Posts

Showing posts from June, 2012

இந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்!

       இந்திய பத்திரிக்கைகள்  பெரும்பாலும் ஊழலுக்கும்,முறை கேட்டுக்கும்  ஆதரவளித்தும்,ஜனநாயகத்திற்கு எதிராகவும்,உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்தியாவில்  செயல்பட்டு வருவதாக தெரிகிறது!


          ஜனநாயகத்தின் நான்கு முக்கிய உறுப்புகளில் ஒன்றான, பத்திரிக்கைகள் ஜனநாயக உரிமைப்போரில் பங்கேற்கும் தார்மீக  கடமையைக் கைவிட்டு,வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகின்றன!உரிமை கேட்டு போராடும் மக்களுக்குஊடகங்கள்  ஆதரவாக செயல்படுவது இல்லை.!


     தனக்கும் வெகுஜன போராட்டங்களுக்கும் ,எந்தவித சம்பந்தமும்  இல்லாதது போல நடந்து கொள்கின்றன. சில பத்திரிக்கைகள் இத்தகைய உரிமைப் போராட்டங்களின் நோக்கத்தை திசை திருப்பும் பணியிலும் ஈடுபட்டு, போராட்டத்துக்கு எதிரான நிலைபாட்டிலும் நடந்துகொண்டு வருகின்றன!

        காரணம், ஊடகங்களின் உரிமையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும்,ஜனநாயக உரிமைகளை மதித்து வருபவர்களும் இல்லை.அவர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும்,தரகு முதலாளிகளாகவும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், பாசிசவாதிகளாகவும்  இருந்துவருவதுதான் !

        பத்திரிக்கைகளின் இதுபோன்ற மோசமான செயல்பாட்டினால், உ…

ஆட்சித்துறையின் அவலட்சணமும்,இந்துத்துவாவும்!

ஆட்சிசெய்யும் அதிகாரம் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்தும்  அவர்களது இந்துத்துவ சிந்தனையால் இந்திய திருநாட்டில் நிகழ்ந்துவரும் ஜனநாயகச் சீரழிவு குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.,


     ஆட்சித் துறை என்னும் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் அரசு அதிகாரிகளின் மனித நேயமற்ற,கொடூரமான, உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்டு,தாழ்த்தப் படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு செயல்களையும் அநீதிகளையும் பார்க்க வேண்டியுள்ளது! ஏனெனில், இத்தகைய கொடுமைகளும் அநீதிகளும் இந்துத்துவா என்ற பிராமணீய பாசிசத்தின் காரணமாகவே இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது!


    இந்தியா சுதரந்திரம் அடைந்து  ஆண்டுகள் பல கடந்தும் கூட, ஜனநாயக ஆட்சி நடப்பதாக கூறும் நாட்டில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட மேல் சாதியினரின் கொடுமைக்கு தலித்து மக்கள் ஆளாகிவருகின்றனர். அவர்களுக்கு கொடுமைகளை செய்பவர்கள்  கல்வியறிவு இல்லாதவர்களோ, இந்தியாவின் சட்டங்கள்,நீதி,நிர்வாகம் குறித்து எதுவும் அறியாத பாமர மக்களோ இல்லை.!    உயர் கல்வி அமைப்புகளான ஐ.ஐ.டி ,எ ஐஐ எம் எஸ், ஐ.டி.எஸ்,என் ஐ.எல்( IIT, AIIMS, ITS, NIL )  போன்ற மத்திய கல்வி அமைப்பின் கீழ் இருந்…

இந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசம்!

ஒரு ஜனநாயக நாட்டின்  காவலாக,அரணாக இருப்பவை எவை என்பதற்கு, 1)ஆட்சியதிகாரம்,(ஆட்சியாளர்கள்) 2)அரசு நிர்வாகம்,(அரசு அலுவலர்கள்) 3)நீதிபரிபாலனம்,(நீதிபதிகள்)  4)பத்திரிக்கைகள்    என்பார்கள்!


       ஜனநாயகத்தை காக்கும்   தூண்கள் ஆக  கருதப்படும்  இவைகளில் ஏதாவது   ஒன்றில் தவறு  நடந்தால்கூட அது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல,கேடானதாகும். அப்படி ஏதாவது  தீங்கு நேரிடுமானால்,ஜனநாயக மாண்புகளைக் காக்கும்,   மற்ற உறுப்புகளைக் கொண்டு அவற்றை சீர்படுத்தி,ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் (காக்கலாம்) எனபது எதிர்பார்ப்பும் எதார்த்த உண்மையாகவும் இருந்து வருகிறது!


   இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்(?) ஜனநாயகத்தைக் காக்கும்  நான்கு தூண்களும், ஜனநாயகத்தைக் காக்கும் உயரிய,தார்மீக நெறியில் இருந்து  எப்போதோ விலகிப் போய்விட்டன. ஜனநாயத்தை போர்வையாகக் கொண்டு, இந்தியாவில்  இப்போது நடந்துவருவதும்  இருப்பதும் "எதேச்சதிகாரம் என்ற பாசிசமே" ஆகும் !


   இந்திய ஜனநாயகம் எனபது ,' இந்து' என்கிற முகமூடியணிந்த " பிராமணப் பாசிசமே" எனபது எனது உறுதியான கருத்தாகும்!


    நான் இப்படிகூறுவது, இன்னும் இந்தியா…

பிராமணர்களின் சுரண்டலில் பிறசாதி இந்துக்கள்!

       இந்துவாக பிறந்த,பிராமணர் அல்லாதவர்கள் ஒவ்வொருவரும்  தாங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,பிராமணர்களின்   தொடர்ந்த வருமானத்துக்கும்சுரண்டலுக்கும், உதவிடும் வகையில்   இந்துமதத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையானது   பிராமணர்களால்  நுணுக்கமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது!

     இந்த கட்டமைப்பின் படியேதான் இந்துமதத்தில் பிறந்த பிராமணர் அல்லாத  இந்துக்கள்,   இன்றளவும்  வாழ்ந்து வர வேண்டிய நிலை இருந்து .வருகிறது! 

       இந்துவாக பிறக்கும் ஒருவனின்  இன்பதுன்பங்கள் எதுவானாலும் பிராமணர்களுக்கு அவன்  ஒரு விலையை, தட்சணையாக, கொடுத்தே தீர வேண்டும்! 

       ஒரு குழந்தை இந்துவாக பிறக்கிறது என்றால்,   அந்த  குழந்தை பிறந்த நேரத்தைக் குறித்து, அந்த குழந்தை பிறந்தது நல்லதா,கேட்டதா  என்று அறிய ஜாதகம் எழுதுவதில் தொடக்கி, சோதிடம் பார்ப்பது, குழந்தையை தொட்டிலில் போடுவது, பெயர் வைப்பது, அதனை பள்ளியில் சேர்ப்பது, இடையிடையே  தோஷம்  கழிப்பது,  பரிகாரம் செய்வது  போன்ற எல்லா சடங்குகளிலும் பிராமணர்களே  முன்னிறுத்தப்பட்டு  வருவதையும்  இந்த முன்னிறுத்தும்  நிகழ்வுகள்  ஒவ்வொன்றுக்கும்  கணிசமான  வருவாயை பிரா…

பிராமணர்களின் சடங்குகளும் நோக்கமும்!

எந்த மதத்தையும் விட அதிகமான,அவசியமற்ற ஏராளமான சடங்குகள் இந்து மதத்தில் இடம்பெற்று உள்ளதை யாவரும் அறியலாம்!தடுக்கி விழுந்தால் கூட அது கெட்ட சகுனம் என்றும்,பூனை குறுக்கே போனால்,ஒற்றை பிராமணன் எதிரில் வந்தால்,கணவனை இழந்தவள் எதிரில் வந்தால் அவைகள் கெட்ட சகுனங்கள் என்றும் பள்ளி விழுந்தால்,ஆந்தை அலறினால்,காகம் கரைந்தால் கூட சகுனம் பார்க்கும் நிலையில் இந்து மதத்தில் உள்ளவர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம்!

        இந்துமத்தில் ஏராளமான கடவுள்கள் உருவாக்கப்பட்டு இருப்பதைப் போலவே,அவற்றுகு உற்சவங்கள், திருக்கல்யாணங்கள், தேரோட்டங்கள், பண்டிகைகைகள் என்று ஏராளமான விழாக்களும்   விழாக்களின்   வழியே ஏராளமான சடங்குகளும் நடத்தப்பட்டுவருவதை அறிவோம்!

     இத்தகைய  சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும்   யாருக்கு  பயனுண்டோ, இல்லையோ,  யார் பங்கு பெறுகிறார்களோ இல்லையோ, பிராமணர்கள் பங்கேற்பும்,அவர்களுக்கு பயனும்,லாபமும்,நிச்சயம் இருப்பதை பார்க்கலாம்!

      அரசன் முதல் ஆண்டி வரையில்,சாதாரண ஏழை முதல், செல்வந்தர்கள், சமூகத்தில் எத்தனை செல்வாக்கு பெற்றவர்கள் ஆக இருந்தாலும்,  அத்தனை பேர்களும்,  பிராமணர்களின்…