சாதிய கட்டமைப்பும் பிராமணர்களின் மேலாண்மை செயல்களும்!

      பிராமணர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  மேற்கொண்ட முயற்சிகளையும் இந்த கொடுமையை     எதிர்த்து பிராமணர்களோடும்,அவர்களுக்கு ஆதரவாக இருந்துவந்த படைகளுடனும்  ஆட்சியாளர்களுடனும்   தமிழர்கள் தொடர்ந்து போராடி வந்ததை  வரலாற்றில் இடங்கை-வலங்கை போராட்டம் என்று குறித்து  வந்ததையும் பார்த்தோம். 

       துரதிஷ்டவசமாகஇந்தபோராட்டத்தில்  பிராமணர்களின் செயல்களுக்கு  ஆதரவாக அரசர்களும் ஆட்சியாளர்களும்  செயல் பட்டதால், தமிழகத்தில்  கோயில்கள் எதற்காக கட்டபபட்டனவோ  அந்த நோக்கம்  பின்னுக்கு தள்ளப்பட்டது! அதாவது, எல்லோருக்கும் பொதுவான, ஆட்சியின்  செயல்களுக்கு என்ற பொதுப்  பயன்பாட்டுக்கு உருவான கோயில்கள், ஆட்சியின்  பயன்பாட்டில்  இருந்து  விளக்கப்பட்டது! 

 கோயில்கள் ,குறிப்பிட்ட சிலரின் பயன்பாட்டுக்கும்  வழிபாட்டுக்கும்  என்றும்   மாறுதல்  அடைந்தன. கோயில்களில்  இருந்துவந்த  நடைமுறை   வழிபாடும், பழக்கங்களும்  பின்னுக்குத் தள்ளப்பட்டு, வழிபாட்டில் இருந்து வந்த  தேவாரமும் திருவாசகமும்   தமிழ்  பாசுரங்கள் பாடப்பட்டதும் ஆன நிலை  மாறியது. ஓதுவார்கள்,  கோயில்  பணியாளர்கள் ஆகியோரின்  முக்கியத்துவம்  குறைந்தது! அவர்கள்  கோயில் பணிகளில் இருந்து விலக்கி வைக்கும்   நிலையை  பிராமணர்கள்  ஏற்படுத்தியுள்ளார்கள்!

       தமிழர்களின் இசையான  பறை,துந்துபி,செண்டை,நகரா ,துந்துபி, முரசு  முதலான இசைக் கருவிகளை வாசித்து, இறைவனைத் துதிக்கும்  வழக்கம்  அகற்றப்பட்டு, பிராமணர்களின்  வேதமந்திரங்களும், புரியாத  பாசையினாலான  கோஷங்கள்   மூலம்  இறைவனைத் துதிக்கும்  நிலையை பிராமணர்கள் தமிழர்களின் கோயில்களில் ஏற்படுத்தினர்!
         பிராமணர்களின் மொழியான  சமஸ்கிருதமும்,அவர்களின் சடங்குகளும்  இறைவனின் வழிபாட்டு முறையாக ஆக்கப்பட்டது!

 இத்தகைய செயல்களின்  மூலம் பிராமணர்கள் உழைக்கும்  தமிழக பூர்வீக குடிகளை  தங்களுக்கு கீழாகவும்,  அவர்களுக்குள்ளும் பாகுபாடுகளைப்  புகுத்தி, சாதிய படிநிலைகளை  ஏற்படுத்தினர். தாங்கள் ஏற்படுத்திய சாதிய  கட்டமைக்குள் அனைவரையும்  கொண்டு வந்தனர். தங்களது  இத்தகைய ஏற்பாடுகளை  எதிர்த்த, புறக்கணித்த, பூர்வகுடிகளை,தமிழ் மக்களை   அடக்குமுறைகள்  மூலம்  ஒடுக்கி வந்தனர். அவர்களில் சிலரை "பஞ்சமர்கள்" என்று  முத்திரையிட்டு, இந்துமத கட்டமைப்புக்கு  எதிரிகளாக்கி அப்புறப்படுத்தினர்!

      தங்களது சாதிய கட்டமைப்பு முறையின் மூலம்  தங்களது  ஆதிக்கத்தை  கேள்விக்கு உள்ளாக்காத  பாதுகாப்பும் பெற்றனர்! மற்ற அனைவரை விட  தாங்களே உயர்வானவர்கள்,  தங்களது  வழிபாடு, பூசை முறைகள், சடங்குகளே, உன்னதமானவை என்ற  நிலையைத் தோற்றுவித்தனர்!

      பிராமணர்கள்  இத்தகைய நிலையை ஏற்படுத்தவும், முனைந்து  தங்களால்  ஏற்படுத்தப்பட்ட  நிலையை  தக்க வைத்துக் கொள்ளவும், தாங்கள்  ஏற்படுத்திய நிலையைத் தொடர்ந்து தங்களது  இனநல  மேன்மைக்கு   கடை பிடித்துவரவும்  வேண்டி, தங்களுக்கு ஆதரவாக  சிற்பங்களைத்  திருத்தவும், புதிய சிற்பங்களை,புதிய  கடவுள்களை  உருவாக்கவும்  செய்தனர். கூடவே, தங்களது நோக்கத்துக்கு   எதிரான, தங்களது நோக்கத்திற்கு    தடையாக  கோயில்களில்  ( முன்பே ) இடம்  பெற்று   இருந்த ,  இறை உருவங்கள், சிற்ப்பங்கள், ஆகியவைகளை  அப்புறப்படுத்தவும்,சிதைக்கவும்,திருத்தவும்   செய்தனர்! 

      பிராமணர்களின் இத்தகைய பணிகளுக்கு  அக்காலத்தில் நடந்த, படையெடுப்புகளும், போர்களும் உதவி உள்ளன!

       பழைய கோவில்களில்,பிராமணர்கள்  இத்தகைய பணிகளைச்  செய்ததன்   மூலம்,தங்களது இனநல மேன்மைக்காக,  தங்களால்  புதிதாக   சிருஷ்டித்த  கடவுள்களின்  பெருமையை,புகழைப் பரப்பும்   தேவை  ஏற்பட்டது! அதன்  விளைவே, பல்வேறு கதைகள், புராணங்கள், பக்தி நூல்கள்  கி.பி.13-ஆம்  நூற்றாண்டில் இருந்து  17-ஆம் நூற்றாண்டுவரை, தமிழில்  உருவாகுவதற்கு  காரணமாக இருந்துள்ளது!  இதனை,   அக்காலக்  கட்டத்தின் தமிழக   வரலாறும்,  அக்காலத்தில்  ஏற்பட்ட  மிகுதியான  இந்துமத  பக்தி  நூல்களும், பிற  நூல்களும் நமக்கு  விளக்குகின்றன.
 

Comments

 1. எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 2. Hi Rajan,

  Nalayira diya prabhandam, devaram, thiruvasagam , thiruvaimozhi all of the are before 5th century.

  In 12 azhwars, except 2 or 3 all of them from panchamar's
  in 63 nayanmaars, most of them from thirukkulam.

  If you want to promote Islam, please write good teachings of Nabhi and dont write rubbish and baseless info on hinduism.

  I pity you.

  ReplyDelete
  Replies
  1. please ask in tamil.otherwise iam not answer your any question!

   Delete
  2. I have no typing facility in tamil.

   if you cannot answer my questions , answer in English.
   Do you think you are marai malai adigal?
   Once again i Pity you and your knowledge and useless/baseless time wasting articles.
   Better you learn proper history and then good understanding of religious tolerance.
   Dont create blasephemy

   Delete
 3. நாலாயிர திவ்ய ப்ரபந்தம்,தேவாரம், திருவாசகம் எல்லாம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தியவை என எங்கே படித்தீர்கள்.பல்லவ ஆட்சிகாலத்தின் அந்திமத்தில் அதாவது ஏழாம் நூற்றாண்டின் கடைசியில் பக்தி இயக்கம் உருவான போது உருவானவையே தேவாரமும், திருவாசகமும். இவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டை ஒட்டியது.

  ஓசூர் ராஜன் யாருக்கும் எதிரான ப்ரச்சாரத்தை செய்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வரலாற்றின் மறைவான பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்றே தோன்றுகிறது. அவரது கருத்தில் பிழையிருந்தால் அதை ஆதாரத்தோடு எதிர் கொள்வதே சரியானதாக இருக்கும்.ஏனெனில் ராஜனின் பதிவுகள் பெரும்பாலும் ஆதாரங்களை துனைக் கொண்டதாகவே இருக்கிறது.

  அவருடைய கருத்துக்கள் நமக்கு உவப்பானதாயில்லை எனற உடனே அவர் இன்ன மதத்திற்காக வக்காலத்து வாங்குகிறாரென குற்றம் சாட்டி அவரது ஆய்வுகளை புறந்தள்ளுவது சரியான முன்னெடுப்பாகாது.

  ReplyDelete
 4. நகைச்சுவையான பதிவு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 5. Saravanakumar,
  Unfortunately, this article has less historical information more hatred and that too generic hatred on one community.
  This community has no role in today's dirty politics and nothing to do with today's problems of society.
  Stop blaming brahmins! if you want to blame for history , you will have to blame everyone, right from moslem rulers till british.

  Try to live in the world without frustration and hatred towards any community.
  otherwise you will lost your mental im balance.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?