குந்தவை குறித்த சந்தேகங்கள்,ஒரு விளக்கம்!

  குந்தவை  குறித்த  சந்தேகங்கள் என்று  சந்திரா  என்பவரும்  சிலரும்   கேட்ட கேள்விகளுக்கு   பதில்  சொல்ல  வேண்டியே இந்த பதிவு !

    சந்திராகேள்வி:: உங்கள் கருத்துப்படி குந்தவை 1006 இல் மதம் மாறினாள். ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தது 1012; ராஜராஜன் காலமானது 1014 . ஆனால் தஞ்சை கோவிலின் தெற்கு வாசலில் உள்ள கல்வெட்டு 1015 ம் ஆண்டு குந்தவை கோவிலுக்கு அளித்த கொடைகளை விவரமாக தெரிவிக்கிறது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் கல்வெட்டு பற்றி அறிவேன்.
   சோழ வரலாற்றில் மூன்று குந்தவைகள் இருந்தனர். அரிஞ்சய சோழன்  வைதும்ப அரச குலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை மணப்பதற்கு  முன்பு, கீழைச் சாளுக்கிய அரசர் குலப் பெண் "வீமன் குந்தவையை" மணந்திருந்தான்! இவரது பெயரையே(பெரிய பாட்டி), சுந்தரசோழன்  தனது மகளுக்கு  வைத்து இருந்தான்! இந்த குந்தவையே  "ஆழ்வார் பராந்தகன் குந்தவை" என்றும், "வல்லவரையர்  வந்தியத்தேவன்மாதேவர் மாதேவியார்"  என்றும் "உடையார்  பொன்மாளிகையில்துஞ்சிய தேவர் திருமகளார்  ஸ்ரீ பராந்தகன்  குந்தவைபிராட்டியார் "என்றும் சோழர்களின் கல்வெட்டுகள்  குறிக்கிறது!

        ராஜராஜன் தனது ஆட்சிக் காலத்தில் பெரிதும் போற்றியும் மதித்தும் வந்த
 பெண்கள்,1)கண்டராதித்தரின் மனைவியும் உத்தம சோழனின் அன்னையுமான
 செம்பியன் மாதேவியார் 2) தனது தமக்கையான,  "குந்தவை   நாச்சியார்"  எனபது வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட  உண்மையாகும்!
     இவர்களிடம்  தனக்கு இருந்த மதிப்பைக் காட்டவும், நன்றியறிதலை
 வெளிப்படுத்தவும்  வேண்டியே,  ராஜராஜன்  தனது  பெண்மகளில்
ஒருவருக்கு தனது சகோதரி, குந்தவையின் பெயரை வைத்தான். தனது   மகனுக்கு, "மதுராந்தகன்" என்று பெயரிட்டான்!


   குடும்பத்தில் இவ்வாறு அவர்களைத் திருப்தி செய்தாலும், உத்தம சோழனின்  துரோக செயலை ராஜராஜன் மறக்கவில்லை எனபது அவனது பெயரையும்,
கண்டராதித்தன் பெயரையும்   சோழ குலமரபிலேயே   சேர்க்காமல், அவனது ஆட்சியில்  ஏற்படுத்தப் பட்ட  எசாலம், கரந்தை செப்பேடுகள்  மரபு வழி, உரைக்கும் விதத்தில்  இருந்து அறியலாம்!
  


  சந்திரா கேள்வி:    குந்தவை மதம் மாறி 9 வருடங்கள் கழித்து ஒரு சைவ கோவிலுக்கு ஏராளமான செல்வங்களை கொடை அளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பதில்:  வல்லவரையன்  வந்தியத் தேவனின் மனைவி ,குந்தவை   மதம் மாறியது உண்மை! கி.பி. 1006-ஆம் ஆண்டு  வாக்கில்  நடந்தது! அதனை மேல்படியில் உள்ள அரிஞ்சய சோழனின் நினைவு  பள்ளிப்படைக் கோயிலில் குந்தவையின் பிறந்த நட்சத்திரமான, திரு அவிட்ட நட்சத்திரத்தை  வெகு சிறப்பாக ராஜராஜன்  கொண்டாட  ஏற்பாடு செய்த, கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது!குந்தவையின்
 பிறந்த நட்சத்திரம் அவிட்டம் என்பதை கொபுரப்பட்டி(பாச்சல்)கோயில்
 கல்வெட்டுஅறிவிக்கிறது!இந்த இடம் திருச்சி, லால்குடி வட்டத்தில் உள்ளது!

      நீங்கள் கூறும்  கொடையும் கல்வெட்டும் உண்மை.  கி.பி.1015-ஆம்  ஆண்டு  கோயிலுக்கு  கொடையளித்த குந்தவை, ராஜேந்திர  சோழனின்  தங்கையான  குந்தவைதான்!


      மதம் மாறிய குந்தவை  தான்மதம் மாறும் முன்பு, தஞ்சைக்  கோயிலுக்கு  அளித்த  கொடைகள்,  "நான்கொடுதனவும் அக்கன்  கொடுத்தனவும்  நம்பெண்டுகள்   கொடுத்தனவும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே  வெட்டுக " என்ற  ராஜராஜன்  ஆணைப்படி, கோயில்  விமானத்தில்  வெட்டப்பட்டு உள்ளது!


      ராஜராஜனின் மகளும்,ராஜேந்திரனின் தங்கையுமான மூன்றாம் குந்தவை
 கொடுத்த கோயில் கொடையே , ராஜேந்திர சோழன்  காலத்தில் கி.பி.1015ஆம்  ஆண்டு  கல்வெட்டில் பொறிக்கப்பட்டுஉள்ளது!


      வேங்கி நாட்டு  வல்லவரையன் வந்தியத்தேவனை, ஆழ்வார்  பராந்தகன் குந்தவை மணந்தது போலவே, ராஜேந்திரனின்
தங்கையான குந்தவையும்   வேங்கி நாட்டுவேந்தன், விமலாதித்தனுக்கு
மாலை சூட்டினாள் !


   உத்தம சோழன் பதவி  பதவி ஏற்கும்போது அருள்மொழி (ராஜராஜன்) வர்மன்  போர் செய்யும் வயதையே  எட்டவில்லை! ஈழம் மற்றும் வெங்கி படை எடுப்பிலும் பங்கு கொள்ளவில்லை! அது பொன்னியன் செல்வனின்
கதையால் உங்களுக்கு ஏற்பட்ட பிரமை!( வல்லவரையன்  வந்தியத் தேவனும் பங்கு பங்கு பங்குகொள்ள   வாய்ப்பு  இல்லை! காரணம்  அவனும் நெடுங்களம் என்ற ஊரில கொல்லப் பட்டு  இருக்கவேண்டும். இதை,அந்த கோயில் தல வரலாறு கூறுகிறது! ஆதித்த கரிகாலனின்  படுகொலைக்குப்  பிறகு நடந்த  உள்நாட்டுப்  போரில்  அவன்  கொலையானான்  எனத் தெரிகிறது!
    (ராஜேந்திரனின் தங்கை குந்தவையின் கணவனான விமலாதித்தன்,
ராஜராஜனின்  இறுதி ஆட்சிக்காலத்தில்  ராஜேந்திரனுடன்   ஈழத்தில்  போருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு உள்ளது }


   ஆதித்ய கரிகாலன்  படுகொலைக்கு பிறகு, சுந்தரசோழன்  காஞ்சி அரண்மனைச் சிறையில் இருந்து உயிர் நீத்தான்!  அவனது
 மனைவியான  வானவன் மாதேவி  நெருப்பில் விழுந்து (உடன்கட்டை ஏறி)உயிர் துறந்தாள் ! இவரது உயிர் துறப்பைப் பற்றி, திருக்கோவலூரில் உள்ள கல்வெட்டு (south indian inscription vol.VII,No:863)  எடுத்து கூறுகிறது! இதோ கல்வெட்டு வரிகள்....
.
 "செந்திரு மடந்தைமண சீரஜராஜன்
இந்திர சமானன் ராஜசர்வக்ஞநேனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக்
கறந்து கரவாக் காரிகை சுரந்த
முலை மகப் பிரிந்து  முழங்கு எரி நடுவனும்
 தலைமகற் பிரியாத் தையல் நிலைபேறு நீ 
தூண்டா விளக்கு ... மணிமுடி வளவன் 
சுந்தர சோழன் மந்தரத்தாரன் திருப்புய முயங்குதேவி "

     "ராஜராஜ சோழன், பால்பால்குடி மாறாத குழந்தையாக இருந்தபோதும், அவனை விட்டு, அவனது தாயார் வானவன் மாதேவி ,கணவன்  சுந்தர சோழனுடன் எரி மூழ்கினார் "என்று  தனது  தென்னாட்டு  போர்களங்கள் நூலில்  கா. அப்பாதுரையார்  குறிப்பிடுகிறார்! 
      ராஜராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி,   சோழர்கள்  நூலில் பக்கம்  230-யில்  அதன் ஆசிரியர்  நீலகண்டசாஸ்திரியும், "ராஜ ராஜனின்  இளமைக் காலத்தைப் பற்றி  அறிந்தவர்கள்  யாரும் இல்லை" என்றும், ஆயினும் இந்த அரசன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினான்  என்றே குறிப்பிடுகிறார்!
       இதில் இருந்து ராஜராஜன், உத்தம சோழன் ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளவும் இல்லை.  படைநடத்தவும்  இல்லை என்பதை அறியலாம் !

   உத்தமசோழனின்படைகளுக்கு பயந்தும், உயிர்தப்பியும்  வாழ,வேண்டியநிலையில் இருந்தான்!என்பதை அறியலாம்!அவ்வாறு 
இருக்கும்போது,ராஜராஜன் எப்படி  உத்தம சோழன் ஆட்சியில் 
இலங்கை மீது படை எடுத்து சென்று இருக்க முடியும்?


மேலும்  ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்,அவனது தந்தை தாயின்  முடிவுக்கு காரணமானவர்கள், குந்தவையை,ராஜராஜனையும்  போனால் போகட்டும்  என்று விட்டு வைத்தார்கள்,என்பதே நம்புவதற்கு  கடினம்!
  " மக்கள் பலரும் அருள்மொழி வர்மன் என்னும் ராஜராஜன் அரசனாவதை  விரும்பினார்கள் என்றும் அரசியல் நடவைக்கைகளை நன்கு  உணர்ந்த  ராஜராஜன் அதனை ஏற்காமல் அமைதி காத்தான்" என்றும்  கல்வெட்டுகள்  சொல்கின்றன. அதே சமயத்தில்  உத்தம சோழனைப் பற்றி,  "பெருவலியுடையவன்" என்றும் "முயன்று ஆட்சியைப் பிடித்தவன் "என்றும் 
கல்வெட்டுகள் சொல்கின்றன.!  முயன்று ஆட்சியைப் பிடித்த உத்தம சோழன், ஆட்சிக்கு வரத் தடையாக இருந்த  ஆதித்ய  கரிகாலனைக் பிராமணர்கள் கொல்வதற்கு  காரணமாக இருந்து  உள்ளான்.  அப்படிப்பட்டவன், அருள்மொழி வர்மனை ஆதரித்தான், அவனது கட்டுப்பாட்டில் படைவீரர்களை விட்டுவைத்தான்  எனபது  சரியா?   அவ்வாறு  விட்டு  வைத்து  இருந்தால், அவனது தாயார்
 உடன்கட்டை ஏறுவதை பார்த்துகொண்டு  இருந்திருப்பானா?  தடுத்து இருக்க மாட்டானா? உடன்கட்டை ஏறக் காரணமானவர்களை  சும்மா விட்டிருப்பானா? தண்டித்து இருக்க மாட்டானா?


 எனவேதான் சொல்கிறேன்,உத்தம சோழன் ஆட்சியில்ராஜராஜன் பங்கு
 எடுத்துக் கொள்ளவில்லை! வந்திய தேவனும்  பங்கு எடுக்க  வாய்ப்பு இல்லை!
  
      தவறுகளை திருத்திய பெருமை மிக்க,   கலைகோவனை அவர்களை  இந்த பதிவை படித்துகருத்து சொல்ல கேட்டுக்கொண்டு, அப்புறம்  விமர்சனம் வையுங்கள்!


      எனக்கு பிராமணர்கள் மீது வெறுப்பு என்று ஒரு கருத்தையும் 
வெளியிட்டு இருக்கிறீர்கள்! பிராமணர்கள்  ஆதாரம் இன்றி, கண்டதையும்  கூறலாம் , எழுதலாம்: பிறர்மீது பழி சுமத்தலாம்! யாரும் கேட்கக்  கூடாது  என்பதுதான் உங்கள் நியாயமா?   பிராமணர்களின்  தவறுகளை, தகிடு தத்தங்களை  ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால், அது  பிராமண வெறுப்பா?

   ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு நூலில்  "துருக்கர்கள்" என்றுதான்  வருகிறதே தவிர,மாலிக்காபூர்  பெயரோ, அவர் பிராமணர்களைக்  கொன்றதாக  வருகிறது  என்று உங்களால்  ஆதாரம் காட்ட முடியுமா? "திருமுடி திருத்துவது" எனபது  கொலை செய்ததாக பிராமணர்கள்  கூறுவது என்ன ? அவதூறா? முஸ்லிம்கள் பேரில் பிராமணர்கள்  கொண்டுள்ள  பிரியமா? அல்லது  வெறுப்பு உணர்வினாலா? என்பதை நீங்களே சொல்லி விடுங்கள்! 

   (  ஹா...ஹா... ஹா..! நான் முன் புறமாகத்தான்  சிரிக்கிறேன்! உங்களைப் போல  பின்புறம்  சிரிப்பது  இல்லை! )Comments

 1. உங்கள் பதிலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. சிலவற்றை பார்ப்போம்
  "நீங்கள் கூறும் கொடையும் கல்வெட்டும் உண்மை. கி.பி.1015-ஆம் ஆண்டு கோயிலுக்கு கொடையளித்த குந்தவை, ராஜந்திர சோழனின் தங்கையான குந்தவைதான்!"

  உங்கள் பதிலிலிருந்து கல்வெட்டை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டின் ஆங்கில மொழி பெயர்ப்பை கீழே மீண்டும் கொடுத்துள்ளேன்:

  Until the third year (of the reign) of Ko-Parakesarivarman, alias the lord (udaiyar) Sri-Rajendra-Soradeva, — Arvar Parantakan Kundavaiyar, (who was) the venerable elder sister of the lord Sri-Rajarajadeva (and) the great queen of Vallavaraiyar Vandyadevar, gave to the images (tiru-meni) which she had set up herself, -gold which was weighed by the stone (used in) the city (kundinai-kal) and called (after) Adavallan, and jewels (ratna) which were weighed by the jewel weight (kasu-kal) called (after) Dakshna-Meru-Vitankan.

  இதில் மித தெளிவாக ராஜராஜனின் மூத்த சகோதரியும் வந்திய தேவனின் மனைவுமாகிய குந்தவை என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. ராஜேந்திரனின் தங்கை என்று எங்கே வருகிறது?

  நீலகண்ட சாஸ்திரியின் சில கருத்துகள் தவறானவை என்று சதாசிவ பன்டாறதால் நிரூபிக்க பட்டு விட்டது (உதாரம்: ஆதித்த கரிகாலன் கொலை பற்றியது). சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரியின் காலத்திற்கு பின்னவர். மேற்கொண்டு கிடைத்த ஆதாரத்தின்படி நீலகண்ட சாஸ்திரியின் சில கருத்துகளை தவறு என்று நிரூபித்து இருக்கிறார். அப்படி இருக்க நீங்கள் நீலகண்ட சாஸ்திரி மற்றும் அப்பா துரையின் கருத்துகளை ஆதாரமாக சொல்வது சரியாகாது.

  "ராஜராஜ சோழன், பால்பால்குடி மாறாத குழந்தையாக இருந்தபோதும், அவனை விட்டு, அவனது தாயார் வானவன் மாதேவி ,கணவன் சுந்தர சோழனுடன் எரி மூழ்கினார் "என்று தனது தென்னாட்டு போர்களங்கள் நூலில் கா. அப்பாதுரையார் குறிப்பிடுகிறார்!
  ராஜராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி, சோழர்கள் நூலில் பக்கம் 230-யில் அதன் ஆசிரியர் நீலகண்டசாஸ்திரியும், "ராஜ ராஜனின் இளமைக் காலத்தைப் பற்றி அறிந்தவர்கள் யாரும் இல்லை" என்றும், ஆயினும் இந்த அரசன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினான் என்றே குறிப்பிடுகிறார்!

  ஆனால் " மக்கள் பலரும் அருள்மொழி வர்மன் என்னும் ராஜராஜன் அரசனாவதை விரும்பினார்கள் என்றும் அரசியல் நடவைக்கைகளை நன்கு உணர்ந்த ராஜராஜன் அதனை ஏற்காமல் அமைதி காத்தான்" என்றும் கல்வெட்டுகள் சொல்கின்றன.

  பால் மணம் மாறாத குழந்தை எப்படி அரசியல் நடவைக்கைகளை நன்கு உணர்ந்து இருக்க முடியும். மேலே உள்ள கல்வெட்டு தவறா அல்லது அதக்குமுன் குறிப்பிட்டு உள்ள கல்வெட்டில் உள்ள செய்யுளை அப்பாதுரை புரிந்து கொண்டது தவறா?

  உத்தம சோழனின் இயற் பெயர் மதுராந்தகன், அவன் பதவி ஏற்ற பிறகுதான் உத்தம சோழன் ஆனான். உத்தம சோழனால் உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்ட ராஜராஜன் (உங்கள் கருத்து), தன் மகனுக்கு ஏன் தன் சிற்றப்பனின் இயற் பெயரை வைக்க வேண்டும்? உடன் கட்டை ஏறுதுவது மிக உயர்வானதாக கருதப்பட்ட காலத்தில்
  அதை ராஜராஜன் தடுக்காதது தவறு என்று சொல்வது எப்படி? அதுவும் உங்கள் கருத்துப்படி பால் குடி மாறாத குழந்தை அதை எப்படி தடுத்து இருக்க முடியும்? இந்த முரண்பாட்டிற்கு என்ன பதில் கொடுக்க போகிறீர்கள்?

  உங்களுடைய மாலிக் கபூர் படையெடுப்பு பற்றிய கருத்துகளுக்கு நான் இன்னும் பதில் கொடுக்க வில்லை. பொதுவாக உங்கள் விவாதத்தில் பிராமண வெறுப்பு இருப்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியம். ஆனால் அதை சோழர் வரலாற்றிலும் இஸ்லாமிய படையெடுப்பின் போது ஏற்பட்ட கொடுமையை மறைக்க முயற்சி செய்யவும் காண்பிக்க வேண்டாம்.
  உங்கள் பதிலில் கடைசியாக எழுதியுள்ளது தேவை அற்றது, கண்டிக்க தக்கது, அது உங்கள் மன முதிர்ச்சியின்மையை, வக்கிரத்தை காட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒருமுறை பதிவைப் படிக்கவும் .
   ராஜராஜன் ஆட்சி ஏற்பதை விரும்பினார்கள் என்றால், உடனே என்றா பொருள்? உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் ? உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா? மக்கள் விரும்பாத செயலை உத்தம சோழன் செய்தான் என்றால்,வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியது யாரால்?

   அவருக்கு முன்பு எத்தனை சோழ அரசிகள் உடன்கட்டை ஏறினர்? தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும்?குழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாரா? விழுந்து இருப்பாரா?

   சதாசிவ பண்டாரத்தார் பின்னாள் பிறந்தவர் என்பதால் அவர் சொன்னது சரியென்று ஏற்கிற, நீங்கள்..அவருக்கும் பின்னாள் பிறந்த நான், அவர்களது தவறுகளை திருத்தினால் தவறு என்கிறீர்கள்! காரணம் என்ன?

   குந்தவையின் கல் வெட்டில் உள்ளதை, விளக்கி யாரோ ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளதை ஆதாரமாக குறிப்பிடுகிறீர்கள்!

   கல்வெட்டில் உள்ளதை ஆதாரமாக குறிபிடுங்கள்! அதில் குந்தவை எனபது நீங்கள் குறிப்பிடும் விதத்தில்
   உள்ளதா என்று பார்கிறேன். ஏனெனில் பலரும் குந்தவை என்றால் ஒருவரே என்று நினைத்து,கல்வெட்டில் இல்லாததையும் சேர்த்து விளக்கம் தருகிறார்கள்! மாலிக்கபூர் பற்றி குறிப்பிடுவதைப் போலவே!

   Delete
  2. மீண்டும் ஒருமுறை பதிவைப் படிக்கவும் .
   ராஜராஜன் ஆட்சி ஏற்பதை விரும்பினார்கள் என்றால், உடனே என்றா பொருள்? உத்தம சோழன் அரசனாய் இருந்த கி.பி.970-985 வரை அவன் குழந்தையாகவா இருப்பான் ? உத்தம சோழனை மக்கள் விரும்ப வில்லை என்று பொருள் வராதா? மக்கள் விரும்பாத செயலை உத்தம சோழன் செய்தான் என்றால்,வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியது யாரால்?

   அவருக்கு முன்பு எத்தனை சோழ அரசிகள் உடன்கட்டை ஏறினர்? தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ராஜராஜனால் எப்படி தடுக்க முடியும்?குழந்தைப் பருவத்தில் இருந்த அவனை நினைக்காமல் விரும்பி வானவன் மாதேவி எரி நெருப்பில் விழுந்தாரா? விழுந்து இருப்பாரா?
   சதாசிவ பண்டாரத்தார் பின்னாள் பிறந்தவர் என்பதால் அவர் சொன்னது சரியென்று ஏற்கிற, நீங்கள்..அவருக்கும் பின்னாள் பிறந்த நான், அவர்களது தவறுகளை திருத்தினால் தவறு என்கிறீர்கள்! காரணம் என்ன?

   குந்தவையின் கல் வெட்டில் உள்ளதை, விளக்கி யாரோ ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளதை ஆதாரமாககுறிப்பிடுகிறீர்கள்!

   கல்வெட்டில் உள்ளதை ஆதாரமாக குறிபிடுங்கள்! அதில் குந்தவை எனபது நீங்கள் குறிப்பிடும் விதத்தில்
   உள்ளதா என்று பார்கிறேன். ஏனெனில் பலரும் குந்தவை என்றால் ஒருவரே என்று நினைத்து,கல்வெட்டில் இல்லாததையும் சேர்த்து விளக்கம் தருகிறார்கள்! மாலிக்கபூர் பற்றி குறிப்பிடுவதைப் பலவே!போலவே!

   Delete
 2. ராஜராஜன் சாதனைகளை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கு ஜெயமோகன் வலைத்தளம் நல்ல உதாரணம். பிராமணர்கள் ஆதிக்கம், இடங்கை, வலங்கை போன்றவற்றை பற்றியம் விரிவாக எழுதி இருக்கிறார்.
  (http://www.jeyamohan.in/?p=8712)

  வரலாற்றில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?