ஊடகங்களின் சிறுபான்மையினர் வெறுப்பு!

           சிறுபான்மையினரில்  குறிப்பாக முஸ்லிம்களை இந்திய ஊடகங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தீவிரவாதிகளாக,குற்றச் செயல்களை  செய்பவர்களாக,பழிபாவத்துக்கு அஞ்சாதவர்களாக, காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன.


         திரைப்படங்களில்  வில்லன்கள்,நாட்டுக்கு எதிரான செயல்களை செய்பவர்கள், குண்டுவைப்பவர்கள், மக்களுக்கு எதிரான சதி செயல் செய்பவர்கள்  முஸ்லிம்கள் எனக் கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன .இந்துத்துவ தணிக்கையாளர்கள்  இத்தகைய செயல்கள் சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனபது குறித்து சிந்தனையின்றி அனுமதித்து வருவது இன்றும் தொடர்கிறது! 


     பத்திரிகை ஊடகங்கள்  என்ன செய்கின்றன? என்றுபார்த்தால் அவைகளும் முஸ்லிம்களிடம் தொடர்ந்து வெறுப்புணர்வை விதைக்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன!


     சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் சிறு குற்றச் செயல் -களையும் பூதாகரமாக்கி வருகின்றன. முஸ்லிம் ஒருவர் , ஒரு அடிதடி விவகாரத்திலோ,கொலை,திருட்டு போன்ற செயல்களிலோ ஈடுபட்டுவிட்டால்  அவரது பெயரை போட்டும், குடும்பத்தையும், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பையும் விரிவாக குறிப்பிட்டு செய்தியை வெளியிடும் ஊடகங்கள்,   அதே தவறை செய்யும்  இந்துக்களிடம் மென்மையான  அணுகுமுறையுடன் நடந்துகொண்டு,  குற்றம் குறித்த செய்தியை  வெளியிடுவதை காணலாம்! 


       அதிலும்  குற்றவாளி உயர்சாதி இந்துவாக இருந்தால் அவரை பாதுக்காக்கும் வகையிலும் குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையிலும்   செய்தியை வெளியிட்டும்,   ஏதோ அவர் தெரியாமல் அக்குற்றத்தை செய்துவிட்டார் என்பதுபோல செய்தியை வெளியிடுகின்றன! 


        எங்கேனும் யாரேனும் ஒரு தீவிரவாத செயலையோ,குண்டுவெடிப்பு போன்ற  செயலையோ  செய்துவிட்டால்,   உடனடியாக ஊடகங்கள்  "புலனாய்வு புலியாக"  மாறி,        செய்தது  இந்தியன் முஜாஹிதினா? அல்குய்தாவா? அல் உம்மாவா? ஐ.எஸ்.ஐ  தொடர்பா? பாகிஸ்தானின் சதியா?என்று  பரபரப்பான செய்தியைப் போட்டு  முஸ்லிம்களே  செய்தார்கள் எனபது போன்ற  கருத்தை உருவாக்கி,    முஸ்லிம்கள் எல்லோரையும் குற்றவாளிகளாக  பார்க்கும் நிலையை  ஏற்படுத்த தவறுவதில்லை!


       குண்டுவெடிப்புக்கு, " சன் சனாதன் அமைப்போ" ," அபினவ் பாரத்தோ" (பிரக்யா சிங்  இந்த அமைப்புதான்) " விஷ்வ ஹிந்து பரிசத்தோ, "சிவசேனாவோ,"  "ஆர்.எஸ்.எஸ்.அமைப்போ",  பெண்களுக்கும் ஆயுதபயிற்சி தந்து, துப்பாக்கி பயிற்சி தந்துவரும் " முக்திவாகினி" போன்ற எந்த அமைப்பு வேண்டுமானாலும்  குண்டு வைத்திருக்கலாம்,   நாச வேலை செய்து இருக்கலாம்  என்று......  எந்த ஊடகமும் குறைந்த பட்ச சந்தேகத்தைக் கூட செய்தியாக  வெளியிடுவதில்லை! 


          உடனே,    தீவிரவாதி,குண்டு வைத்தவன்  எப்படி இருப்பான் என்று தனது கற்பனைக்கு தகுந்ததுபோல  தாடி,தொப்பி வைத்தும்  படம் போட்டு காட்டத் தவறுவதில்லை! இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் இந்துத்துவ வெறியர்களாலும், பாசிச சக்திகளாலும் நடத்தப்பட்டவைகளே என்பதை  சரியாக  கண்டுபிடித்த " ஹேமந்த் கர்கரே"  மும்பையில் கொல்லப் பட்டார்!  அவரது கொலையில்  இந்துத்துவ சக்திகள் பாதுகாக்கப் பட்டனர்!  (அவர் அணிந்த குண்டுதுளைக்காத கவச உடைகூட  காணமல் செய்யப்பட்டது  உண்மை வெளியாகிவிடும் என்பதால்)


      இந்துத்துவ தீவிரவாதிகளும், பாசிச சக்திகளும் முஸ்லிம்கள் பெயரில் குண்டுவைத்து  முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கி, வெகுஜன மக்களிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்து,  முஸ்லிம்களை கொன்று குவிக்கவும் அவர்களது  சொத்துக்களை சூறையாடவும்,அவர்களது ஜீவாதார உரிமைகளை  பறிக்கவும்  செய்யப்பட்ட   இதுபோன்ற செயல்களால்  இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள்  ஏராளம்!    உயிரிழப்புகளும் ஏராளம், கொள்ளை  அடிக்கப்பட்ட   முஸ்லிம்களின்  உடமைகள்  ஏராளம்!! 


    மதக் கலவரங்களில் உயிரிழந்தவர்கள் பெரும்பான்மையினர்  முஸ்லிம்கள் எனபது மற்றொரு கசப்பான உண்மையாகும்! 

        இத்தகைய உண்மைகளை  நடுவு நிலையோடு சொல்லவேண்டிய ஊடகங்கள்,   சொல்ல முன்வருவதில்லை! அதுமட்டுமின்றி, பாசிச,இந்துத்துவ சக்திகளின்  இந்த கொடுமைகளுக்கு ஆதரவாக  செய்திகளை வெளியிட்டு, இந்தியாவின்  அமைத்துக்கும்,சமய பொரிக்கும்,ஜனநாயகத்துக்கும் , முன்னேற்றத்துக்கும், பொருளாதார சீர்கேட்டுக்கும்  துணைபோகும் அவலத்தை  செய்து வருகின்றன! 


    ஒரு மனிதனின் சட்டைப்பையில் இருந்து,  அவனுக்கு தெரியாமல்  பணத்தை எடுத்தாலே...  அது " பிக்பாகெட்" என்றும்  தண்டனைக்குரிய குற்றம் என்றும் சொல்லும்  இந்தியாவில்  மதக் கலவரங்கள் என்ற பெயரில்   முஸ்லிம்களின் சொத்துகளை, கொள்ளை அடித்த, சூறையாடிய   யாரையாவது  தண்டித்ததாக, குற்றவாளிகளை  பிடித்ததாக,  அவர்களிடம் இருந்து  கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை  பறிமுதல் செய்ததாக  கேள்விப்பட்டது உண்டா?  நான் இன்றுவரை கேள்விப்பட்டதே  இல்லை!


     கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் எங்கு போனது? யாரிடம் உள்ளது? என்று  ஊடகங்களோ, புலனாய்வு செய்யும் மத்திய,மாநில போலீசாரோ  விசாரித்து,உண்மையை மக்களிடம்   சொன்னது உண்டா? செய்தியாக வெளியிட்டது  உண்டா? சொல்லுங்கள்! நானறிந்த வரையில்  இல்லை என்பதுதான் உண்மைநிலையாகும்!!       மதக் கலவர தடுப்பு மசோதாவை, "இந்து தீவிரவாதிகள்"  எதிர்ப்பதன் காரணத்தை  இதிலிருந்து   நீங்களே  புரிந்துகொள்ள முடியும்!  


        சரி,  ஏன்  இந்துத்துவ வாதிகள்,பாசிச சாதிகள்  முஸ்லிம்களை  அழிக்கவும்,  வெகுஜன மக்களிடம் அவர்களை  எதிரியாக காட்டவும் தொடர்ந்து  முயன்று வருகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறதல்லவா? 

         அடுத்துப் பார்க்கலாம்! 


Comments

 1. அருமையான ஆக்கம் சகோதரரே! பல உண்மைகளை தோலுறித்து காட்டியுள்ளீர்கள். விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி.

  ReplyDelete
 2. /* கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் எங்கு போனது? யாரிடம் உள்ளது? என்று ஊடகங்களோ, புலனாய்வு செய்யும் மத்திய,மாநில போலீசாரோ விசாரித்து,உண்மையை மக்களிடம் சொன்னது உண்டா? செய்தியாக வெளியிட்டது உண்டா? சொல்லுங்கள்! நானறிந்த வரையில் இல்லை என்பதுதான் உண்மைநிலையாகும்!! */

  எனக்கு தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை..யாராவது சொல்லுங்கப்பா???

  ReplyDelete
 3. அதுவும் குண்டு வெடிச்சதும் அடுத்த குண்ட போடுவானுக பாருங்க.. "இந்தியன் முஜாகிதின்களிடம் இருந்து இமெயில் வந்ததுன்னு".. அத இன்னும் நாட்ல நிறைய பேரு நம்பி வாந்தி எடுத்துகிட்டு இருக்காங்க...

  ReplyDelete
 4. இந்தியன் முஜாகிதின் குண்டு பட்டன ஒழுங்கா அமுக்குறாய்ங்களோ இல்லையோ.... இமெயில்கு என்டர் பட்டன ஒடனே அமுக்கிடுவானுக போல் இருக்கு.... ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 5. எனக்குத் தெரிந்தவரை, இந்திய முஸ்லிம்கள் திவிரவாதிகள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியவர்கள். ஜிஹாத் போன்ற கட்டாயங்கள் அவர்களுக்கு இல்லை.

  ஆனால், பாகிஸ்தானிலிருந்து தீவிர வாதம் இந்தியாவிற்கு வருகிறது.

  தான் உருப்படாவிட்டாலும், இந்தியா உருப்படக் கூடாது என்பதில் அவர்களுக்கு ரொம்ப அக்கறை.

  ReplyDelete
 6. பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.

  நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.

  நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.

  ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.

  இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.

  ______________________

  நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.!

  நீதிபதி மார்கண்டேய கட்ஜு :‍

  முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

  அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

  மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

  இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது?

  ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

  அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.

  யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

  முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

  மேலும் படிக்க

  .

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ ராஜன் சமுதாய அக்கறையுடன் கூடிய நடுநிலைக் கண்ணோட்டப் பதிவு நன்றிகள்
  சோந்த மதத்தவரெகளையே பிறப்பின் அடிப்படையில் தாழ்ந்தவட் எனெறு நாயைவிட கேவலமாக பல நூற்றான்டுகள் நடத்தியவர்கள் அடுத்த மதத்தவர்களை அழிக்க நினைப்பதில் பெரிய ஆச்சர்யம் ஓன்றுமில்லை அதே சிந்தனை கொண்ட கயவர்கள் இன்று மீடியாக்கள் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள் என்தற்க்குச் சிறந்த உதாரணம் தான் இது போன்ற செய்திகள்
  அதுபோகட்டும் நடுநிலை வேடம் போட்டு தங்களை நியாயவான்களாக காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகளும் நாத்திகவாதிகளும் சில அரசியல் கட்சிகளும் இதைக்கண்டும் கானாமல் இருப்பதுதான் மிகவேதனையான விஷயம் அப்படிப்பட்டவர்கள் மத்தியில் உங்களைப்போன்ற நியாயமான சிந்தனை உள்ளவர்களும் இருப்பதைக் காணும்போது சற்று.ஆறுதலாக இருக்கின்றது

  ReplyDelete
 8. Good post Brother !!
  You have the guts to speak the truth..Kudos !!!

  ReplyDelete
 9. இறைவன் உங்களுடைய அறிவையும் ஆற்றலையும் ஆயுளையும் அதிகப் படுத்துவானாக.....

  நேசமுடன்,
  நாகூர் மீரான்

  ReplyDelete
 10. உண்மையை உணரவைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சகோதரரே!

  ReplyDelete
 11. சகோ. நல்ல பதிவே . இந்து ஊடகங்கள் இஸ்லாமை விரோதியாகக் காட்ட முனைவது வருத்தமடையவே செய்கின்றன !!!

  ஆனால் உலகில் அதிகார வர்க்கத்தில் இருக்கும் எவர்களுமே அதிகாரமில்லாத மக்கள் மீது வெறுப்பை காட்டுவது இயல்பாகவே நடந்தேறுகின்றன !!!

  பாகிஸ்தானிய ஊடகங்களை கவனித்தது இல்லை போல நீங்கள் .. அங்கும் சிறுபான்மை இந்துக்களை விரோதிகளாக சித்தரிக்கின்றன .. கிருத்தவர்களை மேல் நாடுகளின் உளவாளிகளாக பார்க்கின்றது ..

  இரான், துருக்கி, சௌதி, இலங்கை, ரசியா, சீனா, அமெரிக்கா என அனைத்து நாடுகளும் பிற இனங்கள் மீது வெறுப்பை காட்டித் தான் வருகின்றது ... !!! இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல அவ்வளவே !

  ReplyDelete
 12. நீங்கள் அமெரிக்க படங்களைப் பார்த்தால் க்யுபா, இரசியா, கம்யூனிஸ்ட்களை வில்லன்களாக காட்டுவார்கள் ..

  ரசியா படங்களைப் பார்த்தால் அமெரிக்கர்களை வில்லன்களாக காட்டுவார்கள் ...

  தேசங்கள் தோறும் இதே நிலை தான் சகோ. நாளைக்கு இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறினால் கூட. சிறுபான்மையினர் அவர் கைகளில் சிக்கி சிதைவார்கள் ..

  அதிகார மையமே உலகுக்கு பிரச்சனை. அது எவன் கையில் வைத்திருக்கானோ, அவன் அதிகாரம் இல்லாதவனை அடக்க நினைப்பான் ...

  ReplyDelete
 13. //பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.

  நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.//

  நியாயமான வருத்தமே .. ஆனால் இந்த சித்தாந்த வாதிகள் தவறு செய்யும் போது, இந்த சித்தாந்தங்களை நிறுவியவர்களோ, சித்தாந்தமோ தீவிரமாக குற்றங்களை செய்ய சொன்னதாக காணப்படவில்லை ... !!! என்பது தான் காரணம் ...

  ஒரு இந்து பெரியாரை நாய் என திட்டினால் ஒரு பெரியாரிஸ்ட் அவனைக் கொல்ல வேண்டும் என பெரியார் சொல்லவில்லை !!! அது தான் காரணம் ...

  ஒரு வேளை பெரியார் அப்படி சொல்லி இருந்தால், அந்த சித்தாந்தத்தை அழிக்க சமூகம் முற்பட வேண்டும் ,... நாசிசத்தை, பாசிசத்தை அழிக்க நினைத்ததும் அது தான் காரணம்.. ஆனால் சில சித்தாந்தங்கள் வெகு ஜனங்கள் பலரால் உளமாற ஏற்க பட்டு விட்டதால் அவற்றை அழிக்க முடியவில்லை, மாறாக சித்தாந்தங்களை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று தான் பிரச்சாரம் செய்ய முடியும் ...

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?