகளையும் கொண்டு பாசிச சக்திகள்  இயங்கி வருகின்றன.

        இதன் மூலம்  பாசிச சக்திகள் வெகுஜனமக்களிடம் எழும் கோபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும்,அவர்களின் கோபத்தை திசை திருப்பி விடவும் செய்கின்றன.  வெகுஜன மக்களுக்கு எதிரியாக ,அதாவது பாசிச சக்திகளுக்கு பொது எதிரியாக சித்தரிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் இஸ்லாமையும் ,உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களை பொது எதிரியாக பாசிசம் காட்டிவருகிறது!

        உலகின் மிக பெரிய பாசிச சக்தியான அமெரிக்காவும்,அதன் மூளையான இங்கிலாந்தும்,அவைகளின் அடிமைச் சேவக நாடான இஸ்ரேலும்  முஸ்லிம்களின் நாடுகளில் செய்துவரும் அராஜகங்களும், கொள்ளைகளும், அத்துமீறல்களும்,அந்த நாடுகளில் நிகழ்த்திவரும் படுகொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் இதுதான்!


ஒரு நாயைக் கொல்லுவதாக இருந்தால் அதற்க்கு வெறிபிடித்து உள்ளது என்று முதலில் சொல்லவேண்டும் அப்புறம் அதனைக் கொன்றால் யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்பதுபோல!  

       இந்தியாவில் உள்ள பாசிச சக்தியான "இந்துத்துவா சக்திகள்" முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்தரித்து, வெகுஜன மக்களிடம் அவர்களை ஒட்டுமொத்த எதிரியாக காட்டி வருகிறது.! தொடர்ந்து காட்டியும் வரும்!

        முஸ்லிம்களை பொறுத்தவரையில், தங்கள் மீது சுமத்தப் படும் அவதூறுகளுக்கும் பொய்யுரைகளுக்கும் மறுப்பு சொல்லும் வலிமை இல்லை!  இந்துத்துவா சக்திகளின்" நியாயமும் தர்மமும்" அவர்களுக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது!

 கீழே வரும் நிகழ்ச்சியை பாருங்கள்.

     "என்ன திமிர் இருந்தால் நான் குடிக்கும் தண்ணீரை நீ களங்கப் படுத்துவாய்?"என்று ஓநாய் கர்ஜித்தது.


"அய்யா,நீங்கள் மேலே நின்றுகொண்டு நீர் குடிக்கிறீர்கள்,நான் கீழே நின்றுகொண்டு இருக்கிறேன்.நான் எவ்வாறு நீங்கள் குடிக்கும் நீரை களங்கப்படுத்த முடியும் " மிகவும் அடக்கமாக பதில் கூறியது ஆட்டுக்குட்டி.


"பொடியனே.. என்னிடமே தர்க்கமா? பெரியவர்களிடம் எப்படிப் பேசுவது எனபது உனக்குத் தெரியாதா?போன மாதம் நீதானே என்னைப்பார்த்து கேலி செய்தாய்?"


அய்யா,நான் போனமாதம் பிறக்கவே இல்லை"


"அதனால் என்ன?அது உன் தாயாக இருக்கலாம்"


"எனது தாய் இப்போது இல்லை"


" சரி...அதன் வாரிசு நீதான் இருக்கிறாயே"- ஒரே பாய்ச்சலில் ஆட்டுக்குட்டியைக் கொன்றது ஓநாய் 


இந்த நியாயம்தான்," பாசிச சக்திகளின் நியாயம்!". 


    பாசிசம் எனபது ஓநாயைப் போன்றது ,  இந்துத்துவம் என்பதும் இல்லை யென்றால் தேசிய நினைவுச் சின்னமான, உண்மையில் இருந்த  பாபர் மசூதியை இடிப்பார்களா? இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக சொல்லி,அதனை தேசிய சின்னமாக அறிவிக்குமாறு கூச்சல் போடுவார்களா? 

              பாசிச சக்திகள் இவ்வாறு உரிமைகோரும் மக்களுக்கு இஸ்லாமை  ஒரு பொது எதிரியாக காட்டிவருகிறார்கள். உழைக்கும் மக்களின்  கவனத்தை  திசை திருப்பி,தங்களது சுரண்டலை தொடர்ந்து வருகிறார்கள்! 

. உரிமை கோரிப் போராடும் மக்களை இவ்வாறு ஏமாற்றி வரும் பாசிச சக்திகள். சமயங்களில் உழைக்கும் மக்களையே  தங்களது நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் தவறுவதில்லை!  குஜராத் மதக் கலவரங்களில், வன்முறைகளில், முஸ்லிம்களின் உடமைகள் சூறையாடலில்....
    உழைக்கும் மக்களும்,உரிமைகோரிப் போராடும் மக்களும் பாசிச சக்தியால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுமான பழங்குடி இன மக்களும் பாசிச சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டது இதனை உணர்த்துகிறது !!


      முஸ்லிம் மன்னரை எதிர்த்த சத்திரபதி சிவாஜியை போற்றி கொண்டாடும் பாசிச சக்திகள்  அவுரங்கஜேபை இந்துமத எதிரியாகவும்,மத வெறியராகவும் இன்றும் தொடர்ந்து பொய்யுரைத்து வருகிறார்கள்!


       உண்மையில் நடந்தது என்ன?  என்பதை அடுத்துப் பார்க்கலாம்!

Comments

 1. அருமையான தலைப்பை தொட்டிருக்கிறீர்கள். பல உண்மைக்கு பறம்பான சிவாஜி கதைகளை முன்பு நானும் பதிவாக இட்டுள்ளேன். உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஆதார நூல்களையும் கடைசியில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
 2. வணக்கம் சகோ,
  சூப்பர் பதிவு ,
  எனினும் தலைப்பில் ஒரு மாற்ற‌ம் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  "இஸ்லாமின் எதிரிகள் அனைவருமே பாசிஸ்டுகளே" என்று கூறிவிட்டால் பிறகு எழுதுவது அனைத்துமே இதற்குள் அடங்கி விடும்.

  எனினும் காஃபிர்களும் இஸ்லாமியர்களும் உழைக்கும் வர்க்கமாக சேர முடியும் என்ற பிரச்சாரம் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கும்போது மட்டுமே.

  எப்படியாவது பெரும்பான்மையினர் ஆகிவிட்டால் உலகின் ஒரே உண்மையான மதத்தின்,இறுதி தூதர் காட்டிய ஷாரியாவின் படி ஆட்சி அமைக்கப் பட்டே ஆக வேண்டும்.தூய இஸ்லாமியர் அல்லாத அனைவருமே காஃபிர்களே.

  ஷஹரியாவில் என்ன‌ உரிமைகள் காஃபிர்களுக்கு வழங்கப்படுமோ அதனை காஃபிர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

  இதுவே 1400 வருட இஸ்லாமிய நியதியாகும்.

  **************

  சரி சரி கேள்விகள்

  1.பாசிசம் என்றால என்ன?

  2.இந்துத்வம் என்றால் என்ன?[ஹி ஹி பழைய கேள்வி]

  3.இந்துத்வம் எப்படி பாசிசம் ஆகும்?

  4.இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன?

  5.ஏன் இஸ்லாமிய ஆட்சி பாசிசம் ஆகாது?


  நன்றி

  டிஸ்கி:
  சகோ சுவனன் காமெடி பண்ணாதீர்கள் . ஓசூர் இராஜனிடமே ஆதாரமா???????.ஆதரவாக எழுதுபவரிடம் ஆதாரம் கேட்டு தொல்லை பண்னலாமா? ,சிந்திக்க மாட்டீர்களா?.இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. @சார்வாகன்,

  :)))

  ReplyDelete
 4. பாசிசம் என்றால் என்ன ? அவர்களின் தற்கால செயல்முறைகள் என்னென்ன ? பாசிச சக்திகளுக்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் ஆரம்பத்தில் இருந்த தொடர்புகள் என்ன ? இன்று உள்ள தொடர்புகள் என்ன ? இந்துத்வா வாதிகளுக்கும் நாசிகளுக்கும் இருந்த தொடர்பு என்ன ? இன்றளவும் என்ன தொடர்பு ? போன்ற பல கேள்விகள் எழுகின்றன ..

  உண்மை தான் ! இந்துத்வா இஸ்லாமை எதிர்க்கின்றது, இஸ்லாமை மட்டுமல்ல பழங்குடிகள், திராவிட இயக்கங்கள், கிருத்தவர்கள், இந்து மதத்திலேயே இருக்கும் பாகன் வழிப்பாட்டினர், என பலவற்றை விழுங்க நினைக்கின்றது .... !!!

  உலகம் முழுவதும் சுரண்டல் போக்கை பாசிசம் மட்டுமா செய்கின்றது என சிந்தித்துப் பாருங்கள் ... !!! சீனாவில் மாவோயிசம் சுரண்டுகின்றது ... மேற்குலகில் முதலாளித்துவம் சுரண்டுகின்றது ... இந்தியாவில் இந்துத்வா முதல் திராவிட இயக்கங்கள் வரை அனைத்துமே சுரண்டுகின்றன ... !!! மத்தியக் கிழக்கில் அமெரிக்கா பக்கம் நின்று கொண்டு சௌதி உட்பட பல நாடுகளும் சுரண்டித் தான் வாழ்கின்றது ... இன்னொருப் பக்கம் இரான் உட்பட இரசியா சார்புக் கூட்டணி நாடுகளும் தத்தமது மக்களை சுரண்டித் தான் வாழ்கின்றது ... ஆப்பிரிக்காவிலும் சுரண்டல்கள் நடைப்பெற்று ஏழை பாழைகள் பட்டினியால் சாவுகின்றார்கள் .. சௌதி உட்பட மத்தியக் கிழக்கு நாடுகளும் ஆப்பிரிக்க நிலங்கள் தமது உணவுத் தேவைக்காக சுரண்டித் தான் வாழ்கின்றது...

  அதிகாரத்தில் இருப்பவன் அதிகாரத்தில் இல்லாதவனை சுரண்டித் தான் வாழ்கின்றார்கள் ... !!! இவற்றில் இஸ்லாம் மட்டும் ஏனையவற்றை எதிர்க்க வந்த விடிவெள்ளி போன்று நீங்கள் காட்டுவது எந்தளவுக்கு நியாயம் சொல்லுங்கள் .. !!! அதிகாரம் ஏறாத வரை அனைத்தும் சுரண்டல்வாதிகளை எதிர்க்கின்றன, தாமே அதிகாரத்தில் ஏறியவுடன் சுரண்டத் தொடங்குகின்றன .. இதற்கு எந்த கொள்கை சித்தாந்தங்களும் இஸ்லாம் உட்பட எந்தவொரு மதமும் விதிவிலக்கல்ல .. !!!

  பழங்குடிகள் இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுவதாக கதைக் கட்டியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .. !!! இஸ்லாம் பழங்குடிகளை பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா ஏன் இந்தியாவில் பல இடங்களிலும் சுரண்டித் தான் வருகின்றது ... !!!

  இந்துத்வாவாதிகளால் இஸ்லாம் தீவிரமயமாக சித்தரிக்கப்படுவதற்கு பாகிஸ்தானும் பொறுப்புடையவர்களே !!! என்பதை நாம் மறக்கக் கூடாது ... !!! அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் போக்கை நானும் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்தியாவின் 99 சதவீத முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை .. ஆனால் அந்நிய சக்திகளால் அவர்கள் தீவிரவாத போக்குக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்திய சாயம் கொண்ட இஸ்லாமை அழிக்கவும் முனைகின்றனர் .. இதுவும் பாசிசமே !!!

  சிவாஜி முகாலய ஏகாதியப்பத்தை எதிர்த்த மாவீரன் !!! என்பதால் நானும் தலை வணங்குகின்றேன்.. சூத்திர சாதியில் பிறந்து அரசனானவன் .. அவனை மராத்திய இந்துத்வாவாதிகள் சுவீகரம் செய்தது மிகவும் தவறான ஒன்றே .. அதற்கு அவுரங்கசீப் பெரும் மாமன்னன் நல்லவன் வல்லவன் என்பதை ஏற்க முடியாது .. அந்தக் காலத்தில் பாசிச உருவாக இருந்தவர்கள் முகாலயர்கள், செல்வச் செழிப்பில், போதையில், பெண் சுகத்தில் திக்கு முக்காடியவர்கள் அவர்கள் .. !!! இவற்றுக்கு இன்றைய இந்துத்வாதிகள் முஸ்லிம் சாயம் பூசி வருவது வேதனையே !!!

  இஸ்லாம் என்ற ஒற்றைக் குடைக்குள்ளேயே போராடுபவனும், போராட்டத்தை நசுக்குபவனும் உள்ளான் என்பதால் பாசிசத்துக்கு பொது எதிரி இஸ்லாம் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .. இஸ்லாமும் அதிகார மையத்தை கைப்பற்ற உதவும் ஒரு உபகரணமே !

  ReplyDelete
 5. @ சார்வாகன்

  //டிஸ்கி:
  சகோ சுவனன் காமெடி பண்ணாதீர்கள் . ஓசூர் இராஜனிடமே ஆதாரமா???????.ஆதரவாக எழுதுபவரிடம் ஆதாரம் கேட்டு தொல்லை பண்னலாமா? ,சிந்திக்க மாட்டீர்களா?.இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே!!!!!!!!!!!!!//

  இதோ ஆதாரம் - http://generationneeds.blogspot.sg/2012/07/blog-post_19.html

  ReplyDelete
 6. உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தீவிரவாதம் செய்து கொண்டிருப்பது முஸ்லிம்கள்தாம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஓசூர் ராஜனுக்கு இஸ்லாம் மேனியா என்னும் போதை தலைகேறி விட்டதால் அவர் இப்படித்தான் பேசுவார்.. இன்னும் கூட அதிர்ச்சியூட்டும் 'உண்மைகளை' வெளியிடுவார். உலகிலேயே இஸ்லாம் மட்டுமே உண்மையை போதிப்பது போலவும் மற்ற எல்லா மதங்களும் தீவிரவாதத்தை கற்பிப்பது போலவும் இவர் தொடர்ந்து எழுதி வருவது நெற்றியில் கருப்பு கரை உள்ள முஸ்லிம்களுக்கே சமயத்தில் வேடிக்கையாக இருக்கும்.இதோ கிடைத்தாண்டா நமக்கொரு அடிமை என்று அவர்கள் சுவனத்தில் இவருக்கு கண்டிப்பாக ஒரு சீட்டு முன்பதிவு செய்து விடுவார்கள். முஸ்லிம் கொன்றால் அது எதிர்வினையாம். அதையே அமெரிக்கன் செய்தால் அது மகா கொடூரமாம். மூலை சலவை செய்யப்பட்ட தீவிர முஸ்லிம் எப்படி அமெரிக்கா இஸ்ரேல் என்ற நாடுகளை வெறுக்கிறானோ அதோ மன நிலையில்தான் இந்த ஓசூர் மன்னர் இருக்கிறார்.(மதராசாவில் மாலை கல்லூரியில் படிப்பவர் போல தெரிகிறார்). இந்த முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் செய்யும் அட்டூழியங்களை பற்றி மட்டும் இவருக்கு பேசவே வராது. முஸ்லிம் நாடுகளில் அங்கு வாழும் பெண்களின் கண்ணீர் கதையை பற்றியோ, எப்படி சிறு குழந்தைகள் மதவெறி ஊட்டப்பெற்று தற்கொலை இயந்திரங்களாக மாறுகிறார்கள் என்பதை பற்றியோ இவர் கம்பியூட்டர் சொல்லாது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமைதான் இந்த உலகத்தின் பொது எதிரியாக பார்க்கிறார்கள்.நல்ல முஸ்லிம்கள் தீவிரவாதத்தை வெளிப்படையாக எதிர்க்காதவரை, அதை அமைதியாக சகித்துக்கொள்வது வரை, அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கும் வரை,எதனை ஓசூர் மன்னர்கள் என்னத்தை எழுதினாலும் அது இஸ்லாம் என்கிற மத வெறி கொண்ட யானையை கண்டு மக்கள் பயப்படத்தான் செய்வார்கள்.

  ReplyDelete
 7. இங்கே இக்பால் செல்வன் என்பரவர் என்ன சொல்ல வருகிறார் இவருடைய பெயரே தவறாக இருக்கிறது துலுக்கனுக்கு பிறந்த பாப்பாத்தியின் மகனே என்கிற சந்தேகம்தான் வருகிறது,

  ReplyDelete
 8. @ மாண்டியா - எனது பெயரை விட்டுவிட்டு நான் சொல்வதை மட்டும் கவனித்தால் நல்லா இருக்கு !!! நான் யார் யாருக்கு பிறந்தேன் என்ற ஆரய்ச்சிகள் உங்களுக்குத் தேவையற்றது என நான் கருதுகின்றேன் .. அப்படியான ஆராய்ச்சியால் உங்களுக்கோ ? சமூகத்துக்கோ நன்மை ஒன்றும் ஏற்படப் போவதில்லை ..

  ReplyDelete
 9. ஓசூர் ராஜன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் துலுக்கன் யாரு?

  நேரடியாக துலக்கப் பெயரில் எழுதலாமே?

  ReplyDelete
 10. hosur rajan avargalukku unmaiyai kooriyathukaga thevaiyatra pechukalai ethir konduvarum ungal thunivai potrugiren.mele pathivu ittavargal mattumindri raja raja chozhan varalaatrai neengal kooriya pothu vegundu eluntha paasisa sakthigalin adhrvaalargalum muslim virodha pokkaiye kadaipidikkirarargal enru thelivaaga therigirathu. athanaal veenaga naai pol kulaippavargal kulaikkatum neengal unmaiya eduthu uraikkum paniyai thodarngal. oru kurippitta inathai theeviravaathigal enru koori karuvarukka thudikkum onaai kootangalukku anja vendam tharmam jaikkum atharmam azhiyum

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?