மாலிக்காபூர் படையெடுப்பால் பிராமணர்கள் அடைந்த பயன்கள்!

    பிராமணர்களின்இன நலனுக்கும் ஆதிக்க மேலாண்மைக்கும்  அன்னியரின்  படையெடுப்புகளும்கூட மறைமுகமாக உதவி வந்துள்ளன  எனபது வரலாற்றில் இருந்து அறியவருகிறது! 

      தென்னகத்தின் மீது மாலிக்கபூர் நடத்திய படையெடுப்பின் விளைவாக,
தமிழகத்தில் உள்ள கோயில்களில்     பிராமணர்கள் ஆதிக்கம்  அதிகரித்தது.! பிராமணர்கள் தங்கள்  ஆதிக்கத்திற்கும், தங்கள் இன நலனுக்கும், மாலிக்காபுரின் படையெடுப்பைப் பயன்படுதிக் கொண்டுள்ளனர்.

  கோயில்களில் சேர்த்துவைத்திருந்த  ஏராளமான  பொன்னும், பொக்கிஷமும் கோயிலில் இருந்து ... பிராமணர்களால்  வேறு இடங்களுக்கு  அப்புறப்படுத்தவும்,  மறைத்து வைக்கவும், தாங்களே கைக்கொள்ளவும்  கூடிய சூழ்நிலையை  மாலிக்காபூர்  படையெடுப்பு ஏற்படுத்தி இருப்பதை  அறிய இயலுகிறது! 
        அதுமட்டுமின்றி, தங்களது ஆதிக்கதிற்கு எதிரான  பிரதிமங்கள், சிலைகள்,ஆகியவைகளை கோயிலில் இருந்து நீக்கவும்,அது தொடர்பான கல்வெட்டுகள்,சாசனங்களைமறைக்கவும்கூட மாலிக்காபுரின் 
படையெடுப்பு  உதவியது எனலாம்! 

    மாலிக்கபூர் படையெடுத்து வருவதாக  தெரிந்து,  ஸ்ரீரங்கம்  கோயிலில் இருந்த விக்கிரங்களை எல்லாம் மறைத்தும்  அப்புறப்படுத்தியும் உள்ளதாக கூறும்  அக்கோயில்  "ஒழுகு  நூலே" இதற்கு சாட்சியாக உள்ளதெனலாம்! 

   "  மாலிக்காபூர்" ஸ்ரீ ரங்கம் வந்ததாகவோ,அந்த கோயிலில் இருந்த
செல்வங்களைக்  கொள்ளை கொண்டதாகவோ,   இதுவரையில்  எந்த வரலாற்று ஆய்வாளரும் நிரூபணம் செய்யவில்லை. சரித்திரக்  குறிப்புகளும் கூட இல்லை! .


      மாலிக்காபூர் வருகை தந்த ஆண்டு கி.பி.1323-ஆம் ஆண்டு. ஸ்ரீரங்கத்தின்
 மக்கள் தொகையே  பன்னீராயிரம் இல்லை என்று சொல்லலாம்! 
      கி.பி.1878-யில் வழிவந்த திருச்சி மாவட்ட மேனுவல் கி.பி.1875-ஆம் 
ஆண்டு ஸ்ரீ ரங்கத்தின் மக்கள் தொகை 11,271 பேர்கள்  என்று சொல்லுகிறது. 500- ஆண்டுகளுக்கு முன்பு,   ஸ்ரீ ரங்கத்தின் மக்கள் தொகையானது,
 அதைவிட குறைவாகவே இருந்து இருக்கும் எனபதுநிச்சயம் !ஆகவே, மாலிக்காபூர்  ஸ்ரீரங்கத்துக்கு வந்ததாக கூறப்படுவதும்,  அங்கிருந்த  பன்னீராயிரம்ஆழ்வார்களின் திருமுடி திருத்தியதாக.. ஸ்ரீரங்கம்  கோயில்  ஒழுகு நூல் கூறும் செய்தி  பொய்யானது என்றே தோன்றுகிறது!, 

                                                                                                                                                                    இந்து மதத்திலிருந்து,இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறிய மக்களின் மீது,       முஸ்லிம்களின்  மீது பிராமணர்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை காட்டுவதாகவும்,அவர்களின் உள்நோக்கமுடைய "பிராமண  சதி"என்றும் சொல்லத் தோன்றுகிறது!

     மாலிக்கபூர் படையெடுப்பில்,"பிர்துல்"  என்று  குறிப்பிடுவதை வைத்து, சிலர்  அவ்வாறு குறிப்பிடும்  இடம் " ஸ்ரீரங்கம்" என்று தவறாக  புரிந்து கொண்டு, மாலிக்காபூர்  ஸ்ரீ ரங்கம் கோயில் மீது படையெடுத்தார்  என்று  கூறி வருகின்றனர்.  "பிர்துல் " என்று குறிப்பிடும்  இடம்   "விருத்தகிரி" என்ற இன்றைய "விருத்தாசலம்" ஆகும்!

           விருத்தாசலம் வந்து,அன்றைய நாளில்மிகப்பெரிய கருவூலமாகவும்
 விளங்கிய  சிதம்பரம்  கோயிலைக் கொள்ளையிடமாலிக்காபூர்  தனது  பெரும்  படைகளுடன்   விருத்தாசலம் வந்து பிறகு ,சிதம்பரம் வழியாக   மதுரைக்கு  சென்றுள்ளார்! என்பதே உண்மையாகும்! 

       ஆக்கிரமிப்பாளர்களும்,படையெடுத்து வரும் பிற நாட்டவரும்  அந்நாளில்  பொதுவாக, கோயில்களில்  பாதுகாப்பு கருதியும்,  நிர்வாக வசதி  கருதியும், தங்களது  செல்வங்களைக் கோயிலில் வைத்து,  பாதுகாத்து  வந்தனர்!  
      இதனை அறிந்திருந்த  படைஎடுப்பாளர்களும்  கோயிலில்  உள்ள  செல்வங்களைக் கொள்ளையிட  எண்ணி,தங்களது  படையெடுப்புகளில் கோயில்களை தாக்குவதையே  முக்கிய  நோக்கமாகக் கொண்டு  செயல்பட்டு உள்ளனர்! 

      ராஜராஜ  சோழனின்படையெடுப்புகளுக்கும்,மாலிக்காபுரின் தென்னகப் படையெடுப்புக்கும்\ பொருந்தும்,இந்த பொதுவான விதியானது, கோயில்கள்   பிராமணர்களது  கட்டுப்பாட்டில் வந்தபிறகு, தங்களது   தவறுகளை மறைக்கும்  யுக்தியாக,  பிற சமயத்தினரின்  கொடுமைச்  செயலாக,பிராமண ஆதரவாளர்களால்  காட்டப்பட்டு வருகிறது!

          ஆயினும், பிறசமய ஆக்கிரமிப்பாளர்களை விட, ஏன் ? எந்த ஒரு  
 ஆகிரமிப்பாளையும் விட, படை எடுப்பாளர்களை விட, பிராமணர்களால் கோயிலில் இருந்து கொள்ளையிடப்பட்ட செல்வமே  அதிகமாகும் !

                                                                          பிறசமயப் படையெடுப்புகள்,பிற நாட்டு படையெடுப்புகள் 
ஆகியவைகளைக் காரணமாக வைத்தும்,படைஎடுப்புகளே   அவைகள்  நடந்ததன்  விளைவாகவே  மக்கள்  பிராமணர்களின்  ஆதிக்கத்தை எதிர்த்து, தொடர்ந்து  போராடி  வந்துள்ளனர்!

        சிதம்பரம்,தஞ்சை,திருவாரூர் போன்ற கோயில்கள் "விமானம் முதல்  மக்களால் வணங்கப்படும் இறைவனின் திருமேனிகள் வரை  பொன்னாலும், ஐம்பொன்னாலும், செய்யப்பட்டு இருந்தன" என்று  கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. வரலாற்று  அறிஞர்களும்  உறுதி  படுத்துகின்றனர்.  

      தவிர, ஏராளமான பொன்னும் நவரத்தினங்களும்  கொட்டிக்கிடந்த, கோயில்  கருவூலங்களில் இருந்த  அனைத்தையும்  ஆக்கிரமிப்பாளர்களே  கொள்ளையிட்டனர் என்பது நம்ப முடியாத, ஏற்க இயலாத   காரணமாகத் தோன்றுகிறது!


Comments

 1. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

  தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி! எனது ஈமெயில் மூலம் இணைத்து வருகிறேன்!

   Delete
 2. அது எப்புடிங்கண்ணா.. கோயில் ஒழுகில், விக்ரகங்களை மறைத்தது மட்டும் உண்மை, சாட்சின்னு எடுத்துப்பீங்க.. ஆனா.. 11000 பேர் கொல்லப்பட்டது பொய்னு சொல்றீங்க.. ஒண்ணு ரெண்டுமே உண்மையா இருக்கனும்..இல்லை ரெண்டுமே பொய்யா இருக்கனும்.. உங்களுக்குத் தேவையானத உங்களுக்கு ஏத்த மாதிரி அர்த்தம் எடுத்துப்பீங்களோ.. இதுக்குப் பேர் தான் வரலாறோ..

  ReplyDelete
  Replies
  1. என்ன புரிஞ்சுகிறீங்க? மாலிக்காபூர் வரார்னு வதந்தியைக் கிளப்பி,
   பொய் சொல்லி சொல்லி,முன்கூட்டியே விக்கரங்களை மறைக்க முடியாதா?
   குந்தவையின் இஸ்லாம் மாற்றம் குறித்து தொடர் விளைவாக நடந்து இருக்காதா? மதுரையில் இருந்த முஸ்லிம் ஆட்சியாளர் (பெயர் மறந்துவிட்டது} ஸ்ரீ ரங்கம் வந்தபோது நடந்திருக்கிறதா? விக்கிரகங்களை மறைக்கும் நிகழ்வு நடந்தது உண்மை! மாலிக்காபூர் ஸ்ரீரங்கம் வரவில்லை,என்பதும் உண்மை !

   உண்மையை புரிந்துகொண்ட கேளுங்கள்!

   Delete
  2. கோயில் ஒழுகு கூறும் பன்னீராயிர ஆழ்வார்கள் திருமுடி திருத்தி எனபது,வடுகவாளி பன்னீராயிரம்(12000ஊர்களைக் கொண்ட பகுதி)) என்ற ஆந்திரமாநிலம் பகுதியில் இருந்து வந்த பிராமணர்கள் சிலரின் முடியை நீக்கி,மொட்டை அடித்து அவமானப்படுத்திய நிகழ்ச்சியாகும்!

   பிராமணர்களுக்கு மொட்டையடிப்பது அவர்களைக் கொலை செய்வதற்கு ஒப்பானது!( போன்றது)
   பிராமணர்கள், பிராமணர்களையே கொன்றாலும் மொட்டை அடித்துக்கொண்டால்,கொலைபாவமபோய்விடுமாம்! சங்கராச்சாரியார்,சங்கரராமன் கொலை வழக்கில் உள்ளபோது,
   மொட்டைஅடித்துகொண்டார்!

   Delete
  3. அண்ணே.. குந்தவை மதமாற்றத்துல, முக்கியமான கேள்விக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லல.. பாரளந்தோன் தங்கை கேள்வி ஞாபகம் இருக்கா.. இல்லை மறந்து போச்சா.. நீங்க பாரளந்தோன் இராசராச சோழன்னு சொன்னப்போ.. அப்புடியே நான் ஷாக் ஆயிட்டேன்.. 2000 வருடம் முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் அடியளந்தான்னு சொன்னதும்.. ராசராசசோழன் காலத்திற்கு முற்பட்ட ஆழ்வார்கள் பாரளந்தான்னு ராசராசசோழனத்தான் சொல்லிருக்காங்க போலன்னு அப்புடியே புல்லரிச்சு போயிட்டேன்..

   Delete
  4. பெரியண்ணே.. இன்னொரு விஷயம்.. மாலிக்காபூர் இந்தியாவிற்கு வந்தது கி.பி.1311. கி.பி. 1316ல் இறந்தி விட்டார்.. ஒருவேளை விக்கிபீடியா தப்போ.. நீங்கதான் சரியா 1323ல் மாலிக்காபூர் வந்தார்னு சொல்லிருக்கீங்க.. விக்கி மேல கேஸ் போட்டுறலாமா.. சொல்லுங்க...

   http://en.wikipedia.org/wiki/Malik_Kafur

   Delete
  5. உங்களுக்கு எனது பதிவுகள் மீது கழ்ப்புணர்ச்சி உள்ளது தெரிகிறது! அதுதான்ஒன்றுக்கும் உதவாத செய்திகளை பிடித்துக்கொண்டு வம்பு செய்ய நினைக்கிறீர்கள்!
   மாலிக்கபூர் படையெடுப்பு பற்றி நான் சொன்னது சரிதான்! குடவாயில். பாலசுபிரமணியன்,வரலாற்று ஆய்வாளர் சே.திவான், உள்ளிட்ட ஆய்வாளர்கள் குறித்து உள்ளதையே நானும் குறிப்பிட்டு உள்ளேன்! விக்கிபீடியாவுக்கு யார் அந்த வருடத்தை சொன்னார்கள் என்பதை நீங்கள்தான் கேட்டு தெரிஞ்சுக்கணும்!

   தவிர,"பாரளந்தோன் தங்கையே" என்று கேட்டதற்கு பதில் சொல்லவில்லையே என்கிறீர்கள்! ஒரு கலக்டர்,எஸ்.பி. போன்ற அதிகாரிகள் வயதில் குறைந்தவராக இருந்தாலும் அவரின் கீழ் பணிபுரியும் வயதானவர்கள் கூட, "அய்யா" என்று மரியாதையாக அழைப்பதைப் போலத்தான்., குந்தவைமீது மரியாதைவைதிருந்த யாரோ குறிப்பிட்ட வார்த்தையும்! "சகோதரி என்ற முறையைக் கொண்டு, இளையவனானாக ராஜராஜன் இருந்தாலும் , பெரிய சக்கரவர்த்தி என்பதால் அவ்வாறு விளிதிருக்கலாம்! அறியாமையில் கூடவிளிதிருக்கலாம்! அதை ஒரு பெரிய விசயமாக சொல்கிறீர்கள்!
   பிராமணர்கள் கோயிலைக் காலிசெய்தார்கள் உண்மையா? பொய்யா? எனபதுகுறித்து,தைரியமாக கருத்து சொல்லுங்கள்?
   கோயிலில் மணியாட்டும் சின்ன பையனைக்கூட..வயதான பெரியவர்கள், சாமி என்று கூப்பிடுகிறார்களே?? அது எப்படி? அதுசரியா என்று கேளுங்கள்!

   Delete
  6. உடனே காழ்ப்புணர்ச்சின்னு சொல்ல வேண்டியது.. அப்புடின்னா..உங்களோட எல்லாப் பதிவுகளும் பார்ப்பனர் மீதான காழ்ப்புணர்ச்சின்னு சொல்லலாமே...அப்புறம் என்னன்னா அது.. அறியாமையில் விளித்திருக்கலாம்.. முடியல.. உங்க ஆராய்ச்சி.. நடத்துங்க நடத்துங்க.. திருவள்ளுவர், ஆழ்வார்கள் எல்லாம் இராசராசனைத் தான் அடியளந்தான், பாரளந்தான்னு சொலிருக்காங்கன்னும் ஒரு பதிவு போட்டுருங்க... சூப்பரா இருக்கும்..

   Delete
  7. //அறியாமையில் கூடவிளிதிருக்கலாம்! அதை ஒரு பெரிய விசயமாக சொல்கிறீர்கள்!// அறியாமையில் சொல்வதை பெரிய ஆதாரமாக நீங்கள் காட்டுவது மட்டும் என்ன நியாயம்? சப்பைக்காடு சப்பைக்கட்டு என்று கேள்விப்பட்ட விடயத்தை இப்போது தான் மிகச் சரியாக ஒருவர் செய்யக் காண்கிறேன். உங்கள் வரலாற்று ஆய்வுகளைக் காண்கையில் சிரிப்பு புறவழியாகத்தான் வருகிறது.

   Delete
 3. ஆய்வுகள் தொடரட்டும்.பார்ப்பனர்களின் வரலாற்று திரிபுதான் இன்றைய வரலாறு என்பது கசக்கும் உண்மை.உண்மைக்கு புறம்பான வரலாற்று திரிபுகலை இனம் காட்டவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்., உண்மையான வரலாற்றை மக்களுக்கு விட்டு செல்வது நாம் நம் சந்ததிகளுக்கு செய்யும் கல்வி பணியாக அமையும்.

  ReplyDelete
 4. எத்தனை வரலாற்று குளறுபடிகள். இதை செய்தவர்களின் சூழ்ச்சியை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பன்னீராயிரம் அடிகள் திருமுடி திருத்தியது என்று வருவதை மாலிக்கபூர் என்ற முஸ்லிம் படையெடுப்பாளர், 12000 ஆயிரம் பேரைக் கொன்றார்கள் என்று பின்னாளில் பிராமணர்கள் திரிப்பது கூறுவதை சுட்டிக்காட்டவே,இந்த பதிவினைச் செய்தேன்!
   பிராமணர்கள் 8000 ஆயிரம் சமணர்களைக் கொன்ற கொடுமையை மறைத்து விடுவதுடன், பிராமணர்கள் சாந்த சொருபிகள்,அன்புமயமானவர்கள் என்றும், முஸ்லிம்களைக் கொலைகாரர்கள்,வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்றும் சொல்ல வேண்டாமா?
   அதற்காகத்தான் இப்படியெல்லாம் அவர்கள் நூல்களில் சொல்லிவைப்பது!

   Delete
 5. Yes the Entire indian history is wrong, muslim invadors has looted 1000% more than documented in indian history.
  Hi Rajan, continue your rubbish articles, so that people will understand the truth

  ReplyDelete
  Replies
  1. Dear Hosur Rajan,
   How come you respond instantly if someone showers praise on your "remarkable findings" and keep mum when people like me point out inaccuracies. I still await your response for the comment that I posted on your 12th April blog.
   On your theory that brahmis blundered the temple treasures and Malik Kafur was a "softie soft"invader who came to south india for pilgrimage. Even S. Ramakrishnan's recent articles in Junior Vikatan (Enadu India) talk about Malik Kafur's atrocities. Even if his account is not exhaustive, it is enough for beginners.

   Delete
  2. Dear raghs99,
   I think we both are wasting our time in responding to this rogue who is trying to rewrite south indian history. When I read his blog on Kundavai and the above one on Malik Kafur, I dont know whether to get angry or just laugh at this "genious". Thank god, he was not born in early 1900s. Otherwise his remarkable findings might have been considered authentic by the left wing historians whose only aim is to white-wash the atrocities of muslim invaders.
   I even challenged this Hosur Rajan to forward his findings to the editorial board of varalaaru.com who have been doing exemplary work on stone inscriptions or to the ponniyinselvan yahoo group members.
   I am sure they will shred his theories to pieces.
   He conveniently forgets to react to my post (april 12) in which I gave him a link which proves that his theory is totally rubbish.
   His blog proves that any mentally challenged person who has access to a computer and internet can rewrite south indian history. Only God can save us from these mad people.

   Delete
  3. you are mis understanding me! now iam busy in my routine works.so,i could not giving the answer! please wait and see!

   Delete
  4. I thought your "routine works" (sic) are 1. Anti-brahmanical rhetorics, 2. Painting Chola dynasty in the bad light, 3. Converting Kundavai to Islam and 4. Singing praises of Malik Kafur and other muslim invaders whose barbarisms have been established beyond doubt.

   I await your "scholarly" response and will appreciate if you could kindly send your findings to Dr.Kalaikovan of www.varalaaru.com before publishing them in your blog.

   Delete
  5. தமிழில் தானே படித்தீர்கள்? எல்லோரும் அறியும்படி தமிழில் கேளுங்கள் பதில் சொல்லுகிறேன்! முதலில் இருந்து முழுமையாக படித்துவிட்டும் கேளுங்கள்!

   Delete
 6. Hi Chandra,

  This guy's blog has become sectarian and it is always against brahmins and supports atrocities of muslim invadors.
  No doubt he might be in his nick name and hides is religion.
  I beleive in religious and social harmony , this guys wants to destroy all of them.

  Rajan,

  You continue all your garbage , atleast for fun.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. சரி தமிழிலேயே கேட்கிறேன். உங்கள் கருத்துப்படி குந்தவை 1006 இல் மதம் மாறினாள். ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தது 1012; ராஜராஜன் காலமானது 1014 . ஆனால் தஞ்சை கோவிலின் தெற்கு வாசலில் உள்ள கல்வெட்டு 1015 ம் ஆண்டு குந்தவை கோவிலுக்கு அளித்த கொடைகளை விவரமாக தெரிவிக்கிறது. துரதிஷ்ட வசமாக இந்த ஆதாரம் ஆங்கிலத்தில் உள்ளது; ( ) உங்களால் படித்து விளங்கி கொள்ள முடியும் என்று நம்புகிறேன். குந்தவை மதம் மாறி 9 வருடங்கள் கழித்து ஒரு சைவ கோவிலுக்கு ஏராளமான செல்வங்களை கொடை அளிக்க வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கருத்துப்படி குந்தவையை தலை முழுகி இருந்தால் அவளுடைய கொடையை கல்வெட்டில் ஏன் பொறிக்க வேண்டும்?
  இரண்டாவதாக, உத்தம சோழன் பதவி ஏற்ற்ற பிறகு அருள்மொழி (ராஜராஜன்) ஈழம் மற்றும் வெங்கி படை எட்ட்டுப்பில் கவனம் செலுத்தினான். ஆதித்த கரிகாலன் கொலையாளிகளை கண்டு பிடிக்க வில்லையே தவிர உத்தமசோழன் ஆட்சி அமைதியாகவே நடந்தது. ஆதித்த கரிகாலன் கொலையில் உத்தம சோழன் தொடர்பு இருந்தால் அவன் இயற் பெயரான மதுராந்தகன் என்ற பெயரை தன் மகனான ராஜேந்திரனுக்கு ஏன் வைக்க வேண்டும்? உத்தம சோழன் ஆட்சியில் அருள்மொழி, குந்தவை, வந்திய தேவன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? ராஜேந்திரன் ஆட்சியில் வந்திய தேவன் இருந்தார் என்பற்கு ஆதாரம் இருக்கிறது.
  மூன்றவுதாக ராஜராஜனை தூக்கி எறிந்து விட்டு ராஜேந்திரன் பதவிக்கு வந்தது போல் எழுதி இருக்கிறீர்கள். ராஜராஜன் தன் ஒரே மகனை இளம் வயதிலேயே இளவரசனாக ஆக்கியது மற்றுமின்றி, போர் மற்றும் நிர்வாகத்தில் முக்கிய பங்கு ஆற்றும்படி செய்திருந்தான். ஆதரம்; சதாசிவ பண்டாரத்தின் பிற்கால சோழ வரலாறு பக்கம் 112 -141 . ராஜராஜன் ஆட்சி காலத்தில் நடை பெற்ற போர்களில் ராஜேந்திரனின் பங்கு முக்கியமானது. சோழர் கல கல்வெட்டுகள் பலவற்றை சரியான முறையில் வெளிகொனன்ற சிறப்பு திருச்சியில் உள்ள ராசமாணிக்கனார் வரலாற்று மையத்துக்கு உண்டு. அதன் தலைவரான கலைக்கோவன் தன்னுடைய காது மூக்கு தொண்டை மருத்துவ சேவையில் சம்பாதிக்கும் பணத்தை வரலாற்று ஆராட்சிகே செலவிடுகிறார். அந்த மையம் வெளியிடும் ஆராட்சி தகவல்கள் அனைத்தையும் வரலாறு.கம இல் தெரிந்து கொள்ளலாம். உங்கள் மேல் எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் சோழ வரலாற்றை சிதைப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியது. நீங்கள் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்பதால்தான் உங்கள் கருத்துகளை முதலில் கலைகோவனுக்கு எழுத சொன்னேன். குடவாயில் பாலசுப்ரமணியம் தனது தஞ்சை பெரிய கோவில் நூலில் குறிபிட்டுள்ள சில தவறுகளை திருத்திய பெருமை கலைகோவனை சாரும்.
  உங்களுடைய பிராமண வெறுப்பை பற்றி விவாதிக்க விரும்ப வில்லை. அது உங்கள் சொந்த கருத்து. உங்கள் மதம் இஸ்லாமாக இருந்தாலோ அல்லது இஸ்லாம் மேல் உங்களுக்கு ஈடுபாடு இருந்தாலோ அதை நீங்கள் வேறு வழியாக தெரிவிக்கலாம். இதைபோல் தமிழக வரலாற்றை சிதைத்து வாழ முயற்சி செய்யாதீர்கள். இந்த நாடு எவ்வளவோ வேற்று நாட்டு படையெடுப்புகளை சந்தித்து உள்ளது. ஆனால் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு தஞ்சை பெரிய கோவில் ஒன்றே சாட்சி.
  மேலே குறிப்பிட்ட விசயத்தை வவிவாதித்த பிறகு மாலிக் கபூர் பற்றி பேசலாம்.

  ReplyDelete
 9. கல்வெட்டு ஆதாரம்:

  http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_7_south_wall_2nd_tier.html

  Please refer: www.varallaru.com if you are seriously interested in chola history.

  Dear raghs99,
  I agree with you but I am debating whether to shred his thesis to pieces or just ignore him. Lets see how he responds to my post.

  ReplyDelete
 10. The website should read: www.varalaaru.com

  ReplyDelete
  Replies
  1. Hi Chandra,

   He is a man of imaginations, illusions and false hatred towards Brahmins.
   I am afraid whether he will understand the Kalaikovan's hard work or Kudavayil subramaniam's life.

   All he knows is just a cheap publicity by spreading a feeling againist a community like yellow journalism

   Delete
  2. Dear Rajan,

   If at all all the south indian temples are protected , that is because of brahmins.
   read the history properly and understand how many of them died for sri rangam temple.
   Brahmins of those days might of be superiority complex but absolutely of not interest in public, temple money.
   they only protected thousands of south indian temples and treasures un touched from barbaric moslem invadors.
   If you dont know the history, please read all the relevant historical books right from ramachandra guha to rahul sankruthyayan.

   if you mix up your imaginations, you value nothing except filling up few blogs with hatred.
   I really pity you and I pray god to give you a good , calm , peaceful and clear thinking and writing capacity.

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?