Posts

Showing posts from July, 2012

இவர், இந்திய அடையாளம்! இப்போது காணவில்லை!!

இந்துதுவசக்திகள் பிரதானமாக முன்வைக்கும் முழக்கமாக இருப்பது, "இந்துக்களே ஒன்று படுங்கள்" எனபதுதான்! இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும்  இவர்களின் உள்நோக்கம், "பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்"  எனபதுதான்.! தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று(? )  என காட்டி,முஸ்லிம்களை  அந்நியர்கள்,இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அடையாளபடுத்தி,அப்புறம் அவர்களை ஒடுக்குவதுதான்! 
     இந்துத்துவ பாசிச சக்திகள், தீய நோக்கத்துடன் முன்வைக்கப்படும்      இந்துக்களின் ஒற்றுமை என்ற  கோஷத்தை பிறகு பார்க்கலாம்.!
       அதற்கு முன், "இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட்டவரும் அந்த ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தவர்" என்று நேருவால் ( Jawaharlal Nehru slected works,Page 61 XIII) குறிப்பிடப்பட்ட, அபுல் கலாம் ஆஸாத்  பற்றி பார்க்கலாம்! 
     இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த,பொதுவாழ்வில் தூய்மையும்,அரசியல் வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த, மாமனிதர் அவர்! 
     பிரிவினையின் பெயரால் பிளவுபட்ட தனது தாய் நாட்டின் நிலையை எண்ணி மனவேதனையால் துவண்டுபோ…

இவரைப்போல ஆங்கிலேயர்களை எதிர்த்த மன்னர் இல்லை!

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பேரரசில் உள்ள அரசுகள் சுதந்திரம் அடைந்தன. சுதந்திரம் அடைந்த அரசுகளில் வங்காளமும் ஒன்றாக இருந்தது.வங்காளத்தை ஆண்டுவந்த ஆளுநர் அலிவர்திகான் என்பவர் 1741-லில் சுதந்திரப்பிரகடனம் செய்திருந்தார்.1756-யில் அவர் இறந்தார்.அவரது பேரன் சிராஜ் உத் தௌலா என்பவர் வங்காளத்தின் மன்னரானார்.

    கல்கத்தாவில் இருந்த ஆங்கிலேயர்கள் நவாப் சிராஜ் உத் தௌலா  உத்திரவுக்கு கீழ்படிய மறுத்ததுடன்,  புதிய கோட்டைகள் அமைத்து தங்களை பலப்படுத்தியும் வந்தனர்.வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களிடம் நிலவிவந்த ஒற்றுமையின்மை,ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை உணர்ந்து,அவைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தார்கள்.இதனால் பல்வேறு மன்னர்களின் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடுகளை செய்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தார்கள்

(ஆட்சியதிகாரத்தை விரும்பும் ஆதிக்க சக்திகள் வழக்கமாக கடைபிடிக்கும் தந்திரங்களில் ஒன்று, பிறநாடுகளில் உள்நாட்டு பிரச்சனைகளை,குழப்பத்தை  ஏற்படுத்தி,மக்களை பிரித்துவைத்து, அந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படித்திக் கொள்வதாகும்! இந்துத்துவ ஆதிக்க வாதிகளான பிராம…

பகதுர்ஷா'வும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் !

முஸ்லிங்கள் என்ற மாற்று மத  வெறுப்பின் அடிப்படையில் இந்துத்துவ பாசிசவாதிகள்,முஸ்லிம்களின் தியாகத்தையும்,நாற்றுப்பற்றையும்  ஏற்றுகொள்ள மறுத்து வருகிறார்கள். மேலும் அவர்களின் நாட்டுப்பற்றை,தியாகத்தை பிறர் அறியாமல் செய்யும்  முயற்சிகளில்,          ஈடுபட்டும் வருகிறார்கள்.!

   அதனாலேயே, முஸ்லிம்களின் வரலாற்றையும் தவறாக எழுதி வருகிறார்கள்.! முஸ்லிம்களின் நாற்றுப்பற்றும், தியாகமும் மறைக்கப்பட்டு,வரலாற்றில்இந்துத்துவ பாசிச சக்தியால்  திரிக்கப்பட்டு வருகிறது!

காந்தியின் படுகொலையில் குற்றவாளியாக கருதப்பட்ட "வீரசாவர்க்கர்" ஆங்கிலேயர்களிடம் உயிர்பிச்சை கேட்டு, கெஞ்சி கடிதங்கள் எழுதி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக," தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை" என்ற உத்திரவாதத்தின் பேரில் அந்தமான் சிறையில் இருந்து  விடுதலையானார்! 


   ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு உயிரைக் காப்பற்றிகொண்ட வீரசாவர்க்கர் , இன்று இந்துத்துவ சக்திகளினால் மிகசிறந்த தியாகியாக, சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டு வருகிறார்!  அவரது சிலை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ளது!  


       வெள்ளையரை எதிர்த்து, இந்திய …

பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்!

சத்திரபதி சிவாஜியை இந்துத்துவ வாதிகள் ஆதர்ச நாயகனாக ஏற்று போற்றிவருவதையும் (தெரியாதவர்கள் எனது 2.2.2012 தேதியிட்ட பதிவை பார்க்கவும்) முகலாய அரசர் அவுரங்கஜேபை இஸ்லாமிய  மதவெறியராக இன்றும் தொடர்ந்து காட்டி வருவதையும் நடுநிலையாளர்களும் அறிந்துள்ள செய்திதான்!

     முகலாய அரசர்  அவுரங்க ஜேப்,இந்துத்துவ வாதிகள்  சொல்வதுபோல இஸ்லாமிய மதவெறியரா? என்றால் அது உண்மையில்லை. தனது தனித்த வருமானத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு,அரசின் பொது வருமானத்தை நிர்வாக செலவுக்கும்,பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் செலவு செய்து நல்லாட்சி செய்து வந்தவர். அதுமட்டும் இன்றி,தனது பேரரசுக்குள் இருந்துவந்த பல்வேறு இந்து சமயத்தைச் சேர்ந்த  சிற்றரசர்களுடனும்  நட்புடன் பழகி வந்தவர். சமய வேறுபாடுகளை காட்டாதவர். இந்து சமய மக்களின் சமய நம்பிக்கையில் தலையிடாமல்,அவர்களது வழிபாட்டினை மதித்து, ஏற்றுக் கொண்டவர்!.

    இப்படி  உண்மையை  சொன்னால், எங்கே ஆதாரம் என்று கேட்டு எகத்தாளம் செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு நான் எத்தனைதான் ஆதாரம் காட்டினாலும் அதனை  ஆதாரமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள்.   எனது ஒவ்வொரு பதிவுக்கு…

பாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்!

ஏன் பாசிச சாதிகள் முஸ்லிம்களை அழிக்கவும்,  வெகுஜன மக்களிடம் அவர்களை  எதிரியாக காட்டவும்,தொடர்ந்து முயன்று வருகிறார்கள்?      " இந்துத்துவம்" என்ற பாசிசம் இஸ்லாம் மதத்துக்கு எதிராக வெகுஜன மக்களை திசை திருப்பி வருவதற்கு காரணம் என்ன?முஸ்லிம்களின் மீது துவேஷத்தை கொண்டு செயல்பட்டு வருவது எதற்காக?   எதற்காக என்றால்,பாசிச சக்திகளுக்கு  உலகம் எங்கும் ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது என்பதும் அந்த பொது எதிரியாக," இஸ்லாம் " சித்தரிக்கப்பட்டு வருவதும்தெரியவரும்.!
         உலகம் எங்கும் உள்ள பாசிச சக்திகளுக்கு,   தங்களது சுரண்டல் கொள்கையினை மக்கள் உணர்ந்து கொண்டால்,தங்களுக்கு எதிராக வெகுஜன மக்கள், விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தங்களின் கதி என்னவாகும் என்ற அச்ச உணவு இருந்துவருகிறது.

       பாசிச சக்திகளின் அத்தகைய அச்ச உணர்வாலும்,வெகுஜன மக்களின் ஒருங்கிணைப்பை தடுக்கவும் வேண்டிய அவசியமும் அதற்கு உள்ளது! இந்த தேவையின் காரணமாகவே பாசிச சக்திகள் பல்வேறு உத்திகளை, செயல்களை செய்து வருகின்றது !

           மதத்தின் பெயரால் சர்ச்சைகளை உருவாக்கி, மத ரீதியாக பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை ஒன்ற…

ஊடகங்களின் சிறுபான்மையினர் வெறுப்பு!

 சிறுபான்மையினரில்  குறிப்பாக முஸ்லிம்களை இந்திய ஊடகங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தீவிரவாதிகளாக,குற்றச் செயல்களை  செய்பவர்களாக,பழிபாவத்துக்கு அஞ்சாதவர்களாக, காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன.


         திரைப்படங்களில்  வில்லன்கள்,நாட்டுக்கு எதிரான செயல்களை செய்பவர்கள், குண்டுவைப்பவர்கள், மக்களுக்கு எதிரான சதி செயல் செய்பவர்கள்  முஸ்லிம்கள் எனக் கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன .இந்துத்துவ தணிக்கையாளர்கள்  இத்தகைய செயல்கள் சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனபது குறித்து சிந்தனையின்றி அனுமதித்து வருவது இன்றும் தொடர்கிறது! 


     பத்திரிகை ஊடகங்கள்  என்ன செய்கின்றன? என்றுபார்த்தால் அவைகளும் முஸ்லிம்களிடம் தொடர்ந்து வெறுப்புணர்வை விதைக்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன!


     சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் சிறு குற்றச் செயல் -களையும் பூதாகரமாக்கி வருகின்றன. முஸ்லிம் ஒருவர் , ஒரு அடிதடி விவகாரத்திலோ,கொலை,திருட்டு போன்ற செயல்களிலோ ஈடுபட்டுவிட்டால்  அவரது பெயரை போட்டும், குடும்பத்தையும், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பையும் வ…

இந்திய பத்திரிக்கைகளின் சிறுபான்மையினர் வெறுப்பு!

  இந்தியாவில் இயங்கிவரும் பத்திரிக்கைகள்  இந்துத்துவா சிந்தனையை திட்டமிட்டே விதைத்து வருகின்றன.மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன!


     "இந்துத்துவா"வை அதாவது பாசிச சக்திக்கு உதவும் வகையில் வெகுஜனமக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் காரணிகளாக உள்ள  ஜோதிடம் குறித்து வெளியிடாத பத்திரிக்கைகளை பார்க்க முடியாது! இந்த ஜோதிடப் பித்தலாட்டத்திலும் ரகரகமாக  தினசரி,வார,மாத ராசிபலன்கள் என்றும்  அப்புறம் குருபெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி,சனிபெயர்ச்சி பலன்கள் என்றும்,இந்த இந்த ராசிக்கு தோஷம்,அதற்கு பரிகாரம் இதுவென்றும், இந்த கோயிலுக்கு போனால் புள்ளை பிறக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கல்யாணம் நடக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கண்டிப்பாக கர்ப்பம் அடைவாய் என்றும் தோஷம் போகும் என்றும் சொல்லாத பத்திரிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் ! ஜோதிடத்திலும்  பெயரை மாற்றிகொண்டால் சொர்க்கவாழ்வு கிடைக்கும், எண ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,என்று      " பீலா " விடாத பத்திரிக்கைகளை காண்பது அரிதாகும்! 


     இப்படி தொடர்ந்து உண்மைகள் இல்லாத  கற்பனைகளை ஊடக உலக மேதாவிகள்  வெளியிட்டு, உழைக்க…