இந்திய பத்திரிக்கைகளின் சிறுபான்மையினர் வெறுப்பு!

      இந்தியாவில் இயங்கிவரும் பத்திரிக்கைகள்  இந்துத்துவா சிந்தனையை திட்டமிட்டே விதைத்து வருகின்றன.மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன!


     "இந்துத்துவா"வை அதாவது பாசிச சக்திக்கு உதவும் வகையில் வெகுஜனமக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் காரணிகளாக உள்ள  ஜோதிடம் குறித்து வெளியிடாத பத்திரிக்கைகளை பார்க்க முடியாது! இந்த ஜோதிடப் பித்தலாட்டத்திலும் ரகரகமாக  தினசரி,வார,மாத ராசிபலன்கள் என்றும்  அப்புறம் குருபெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி,சனிபெயர்ச்சி பலன்கள் என்றும்,இந்த இந்த ராசிக்கு தோஷம்,அதற்கு பரிகாரம் இதுவென்றும், இந்த கோயிலுக்கு போனால் புள்ளை பிறக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கல்யாணம் நடக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கண்டிப்பாக கர்ப்பம் அடைவாய் என்றும் தோஷம் போகும் என்றும் சொல்லாத பத்திரிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் ! ஜோதிடத்திலும்  பெயரை மாற்றிகொண்டால் சொர்க்கவாழ்வு கிடைக்கும், எண ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,என்று      " பீலா " விடாத பத்திரிக்கைகளை காண்பது அரிதாகும்! 


     இப்படி தொடர்ந்து உண்மைகள் இல்லாத  கற்பனைகளை ஊடக உலக மேதாவிகள்  வெளியிட்டு, உழைக்கும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகின்ற பத்திரிக்கைகள்,  மறுபுறம்  பாசிச சுரண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதை காணலாம். 


      இதுமட்டுமின்றி, புளிய மரத்தில் புள்ளையார் உருவம் தெரிந்தது,  மாங்காய்  மரத்தில் மாரியம்மாள் தெரிகிறார் என்றும்  முருங்க மரத்தில் பால் வடியும் அதிசயம், மக்கள் பக்திப் பரவசத்துடன் பூசை செய்தனர் . என்றோ,  பாம்பு வந்து  சாமிக்கு பூஜை செய்தது. {பாவம் பிராமணர்கள் பாம்பு  பூஜை செய்ய வந்துவிட்டால், அப்புறம் கோயிலில் அவர்களுக்கு என்ன வேலை ?} என்றோ  வெளியிட்டு வேடிக்கை காட்டவும் தவறுவதில்லை!


         வித்தைகள் காட்டும் மோசடி,மோடி மஸ்தான் பேர்வழிகளை  அவதார புருஷனாகவும், ஆன்மீகக் குருக்களாகவும் காட்டி மக்களை மடையர்களாக்கவும்  தவறுவதில்லை.!  அப்புறம், அலகு குத்துவது, பல்லக்கு தூக்குவது,சாமி அப்படியே தெருவுக்கு தெரு ஊர்வலமாய் (வீதிஉலா))வந்து,  அருள் பாலித்து....  இந்திய உழைக்கும் மக்களை  காத்து ரட்சிப்பது!  
      இந்தியாவை  சொர்க்கபுரியாகி, சுகபோகத்தில்  திளைக்க வைத்தது போலவே,   நம்ப வைக்கும்  செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவும் தவறுவதில்லை!   


     எந்தவித பொறுப்பும் இல்லாத  ஊர்சுத்தி ஆசாமிகளை,   ஆன்மீக குரு வருகிறார்!! அருளுரை தருகிறார்!  உபதேசம்,சொற்பொழிவு  கேட்க வாருங்கள்  என்றும், பாதபூஜை செய்ய வாருங்கள்!   வேள்வி செய்ய வாருங்கள்!   பஜனைபாட வாருங்கள்!  என்று  சலுகை  விளம்பரம் கொடுத்து ,செய்திகளை வெளியிட்டும் " இந்துத்துவா சிந்தனையை " பரப்பவும், பாசிசச் சக்திகளுக்கு உதவவும், உழைக்கும் மக்களின்  செல்வத்தை , நேரத்தை, உழைப்பை சுரண்டவும்  பாடுபட்டு வருகின்ற இந்திய  பத்திரிக்கைகளும்  ஊடகங்களும்  ஜனநாயகத்தின் கேடுகளை வளர்க்கும்,பாசிச  சக்திகள் என்பதை  புரிந்துகொள்ளவேண்டும்!


     இதைமட்டுமா   செய்கின்றன ? இந்துத்துவ சிந்தனைக்கு எதிரானவர்களை நிந்திப்பது, சிறுபான்மையினரை " தீவிரவாதிகளாக தேச விரோதிகளாக" சித்தரிப்பது, இந்துத்துவ வாதிகளை  அவர்கள் எத்தனை கொலைகள்,கொடுமைகள் செய்தாலும்  கண்டுகொள்ளாமல்  அவர்களை தேச பக்தர்களாக காட்டுவது, போன்ற எண்ணற்ற  காரியங்களை  இந்திய பத்திரிக்கைகள்  செய்துவரவும்  தவறுவதில்லை! 


தீவிர வாத செயல்கள்  நடைபெறும்போது  பத்திரிக்கைகளின்  பார்வையை  அடுத்து  பார்க்கலாம்..

Comments

 1. அன்பு சகோதரா அருமையான பதிவு
  உங்கள் எழுத்து பணி தொடரட்டும்
  http://newstbm.blogspot.in/2011/07/blog-post_09.html

  ReplyDelete
 2. ஊடகங்களின் மீதான தங்கள் கோபத்தை அப்பட்டமாக உணர முடிகிறது சகோ..

  நடுநிலையாக நின்று சிந்திக்கும் எவருக்கும் இப்படிதான் தோன்றும்...

  அருமையான அலசலுக்கு நன்றி சகோ.. :)

  தொடரட்டும் உங்கள் பணி..! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஸலாம் சகோ.ஓசூர் ராஜன்,
  உங்கள் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சகோ..!
  இதே பதிவை நான் எழுதிஇருந்தேன் எனில் பயங்கரவாதி பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பேன்..! மனமார்ந்த நன்றி தங்களுக்கு உரித்தாகுக.

  வேண்டுமென்றே பெரும்பாலான நடுநிலைவாதிகளால் கண்டு கொள்ளப்படாத மிகச்சரியான ஒரு நெருடலை கிளறி விட்டு இருக்கிறீர்கள்..! ஊடகத்துறை என்று மட்டுமல்ல..! நடுநிலையாக இருக்க வேண்டிய இன்னும் பல அரசு துறைகளே கூட... இப்படித்தான் சார்புத்தன்மையுடன் நடந்து கொள்கின்றன..!

  உதாரணமாக,
  பல சமயத்தவரும் இடம்பெற்று இருந்தும்... நடுநிலையாக இருக்க வேண்டிய அரசுத்துறையில் ஏதேனும் ஒரு துவக்கவிழா என்றால்.. வெற்றி விழா என்றால்... பூஜை, புனஸ்காரம், குத்துவிளக்கு, சாமி படங்கள், அக்னி, ஹோமம்... என்று ஏதோ தனியார் இந்து அறநிலைய துறை போன்றுதான் எல்லா அரசு துறையும் செயல் படுவார்கள்..! இவ்வளவுக்கும் அதன் தலைவர் சிறுபான்மை சமூகத்தவர் ஆயினும் இதல்லாம் அவருக்கு கீழே உள்ளவர்கள் செய்வார்கள்..! தலைவர் அங்கே மவுன சாட்சியாக நின்றாக வேண்டும்..! இல்லையேல்...'குத்துவிளக்கு ஏற்ற மாட்டேன்' என்ற அமைச்சர் ஈ.அஹமது என்ன பாடுபடுத்தப்பட்டார்..!?

  அரசு சார்பில்... பெரும்பான்மை சமூக சார்பாக மாசத்துக்கு மூன்று பண்டிகை விடுமுறை, பல அரசு அலுவலக வளாகத்துக்கு உள்ளேயே மினி கோயில்கள் கட்டி திறந்து தினம் பூஜை நடத்த அனுமதி...

  அரசு பேருந்தில் கூட ட்ரைவர்/கண்டக்டர் சிறுபான்மை சமூகத்தவர் ஆயினும் சாமி படங்கள் ஊதுவத்தி பூ மாலை...

  வகுப்பு ஒன்று முதல் பலகலைக்கழகம் வரை தமிழ் பாடநூலில் பெரும்பாலும்... பெரும்பான்மை கடவுள்கள் பற்றிய செய்யுள்கள், உரைநடைகள் என்று தமிழ் இலக்கனம்-இலக்கியம் என்ற பெயரில் மதத்திணிப்பு...

  மலைக்கு மாலை போட்டால் செருப்பு இல்லாமல் ஷேவ் செய்யாமல் வர தன் ஊழியர்களை அனுமதிக்கும் நிர்வாகம், அங்கேயே ஒரு சிறுபான்மை சமூகத்தவர் தாடி வைக்க அனுமதிப்பது இல்லை...

  நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழக அரசு நிறுவன சின்னம் எல்லாவற்றிலும் கூட கோவில்தான் உள்ளது...

  இப்படியாக... இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன சொல்ல... பின்னூட்டம் பதிவை விட பெரிதாகிவிடுமே சகோ..! அதனால் நிருத்திக்கொள்கின்றேன் என் ஆற்றாமையை..!

  ReplyDelete
 4. மிகவும் அருமையான நகைச்சுவையான பதிவு ! தங்களுடைய புனைவுக் கதைகளை விட இது போன்ற நகைச்சுவைப் பதிவுகள் அருமை !

  தொடரவும்.

  ReplyDelete
  Replies
  1. ayya america-vula irukkirara? inthiyavil ulla paper parkarathu illaiyaa? neenga yaarunnuthaan theriyume,yallarukkum!

   Delete
  2. அமெரிக்காவிலும், பிரான்சிலும் இதை விட பன்மடங்கு நிலைமை மோசமா இருக்குன்னு ஐயாவுக்கு தெரியாதா....பிபிசி சிஎன்என் பாக்குறதில்லையாங்க...?

   தலை கீழா நின்னுகிட்டு, உலகம் உல்ட்டாவா இருக்குன்னு சொல்றவங்க நீங்க.....ஆமா என்னை பற்றி எல்லாருக்கும் தெரியுமா....சந்தோஷம்.....இந்த கிலுகிலுப்பை எல்லாம் ரொம்ப பழசு...புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க ஐயா...: )

   Delete
 5. சரியா சொல்லிருகீங்க..

  ReplyDelete
 6. சிறந்த பகிர்வு சகோ!

  ReplyDelete
 7. சிறந்த நகைச்சுவை பதிவு!!!!!!!!
  வாழ்த்துக்கள்.
  இந்துத்வா சிந்தனை கருத்துகள் என்றால் பத்திரிக்கைகளில் வரும் சோதிடம்,இந்து கோயில்,பக்தி குறித்து வரும் செய்திகள் என்னும் விளக்கம் மிகவும் புதியது.சூப்பரப்பு!

  குந்தவை மர்ம கதையில் வந்த கல்வெட்டுகள் மாதிரி ஒன்றில் பொறிக்க வேண்டிய விடயம்.


  சரி அடுத்த பதிவிலாவது இந்துத்வா & அது சார் சிந்தனை என்றால் என்ன என கூறுவீர்களா?

  ந‌ன்றி

  ReplyDelete
 8. எந்த நாட்டில் எந்த மக்கள் அதிகமாக இருக்கின்றார்களோ. அந்த நாட்டில் அந்த மக்களின் நம்பிக்கை சார்ந்தே பத்திரிக்கையும் இருக்கும் .. இதனை இந்து அடிப்படைவாதம் என்று சொல்லிவிட முடியாது. இந்து அடிப்படைவாதம் பத்திரிக்கைகளில் இருக்கவே செய்கின்றன. ஆனால் மத நம்பிக்கைகளை அடிப்படைவாதம் என்று சொல்லிவிட முடியாது சகோ...

  இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. இந்தியப் பத்திரிக்கை உலகங்கள் அறிவியல் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட முற்பட வேண்டும் ...

  ReplyDelete
 9. Atleast be happy you are in india.

  if you are in Saudi, whether or not you are a muslim you will be compelled to close your shop/ business during Salah time
  if not you should be ready to go to jail

  Such a barbaric nation.

  ReplyDelete
 10. Raghs99....

  ஆமாம் சகோ... அந்த பார்பாரிக் நேஷன்ல தான் குற்றங்களின் எண்ணிக்கை இந்த அஹிம்சை தேசத்தை விட கம்மியா இருக்கு... ஊழல் இந்த புண்ணிய தேசத்தவிட கம்மியா இருக்கு...

  பேச வந்துட்டாரு, பார்பாரிக் நேசனாம்....இப்படி பேசலை உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமா இருக்காதா????

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?