இந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்!


       இந்திய பத்திரிக்கைகள்  பெரும்பாலும் ஊழலுக்கும்,முறை கேட்டுக்கும்  ஆதரவளித்தும்,ஜனநாயகத்திற்கு எதிராகவும்,உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்தியாவில்  செயல்பட்டு வருவதாக தெரிகிறது!


          ஜனநாயகத்தின் நான்கு முக்கிய உறுப்புகளில் ஒன்றான, பத்திரிக்கைகள் ஜனநாயக உரிமைப்போரில் பங்கேற்கும் தார்மீக  கடமையைக் கைவிட்டு,வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகின்றன!உரிமை கேட்டு போராடும் மக்களுக்குஊடகங்கள்  ஆதரவாக செயல்படுவது இல்லை.!


     தனக்கும் வெகுஜன போராட்டங்களுக்கும் ,எந்தவித சம்பந்தமும்  இல்லாதது போல நடந்து கொள்கின்றன. சில பத்திரிக்கைகள் இத்தகைய உரிமைப் போராட்டங்களின் நோக்கத்தை திசை திருப்பும் பணியிலும் ஈடுபட்டு, போராட்டத்துக்கு எதிரான நிலைபாட்டிலும் நடந்துகொண்டு வருகின்றன!

        காரணம், ஊடகங்களின் உரிமையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும்,ஜனநாயக உரிமைகளை மதித்து வருபவர்களும் இல்லை.அவர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும்,தரகு முதலாளிகளாகவும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், பாசிசவாதிகளாகவும்  இருந்துவருவதுதான் !

        பத்திரிக்கைகளின் இதுபோன்ற மோசமான செயல்பாட்டினால், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்கள்,ஜனநாயகப் போராட்டங்கள்  தோல்விஅடையும் நிலை ஏற்படுகிறது! ஜனநாயக எதிர் சக்திகள்,சுரண்டும் பாசிச சக்திகள்  வெற்றி அடையும் சூழல் உருவாக்கப் படுகிறது! உரிமைகோரும் மக்களின்  வாழ்க்கையும் உரிமையும் பாசிச,எதேச்சாதிகார சக்திகளால் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது!


          வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகமும் ,மக்களின் உரிமையும்,மக்கள் நலனும், காக்க வேண்டிய,  ஜனநாயகத்தின் அடிப்படை தளத்தில் இயங்க வேண்டிய பத்திரிகைகளின் துணையுடனே இந்தியாவில் ஜனநாயகமும்,மக்களின் நலனும் பறிக்க படுகிறது! பறிபோக காரணமாகஇந்தியாவில்  பத்திரிக்கைகள் இயங்கிவருகின்றன!


   இதுமட்டுமின்றி, பல சமயங்களில்  பாசிச சக்திகளுடன் "கள்ள கூட்டுவைத்துக் கொண்டு,"  பாசிச சக்திகளின் செயல்களை  நியாய படுத்தியும், அவர்களது  ஜனநாயக விரோத,மக்கள் விரோத செயல்களுக்கு,  ஆதரவாகவும்  பரப்புரை செய்யவும் ஊடகங்கள்  தவறுவதில்லை!  இதுமட்டுமின்றி, உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும், ஒற்றுமையைக் குலைக்கவும்  "ஐந்தாம்படை வேலைகளை "செய்யவும் அவைகள் தவறுவதில்லை!


     வெகுஜன மக்களின் முக்கிய  பிரச்சனைகளில் இருந்து  அவர்களை திசைதிருப்பும் நோக்கத்தில், முக்கியமற்ற, பரபரப்பு செய்திகளை வெளியிடுவது, இதன் மூலம் முக்கியதத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தீர்வு  ஏற்படாதவாறு,   நீர்த்து போகச் செய்வது,  போன்ற பாசிச செயல்களை செய்வதும் இந்திய ஊடகங்களின்  பணியாக இருந்து வருகிறது!


    மேலும்  அவைகள், உண்மையில்லை என்பதை தெரிந்தே, பொய்யான, கற்பனையான செய்திகளை  மக்களிடம் கொண்டுசென்று அவர்களை மூடர்களாக்கும்,மூளையை  சலவை செய்யும் செய்திகளை தொடர்ந்து செய்துவருகின்றன! தேவையற்ற வதந்திகளை வெளியிட்டு, சமூகத்தில்  பீதியையையும்,பதற்றத்தையும் ஏற்படுத்துவது, வேற்றுமை உணர்வை தோற்றுவிப்பது போன்ற  பணிகளை  திட்டமிட்டே  செய்துவருகின்றன!

    இந்திய ஊடகங்கள்  செய்துவரும் இத்தகைய செயல்களில் சிறுபான்மையினர்  மீது கொண்டுள்ள வெறுப்புணர்வும், இந்துத்துவா நேசமும்  வெளிபடுவதைக் பல்வேறு உதாரணங்கள் மூலம் அறியலாம்! 

அவைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்! 


Comments

 1. 110 % சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 2. ஊடகத் துறையில் ஏனையோரும் நுழைதல் அவசியம் என நினைக்கின்றேன் ... !!!

  ReplyDelete
 3. பத்திரிக்கைதுறையும் அரசுதுறையும் தற்போது பார்பனர்கள் கையில் உள்ளது. இவை இரண்டும் தன் முகம் துளைத்து வெகுகாலம் ஆகிவிட்டது.

  நன்றி
  செய்யது
  துபாய்

  ReplyDelete
 4. ஊடகம் குறித்த கருத்து சரியானது.ஆனால், பத்தரிகைகள் நடத்துவது நடுநிலை மற்றும் இதர பிற்படுத்தப்பத்வர்களே இந்திய மொழிகள் அதிகளவில் நடத்துகின்றனர்.ஆங்கில ஊடகத்தில் பிராமணர்கள் ஆங்கிலம் செலுத்துகிறார்கள்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?