பிராமணர்களின் சடங்குகளும் நோக்கமும்!

         எந்த மதத்தையும் விட அதிகமான,அவசியமற்ற ஏராளமான சடங்குகள் இந்து மதத்தில் இடம்பெற்று உள்ளதை யாவரும் அறியலாம்!தடுக்கி விழுந்தால் கூட அது கெட்ட சகுனம் என்றும்,பூனை குறுக்கே போனால்,ஒற்றை பிராமணன் எதிரில் வந்தால்,கணவனை இழந்தவள் எதிரில் வந்தால் அவைகள் கெட்ட சகுனங்கள் என்றும் பள்ளி விழுந்தால்,ஆந்தை அலறினால்,காகம் கரைந்தால் கூட சகுனம் பார்க்கும் நிலையில் இந்து மதத்தில் உள்ளவர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம்!

        இந்துமத்தில் ஏராளமான கடவுள்கள் உருவாக்கப்பட்டு இருப்பதைப் போலவே,அவற்றுகு உற்சவங்கள், திருக்கல்யாணங்கள், தேரோட்டங்கள், பண்டிகைகைகள் என்று ஏராளமான விழாக்களும்   விழாக்களின்   வழியே ஏராளமான சடங்குகளும் நடத்தப்பட்டுவருவதை அறிவோம்!

     இத்தகைய  சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும்   யாருக்கு  பயனுண்டோ, இல்லையோ,  யார் பங்கு பெறுகிறார்களோ இல்லையோ, பிராமணர்கள் பங்கேற்பும்,அவர்களுக்கு பயனும்,லாபமும்,நிச்சயம் இருப்பதை பார்க்கலாம்!

      அரசன் முதல் ஆண்டி வரையில்,சாதாரண ஏழை முதல், செல்வந்தர்கள், சமூகத்தில் எத்தனை செல்வாக்கு பெற்றவர்கள் ஆக இருந்தாலும்,  அத்தனை பேர்களும்,  பிராமணர்களின் முக்கியத்துவத்தை  உணர்ந்து கொள்ளவும்,அவர்களது உயர்வு நிலையை... "கேள்வியே இன்றி"  ஏற்றுக் கொள்ளவும்,பிராமணர்களால் ஏராளமான பண்டிகைகளும்,திருவிழா போன்ற கொண்டாட்டங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. அப்படி உருவாக்கப்பட்டு உள்ள இந்துமத பண்டிகைகள்,கொண்டாட்டங்கள்  இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது!

      இதுபோன்ற இந்துமதக் கொண்டாட்டங்களும்,பண்டிகைகளும், பிராமணர்களுக்கு தொடர்ந்த வருவாயை கொடுக்கும் காரணியாக, ஒருபுறம்  இருந்து வருவதையும், மற்றொரு விதத்தில் அவைகள், உழைக்கும் மக்களிடம்  இருந்துவரும் மிகச்  சிறிய அளவிலான செல்வத்தையும்,அவர்களின் முக்கியத் தேவைக்கும்  உள்ள சேமிப்பையும்   கூட இழக்கச் செய்யும் பிராமணர்களின்  திட்டமிட்ட    தந்திரமாகவும்  இந்துமத பண்டிகைகளின் பின்னணியில் இருந்துவருகிறது!

   இந்துமதத்தின் பூஜை,வழிபாடுகளை நாம் கவனித்தோமானால், அவைகளில் இறைவனுக்கு படைப்பது,அபிஷேகம் செய்வது என்ற பெயரில் உணவுப் பொருட்களும்,பால்,நெய்,வெண்ணை, போன்ற சத்துமிக்க, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாகவும் தேவைப்படும் பல பொருட்கள் வீணடிக்கப் படுவதையும் பார்க்கமுடியும்!

ஒரு தீபாவளி,ஒரு ஆயுதபூஜையையோ உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் விரையமாகும் பொருட்கள் என்ன,அவைகள் எப்படி விரயமாகிறது, விரையமாகும் பொருட்களின் மதிப்பு எவ்வளவு, அதனால் கிடைக்கும் பலன் என்ன? எனபது எல்லோருக்கும் புரியும்!

ஒருநாளைக்கு ஒருவேளைகூட உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வாடும் ஒருநாட்டில், அடிப்படைத் தேவைகள் நிறை வேற்றப்படாத இந்தியாபோன்ற நாட்டில் இத்தகைய சடங்குகளும், திருவிழாக்களும் தேவைதானா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

     இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற சடங்குகளைப் பற்றியோ, அவைகளினால் வீணாகும் கோடிக்கணக்கான் பொருட்கள், மற்றும் அதன் மதிப்பு பற்றியோ, அவைகளை உணவின்றி வாடும் ஏழை, உழைக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றோ, இந்துமதத்தில் பற்றுள்ள, இந்துமத பெரியவர்களும், ஞானிகளும், மடாதிபதிகளும் கூட... வாயே திறப்பதில்லை! மக்களின் நம்பிக்கை, ஐதீகம்,மரபு,வழிவழி சடங்கு என்று அவர்கள் கூறுவதையும்,கண்டும் காணாமல் இருப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்!

      மக்களின் சேமத்திற்காக,நன்மைக்காக, வளத்துக்காக யாகங்களும், வேள்விகளும்,நடத்தும் போதும் அதுபோன்ற செயல்களின் போதும்கூட, ஏராளமான் பொருட்களை விரையம் செய்யும் சடங்குகள்  நடத்தப்படுகிறது!  அப்படி நடத்துபவர்கள் கூட, முன்மாதிரியாக இருந்து, ஏழைகள் மிகுந்த நாட்டில், உணவின்றி மக்கள் தவிக்கும் சூழலில்  "பாலைக் கொட்டியும், உணவுப் பொருட்கள்,பழம் ,ஆடைகள், நெய், தேங்காய், போன்றவற்றை வீணாக்கி வருவதை பார்க்கலாம்!

     இவைகளுக்கு காரணம் என்ன?  பற்றாக்குறை உள்ள நாட்டில், மேலும் செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்துவது,  உழைக்கும் மக்களிடம் பொருள் சேராமல் அவனை  திருவிழா,சடங்கு என்ற மகிழ்ச்சியான போதையில் ஆழ்த்தி, தொடர்ந்து அவனை அடித்தட்டு மக்களாகவே நீடித்து வரச் செய்வது, அவர்கள் மூலம் பிராமணர்கள் தங்களது மேலாண்மையை, உயர்வு நிலையை தொடர்ந்து வலியுறுத்தி,நிலைநிறுத்திக் கொள்ளவதுடன், இதுபோன்ற சடங்குகள்,விழாக்கள் மூலம், தங்களின் வருவாயை அதிகரித்தும்,தொடர்ந்து பெற்றுவரவும் செய்வது போன்ற  பிராமணர்களின் பொருளாதார நோக்கமே இத்தகைய இந்துமத சடங்குகள்,விழாக்களுக்கு காரணம் ஆகும்!

      இவைகளை நான்  ஏதோ, பிராமணர்கள் மீது  வெறுப்பு கொண்டு எழுதுவதாக கூறி,  இந்து மத சடங்குகளால் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணராமல், உணர்ந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நியாயமான மனம் இல்லாமல், வழக்கம் போல என்னை தவறாக சித்தரிக்கவும், முனைந்து விபரீத அர்த்தங்களைக் கற்பிதம் செய்துகொள்பவர்களுக்காக ...  பிராமணர்களின் இன மேன்மைக்கு, இலக்கணம் வகுத்துக் கொடுத்த சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் உள்ள ஆதாரங்களையே பதிலாகவும் தரவேண்டியுள்ளது!

   " எதிரிகளை ஏமாற்ற அரசன் தானே ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.பரிகாரங்கள் செய்யப்போவதாக அறிவிக்கலாம்.இவற்றிலே எதிரி கவனம் செலுத்தும்போது திடீரென்று அவன் நாட்டின் மீது படையெடுத்து விடலாம்" (அர்த்த சாஸ்திரம்-13:2)

  "அரசாங்கத்தின் கருவூலத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு கெட்ட சகுனத்தை சுட்டிக் காட்டலாம்.பிறகு   பெருன்கேடுதலை  தவிர்க்க  கடவுளை வழிபட என்று சொல்லிப் பணம் வசூலிக்கலாம்" (அர்த்த சாஸ்திரம்-5:2)

   மதச் சம்பிராயங்களில் மூட நம்பிக்கைகள் உள்ளன.அரசன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"(அர்த்த சாஸ்திரம்-9:4)

அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டபோது, அரசர்களை முன்னிறுத்தி பிராமணர்கள் செய்துவந்த இனநலம்,ஆதிக்கம், சுரண்டல் முறையிலான சுகவாழ்வு இன்றைய காலத்திலும் திருவிழா,சடங்குகள்,பரிகாரங்கள் என்ற பெயரில் தொடர்ந்து வருகிறது! அன்று மன்னர்கள் மூலம் மறைமுகமாக,இன்று மக்களின் மூலம் நேரடியாக!

     ஒருமனிதனின் பிறப்பில் இருந்து, அவன் இறப்பு வரையிலும் ஏன் இறந்த பிறகும்கூட கருமாதி, பெரிய காரியம்,புண்ணியார்ச்சனை,தீட்டு கழித்தல் என்று  சுரண்டும் பிராமணர்களின்  சுரண்டலையும், சடங்குகளையும்  அடுத்தும் பார்க்கலாம்! 

Comments

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. Hi ,
  If you start analysing every religion, this kind of rituals are there in all of them.
  Christianity, Islam, Judaism, are of no exceptions.
  The so called dravidian movements have their own set of evils like self immolation, worshipping the leader as god, sycophancy to the core .
  You better get admit into the hospital for your hatred to brahmins.

  Brahmins are no where in society's clashes and they are busy in settling their lives in US , UK, and rest of the world and wherever they get good opportunities

  ReplyDelete
 3. Hi
  Recently 4 ladies have been killed in Pakistan for dancing on the wedding party
  do you think it is a mistake of Islam,
  it is not the mistake of islam , it is the mistake of those radicals who mis understood the religion.
  Similarly such radicals available in all religions.
  Dont write rubbish things as article.

  Ther tiruvizha, oor thiruvizha, aadi amman thiruvizha, each has a meaning, and brings unity, discipline, culture, and friendship among people.
  People from all walks of life get benefitted by these festivals, it is not only brahmins.
  your thoughts have become such a foolish like you have no other work other than writing againist brahmins.

  ReplyDelete
 4. சரியான கருத்துக்கள்.நீங்கள் இந்த விடயத்தில் இன்னும் ஆராய்ச்சி செய்து திருமணம் போன்ற சில அநாவசிய சடங்குகளின் அர்த்தங்களை வெளிக்கொணர வேண்டும்.

  ReplyDelete
 5. ஊரில் ஒரு திருவிழா என்றால் ஊரே அதில் பிழைக்கிறது. எல்லா சாதி மக்களுமேதான் பணம் சம்பாதிக்கிறார்கள். இதில் பார்ப்பானை மட்டும் எப்படிக் கூறப்போச்சு? நீங்கள் பூஜை செய்யக் கூப்பிடுவதால்தானே அவர்கள் வர்டுகிறார்கள்? வேண்டாம் என்றால் கூப்பிடாதீர்களேன். நீங்களே செய்து கொள்ளூங்களேன்.

  இப்பதிவு முட்டாள்தனமானது.

  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. ‘குடிஅரசு’வின் கேள்விக் கணைகள்
  ஆரியரா? அவர் அடிமைகளா?

  ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?

  இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

  யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?

  வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?

  மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

  புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

  திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

  மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?

  திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

  திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?

  திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

  கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

  சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

  பல சாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணியது யார்?

  உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

  திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

  உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?

  கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?

  மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்
  ?
  தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

  நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

  நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

  மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?

  முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

  வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

  நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

  ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?

  சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?


  உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

  காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

  காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

  சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

  திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?

  அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?

  தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

  சமணர்களைக் கழுவேற்றியது யார்?

  நவநந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

  வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?

  அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

  சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?

  தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

  தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?

  திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

  பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணியது யார்?

  நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

  எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?

  கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

  -(‘குடி அரசு’ 22-1-1949

  ReplyDelete
 7. ஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே!

  இனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம்


  கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் உலகத்தையும் அதிலுள்ள எல்லாவஸ்துக்களையும் அவரே திருஷ்டித்தா ரென்றும் சாதாரணமாக உலகத்தில் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆனால், இந்துக்களில் புத்திசாலிகளாகிய பிராம்மணர்கள் இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து பொருள்களை கிரஹிக்க ஆரம்பித்தார்கள். இதுதான் ஆச்சரியம்.

  முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் என்றும் அவைகளுக்குப் பெண் பிள்ளைகளென்றும் கற்பித்தும்

  கோவில் குளங்களைக் கட்டுவித்தும் தேவதைகளைப் பற்றி அநேக பொய்க் கதைகளை புராணங்களில் எழுதி வைத்து, அவைகளை நம்பும்படி செய்தும்,

  புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி தேவதைகள் சம்பந்தமாக உற்சவங்கள் செய்யச் சொல்லியும் அனேகவிதமான பண்டிகைகள் கொண்டாடச் செய்தும் பிரார்த்தனைகள் புரியச் செய்தும்

  பிராமணர்கள் பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து கொள்ளையிட்டுத் தின்கிறார்களே.

  இது மட்டுமா?

  பிராம்மணரல்லாத இதர இந்துக்களாகிய நமக்கு கடவுளிடத்தில் இருக்கும் ஒருவிதமான நம்பிக்கையை நமது நித்திய வாழ்க்கையில் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திக் கலியாணம், சோபனம், சீமந்தம், கருமாந்திரம், திவசம், மாசியம் முதலிய சுபாசுபச் சடங்குகளை ஏற்படுத்தி அவைகள் மூலமாகவும் நம்மைப் பிடுங்கித் தின்கிறார்களே. இது என்ன அநியாயம்? இது என்ன விபரீதம்?

  ஓ பிராமணரல்லாத இந்து சகோதரர்களே! பிராம்மணர்கள் நம்முடைய தலையைத் தடவி மூளையை உரிகிறார்களே. அது உங்கள் மனதில் படவில்லையா?

  அவர்கள் நம்மை ஏமாற்றித் தின்கிறார்களே. அது உங்களுக்குத் தெரியவில்லையா?

  நம்முடைய முன்னோர்கள் மோக்ஷத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் சேராததும் தெரியவில்லையே. கடவுள் நம்மைத் தேங்காய், பழம் பொங்கல், புளியோரை, ததியோதனம் கேட்கிறாரா?

  உற்சவங்கள் செய்யச் சொல்லுகிறாரா?

  பண்டிகைகள் கொண்டாடும்படி வற்புறுத்துகிறரா?

  பிரார்த்தனைகள் புரியும்படி தொந்தரவு செய்கிறாரா?

  எல்லாம் பிராமணர்கள் செய்கிற ஆர்ப்பாட்டத்தானே

  இவைகளெல்லாம் நமது வயிறு எரிய பிராமணர்கள் தம் குக்ஷியைத்தானே நிரப்புகின்றனர்.

  ஐயோ! பிராம்மணரல்லாத இந்து குடும்பங்களில் எத்தனையோ, உற்சவங்கள் செய்தும் பண்டிகைகள் கொண்டாடியும், பிரார்த்தனைகள் புரிந்தும், சுபா சுபச் சடங்குகள் செய்தும் தரித்திரதசையையடைந்திருக்கின்றன.

  ஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்

  நீங்களும் நன்றாய் யோசித்துப் பாருங்கள். பிராம்மணர்களுக்குக் கொடுத்தால் என்ன? நமது முன்னோர்களைவிட நாம் புத்தி சாலிகளா? முதலிய வீண் குதர்க்கங்கள் வேண்டாம்.

  தீர யோசனை செய்து பாருங்கள் நல்லது. இது கெட்டது இது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  கடவுள் ஒருவர் இருக்கும் பக்ஷத்தில் துட்டு துக்காணி வீண் செலவில்லாமல் அவரிடத்தில் உண்மையான பக்தியுடன் தொழுதால் அதுவே போதுமானது.

  அதை விட்டு வீண் செலவு செய்ய வேண்டாம். பிராம்மணர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம், கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.


  ---------------- போரூர் சண்முக முதலியார் -"திராவிடன்" 15.6.1917

  ReplyDelete
  Replies
  1. the so called periyar was the trustee of his own Pillaiar temple in Erode
   the so called periyar's avatar " kalaignar's wife is a devotee of Saibaba and all gods in the world
   the so called kilainar ani thalivar's wife is a big devotee of all god/godesses across the world.
   the so called thunavi of kalaignar, is a devotee of udupi krishna and sanyasis in udupi.

   all religions are based on faith , as long as people are happy they will follow, when they feel exploited they will dump them.

   fools only promote hatred across the world in the name of religion, caste, language.

   I pity those fools who always spread hatred and keep their mind in fools paradise .

   Delete
 8. hello sir this comment is for your earlier post about rajendra cholas contribution to thiruaarur temple. in that u said the kings lover and sage sundarar's lover r same. but its wrong. sundarar belong to 8th bc but rajendra belong to 10th bc. please dont post wrong information.this makes a big doubt about u r post's for us.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?