பிராமணர்களின் சுரண்டலில் பிறசாதி இந்துக்கள்!

       இந்துவாக பிறந்த,பிராமணர் அல்லாதவர்கள் ஒவ்வொருவரும்  தாங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,பிராமணர்களின்   தொடர்ந்த வருமானத்துக்கும்சுரண்டலுக்கும், உதவிடும் வகையில்   இந்துமதத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையானது   பிராமணர்களால்  நுணுக்கமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது!

     இந்த கட்டமைப்பின் படியேதான் இந்துமதத்தில் பிறந்த பிராமணர் அல்லாத  இந்துக்கள்,   இன்றளவும்  வாழ்ந்து வர வேண்டிய நிலை இருந்து .வருகிறது! 

       இந்துவாக பிறக்கும் ஒருவனின்  இன்பதுன்பங்கள் எதுவானாலும் பிராமணர்களுக்கு அவன்  ஒரு விலையை, தட்சணையாக, கொடுத்தே தீர வேண்டும்! 

       ஒரு குழந்தை இந்துவாக பிறக்கிறது என்றால்,   அந்த  குழந்தை பிறந்த நேரத்தைக் குறித்து, அந்த குழந்தை பிறந்தது நல்லதா,கேட்டதா  என்று அறிய ஜாதகம் எழுதுவதில் தொடக்கி, சோதிடம் பார்ப்பது, குழந்தையை தொட்டிலில் போடுவது, பெயர் வைப்பது, அதனை பள்ளியில் சேர்ப்பது, இடையிடையே  தோஷம்  கழிப்பது,  பரிகாரம் செய்வது  போன்ற எல்லா சடங்குகளிலும் பிராமணர்களே  முன்னிறுத்தப்பட்டு  வருவதையும்  இந்த முன்னிறுத்தும்  நிகழ்வுகள்  ஒவ்வொன்றுக்கும்  கணிசமான  வருவாயை பிராமணர்கள் பெறுவதையும்  பார்க்கலாம்!  


      பிறந்தது பெண்குழந்தையாக இருந்து விட்டால், அது பருவத்துக்கு வந்தது குறித்து ருது ஜாதகம் என்று வேறு  எழுத்வார்கள்! அவர்களுக்கு  திருமணம்  செய்ய வேண்டும் என்றால்... பெண் வீட்டார்  ஒரு ஜோதிடரிடம்  சென்று நல்லநேரம், நாள் பார்த்து, மாப்பிள்ளை பார்க்க போவது, பிடித்து இருந்தால்  மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும்  தனித்தனியே  தங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம்  சென்று பொருத்தம் சரியாக உள்ளதா? என்று பார்ப்பது, அப்புறம்  பொதுவான  ஜோதிடரிடம் காட்டி சரி பார்ப்பது, முகூர்த்த தேதி குறிப்பது,  நல்லநாள் பார்த்து, பத்திரிகை அடிப்பது, திருமணம் செய்வது, அவ்வளவு ஏன் ? சாந்தி முகூர்த்ததுக்கு  கூட  பிராமணப் ப்ரோகிதர்களின் அனுமதியும்  வழிகாட்டலும் தேவை என்னும் படியாக  எத்தனையோ சடங்குகள், சம்பிரதாயங்கள்  இந்துமதத்தில் உள்ளதையும், அவைகளில் பிராமணர்கள்  வருமானம் அடைந்து வருவதையும்  பார்க்கலாம்! 


        குழந்தை பிறந்தால்  அதற்கும்  ஒரு சடங்கு, இறந்துவிட்டால் அதற்கு  ஒரு சடங்கு, இறந்தவருக்கு  ஈமச் சடங்கு, அப்புறம்,  வருஷாவருஷம்  திதி செய்வது..., 
      இறந்தவர்கள்  வீடு தீட்டு பட்டுவிட்டது  ஆகவே, அந்த வீட்டை பிராமணர்கள்   மந்திரம் ஓதி,     தீட்டை நீக்கி, பிராமணர்கள் புனிதப் படுத்துவார்கள்!   சும்மாவா புனிதப் பணி நடக்கும் ?   அத்தனைக்கும் பிராமணர்களுக்கு  வெகுமதிகள், தட்சணைகள், கிடைக்கும்!  


      "பொண்ணு செத்தால் என்ன? மாப்பிள்ளை செத்தால் என்ன? மாலைகாரனுக்கு பணம்  கொடுத்தே ஆகவேண்டும்! "  என்று கிராமங்களில்  சிலர் சொல்வது,,   யாருக்கு  பொருந்துமோ,இல்லையோ, பிராமணர்களுக்கு பொருந்துவதை  நீங்களே  உணரலாம்!

       "வேகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்" எனபது போல, ஒவ்வொரு இந்துவின்  துன்பத்திலும் கூட...   ஆதாயம் பெரும் வக்கிர,கொடூர மனமும்,செயலும் பிராமணர்களின்  இனநல மேன்மைக்கான  செயல்களாகவும்  அவர்களது, சடங்குகளாகவும் இருப்பதை காணலாம்!

       மற்றொரு புறம், உழைக்கும் மக்களின்  உடமைகளும்,செல்வமும்  பிராமணர்களின்  இத்தகைய சடங்குகள் மூலம்  பறிக்கப்படுகிறது என்பதையும்  அறியலாம்!

        இப்படி...,  தனிமனித வாழ்வில் மட்டுமின்றி, எல்லோரையும் கூட்டி  கொண்டாட்டம், திருவிழா என்ற பெயரில் பிராமணர்கள் அடையும் (அடிக்கும்)  கூட்டு கொள்ளையும்  அவர்களுக்கு கிடைக்கும்  பலா பலன்களும்  தனிரகமாகும்!

           "பிராமணர்கள்  மனித நேயமின்றி, கொஞ்சமும் வெட்கமின்றி, தங்களைவிட கீழாக...  தாங்கள்  நினைக்கும் சாதிகளிடம்,  தொடர்ந்து  ஏய்த்தும், உழைப்பை உறுஞ்சியும் வருவது..  குறித்து , அது தவறு எனபது குறித்து,"  யாரும் எடுத்துரைப்பது இல்லை! 

     அப்படியே யாரேனும் எடுத்துரைத்தால்,  அதனை பிராமணர்களும் அவர்களது  இன நலத்தை மட்டுமே விரும்பும் ஆதவாளர்களும், மட சாமியார்களும், ஞான குருக்களும், லோக குருக்களும் ஆகிய  பலரும் ஏற்றுக்கொள்வதும் இல்லை!  அனால்,அப்படி எடுத்துரைக்கும் மக்களை பற்றி     என்ன கூறுவார்கள்? எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள்  தெரியுமா?


       பிராமணர்களின் இந்த கட்டமைப்பை,சுரண்டலை,   எதிர்க்கும்  மக்களை,அவர்கள்  இந்து மதத்தில் அவர்கள்இருந்தாலும், பிறப்பால் இந்து ஆகவே இருந்தாலும் கூட,  இந்துமத எதிரிகளாகவும், நாத்திகர்களாகவும், தெய்வ நிந்தனை செய்பவர்களாகவும்  முத்திரை  குத்தி, அவர்களைத்  தூற்றுவார்கள் ! 

     இந்துமத வெறியால் அறியாமையில் மூழ்கியுள்ள பிற சாதியினரிடம் அவர்களைப் பற்றி   பொல்லாங்கு கூறி, அவர்கள் மூலமும்   அடக்கி,ஒடுக்க முற்படுவார்கள்! 


   ஏனெனில்,  "இந்துமதம் என்ற பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே உள்ள பாசிசமானது, தனது கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த நிகழ்வையும்,எந்த மனிதனையும்  ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" என்பதுதான்! 
    அவ்வாறு இந்துமதம்  ஏற்றுகொண்டால்,  "பிராமணர்களின் தொடர்ந்த வருமானம்,அவர்களது முக்கியத்துவமும், அதிகாரமும்  பறிபோய்விடும் என்ற பிராமணர்களின்  அச்ச உணர்வும்" காரணமாகும்! 

        பிராமணர்களின் சுரண்டலுக்கு  ஊடக அறிவு ஜீவிகள், நியாயத்தையும்  நீதியையும் நிலைநாட்ட, ஜனநாயகத்தைக்  காப்பாற்ற,சமூக கொடுமைகளை களைய, பாடுபடுவதாக கூறும் பத்திரிக்கைகள்,இதர ஊடகங்கள்  எப்படியெல்லாம்  இன உணர்வுக்கு  ஆளாகி, உதவி வருகின்றன,மக்களைச் சுரண்டவும்,மக்களின்  மூளையை  மழுங்க அடிக்கவும்  வேப்பிலை அடிக்கின்றன  என்பதை அடுத்து பார்ப்போம்! 

Comments

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?